Tuesday, July 13, 2010

உண‌ர‌ப்ப‌டாத‌ நிமிட‌ங்க‌ள்...

இந்தாப்பா!!!... உன‌க்கு 210 ரூபா சாம்ப‌ள‌ம் போட்டுருக்கேன். வெளியில‌ 225 ரூபா வ‌ரைக்கும் ச‌ம்ப‌ள‌ம் இருக்கு, ஆனா அவ‌ங்க‌ எல்லாம் உன‌க்கு ரெகுல‌ரா வேலை த‌ர‌ மாட்டாங்க‌. ஆனா எங்கிட்ட‌ அப்ப‌டியில்லை, வார‌த்தில் ஆறு நாளும் வேலையிருக்கும். ச‌ம்ப‌ள‌ம் உன‌க்கு எப்ப‌டி வேணுமோ அப்ப‌டி கொடுத்திருவேன். டெய்லி வேணுன்னாலும் ச‌ரி, வார‌த்திற்கு என்றாலும் ச‌ரி.. என்று சைடு ஸ்டாண்ட் போட்ட‌ டுவீல‌ரில் காலை த‌ரையில் ஊன்றிய‌ ப‌டி உக்கார்ந்து கொண்டு முன்னால் நின்று கொண்டிருந்த‌‌ ச‌ண்முக‌த்திட‌ம் பேசி கொண்டிருந்தார் காண்டிராக்ட‌ர் ந‌வ‌நீத‌ன்.

ஐயா!!! இந்த‌ காசை வ‌ச்சிதான் வீட்டுக்கு தேவையான‌ சாப்பாட்டு செல‌வை பாக்க‌ணும், அத‌னால‌ நீங்க‌ என‌க்கு அன்னைக்கு உள்ள‌ ச‌ம்ப‌ள‌த்தை அன்னைக்கே கொடுத்துடுங்க‌ என்று ப‌தில‌ளித்தான் ச‌ண்முக‌ம்.

அப்ப‌டியா!!!.. இதுல‌ 200 ரூபா இருக்கு... மீத‌ம் ப‌த்து ரூபாயை நாளைக்கு சேர்த்து கொடுத்துறேன் .. என்று இர‌ண்டு நூறு ரூபா நோட்டை ச‌ண்முக‌த்திட‌ம் நீட்டினார்.

அந்த‌ நோட்டுக‌ளை கையில் வாங்கி கொண்டு, அய்யா!!! அந்த‌ ப‌த்து ரூபாயையும் சேர்த்து கொடுத்துடுங்க‌.. உங்க‌ளுக்கு இருக்கிற‌ டென்ச‌னில் நீங்க‌ நாளைக்கு இந்த‌ ப‌ண‌த்தை ம‌ற‌ந்திடுவீங்க‌... நானும் ப‌த்து ரூபாயை கேட்க‌ கூச்ச‌ ப‌ட்டு விட்டுருவேன்.. என்று கிடுக்குபிடி போட்டான் ச‌ண்முக‌ம்.

ந‌ல்லா வெவ‌ர‌மாதான் இருக்கிறா!!!!... நாளைக்கு இந்த‌ இட‌த்துக்கே வ‌ந்துரு.. இந்த‌ உன்னுடைய‌ ப‌த்து ரூபா.. என்று த‌ன் மேல் ச‌ட்டை பாக்க‌ட்டில் இருந்த‌ ப‌த்து ரூபா தாளை எடுத்து கொடுத்துவிட்டு வ‌ண்டியை ஸ்டார்ட் ப‌ண்ணினார் ந‌வ‌நீத‌ன்.

ப‌ண‌த்தை வாங்கி கொண்டு ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். அந்த‌ ப‌ஸ் ஸ்டாப் வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌ம் குறைவாக‌வே இருந்த‌து. ச‌ண்முக‌மும் ஒரு ஓர‌மாக‌ நின்று கொண்டான். அரை ம‌ணி நேர‌ம் ஆயிற்று, அவ‌ன் போக‌ வேண்டிய‌ இட‌த்திற்கான‌ ப‌ஸ் இன்னும் வ‌ர‌வில்லை. க‌டுப்பாக‌ இருக்க‌வே எதிர்ப‌க்க‌த்தில் இருந்த‌ பெட்டிக்க‌டையை நோக்கி போனான்.

