Sunday, July 11, 2010

தொட‌ர்ப‌திவு_க‌ன‌வே க‌லையாதே..

க‌ற்ப‌னை உருவ‌ம் என்ற‌வுட‌ன் என் ம‌ன‌தில் தோன்றிய‌து காமிக்ஸ் உல‌கின் அர‌ச‌ன் மாயாவியின் உருவ‌ம் தான். சின்ன‌ வ‌ய‌தில் இவ‌ரின் ர‌சிக‌ன் என்று சொல்வ‌தை விட‌ தீவிர‌ வெறிய‌ன் என்று தான் சொல்ல‌ வேண்டும். க‌தைக‌ள் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்த‌‌ கால‌த்தில் முத‌லில் என‌க்கு அதிக‌ ஆர்வ‌த்தை ஏற்ப‌டுத்திய‌து இவ‌ரின் க‌தைக‌ள் தான். இர‌வு தூக்க‌த்தில் கூட‌ மாயாவி என்று க‌த்திய‌தாக‌ அம்மா சொல்வார்க‌ள், அந்த‌ள‌வு இவ‌ருடைய‌ க‌தைக‌ள் என்னை பாதித்திருந்த‌து.

"ஒரு நாள் உருவ‌த்தில் முக‌மூடி வீர‌ர் மாயாவியாக‌ நான் இருந்தால் எப்ப‌டியிருக்கும்" என்ப‌தை ப‌ற்றி ஒரு சின்ன‌ க‌ற்ப‌னை.ப‌டிக்கும் ப‌ருவ‌த்தில் ஏதாவ‌து முக்கிய‌ வேலையில் நான் ஏதாவ‌து முட்டாள் த‌ன‌மாக‌ செய்துவிட்டால் என்னுடைய‌ அம்மா என்னை "ம‌ர‌ம‌ண்டை" என்று திட்டுவார்க‌ள், ஒருவேளை நான் மாயாவி உருவ‌த்தில் இருந்திருந்தால் "இரும்பும‌ண்டை" என்று திட்டியிருப்பார்க‌ளோ!!!!!!!

என்னுடைய‌ அப்பாவின் கூட‌ பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌டும‌ண்டையில் முடிக‌ள் இருக்காது, என் அப்பா உட்ப‌ட். அவ‌ர்க‌ளை நான் சொட்டை என்று கிண்ட‌ல் செய்த‌து உண்டு, அத‌ற்கு அவ‌ர்க‌ள் "நாளை உன‌க்கும் இது போல் வ‌ரும்" என்று சொல்வார்க‌ள். நான் அவ‌ர்க‌ளிட‌ம் "ம‌யிர் போனால் ம‌ண்டை பாலிஸ்" என்று நையாண்டி செய்த‌து உண்டு. இப்போது என‌க்கும் முடிக‌ள் கொட்ட‌ தொட‌ங்கிவிட்ட‌து, அதைப‌ற்றிய‌ க‌வ‌லையும் வ‌ர‌தொட‌ங்கிவிட்ட‌து. மாயாவியை போல் த‌லை இருந்து விட்டால் இந்த‌ முடி ப‌ற்றிய‌ பிர‌ச்ச‌னையே வ‌ராது அல்ல‌வா!!!!!...

இந்த‌ பிளாக்க‌ரில் புர‌பைல் போட்டோ போடுவ‌திலும் பிர‌ச்ச‌னை வ‌ந்திருக்காது. அப்ப‌டியே ந‌ம்ம‌ க‌ம்பெனி முத்திரையை(ம‌ண்டையோடு) போட்டு விடாலாம். யாரும் வாயே தொற‌க்க‌ மாட்டார்க‌ள்.

நான் ஸ்கூல் ப‌டிக்கும் போது வீட்டில் இருத்து ம‌திய‌ சாப்பாடு எடுத்து போவேன். அதில் எங்க‌ம்மா என‌க்கு டெய்லி ஒரு அரைமுட்டை(இன்னொரு அரைமுட்டை அண்ண‌னுக்கு) வைத்து த‌ருவார்க‌ள். அந்த‌ அரைமுட்டை ம‌திய‌ வேளையில் ல‌ஞ்ச் பாக்ஸில் இருக்காது, ந‌ம்ம‌ கோவாலு ல‌வுட்டிருவான். டேய்!!!!! கோவாலு உன்னைதாண்டா தேடிகிட்டு இருக்கிறேன்... நான் மாயாவியா உருமாருகிற‌ அன்னைக்கு நீ மாட்டினா ம‌வ‌னே!!!... முத‌ல் மோதிர‌ முத்திரை உன‌க்கு தாண்டா!!!!!!

