Tuesday, July 27, 2010

இந்த‌ பொண்ணுங்க‌ளே இப்ப‌டித்தான்!!!..

1) வாத்தியாரு போர்டுல எழுதி போடுறதுல அவரு ஸ்பீடுக்கு எழுதமுடியாமல், எல்லோரும் எழுதிட்டீங்களானு கேட்கும் போது "நான் இன்னும் முடிக்கலனு" சொல்லுறதுக்கு கூச்சபட்டு இருந்திட்டு, வாத்தியாரு அழிச்சி முடிச்சப்புறம் நம்ம கிட்ட வந்து உன் நோட்டை கொடு எழுதிட்டு தந்திடுறேனு கெஞ்சுவார்கள். சரினு நோட்டை கொடுத்துவிட்டா மறுநாளு நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.

2) குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு நேற்று போட்ட டிரஸை இன்னைக்கு போட்டு வந்தத பற்றி கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!

3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.

4) அப்படியே சைலண்டா நம்மள கழட்டிவிட்டுருவார்கள். இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள். அப்படியே விட்டுட்டாலும் பரவாயில்லை. தீடிரெனு ஒரு நாள் வந்து எனக்கு பைசம் சைட்டைவம்(பட்டாணி) செடியின் பூ ஒண்ணு வேணுமுனு இளிச்சிட்டு வந்து நிப்பார்கள். நாமளும் காடு மேடுனு அலைஞ்சி திரிஞ்சி கொண்டு வந்து கொடுத்தா!!. மகேஷ் இரண்டு கொண்டு வந்தான், எனக்கும் ஒண்ணும் கொடுத்தான்னு வழிவார்கள்.

5) உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!6) வாத்தியாரு கேட்ட கேள்விக்கு பதில் தெரியலனு நாம எழுந்து நிக்கும் போது, அவளிடம் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லி வாத்தியாரின் கோபத்தை கிளறி விடுவார்கள்.

7) நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.

8) ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.

9) காலையிலேயே இன்னைக்கு எந்த வாத்தியாரு எல்லாம் வரலேனு லிஸ்ட் எடுத்து அவருடைய பாடவேளையில் விளையாட போய்விடலாம் என்று பிளான் பண்ணி, கிரிக்கெட் விளையாட டீம் எல்லாம் பிரிச்சி வச்சிட்டு அந்த பாட வேளைக்கு காத்திருந்தா, நல்ல பிள்ளையாட்டு இந்த பொண்ணுங்க டீச்சர்ஸ் ரூம்க்கு போய் ஆணியில்லாமல் தூங்கிட்டு இருக்கும் ஏதாவது டீச்சரை கூட்டி வந்து மொக்கை போட வச்சிடுவாங்க.

10) A+B வெக்டார் இல் ஆரம்பித்து X+Y+Z-வெக்டார் வரைக்கும் ஒரு 70MM இங்கிலிஷ் படத்தை ஓட்டிட்டு நம்ம கணக்கு டீச்சர் புரிஞ்சுதானு நம்மளை பார்த்து கேக்காமல் பொண்ணுங்களை பாத்து கேக்கும் போது, பொண்ணுங்க எல்லாம் ஒண்ண சேர்ந்து ஆமா.. ஆமானு மேலும் கீழும் தலையை ஆட்டுவார்கள். அவங்களை கேட்டுட்டு இந்த பக்கம் நம்மளை பார்த்து கேக்கும் போது நம்ம மட்டும் என்னா?.. இல்லைனா தலையை ஆட்ட முடியும் நாமளும் கோயில் மாடு போல தலையை ஆட்ட வேண்டியது தான். அதுக்கு மாறா எவனாவது தலையை ஆட்டுறதை டீச்சர் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். அந்த பொண்ணுங்க எல்லாம் பாடத்தை கவனிக்க வருது, நீங்க எதுக்குடா வர்றீங்கனு ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்கு பயந்தே கமுக்கமா உக்கார்ந்து விடுவோம். டீச்சர் போனதும் இந்த பொண்ணுங்க கிட்ட என்ன புரிஞ்சுதுனு கேட்டா... ஒண்ணும் புரியலைனு கோரஸ் பாடும்...

அட ராமா... ராமா.. இந்த பொண்ணுங்க கூட எல்லாம் என்னை ஏண்டா படிக்க வச்ச?... (இதை க‌வுண்ட‌ம‌ணி வ‌ச‌ன‌ம் போல் ப‌டிக்க‌ வேண்டாம்..ஹி..ஹி..)

....................ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.....................

இதுக்கு செய்வினை, செய‌ப்பாட்டுவினை ஆற்றுப‌வ‌ர்க‌ள் எல்லாம் மேலே உள்ள‌ வாச‌க‌த்தை ந‌ல்லா திரும்ப‌ திரும்ப‌ ப‌டிச்சிட்டு ஆத்துமாறு கேட்டுகொள்கிறேன் :))

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

.

.

.

139 comments:

நாஞ்சில் பிரதாப் said...

அய்யா ராசா...எப்படிய்யா இதெல்லாம்... இன்னும் ஸ்கூல் நினைப்பு போகவே இல்ல போலருக்கு... :))

நாஞ்சில் பிரதாப் said...

//குளிக்காம, பல்லும் தேய்க்காம புது துணியை மட்டும் போட்டுகிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டு, நாம குளிச்சிட்டு, பல்லும் தேய்ச்சிட்டு//

ஸ்டீபன் பல்லு தேப்பாரு, குளிப்பாராம்பார...நான் அன்னைக்கே சொன்னேன்... இந்த
அக்பரு கொக்பரு நம்பவே இல்லை....

நாஞ்சில் பிரதாப் said...

// நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.//

இதை ஆமோதிக்கிறேன்... சேம் பிளட்...

நாஞ்சில் பிரதாப் said...

அக்பரு, சரவணன், குரு... ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்... நல்ல முட்டுச்சந்தா பார்த்துவைங்கப்பா...

இளம் தூயவன் said...

ஸ்டீபன் ஒரு 15 வருடத்துக்கு முன்னாடி எழுதி இருந்தால் ,மெடல் கொடுத்து இருப்பேன், அய்யாசாமி ஆளவிடுங்க.