அந்த‌ பெட்டிக்க‌டையில் இருந்த‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ரிட‌ம், சிக‌ரெட் ஒண்ணு கொடுங்க‌?.. என்று கேட்டான். பெரிய‌வ‌ர் க‌டையில் இருந்த‌ முழு சிக‌ரெட் பாக்கெட் ஒன்றை பிரித்து அதில் இருந்து ஒன்றை எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு சுவ‌ரில் மாட்டியிருந்த‌ எல‌ட்ரிக் காயிலில் ப‌த்த‌ வைத்து கொண்டு, பாக்க‌ட்டில் இருந்த‌ ஐந்து ரூபாயை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்தான் ச‌ண்முக‌ம்.

க‌டைக்கார‌ பெரிய‌வ‌ர் சிக‌ரெட் விலை 2.50 போக‌ ஒரு சாக்லேட்டும் 2 ரூபாயும் எடுத்து ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார். என்ன‌ பெரிசு!!!.. இப்ப‌டி வேற‌ பிசின‌ஸ் ப‌ண்ணுறியா?... தூர‌ போடுகிற‌ சாக்லெட்டை எங்கிட்டே கொடுக்கிறே!!!.. என‌க்கு வேண்டாம் என்று திருப்பி கொடுத்தான் ச‌ண்முக‌ம். இல்ல‌ த‌ம்பி!!!.. இப்ப‌ தான் என்னிட‌ம் இருந்த‌ சில்ல‌றை எல்லாம் பொறுக்கி பிஸ்க‌ட் கார‌ருக்கு கொடுத்தேன், அத‌னால‌ 50 காசு சில்ல‌றை என்னிட‌ம் இல்லை, அதுக்கு தான் த‌ம்பி நான் சாக்லெட் கொடுத்தேன் என்றார்.

அதை என்னிட‌ம் சொல்ல‌ வேண்டிய‌து தானே!!!... நான் உன‌க்கு சில்ல‌றை த‌ருகிறேன் என்று ப‌ஸ்க்கு வைத்திருந்த‌ சில்ல‌றையை எடுத்து பெரிய‌வ‌ரிட‌ம் கொடுத்து விட்டு ஐந்து ரூபாயை திரும்ப‌ வாங்கினான் ச‌ண்முக‌ம். ரோட்டில் ப‌ஸ் வ‌ருவ‌து தெரிய‌வே ப‌ஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான்.

ப‌ஸ் ஸ்டாப்பில் வ‌ண்டி நிற்ப‌த‌ற்கு முன்ன‌ரே வ‌ண்டியில் குதித்து ஏறி, காலியாக‌ இருந்த‌ சீட்டில் உக்கார்ந்து கொண்டான். டிக்க‌ட் கொடுக்க‌ வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் "ஒரு சிம‌ண்ட் ரோடு" என்று ஐந்து ரூபாய் தாளை நீட்டினான். ஒரு டிக்க‌ட்டும் கூட‌வே ஒரு ரூபாய் நாணைய‌த்தையும் கொடுத்து விட்டு ப‌ஸ்சில் முன்னால் போனார் க‌ண்ட‌க்ட‌ர். சார்!!!!.. டிக்க‌ட் 3.50 தானே போட்டிருக்கு நீங்க‌ என்ன‌ 4 ரூபாய் எடுத்திருக்கீங்க‌ என்று க‌த்தினான் ச‌ண்முக‌ம். த‌ம்பி சில்ல‌றை இல்ல‌ப்பா!!!... வ‌ந்த‌வுட‌ன் கொடுத்திடுறேன் என்றார் க‌ண்ட‌க்ட‌ர்.