பார்க்க‌ர்ல ச‌ட்டையும், லீயில் ஜீன்ஸும், ஜாக்கில‌ ப‌னிய‌னும் வாங்க‌ வேண்டிய‌ வேலையே இல்ல‌.. டெய்லி ஒரு டிர‌ஸ் மாத்த‌னும் என்ற‌ தொல்லையும் கிடையாது(இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம் ஆறு மாச‌த்துக்கு முன்னாடி போட்ட‌ ஜீன்ஸ் பேண்டை இன்னும் க‌ழ‌ட்ட‌ல‌, த‌ண்ணி பார்த்து வ‌ருச‌ க‌ண‌க்காவுது.... நோ.. நோ... நோ பேட் வேர்ட்ஸ்.. மீ.. பாவம்)

இப்ப‌ பெட்ரோல், டீச‌ல் விக்கிற‌ விலையில‌ வ‌ண்டி வாங்கி ஓட்ட‌ முடியுமா, வண்டி வேணுண்ணா வாங்கி சோக்கேஸுல் வ‌ச்சி அழ‌கு பாக்க‌லாம், ஆனா பெட்ரோல் ஊற்றி ஓட்ட‌ முடியாது. பிளைட்ல‌, கார்ல‌, ட்ரெயின்ல‌, ப‌ஸ்ல‌, டுவீல‌ர்ல‌னு எல்லாத்திலேயும் போயாச்சி ஆனா குதிரையில‌?????.... மாயாவி குதிரை மேல‌ இருந்த‌ ஆசையில‌, ஒரு த‌ட‌வ‌ அப்பாட்ட‌ "நான் குதிரையில் சவாரி செய்ய‌ன‌னு சொல்ல‌" அப்பாவும் அது ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்ல‌னு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் க‌ழுதை மேல‌ சாரி.. குதிரை மேல‌ என்னை ஏத்தி வைச்சி குதிரையை ந‌ட‌க்க‌ வ‌ச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அன்னைக்கு முடிவு ப‌ண்ணினேன் இனிமேல் ஏறினா மாயாவியின் வெள்ளை குதிரை மேல் தான் என்று..

ம‌ர‌க்கிளைக‌ளில் ப‌டுத்து உற‌ங்கி
கோழியின் கூவ‌லில் விழித்து
ப‌ற‌வைக‌ளின் ரீங்கார‌ங்க‌ளில் ம‌ன‌தை ப‌றிகொடுத்து
ம‌ர‌ங்க‌ளில் க‌னிந்த‌ ப‌ழ‌ங்க‌ளை புசித்து
காட்டு வில‌ங்குக‌ளின் மொழி பேசி
தெளிந்த‌ நீரோடையில் குளித்து..
ஒரு நாள் பொழுதாயினும் ம‌ற‌க்க‌ முடியுமா...
இய‌ற்கையோடு இய‌ந்த‌ வாழ்க்கை.

உள் ம‌ன‌தில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌ன் என்று சொல்லி கொண்டிருக்கும் வில‌ங்குக‌ள் வாழும் ச‌முதாய‌த்தில், வெளியில் முக‌மூடி போட்டு கொண்டு ம‌னித‌னாக‌ வாழ‌வே ஆசைப்ப‌டுகிறேன்.. க‌ன‌வே க‌லையாதே....

என‌க்கு இந்த‌ த‌லைப்பை கொடுத்து எழுத‌ தூண்டிய‌ அமைதிச்சார‌ல் ச‌கோத‌ரிக்கு மீண்டும் ஒரு ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன்... குற்ற‌ம் குறையிருப்பின் பொறுத்த‌ருள்க‌.

நான் எழுதிய‌ க‌ட‌ந்த‌ இர‌ண்டு தொட‌ர்ப‌திவிலும் யாரையும் தொட‌ர‌ அழைக்க‌வில்லை, கார‌ண‌ம் ரெம்ப‌ லேட்டா தான் என‌து கைக்கு வ‌ந்த‌து. பெரும்பாலான‌ எல்லோருமே எழுதிவிட்டார்க‌ள். இது இப்போது தான் ஆர‌ம்பித்து இருப்ப‌தால் சில‌ரை அழைக்க‌லாம் என்று இருக்கிறேன்.