நாஞ்சில் பிரதாப் said...

ஒரு அடிமை சிக்கிடுச்சு... நமக்கு வாய்த்த அடிமை மிகவும் நல்லவர் ஆனால் வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி...

இளம் தூயவன் said...

ஸ்டீபன் ஆட்டோ வரமாதிரி தெரியுது? உஷார்....

நாஞ்சில் பிரதாப் said...

இநத் பொண்ணுங்கல்லாம் பிட்டு அடிச்ச மாட்டுற அனுபவம் இல்லையோ... நம்பளை விட அதிகமா பிட்டு அடிக்கிறது இந்த பொண்ணுங்கத்தான் தல... இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது...

நாஞ்சில் பிரதாப் said...

/ஸ்டீபன் ஆட்டோ வரமாதிரி தெரியுது? உஷார்....//

தூக்கி உள்ளப்போடுங்கய்யா...

இளம் தூயவன் said...

தல பிட்டு நாம அடிச்சா பிடிச்சிடுவாங்க, அங்க ஒன்றும் செய்ய முடியாது.

இளம் தூயவன் said...

வில்லுக்குறி ஆட்கள் உசாரான ஆட்கள். அவ்வளவு சீக்கிரம் மாட்ட மாட்டார்.

நாஞ்சில் பிரதாப் said...

/வில்லுக்குறி ஆட்கள் உசாரான ஆட்கள். அவ்வளவு சீக்கிரம் மாட்ட மாட்டார்//

அப்படின்னு சொல்லச்சொன்னாரா... கொடுத்த காசக்குமேல கூவகூடாது வாத்தியாரே...

நாஞ்சில் பிரதாப் said...

//தல பிட்டு நாம அடிச்சா பிடிச்சிடுவாங்க, அங்க ஒன்றும் செய்ய முடியாது.//

அப்படி இல்ல மேட்டரு ...ஒளிச்சு வைக்க நிறைய இடம் இருக்கு...நமக்கு இருக்கிறது அந்த உருப்படத பாக்கெட் மட்டும்தானே...கை விட்டு நோன்டி எடுத்துருவானுங்க...

நாஞ்சில் பிரதாப் said...

//பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..//

இதுதான் ஸ்டீபன் டாப்பு காமெடி.... எவ்ளோ அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரியே காமெடி பண்றாருய்யா...

இளம் தூயவன் said...

காசுக்கு கோசம் போடுற ஆட்கள் நம்ம இல்ல பாஸ்

இளம் தூயவன் said...

இதுதான் ஸ்டீபன் டாப்பு காமெடி.... எவ்ளோ அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரியே காமெடி பண்றாருய்யா...

ஸ்டீபன் ரொம்ப நல்லவரு.....ஏன் ஸ்டீபன் உங்களுக்கு காமெடி எல்லாம் தெரியுமா ?

இளம் தூயவன் said...

ஓகே பிரதாப் கொஞ்சம் வெளியில் போக வேண்டியுள்ளது. அக்பர் சரவணகுமார் ஸ்டார்ஜன் வந்து கொண்டுள்ளார்.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//அய்யா ராசா...எப்படிய்யா இதெல்லாம்... இன்னும் ஸ்கூல் நினைப்பு போகவே இல்ல போலருக்கு... :))//

அதில்லாம் ம‌ல‌ரும் நினைவுக‌ள் த‌ல‌ ... அதெப்பிடி ம‌ற‌க்க‌ முடியும்..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//ஸ்டீபன் பல்லு தேப்பாரு, குளிப்பாராம்பார...நான் அன்னைக்கே சொன்னேன்... இந்த
அக்பரு கொக்பரு நம்பவே இல்லை....//

ந‌ல்ல‌ ஆளுகிட்ட‌ கேட்டீங்க‌ த‌ல‌... அவ‌ரே அதில்லாம் ப‌ண்ணி எத்த‌னை நாள் ஆச்சோ...

நாடோடி said...

@இளம் தூயவன் said...
//ஸ்டீபன் ஒரு 15 வருடத்துக்கு முன்னாடி எழுதி இருந்தால் ,மெடல் கொடுத்து இருப்பேன், அய்யாசாமி ஆளவிடுங்க.//

இப்ப‌வும் ஒண்ணும் கெட்டு போக‌லை .... ந‌ம்ம‌ ஆஸ்காருக்கே அனுப்பானு சொல்லுறாங்க‌..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//ஒரு அடிமை சிக்கிடுச்சு... நமக்கு வாய்த்த அடிமை மிகவும் நல்லவர் ஆனால் வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி...///

விட்டு பிடியுங்க‌ளேன்....

நாடோடி said...

@இளம் தூயவன் said...
//ஸ்டீபன் ஆட்டோ வரமாதிரி தெரியுது? உஷார்....//

எவ்வ‌ள‌வோ ச‌மாளிச்சிட்டோம் .... இதை ச‌மாளிக்க‌ மாட்டோமா?... க‌வ‌லையை விடுங்க‌ தூய‌வ‌ன்..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//இநத் பொண்ணுங்கல்லாம் பிட்டு அடிச்ச மாட்டுற அனுபவம் இல்லையோ... நம்பளை விட அதிகமா பிட்டு அடிக்கிறது இந்த பொண்ணுங்கத்தான் தல... இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது...//

ஆமா த‌ல‌ நானும் பாத்திருக்கிறேன்.... க‌முக்க‌மா உக்காந்து பிட்டு அடிப்பாங்க‌..

kavisiva said...

இந்த பசங்களே இப்படித்தான்பா. எப்பவும் பொண்ணுங்களை வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு.

இவங்க மட்டும் புதுசா ஒரு பொண்ணு க்ளாசுக்கு வந்துட்டா அந்த பொண்ணு பக்கமே போக மாட்டாங்க உத்தம புத்திரனுங்க :-)

எல்லாம் பொறாமை ஒரு பொண்ணு படிச்சு முன்னேறிடக் கூடாதே உடனே வயிறு எரிஞ்சுடுமே

அய்யோ கவி ஓடிடு இல்லேன்னா கூட்டணி சேர்ந்து உன்னை ஓட ஓட விரட்டிடுவாங்க. விடு ஜூட் எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏப்

அக்பர் said...