முன்னால் எல்லோருக்கும் டிக்க‌ட் கொடுத்துவிட்டு வ‌ந்த‌ க‌ண்ட‌க்ட‌ரிட‌ம், சார் "50 காசு" என்றான் ச‌ண்முக‌ம். இன்னும் சில்ல‌றை வ‌ர்ல‌ த‌ம்பி..இற‌ங்கும் போது கொடுத்திடுறேன் என்றார். ச‌ண்முக‌ம் இற‌ங்குவ‌த‌ற்கு முன்னாடி ஸ்டாப் வ‌ந்த‌வுட‌னேயே எழுந்து க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் போய் நின்று கொண்டான், சார்!!!.. நான் அடுத்த‌ ஸ்டாப் இற‌ங்க‌ணும் என‌க்கு அந்த‌ 50 காசு என்றான். த‌ம்பி!!... இந்த‌ நீல‌ ச‌ட்டை த‌ம்பியும் இந்த‌ ஸ்டாப்புல‌ தான் இற‌ங்க‌ணும், அவ‌ரும் நீங்க‌ளும் பிரிச்சி எடுத்துக்குங்க‌ என்று 1 ரூபாயை ச‌ண்முக‌த்திட‌ம் கொடுத்தார்.

அடுத்த‌ ப‌ஸ் ஸ்டாப்பில் இருவ‌ரும் இற‌ங்கின‌ர். நீல‌ ச‌ட்டைக்கார‌ர் ச‌ண்முக‌த்திட‌ம்; என‌க்கு அவ‌ச‌ர‌மா போக‌னும், நீங்க‌ அந்த‌ 1 ரூபாயை வ‌ச்சுக்குங்க‌ அடுத்த‌ முறை பார்க்கும் போது கொடுங்க‌ என்று சொல்லி கொண்டு விருவிரு என்று ந‌ட‌ந்தார். "போடா போ உன‌க்கு 50 காசின் அவ‌சிய‌ம் தெரிய‌ல‌, இந்த‌ 50 காசு இல்ல‌னா நாளைக்கு அந்த‌ க‌ண்ட‌க்ட‌ரு உன‌க்கு டிக்க‌ட் த‌ர‌ மாட்டான்" என்று ம‌ன‌திற்குள் நினைத்தான் ச‌ண்முக‌ம்.



ப‌ஸ் ஸ்டாப்பில் இருந்து கொஞ்ச‌ம் தூர‌த்தில் இருந்த‌ டாஸ்மாக் க‌டையை நோக்கி ந‌ட‌ந்தான் ச‌ண்முக‌ம். டாஸ்மாக் க‌டை வ‌ழ‌க்க‌த்தை விட‌ கூட்ட‌மாக‌ இருந்த‌து. ச‌ண்முக‌ம் கூட்ட‌த்தில் நுழைந்து ஒரு "ஒல்ட்ம‌ங் குவாட்ட‌ர்" என்றான். "யோவ் நாளைக்கு க‌டை திற‌க்காது, ஸ்டாக் எல்லாம் முடிஞ்சி போச்சி, இப்ப‌ வேணுன்னா ஒரு குவாட்ட‌ர் 100 ரூபா!!! இருந்த‌ கொடு இல்ல‌னா போயிட்டே இரு" என்று விர‌ட்டினான் சேல்ஸ்மேன். "இந்தாங்க‌ 100 ரூபா குவாட்ட‌ர் ஒண்ணு கொடுங்க‌" என்று 100 ரூபாய் தாளை சேல்ஸ்மேனின் கையில் திணித்தான் ச‌ண்முக‌ம்.

.

.

.

20 comments:

தமிழ் உதயம் said...

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறே காசு எப்படி எல்லாம் போகிறது பார்த்தீர்களா.

சாந்தி மாரியப்பன் said...

சில்லறையில் கறாரா இருந்ததெல்லாம் கடைசியில் 'அங்கே' கொண்டுபோய் கொடுக்கத்தானா :-))).

இந்த மறைமுக சாக்லேட் வியாபாரம் யார் கண்டுபிடிச்சதுன்னே தெரியலை. அவங்க கொடுக்கறாங்க. அதுவே சில்லறைக்கு பதிலா நாம கொடுத்தா வாங்கிப்பாங்களா? :-))

ஜெய்லானி said...

ச்சே..கடைசி வரிகள் படிச்சி வெறுப்புதான் வருது..

கதை நல்லா இருக்கு .