ரெம்ப‌ சீரிய‌ஸா ப‌திவு எழுதுகிற‌ ந‌ம்ம‌ த‌மிழ் உத‌ய‌ம் ர‌மேஷ் சார் அவ‌ர்க‌ளை இந்த‌ தொட‌ர்ப‌திவில் அழைக்கிறேன். இந்த‌ க‌ற்ப‌னை ப‌திவிலும் என்ன‌ ப‌ண்ணுகிறார் என்று பார்ப்போம். த‌மிழ் சார் உங்க‌ த‌லைப்பு இது தான்.

ம‌க்க‌ள் செறிந்த‌ கூட்ட‌த்தில் ஒரு த‌வ‌று ந‌ட‌க்கிற‌து. அதை செய்த‌வ‌ன் நீங்க‌ள் தான் செய்தீர்க‌ள் என்று க‌த்துகிறான். அதை நீங்க‌ள் எப்ப‌டி ச‌மாளிப்பீர்க‌ள்(எந்த‌ த‌வ‌றாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள், அதேபோல் அது எந்த‌ இட‌மாக‌வும் இருக்க‌லாம் நீங்க‌ளே க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள்)

தொட‌ர்க‌தைக‌ளிலும், சிறுக‌தைக‌ளிலும் க‌ல‌க்கும் செல்ல‌ நாய்க்குட்டி அவ‌ர்க‌ளையும் இந்த‌ தொட‌ர் ப‌திவுக்கு அழைக்கிறேன். உங்க‌ளுடைய‌ த‌லைப்பு

ப‌ழைய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியில் நீங்க‌ள் இருந்தால் ( நீங்க‌ள் எந்த‌ ஒரு கேர‌க்ட‌ராக‌வும் எடுத்து கொண்டு எழுத‌லாம், ம‌ன்ன‌ர‌க‌வோ, ராணியாக‌வோ, பிர‌ஜையாக‌வோ) அந்த‌ அனுப‌வ‌த்தை ப‌கிர‌வும்.

.

.

.

18 comments:

King Viswa said...

பதிவ பார்க்கும்போதே நினைச்சேன், நீங்க ராணி காமிக்ஸ் படிச்சவருனு. சரிதான்.

கே.ஆர்.பி.செந்தில் said...

நாம் எல்லோரும் காமிக்ஸில் இருந்து ஆரம்பித்தவர்கள்தான்..

ஜப்பானில் எல்லாக் கதைகளும் பெரும்பாலும் காமிக்ஸ் வடிவில்தான் கிடைக்கிறது ...

ஜெய்லானி said...

நல்ல ஐடியாவாதான் தெரியுது.

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க உங்க கற்பனை.

நாய்க்குட்டி மனசு said...

நன்றி நாடோடி தொடர் பதிவுக்கு அழைத்ததற்கும், என் கதைகளை ரசிப்பதற்கும்.
உங்கள் மாயாவிக்கு நானும் ரசிகை தான். சில நேரங்களில் கை மட்டும் பயணம் செய்யும். அந்த ஆண்மை, கம்பீரம் அடடா! இன்று கூட யாராவது கை கட்டி நிமிர்ந்து நின்றால் எனக்கு மாயாவி மாதிரி தோன்றும்.
தொடர்கிறேன், கொஞ்சம் காலம் கடந்தால் பொறுத்தருள்க.

நாடோடி said...

@King Viswa said...
//பதிவ பார்க்கும்போதே நினைச்சேன், நீங்க ராணி காமிக்ஸ் படிச்சவருனு. சரிதான்.//

வாங்க‌ கிங் விஷ்வா.. உங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//நாம் எல்லோரும் காமிக்ஸில் இருந்து ஆரம்பித்தவர்கள்தான்..