அடப்பாவிங்களா அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா.

இன்னிக்கு ஸ்டீபன் வகையா மாட்டிக்கிட்டாரு.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..//

இதுதான் ஸ்டீபன் டாப்பு காமெடி.... எவ்ளோ அடி வாங்குனாலும் வலிக்காத மாதிரியே காமெடி பண்றாருய்யா...///

எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப‌ட்டு மேலே ப‌த்து பாயிண்ட் எழுதி சிரிக்க‌ வைச்சா.... க‌டைசில‌ உள்ள‌ வ‌ரியை எடுத்து போட்டா டாப்பாம்லா..... கொர்ர்ர்ர்ர்ர்...

அக்பர் said...

5 நிமிட்ஸ் ப்ளீஸ்.

படிச்சாத்தான் கும்மியடிக்க வசதியா இருக்கும்.

தமிழ் உதயம் said...

நல்லா இருந்தது. எனக்கு இது மலரும் நினைவுகளா இல்ல. காரணம் கோ-எஜ்கேஷன் ஸ்கூல்ல படிக்கல. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// நாஞ்சில் பிரதாப் said...

அக்பரு, சரவணன், குரு... ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்... நல்ல முட்டுச்சந்தா பார்த்துவைங்கப்பா...///

நாஞ்சிலு.. உங்க குரு வந்தாச்சி.. ஆட்டோக்கு பணம் கொடுத்து கட்பண்ணுங்க..

அக்பர் said...

//ஸ்டீபன் பல்லு தேப்பாரு, குளிப்பாராம்பார...நான் அன்னைக்கே சொன்னேன்... இந்த
அக்பரு கொக்பரு நம்பவே இல்லை....//

இது எப்ப நடந்தது. ஏன் சும்மா நிக்கிற என்னையை சட்டையை பிடிச்சி இழுத்து விடுதீங்க.

நாடோடி said...

@kavisiva said...
//இந்த பசங்களே இப்படித்தான்பா. எப்பவும் பொண்ணுங்களை வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு. //

ஆமாங்க‌ இந்த‌ ப‌ச‌ங்க‌ எல்லாம் ரெம்ப‌ கெட்ட‌ ப‌ச‌ங்க‌... இப்ப‌டி பொண்ணுங்க‌ கூட‌ ஒர‌ண்டை இழுக்கிற‌தே வேலையா போச்சி...


///இவங்க மட்டும் புதுசா ஒரு பொண்ணு க்ளாசுக்கு வந்துட்டா அந்த பொண்ணு பக்கமே போக மாட்டாங்க உத்தம புத்திரனுங்க :-)///

என்ன‌ங்க‌ இப்ப‌டி பொசுக்குனு சொல்லிபுட்டீங்க‌... ப‌த்திர‌மான‌ உத்த‌ம‌னுங்க‌..

//எல்லாம் பொறாமை ஒரு பொண்ணு படிச்சு முன்னேறிடக் கூடாதே உடனே வயிறு எரிஞ்சுடுமே//

ஆமாங்க‌ எல்லாம் வ‌ய‌று எரிஞ்சு வ‌ய‌று இல்லாம் திரியுற‌ ப‌ச‌ங்க‌....

அய்யோ கவி ஓடிடு இல்லேன்னா கூட்டணி சேர்ந்து உன்னை ஓட ஓட விரட்டிடுவாங்க. விடு ஜூட் எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏப்//

உங்க‌ அப்ரோச் பிடிச்சிருக்கு.... ஹி..ஹி..

அக்பர் said...

//அப்படி இல்ல மேட்டரு ...ஒளிச்சு வைக்க நிறைய இடம் இருக்கு...நமக்கு இருக்கிறது அந்த உருப்படத பாக்கெட் மட்டும்தானே...கை விட்டு நோன்டி எடுத்துருவானுங்க...//

ஆணாதிக்கவாதி நாஞ்சில் , ஸ்டீபனை வன்மையா கண்டிக்கிறேன்.

அக்பர் said...

ஆனாலும் குரு வருவது தெரிஞ்சவுடன் இப்படி ஓடி ஒளியிறது நல்லாயில்லை நாஞ்சிலு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//ஒரு அடிமை சிக்கிடுச்சு... நமக்கு வாய்த்த அடிமை மிகவும் நல்லவர் ஆனால் வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி...///

விட்டு பிடியுங்க‌ளேன்....///

ஸ்டீபன்.. விட்டா பிடிக்கமுடியாது.. ஒரே அமுக்.

அக்பர் said...

//நாஞ்சிலு.. உங்க குரு வந்தாச்சி.. ஆட்டோக்கு பணம் கொடுத்து கட்பண்ணுங்க..//

உன் கண்ணாடியை பார்த்து ஓடினவர்தான் இன்னும் வரவே இல்லை. ஆட்டோவை நீயே கட்பண்ணு. இல்லை ஆட்டோக்காரர் உன்னை கட் பண்ணிடுவார்.

நாடோடி said...

@அக்பர் said...
//அப்படி இல்ல மேட்டரு ...ஒளிச்சு வைக்க நிறைய இடம் இருக்கு...நமக்கு இருக்கிறது அந்த உருப்படத பாக்கெட் மட்டும்தானே...கை விட்டு நோன்டி எடுத்துருவானுங்க...//

ஆணாதிக்கவாதி நாஞ்சில் , ஸ்டீபனை வன்மையா கண்டிக்கிறேன்.//

ஆமாங்க‌ அக்ப‌ர்... ஒருப‌க்க‌மா ப‌ல்லு ரெம்ப‌ வ‌லிக்குது வியாதி முத்திக்கிட்டு தான் இருக்கு.. ந‌ல்ல‌ டாக்ட‌ரா சொல்லுங்க‌..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.///

எட்டி.. என்னமா இருக்கான் பாரேன்.. தீயா இருக்கான். இந்த பயபுள்ளக்கிட்ட ஏதோ விசயமிருக்கு..