ராஜவம்சம் said...

உணர்ந்து திறுந்துபவனாக இருந்தால் இன்னும் நல்லா இறுக்கும்.

Unknown said...

அற்புதமான முடிவு நண்பா.. அதென்னவோ டாஸ்மாக்கில் மட்டும் மக்கள் காசு கூட எடுத்தா கேக்குறது இல்லை...

அருண் பிரசாத் said...

நல்ல முடிவு. அரசும் திருந்தாது, அவர்களும் திருந்தமாட்டார்கள்

சிநேகிதன் அக்பர் said...

அப்படி போடுங்க அருவாள.

இது போலவே படம் பார்க்க போனாலும் டிக்கட்டை ப்ளாக்ல வாங்க கவலையே படமாட்டோம். ஆனா பஸ் டிக்கட் ஒரு ரூபாய் ஏத்துனா ஸ்ட்ரைக்தான்.

Ahamed irshad said...

ரொம்ப அருமையாக முடிச்சீட்டீங்க ஸ்டீபன்.. அசத்தல்..

r.v.saravanan said...

கஷ்டப்பட்டு உழைச்ச காசு வீட்டுக்கு போகாமல் இப்படி டாஸ்மாக் இல் இறைக்கபடுவது நினைச்சால் கஷ்டமா தான் இருக்கு

நல்ல கருத்துள்ள சிறுகதை ஸ்டீபன்

எல் கே said...

good story
// அதுவே சில்லறைக்கு பதிலா நாம கொடுத்தா வாங்கிப்பாங்களா? ://
good qn

விக்னேஷ்வரி said...

உண்மை கசக்கிறது. :(

vanathy said...

ஸ்டீபன், நல்ல கருத்துள்ள கதை.

தூயவனின் அடிமை said...

நல்ல கதை, முடிவு தான் மனதை கஷ்டபடுத்தி விட்டது.

மங்குனி அமைச்சர் said...

என்னது நாளைக்கு டாஸ்மாக் லீவா??? மாமா ரெண்டு குவாட்டர் எக்ஸ்ட்ரா வாங்கு

சார் அடுத்தது 50 பதிவா அசத்துங்க

நாடோடி said...

@தமிழ் உதயம் said...
//கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறே காசு எப்படி எல்லாம் போகிறது பார்த்தீர்களா.//

ஆமா த‌மிழ் சார்... ரெம்ப‌ கொடுமை.. அந்த‌ இட‌த்தில் ம‌ட்டும் இவ‌ர்க‌ள் வாயே திற‌க்க‌ மாட்டார்க‌ள்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அமைதிச்சாரல் said...
//சில்லறையில் கறாரா இருந்ததெல்லாம் கடைசியில் 'அங்கே' கொண்டுபோய் கொடுக்கத்தானா :-))).

இந்த மறைமுக சாக்லேட் வியாபாரம் யார் கண்டுபிடிச்சதுன்னே தெரியலை. அவங்க கொடுக்கறாங்க. அதுவே சில்லறைக்கு பதிலா நாம கொடுத்தா வாங்கிப்பாங்களா? :-))//

வாங்க‌ அமைதிச்சார‌ல் ச‌கோ.. ந‌ம்ம‌ சாக்லெட் கொடுத்தா எப்ப‌டி வாங்குவாங்க‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@ஜெய்லானி said...
//ச்சே..கடைசி வரிகள் படிச்சி வெறுப்புதான் வருது..

கதை நல்லா இருக்கு .//

வாங்க‌ ஜெய்லானி‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@ராஜவம்சம் said...
//உணர்ந்து திறுந்துபவனாக இருந்தால் இன்னும் நல்லா இறுக்கும்.//

இது ந‌டைமுறையில் ந‌ட‌க்கும் க‌தை ந‌ண்ப‌ரே...வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//அற்புதமான முடிவு நண்பா.. அதென்னவோ டாஸ்மாக்கில் மட்டும் மக்கள் காசு கூட எடுத்தா கேக்குறது இல்லை...//

வாங்க‌ செந்தில் அண்ணா... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அருண் பிரசாத் said...
//நல்ல முடிவு. அரசும் திருந்தாது, அவர்களும் திருந்தமாட்டார்கள்//

வ‌ந்து ர‌சித்த‌மைக்கு ந‌ன்றி அருண்.... தொட‌ர்ந்து வாருங்க‌ள்..