ஜப்பானில் எல்லாக் கதைகளும் பெரும்பாலும் காமிக்ஸ் வடிவில்தான் கிடைக்கிறது ...//

ஆமா செந்தில் அண்ணா.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@ஜெய்லானி said...
//நல்ல ஐடியாவாதான் தெரியுது.//

ந‌ல்ல‌ ஐடியாவா?... அப்ப‌ அப்ப‌டியே மெயின்டைன் ப‌ண்ணுவோம்.. ந‌ன்றி ஜெய்லானி

@கலாநேசன் said...
//நல்லா இருக்குங்க உங்க கற்பனை.//

வாங்க‌ க‌லாநேச‌ன்... உங்க‌ளின் முத‌ல் வ‌ருகை இனிதாக‌ட்டும்.

@நாய்க்குட்டி மனசு said...
//நன்றி நாடோடி தொடர் பதிவுக்கு அழைத்ததற்கும், என் கதைகளை ரசிப்பதற்கும்.
உங்கள் மாயாவிக்கு நானும் ரசிகை தான். சில நேரங்களில் கை மட்டும் பயணம் செய்யும். அந்த ஆண்மை, கம்பீரம் அடடா! இன்று கூட யாராவது கை கட்டி நிமிர்ந்து நின்றால் எனக்கு மாயாவி மாதிரி தோன்றும்.
தொடர்கிறேன், கொஞ்சம் காலம் கடந்தால் பொறுத்தருள்க.//

தொட‌ர் ப‌திவை ஏற்று கொண்ட‌த‌ற்கு ந‌ன்றி..உங்க‌ளுக்கும் நேர‌ம் கிடைக்கும் போது எழுதுங்க‌ள்.. காத்திருக்கிறோம்.

கண்ணா.. said...

நீங்களும் இரும்புக்கை மாயாவி ரசிகரா...

ஆனால் எனக்கு காமிக்ஸில் செவ்விந்தியர்கள் கதைதான் மிகவும் பிடிக்கும்

//மாயாவி குதிரை மேல‌ இருந்த‌ ஆசையில‌, ஒரு த‌ட‌வ‌ அப்பாட்ட‌ "நான் குதிரையில் சவாரி செய்ய‌ன‌னு சொல்ல‌" அப்பாவும் அது ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்ல‌னு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் க‌ழுதை மேல‌ சாரி.. குதிரை மேல‌ என்னை ஏத்தி வைச்சி குதிரையை ந‌ட‌க்க‌ வ‌ச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்//

ஸேம் ப்ளட் தல....

தமிழ் உதயம் said...

நலல தேவையான கற்பனை. தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்ற

r.v.saravanan said...

நல்ல கற்பனை ஸ்டீபன் நானும் சிறு வயதில் காமிக்ஸ் புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன் நாமும் இதே போல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையும் செய்திருக்கிறேன்

நாடோடி said...

@கண்ணா.. said...
//நீங்களும் இரும்புக்கை மாயாவி ரசிகரா...

ஆனால் எனக்கு காமிக்ஸில் செவ்விந்தியர்கள் கதைதான் மிகவும் பிடிக்கும்

//மாயாவி குதிரை மேல‌ இருந்த‌ ஆசையில‌, ஒரு த‌ட‌வ‌ அப்பாட்ட‌ "நான் குதிரையில் சவாரி செய்ய‌ன‌னு சொல்ல‌" அப்பாவும் அது ஒண்ணும் பிர‌ச்ச‌னை இல்ல‌னு சொல்லி மெரினா பீச் கூட்டிட்டு போய் க‌ழுதை மேல‌ சாரி.. குதிரை மேல‌ என்னை ஏத்தி வைச்சி குதிரையை ந‌ட‌க்க‌ வ‌ச்சாரு!!!!.கிர்ர்ர்ர்ர்ர்ர்//

ஸேம் ப்ளட் தல....//

ஆஹா நீங்க‌ளும் ர‌சிக‌ரா.... செவ்விந்திய‌ர்க‌ளின் க‌தைக‌ளும் ப‌டித்திருக்கிறேன்.... குதிரை ச‌வாரி ஜாலியா இருந்த‌தா?...ஹி..ஹி... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி க‌ண்ணா.

தமிழ் உதயம் said...

தாங்கள் சொன்ன சூழலில் சுட சுட தொடர்பதிவு தயாராகிவிட்டது. நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post_12.html

இளம் தூயவன் said...

கலக்கிட்டிங்க ஸ்டீபன் , வாழ்த்துக்கள்.

vanathy said...

ஸ்டீபன், அருமையா இருக்கு. நல்ல கற்பனை வளம்.

அக்பர் said...