அக்பர் said...

கும்மி கூட்டத்தலைவர் அய்யா சரவணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இந்த ஸ்டீபன் அமைதியா இருப்பதை பார்த்தால் எல்லோருக்கும் மெஸேஜ் அனுப்புறார்னு நினைக்கிறேன்.

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/// நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//ஒரு அடிமை சிக்கிடுச்சு... நமக்கு வாய்த்த அடிமை மிகவும் நல்லவர் ஆனால் வாய்தான் கொஞ்சம் ஜாஸ்தி...///

விட்டு பிடியுங்க‌ளேன்....///

ஸ்டீபன்.. விட்டா பிடிக்கமுடியாது.. ஒரே அமுக்.//

ஆஹா ஒண்ணு கூடிட்டாங்க‌ப்பா...ஒண்ணு கூடிட்டாங்க‌..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// அக்பர் said...

ஆனாலும் குரு வருவது தெரிஞ்சவுடன் இப்படி ஓடி ஒளியிறது நல்லாயில்லை நாஞ்சிலு.///

என்னயிது சிஷ்யர் ஓடிட்டாரா..:((

அக்பர் said...

@ஸ்டார்ஜன்
//எட்டி.. என்னமா இருக்கான் பாரேன்.. தீயா இருக்கான். இந்த பயபுள்ளக்கிட்ட ஏதோ விசயமிருக்கு..//

அதுக்காக உன்னை நீயே புகழ்வது ரொம்பவே டூ மச் :)

அப்புறம் அது எட்டி இல்லை ஏட்டி.

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///3) ஒரு வகுப்புல இருந்து அடுத்த வகுப்புக்கு போகும் போது ஏவானவது புதுசா வேற ஸ்கூல்ல படிச்ச பையன் ஒருத்தன் வந்து சேருவான். இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.///

எட்டி.. என்னமா இருக்கான் பாரேன்.. தீயா இருக்கான். இந்த பயபுள்ளக்கிட்ட ஏதோ விசயமிருக்கு..//

எப்ப‌டி ஸ்டார்ஜ‌ன் இப்ப‌டியெல்லாம்.... சிரிச்சி முடிய‌லை..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// அக்பர் said...

கும்மி கூட்டத்தலைவர் அய்யா சரவணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ///

அவரு எங்கயிருக்காரோ தெரியலியே..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
// அக்பர் said...

ஆனாலும் குரு வருவது தெரிஞ்சவுடன் இப்படி ஓடி ஒளியிறது நல்லாயில்லை நாஞ்சிலு.///

என்னயிது சிஷ்யர் ஓடிட்டாரா..:((//

வ‌ந்திருவாரு... வ‌ந்திருவாரு..

அக்பர் said...

@ஸ்டீபன்
//ஆமாங்க‌ அக்ப‌ர்... ஒருப‌க்க‌மா ப‌ல்லு ரெம்ப‌ வ‌லிக்குது வியாதி முத்திக்கிட்டு தான் இருக்கு.. ந‌ல்ல‌ டாக்ட‌ரா சொல்லுங்க..//

ஒழுங்க பல்லு தேய்க்கிறதில்லை. அதுதான் மட தலைவர் நாஞ்சில் அப்பவே சொன்னாரு கேட்டாத்தானே.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

46

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

474

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

48

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

49

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

50

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹைய்யா... ஹா... ஹா.. ஹா..

நாந்தான் இன்னக்கி 50 போட்டம்ல போட்டம்ல.. :))

நாடோடி said...

இப்ப‌வும் சொல்லிபுட்டேன் நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எப்பூடி

அக்பர் said...

//நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.//

நோட்டும் கூல், அவங்களும் கூல்.

//அவர்கள் மூஞ்சி கூட கழுவாமல் பவுடர் போட்டதை கண்ணுல இருக்கிற கூழை காட்டி கொடுத்திரும், அதை நாம சொன்னா மூஞ்சை தூக்கி வச்சிட்டு நாலு நாளு பேச மாட்டார்கள்!!!//

அதானே பார்த்தேன். பல்லுதேய்க்காத பிள்ளைக கூட உங்களுக்கென்ன பேச்சு?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா 50 போட்டம்ல..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//ஹைய்யா... ஹா... ஹா.. ஹா..

நாந்தான் இன்னக்கி 50 போட்டம்ல போட்டம்ல.. :))//

க‌ள்ளாட்ட‌ம் ஆடுற‌துல‌ உம்மை அடிச்சுக்க‌ ஆளு இல்ல‌ ஓய்.... :)))

அக்பர் said...

//474//

இது உன் ஆளு எடுத்த 10ம் வகுப்பு மார்க்கா?

அக்பர் said...

//இப்ப‌வும் சொல்லிபுட்டேன் நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது..//

என்னைய்யா அப்போலேர்ந்து பயமுறுத்திக்கொண்டே இருக்கீங்க. வரச்சொல்லுங்கையா நாஞ்சிலை.

நாடோடி said...

@அக்பர் said...
//நோட்டு தண்ணில நனைஞ்சது போல இருக்கும், என்னானு கேட்டா என் தம்பி ஒண்ணுக்கு அடிச்சிட்டானு கூலா சொல்லுவார்கள்.//

நோட்டும் கூல், அவங்களும் கூல்.//

எதுகை மோனையா?... க‌ல‌க்குங்க‌ அக்ப‌ர்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//474//

இது உன் ஆளு எடுத்த 10ம் வகுப்பு மார்க்கா?///

ஆமா.. இல்லயா பின்ன..

அக்பர் said...

//க‌ள்ளாட்ட‌ம் ஆடுற‌துல‌ உம்மை அடிச்சுக்க‌ ஆளு இல்ல‌ ஓய்.... :)))//

நாலு தடவை பெயில் ஆகி இப்பத்தான் பாஸாகியிருக்காரு. இப்படி சொன்ன எப்புடி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// நாடோடி said...

இப்ப‌வும் சொல்லிபுட்டேன் நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது..///

இதென்ன கணக்கு..

நாடோடி said...