@அக்பர் said...
//அப்படி போடுங்க அருவாள.

இது போலவே படம் பார்க்க போனாலும் டிக்கட்டை ப்ளாக்ல வாங்க கவலையே படமாட்டோம். ஆனா பஸ் டிக்கட் ஒரு ரூபாய் ஏத்துனா ஸ்ட்ரைக்தான்.//

அப்ப‌டியே அருவாளை போட்டா கைல, கால்ல‌ ப‌ட்டுவிடும் அக்ப‌ர்.. ஹி..ஹி.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

அஹமது இர்ஷாத் said...
//ரொம்ப அருமையாக முடிச்சீட்டீங்க ஸ்டீபன்.. அசத்தல்..//

வாங்க‌ இர்ஷாத்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@r.v.saravanan said...
//கஷ்டப்பட்டு உழைச்ச காசு வீட்டுக்கு போகாமல் இப்படி டாஸ்மாக் இல் இறைக்கபடுவது நினைச்சால் கஷ்டமா தான் இருக்கு

நல்ல கருத்துள்ள சிறுகதை ஸ்டீபன்//

உண்மைதான் ச‌ர‌வ‌ண‌ம் இவ‌ர்க‌ளை என்ன‌த்த‌ சொல்ல‌?... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி said...

@LK said...
//good story
// அதுவே சில்லறைக்கு பதிலா நாம கொடுத்தா வாங்கிப்பாங்களா? ://
good qn//

வாங்க‌ கார்த்திக்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@விக்னேஷ்வரி said...
//உண்மை கசக்கிறது. :(//

வாங்க‌ விக்னேஷ்வரி ச‌கோ.... சில‌ நேர‌ங்க‌ளில் உண்மையும் க‌ச‌க்கும்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@vanathy said...
//ஸ்டீபன், நல்ல கருத்துள்ள கதை.//

வாங்க‌ வான‌தி ச‌கோ... ரெம்ப‌ ந‌ன்றி.

@இளம் தூயவன் said...
//நல்ல கதை, முடிவு தான் மனதை கஷ்டபடுத்தி விட்டது.//

வாங்க‌ ந‌ண்ப‌ரே... அடுத்த‌ க‌தை ச‌ந்தோச‌மாக‌ எழுதிருவோம்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@மங்குனி அமைசர் said...
//என்னது நாளைக்கு டாஸ்மாக் லீவா??? மாமா ரெண்டு குவாட்டர் எக்ஸ்ட்ரா வாங்கு

சார் அடுத்தது 50 பதிவா அசத்துங்க//

அதெல்லாம் நான் ஏற்க‌ன‌வே ஸ்டாக் ப‌ண்ணியாச்சி அமைச்ச‌ரே.... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

எம் அப்துல் காதர் said...

குடிக்கிறதுக்காகவே சம்பாதிக்கி றாங்களே சாப்பிடுறதுக்காக குடிச்சிப்புட்டு போய் சம்பாதிப்பாங்களோ! நீங்க ரொம்ப தான் யோசிக்கிறீங்க பாஸ்! இருங்க ஒரு கிளாஸ் தண்ணி (அட ஜில் தண்ணி தாங்க!) குடிச்சிபுட்டு வர்றேன். நீங்க யோசித்ததற்கும் நான் தண்ணி குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? அதானே!

50-வது பதிவுக்கு ஏதும் விஷேசம் உண்டுங்களா! டிக்கெட் அனுப்புங்க அங்க வந்துடுறோம்!!!

தாராபுரத்தான் said...

அனு தினமும் நடக்கும் அவலத்தை அழகா கதை சொல்லியிருக்றீங்க தம்பீ.

Selvam said...

ippadipatta manithar thaan athigam irukkirargal

mkr said...

தனது வருமானத்தில் சரிபாதியை குடிப்பதற்காக செலவிடுவது கொடுமையான விசயம்

Related Posts with Thumbnails