அட அதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சா நாந்தான் லேட் போல...

இரும்புக்கை மாயாவியின் ரசிகரா நீங்கள். நானும்தான். சிறு வயதில் அண்ணன் வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களை விடாமால் படித்திருக்கிறேன்.

முத்து காமிக்ஸின் கடை பக்கங்களில் வரும் கபீஸ் கதையும் ரொம்ப பிடிக்கும்.

நினைவடுக்களில் இருந்து நிறைய விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

அந்த குதிரை மேட்டர் சூப்பர். இங்கு ஒரு முறை குதிரை ஏறினேன். நின்ற இடத்தை விட்டு நகரவில்லை :)

நிறைவாக இருந்தது ஸ்டீபன்.

அஹமது இர்ஷாத் said...

சூப்பர் ஸ்டீபன்.. அசத்திட்டீங்க...

நாடோடி said...

@தமிழ் உதயம் said...
//நலல தேவையான கற்பனை. தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்ற//

வாங்க‌ த‌மிழ் சார்... அழைப்பை ஏற்ற‌மைக்கு ந‌ன்றி.

@r.v.saravanan said...
//நல்ல கற்பனை ஸ்டீபன் நானும் சிறு வயதில் காமிக்ஸ் புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன் நாமும் இதே போல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையும் செய்திருக்கிறேன்//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் நீங்க‌ளும் ர‌சிக‌ர் தானா... ஒகே..ஒகே.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@தமிழ் உதயம் said...
தாங்கள் சொன்ன சூழலில் சுட சுட தொடர்பதிவு தயாராகிவிட்டது. நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post_12.html//

இவ்வ‌ள‌வு சீக்கிர‌மாவா!!!!!... வ‌ந்து ப‌டிக்கிறேன்..

@இளம் தூயவன் said...
//கலக்கிட்டிங்க ஸ்டீபன் , வாழ்த்துக்கள்.//

வாங்க‌ ந‌ண்ப‌ரே... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@vanathy said...
//ஸ்டீபன், அருமையா இருக்கு. நல்ல கற்பனை வளம்.//

வாங்க‌ வான‌தி ச‌கோ... ந‌ல்லா இருக்கா!!! ரெம்ப‌ ந‌ன்றி.

@அக்பர் said...
//அட அதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சா நாந்தான் லேட் போல...

இரும்புக்கை மாயாவியின் ரசிகரா நீங்கள். நானும்தான். சிறு வயதில் அண்ணன் வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களை விடாமால் படித்திருக்கிறேன்.

முத்து காமிக்ஸின் கடை பக்கங்களில் வரும் கபீஸ் கதையும் ரொம்ப பிடிக்கும்.

நினைவடுக்களில் இருந்து நிறைய விசயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

அந்த குதிரை மேட்டர் சூப்பர். இங்கு ஒரு முறை குதிரை ஏறினேன். நின்ற இடத்தை விட்டு நகரவில்லை :)

நிறைவாக இருந்தது ஸ்டீபன்.//

வாங்க‌ அக்ப‌ர்.... நீங்க‌ க‌ரெக்டா வ‌ருவீங்க‌னு தெரியும்... வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அஹமது இர்ஷாத் said...
//சூப்பர் ஸ்டீபன்.. அசத்திட்டீங்க...//

ரெம்ப‌ ந‌ன்றி ந‌ண்ப‌ரே..

சித்திரவீதிக்காரன் said...

இரும்புக்கை மாயாவின் நினைவைக் கிளறிய பதிவு. மேலும், கீழ்க்கண்ட வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

ம‌ர‌க்கிளைக‌ளில் ப‌டுத்து உற‌ங்கி
கோழியின் கூவ‌லில் விழித்து
ப‌ற‌வைக‌ளின் ரீங்கார‌ங்க‌ளில் ம‌ன‌தை ப‌றிகொடுத்து
ம‌ர‌ங்க‌ளில் க‌னிந்த‌ ப‌ழ‌ங்க‌ளை புசித்து
காட்டு வில‌ங்குக‌ளின் மொழி பேசி
தெளிந்த‌ நீரோடையில் குளித்து..
ஒரு நாள் பொழுதாயினும் ம‌ற‌க்க‌ முடியுமா...
இய‌ற்கையோடு இய‌ந்த‌ வாழ்க்கை.

Related Posts with Thumbnails