@அக்பர் said...
//இப்ப‌வும் சொல்லிபுட்டேன் நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது..//

என்னைய்யா அப்போலேர்ந்து பயமுறுத்திக்கொண்டே இருக்கீங்க. வரச்சொல்லுங்கையா நாஞ்சிலை.//

பாவ‌ம் அவ‌ரு என்னையா ப‌ண்ண‌ போறாரு... இந்த‌ ப‌திவு ஆண‌த்திக்க‌வாதி எழுதிய‌துனு நீர் த‌னே ஓய் சொன்னீரு... அப்புற‌ம் வ‌ந்து இதுக்கு க‌மெண்ட் போட்ட‌ உங்க‌ த‌ங்க‌ம‌ணி என்ன‌ சொல்லுவாங்க‌?... என‌க்கு இருக்க‌வே இருக்கு ஆசிர‌ம‌ம்..

அக்பர் said...

// இந்த பொண்ணுங்க எல்லாம் அவன் தான் உலகத்தை கண்டு பிடிச்சிட்டு வந்த கொலம்பஸ் போல அவனை சுத்தி டவுட் கேட்க ஆரம்ச்சிடுவார்கள்.//

ஆமா. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்.

//இவ ஏன் நம்மள கழட்டி விட்டானு ஆரய்ச்சில இறங்கி, கொஞ்சம் படிச்சிட்டு இருந்த படிப்பையும் கோட்டை விட வச்சிருவார்கள்.//

இது எப்ப நடந்திச்சு. நம்ம நாஞ்சிலு கொஞ்சம் படிப்பை கூட கோட்டை விட வாய்ப்பில்லை. ஏனா அவரு அந்த கொஞ்சம் கூட படிச்சதில்லை. :)

ஆதாரம் எங்கிட்டே இருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//க‌ள்ளாட்ட‌ம் ஆடுற‌துல‌ உம்மை அடிச்சுக்க‌ ஆளு இல்ல‌ ஓய்.... :)))//

நாலு தடவை பெயில் ஆகி இப்பத்தான் பாஸாகியிருக்காரு. இப்படி சொன்ன எப்புடி///

அப்படிச்சொல்லு அக்பர்.. நாலுதடவ கோட்டவிட்டவன். இன்னக்கிதான்..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
// நாடோடி said...

இப்ப‌வும் சொல்லிபுட்டேன் நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது..///

இதென்ன கணக்கு..///

கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...

அக்பர் said...

// அப்புற‌ம் வ‌ந்து இதுக்கு க‌மெண்ட் போட்ட‌ உங்க‌ த‌ங்க‌ம‌ணி என்ன‌ சொல்லுவாங்க‌?... என‌க்கு இருக்க‌வே இருக்கு ஆசிர‌ம‌ம்..//

ஆமால்ல. எனக்கு ஸ்டார்ஜன் மாதிரி புனைப்பெயர் கூட இல்லையே. சிக்கல்ல சிக்க வச்சுட்டிங்களே.

அக்பர் said...

//கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...//

நீங்க நாஞ்சிலோட ஆசிரமம் போகப்போறேன் சொல்றீங்களே. அங்க குரு யாரு? இவர்தான். :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///நாடோடி said...

கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...///

ஆசிரமத்துக்கு போய் என்ன பண்ணனும்...சொல்லிக்கொடுங்க ஸ்டீபன்.

நாடோடி said...

@அக்பர் said...
//கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...//

நீங்க நாஞ்சிலோட ஆசிரமம் போகப்போறேன் சொல்றீங்களே. அங்க குரு யாரு? இவர்தான். :)//

அப்ப‌ அடிச்சி ஆடுங்க‌ ஸ்டார்ஜ‌ன்... ஹி..ஹி..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அய்யா.. ஸ்டீபன்... எங்கய்யா போயிட்டீரு.. இங்க எங்கள இங்க‌ புலம்ப வச்சிட்டு..

அக்பர் said...

// உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!//

ராமராஜன் ஃபேனா பாஸ் நீங்க :)

இதுக்கு பின்னாடி (பதிவு) உள்ள அனைத்து மேட்டர்களுக்கும் கண்ணா பின்னா ரிப்பீட்டு.

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///நாடோடி said...

கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...///

ஆசிரமத்துக்கு போய் என்ன பண்ணனும்...சொல்லிக்கொடுங்க ஸ்டீபன்.//

நீரு எதுவும் ப‌ண்ணாம‌ இருந்தாலே போதும்... :))))))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

காக்க்கா சட்ட காயும்.. ஏன்சட்ட காயாதுன்னு பாட்டெல்லாம் பாடியிருப்பீங்களே ஸ்டீபன்.

அக்பர் said...

//ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..//

இதையேத்தான் ஸ்டார்ஜன்னும் சொல்றாரு. அப்படி ஃபேஸ்ல என்னதாம்வே வச்சிருக்கிங்க.

அக்பர் said...

//ஆசிரமத்துக்கு போய் என்ன பண்ணனும்...சொல்லிக்கொடுங்க ஸ்டீபன்.////

அங்கே ஞான ஒளி கிடைக்கும்.

சந்தோசப்படாதே. கேமரால போகஸ் பண்ணுறாங்கன்னு அர்த்தம் :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
///நாடோடி said...

கூடிய‌ சீக்கிர‌ம் நீரும் ஒரு ந‌ல்ல‌ ஆசிர‌மா பாரும்...///

ஆசிரமத்துக்கு போய் என்ன பண்ணனும்...சொல்லிக்கொடுங்க ஸ்டீபன்.//

நீரு எதுவும் ப‌ண்ணாம‌ இருந்தாலே போதும்... :))))))))

ஆசிரமத்துல எதுவும் பண்ணலைன்னா அப்ப குருவே கிடையாதே..

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அய்யா.. ஸ்டீபன்... எங்கய்யா போயிட்டீரு.. இங்க எங்கள இங்க‌ புலம்ப வச்சிட்டு..//

எங்க‌யும் போக‌லை... இதுக்கு தான் அப்ப்வே சொன்னேன் க‌ண்ணாடியை க‌ழ‌ட்ட‌ன‌னு .... இருட்டுலேயும் க‌ண்ணாடி போட்டா என்ன‌த்து ஆவுற‌து.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// அக்பர் said...

//ஆசிரமத்துக்கு போய் என்ன பண்ணனும்...சொல்லிக்கொடுங்க ஸ்டீபன்.////

அங்கே ஞான ஒளி கிடைக்கும்.

சந்தோசப்படாதே. கேமரால போகஸ் பண்ணுறாங்கன்னு அர்த்தம் :)///

ஆஹ்ஹா.. இது வேறயா.. இந்த குரு எஸ்கேப்பாயிருவான்.

அக்பர் said...

@இளம் தூயவன்
//காசுக்கு கோசம் போடுற ஆட்கள் நம்ம இல்ல பாஸ்//

அப்ப எங்ககிட்டே கொடுங்க பாஸ். நாங்க கோஷம் போடுறோம் :)

யோவ் நாஞ்சிலு யாரைப் பார்த்து என்ன சொன்னீரு. அவர் எங்க ஏரியாக்காரர். குரு உங்க மேல கோபமா இருக்கார்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நாடோடி said...

// @Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அய்யா.. ஸ்டீபன்... எங்கய்யா போயிட்டீரு.. இங்க எங்கள இங்க‌ புலம்ப வச்சிட்டு..//

எங்க‌யும் போக‌லை... இதுக்கு தான் அப்ப்வே சொன்னேன் க‌ண்ணாடியை க‌ழ‌ட்ட‌ன‌னு .... இருட்டுலேயும் க‌ண்ணாடி போட்டா என்ன‌த்து ஆவுற‌து.///

கண்ணாடிக்கு திருஷ்டி அதிகமாயிருச்சி..:))

அக்பர் said...

கும்மி கூட்டத்தலைவர் வந்தா கூப்பிடுங்க. இப்ப பை.

நாடோடி said...

@அக்பர் said...
//கும்மி கூட்டத்தலைவர் வந்தா கூப்பிடுங்க. இப்ப பை.//

க‌ண்டிப்பா வ‌ண்டி அனுப்புறேன்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

// நாடோடி said...

@அக்பர் said...
//கும்மி கூட்டத்தலைவர் வந்தா கூப்பிடுங்க. இப்ப பை.//

க‌ண்டிப்பா வ‌ண்டி அனுப்புறேன்...//

அப்ப நான் 100 போட்டுட்டு பை சொல்றேன்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

85

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

86

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

87

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

88

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

89

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நாடோடி said...

// @Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அய்யா.. ஸ்டீபன்... எங்கய்யா போயிட்டீரு.. இங்க எங்கள இங்க‌ புலம்ப வச்சிட்டு..//

எங்க‌யும் போக‌லை... இதுக்கு தான் அப்ப்வே சொன்னேன் க‌ண்ணாடியை க‌ழ‌ட்ட‌ன‌னு .... இருட்டுலேயும் க‌ண்ணாடி போட்டா என்ன‌த்து ஆவுற‌து.///

கண்ணாடிக்கு திருஷ்டி அதிகமாயிருச்சி..:))//

ஆமா ஸ்டார்ஜ‌ன் எதுக்கும் ஒரு த‌ட‌வை த‌லையோடு சேர்த்து சுத்தி போட்டுவிடுங்க‌...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

90

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

92

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

93

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

94

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//நாடோடி said...

ஆமா ஸ்டார்ஜ‌ன் எதுக்கும் ஒரு த‌ட‌வை த‌லையோடு சேர்த்து சுத்தி போட்டுவிடுங்க‌...///

எத்தன ரவுண்டு சுத்தணும் ஸ்டீபன்.. எதுக்கு ஒரு 150 ரியால் அனுப்பி வைங்க ஸ்டீபன்.. கண்ணாடிக்கு சுத்திப்போட்டுருவோம்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

96

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

97

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

98

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

99

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

100

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

100.. இனி கவலையில்ல.. வர்ட்டா...

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//100.. இனி கவலையில்ல.. வர்ட்டா...//

த‌ண்ணியை குடிச்சிட்டு வாங்க‌...

நாஞ்சில் பிரதாப் said...

அடச்சே....சைக்கிள் கேப்புல லாரியே ஓட்டுறாங்கப்பா....

நாஞ்சில் பிரதாப் said...

//.. kavisiva said...
இந்த பசங்களே இப்படித்தான்பா. எப்பவும் பொண்ணுங்களை வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு. //

கவி... இது ரத்த பூமி..இங்கல்ல்ம் வரப்படாது.... போங்க போய் வீட்டுல பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க... போங்க போங்க...

நாஞ்சில் பிரதாப் said...

//இவங்க மட்டும் புதுசா ஒரு பொண்ணு க்ளாசுக்கு வந்துட்டா அந்த பொண்ணு பக்கமே போக மாட்டாங்க உத்தம புத்திரனுங்க :-)//

//எல்லாம் பொறாமை ஒரு பொண்ணு படிச்சு முன்னேறிடக் கூடாதே உடனே வயிறு எரிஞ்சுடுமே//

நீங்க இன்னும் போகலையா???


//அய்யோ கவி ஓடிடு இல்லேன்னா கூட்டணி சேர்ந்து உன்னை ஓட ஓட விரட்டிடுவாங்க. விடு ஜூட் எஸ்ஸ்ஸ்ஸ்கேஏஏஏஏஏஏப்///

அது.... அந்த பயம் இருக்கனும்... அங்..

நாஞ்சில் பிரதாப் said...

//என்னயிது சிஷ்யர் ஓடிட்டாரா..://

அடச்சே என்ன குரு...ஏதோ பொண்ணைக்கூட்டிட்டு ஓடுனது மாதிரி இவ்ளோ ஷாக்காகறீங்க

நாஞ்சில் பிரதாப் said...

474 இது உன் ஆளு எடுத்த 10ம் வகுப்பு மார்க்கா.//

இவ்ளோ மார்க் குரு என்னைக் எடுத்துருக்காரு...இது காலாணடு அணைரையாடு, முழுவாண்டு எல்லா பரிட்சைலும் எடுத்து மொத்த மார்க்கு...

நாஞ்சில் பிரதாப் said...

//கும்மி கூட்டத்தலைவர் அய்யா சரவணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

ஆகா... ஏதோ கொள்ளைக் கூட்டத்தலைவன் ரேன்சுக்கு சொல்லுறாங்களே...

நாஞ்சில் பிரதாப் said...

// நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலாந்தாவிட‌ம் ஆசிர‌ம‌த்துக்கு போற‌துக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன்.... பாத்துக்குங்க‌ அப்பு அப்புற‌ம் வீட‌ல‌ பூரிக‌ட்டை அடிகிடைச்சுது எங்கிட்ட‌ வ‌ர‌பிடாது//
வாங்க வாஙக வந்து ஜோதில ஐக்கியமாகுங்க....வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

இன்னிக்கு ஸ்டீபன் சிக்கிருக்காரா? ரைட்டு..

செ.சரவணக்குமார் said...

அடப்பாவிகளா!! ஆஃபீஸ்ல இருந்து வர்றதுக்குள்ள கச்சேரிய ஆரம்பிச்சிட்டீங்களே..

பொண்ணுங்களே இப்பிடித்தான்னு பார்த்தவுடனே என்னமோ ஏதோன்னு ஓடிவந்து பார்த்தா, தம்பி இன்னும் ஸ்கூல விட்டு வரல போலயிருக்கே.. ஹய்யோ ஹய்யோ பச்சப்புள்ளயா இருக்காரேப்பா..

போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா!

செ.சரவணக்குமார் said...

//கும்மி கூட்டத்தலைவர் அய்யா சரவணன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இருக்கேன் ராஸ்கல்.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?

செ.சரவணக்குமார் said...

//நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் வைக்கிறேன் என்று சொன்ன வாத்தியாரு, இன்னைக்கு மறந்து பாடம் நடத்த போனா, முத ஆளா எழுந்து சார் இன்னைக்கு பரிட்சை வைக்கிறேன்னு நேத்தைக்கு சொன்னீங்கனு எடுத்து கொடுப்பார்கள்.//

இதான் ராசா நீங்க சொன்னதுலயே டாப்பு..

ஓவரா அடி வாங்கியிருப்பீங்க போல இருக்கே??

செ.சரவணக்குமார் said...

//அக்பரு, சரவணன், குரு... ஒரு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்... நல்ல முட்டுச்சந்தா பார்த்துவைங்கப்பா...//

சவுதிக்கே ஆட்டோவா? அதுசரி ஸ்டீபன கும்மனும்னா எவ்வளவு ரிஸ்க்குன்னாலும் தயங்காம எடுக்குறாய்ங்களே????

ஏய் எங்கய்யா போனீக? வழக்கம்போல லேட்டா வந்துட்டு தனியா டீயாத்திட்டு இருக்கேன்.. வாங்கலே சீக்கிரம் முடிச்சிட்டு வேற சோலியப் பார்க்கப்போலாம்.

செ.சரவணக்குமார் said...

// உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!//

அவுக சொன்னாகளேன்னு இப்படியே மஞ்சளா சுத்திட்டிருந்தோம்னா ஒருநாளைக்கு வீட்டுல சொல்லி நம்ம மஞ்சா சோறையும் எடுத்துருவாக தெரியும்ல?

செ.சரவணக்குமார் said...

இவ்வளவயும் சொல்லிட்டு கடைசியா சிலப்பதிகாரத்துல இருந்து மேற்கோள் எடுத்துப் போட்டீக பாருங்க அங்கதாம்வே நிக்கிறாரு நம்ம ஸ்டீபன்..

செல்லம் ஐ லவ் யூ......

நாஞ்சில் பிரதாப் said...

//
எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இருக்கேன் ராஸ்கல்.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா//

பாஸ் நீங்க போடச்சொன்ன ஆளை போட்டுட்டேன்....அடுத்தது யாரு பாஸ்

நாஞ்சில் பிரதாப் said...

//போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா//

hahaha....அப்படியே வந்துடப்போறாரு...யுனிபார்மை மாத்தி வேற ட்ரெஸ் போட்டுவாங்கன்னு விளக்கமா சொல்லுங்க... தம்ப்ப்ப்பரி தப்பா புரிஞ்சுக்கப்போறாரு தல....

நாஞ்சில் பிரதாப் said...

//வாங்கலே சீக்கிரம் முடிச்சிட்டு வேற சோலியப் பார்க்கப்போலாம்.//

கும்மி அடிக்கிறதை ஒரு பார்ட் டைம் வேலையா ஆக்கிடுவாய்ஙக போலருக்கே தல.....

நாஞ்சில் பிரதாப் said...

//சவுதிக்கே ஆட்டோவா? அதுசரி ஸ்டீபன கும்மனும்னா எவ்வளவு ரிஸ்க்குன்னாலும் தயங்காம எடுக்குறாய்ங்களே????//

நீங்க வேற முதல்ல டாக்சி அனுப்பலாம்னுதான் இருந்தேன்... ஸ்டீபனுக்கு ஆட்டோவே ஜாஸ்தியா தோனுச்சு அதான்.... நம்மஊர் புள்ளையா இருந்தாலும் கும்மின்னு வந்துட்டா அதெல்லாம் கண்டுக்கப்படாதுல்ல...

வானம்பாடிகள் said...

உள்காயம் பலமோ:))

நாடோடி said...

@தமிழ் உதயம் said...
//நல்லா இருந்தது. எனக்கு இது மலரும் நினைவுகளா இல்ல. காரணம் கோ-எஜ்கேஷன் ஸ்கூல்ல படிக்கல. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு///

வாங்க‌ த‌மிழ் சார்... கோ‍_எஜ்கேஷ‌ன்ல‌ ப‌டிக்க‌லியா?... அப்ப இது போல‌ ந‌ட‌ந்திருக்க‌ வாய்ப்பில்லை சார்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//என்னயிது சிஷ்யர் ஓடிட்டாரா..://

அடச்சே என்ன குரு...ஏதோ பொண்ணைக்கூட்டிட்டு ஓடுனது மாதிரி இவ்ளோ ஷாக்காகறீங்க//

இவ்வ‌ள‌வு ப‌டிச்ச‌ப்புற‌மும் இன்னும் அந்த‌ ஆசை இருக்கா த‌ல‌...ஹி..ஹி..

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//இன்னிக்கு ஸ்டீபன் சிக்கிருக்காரா? ரைட்டு..//

ஒரு ப‌திவு எழுதின‌து குத்த‌மாய்யா!!!!!!!! வாங்க‌ வாங்க‌...

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
//அடப்பாவிகளா!! ஆஃபீஸ்ல இருந்து வர்றதுக்குள்ள கச்சேரிய ஆரம்பிச்சிட்டீங்களே..

பொண்ணுங்களே இப்பிடித்தான்னு பார்த்தவுடனே என்னமோ ஏதோன்னு ஓடிவந்து பார்த்தா, தம்பி இன்னும் ஸ்கூல விட்டு வரல போலயிருக்கே.. ஹய்யோ ஹய்யோ பச்சப்புள்ளயா இருக்காரேப்பா..

போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா!///

இப்ப‌டியெல்லாம் கூட்ட‌த்தில‌ வ‌ச்சி அசிங்க‌ ப‌டுத்த‌ப‌டாது.. கிர‌வுடு பார்கிதில்லா!!!!!!!

நாடோடி said...

@செ.சரவணக்குமார் said...
இவ்வளவயும் சொல்லிட்டு கடைசியா சிலப்பதிகாரத்துல இருந்து மேற்கோள் எடுத்துப் போட்டீக பாருங்க அங்கதாம்வே நிக்கிறாரு நம்ம ஸ்டீபன்..

செல்லம் ஐ லவ் யூ......///

ரெம்ப‌ ந‌ன்றிங்க‌ண்ணா!!!!!!

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//
எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இருக்கேன் ராஸ்கல்.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா//

பாஸ் நீங்க போடச்சொன்ன ஆளை போட்டுட்டேன்....அடுத்தது யாரு பாஸ்///

ச‌தி திட்ட‌ம் ப‌ய‌ங்க‌ர‌மா ந‌ட‌க்குதுனு நினைக்கிறேன்... பி கேர் புல்.. நான் என்னை சொன்னேன்..

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா//

hahaha....அப்படியே வந்துடப்போறாரு...யுனிபார்மை மாத்தி வேற ட்ரெஸ் போட்டுவாங்கன்னு விளக்கமா சொல்லுங்க... தம்ப்ப்ப்பரி தப்பா புரிஞ்சுக்கப்போறாரு தல....//

ஷேம் ஷேம் ப‌ப்பி ஷேம்.....

நாடோடி said...

@வானம்பாடிகள் said...
//உள்காயம் பலமோ:))//

வாங்க‌ பாலா சார்... ர‌ண‌க‌ள‌ம் ஆகி கிட‌க்குது சார்... அப்ப‌ப்ப‌ இது போல‌ எழுதி தான் ஆத்த‌ வேண்டியிருக்கு...

Chitra said...

குறிப்பு: நான் ஏற்க‌ன‌வே நாஞ்சிலான‌ந்தாவின் ஆசிர‌ம‌த்தில் முத‌ன்மை சிஷ்ய‌ன் ஆகுவ‌த‌ற்கு அனும‌தி வாங்கி விட்டேன். அத‌னால‌ இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌.. ஆனா ஒரு சின்ன‌ க‌ண்டிஷ‌ன் "பேஷ்ல‌ ம‌ட்டும் ட‌ச் ப‌ண்ணாதீங்க‌, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..


...... மக்கா...... நிறைய "அடி" வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பீங்க போல..... குறிப்பாக, நீங்கள் படிக்கும் போது - வகுப்பு தோழிகளிடம்....!!!! பாவம்ங்க நீங்க!

அமைதிச்சாரல் said...

girls were always smarter.. haa..ha..haa.:-))))

ஜெய்லானி said...

//இதுக்கு க‌மெண்ட் போடுப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டில் கிடைக்கும் ஆத‌ர‌வுக்கு(பூரிக்க‌ட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க‌ எச‌மான் குத்துங்க‌..//

இங்கேயும் ஏன் பூரி கட்டையை நினைவு காட்டுறீங்க...அவ்வ்

கண்ணா.. said...

@ நாடோடி நீங்க கோ எட்ல படிச்சுருக்கீங்க.. அதனால பெண் பிள்ளைகளை எதிரியா பாக்குறீங்க...

நானெல்லாம் பசங்க ஸ்கூல்யே படிச்சதால எஸ்டிசி, கான்வெண்ட் பிள்ளைங்க ஸேஸ் பண்ணி ஸைட அடிக்க போனதாலயே பெண் பிள்ளைகளை எதிரியாவே பாக்க முடியல..

பை தி வே... சவுதி குரூப்ஸ் இப்பல்லாம் கும்மி ரிட்டன்ஸ் அதிகமா ஆரம்பிச்சுடீங்களே.... நல்லாருக்கு... நடத்துங்க... நடத்துங்க.......


:))

r.v.saravanan said...

ஸ்டீபன் கமெண்ட் போட சொல்லிட்டு கூடவே பூரிக்கட்டை நினைவு படித்தினாஎப்படி

சரி எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா என்ன

ஹா ... ஹா...

சரி சரி ஸ்கூல் லேருந்து காலேஜ் வர பாருங்க

Riyas said...

நல்லா இருந்தது. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு...CONTINUE...

vanathy said...

ஸ்டீபன், ம்ம்...உங்கள் மலரும் நினைவுகளா??? சூப்பர்.

mkr said...

வீட்டில் ஆதரவு கிடைதாலும் இந்த பதிவை பாரட்டமால் இருக்க முடியாது.

Madhavan said...

//ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.//


ரொம்ப அப்பாவி.. உண்மையலாம் மறைக்காம சொல்லுது பாரு.. பால் மாறாத புள்ள போல இருக்கு..

NIZAMUDEEN said...

ரொம்ப விவரமாய் எழுதியிருக்கீங்க,
அனுபவம்!

Related Posts with Thumbnails