Saturday, February 13, 2010

காதல் - கேள்வி?...பதில்!...



இதை கண்டிப்பா நான் கேட்டுத் தான் ஆகனும். இதை இன்றைக்கு நான் கேட்கவில்லை என்றால் என்றைக்கும் கேட்க முடியாது. அதனால் ஒரு நிமிடம் கூட பொறுக்க முடியாது. இதை இன்றைக்கு இங்கு கேட்டதால அடுத்த மாதம் ஊருக்கு போகும் நாஞ்சிலாரு என்னைப் பற்றி ஊர்ல என்ன சொல்வார் என்பது கண்முன்னே எனக்கு தெரிந்தாலும் என்னால் கேட்காம இருக்க முடியலை. தல என்ன தான் ஊர்ல போய் தண்டோராப் போட்டாலும் என் பேர்ல இருக்குற பால் என்ற வார்த்தையும் அது வடியும் முகமும் என்னை கண்டிப்பா காப்பாத்தும். நம்பிக்கை இருக்கு. அதுனால வெட்டிப் பேச்சு பேசாம கேட்டுட வேண்டயதுதான்..

வெட்டிப் பேச்சு! வெட்டிப் பேச்சு! ஆஹா சித்ரா மேடம் வேற முதல் ஆளா வந்து படிப்பார்களே, என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க, ஏற்கனவே இவங்களும் திருட்டு தம் அடித்து பழக்கம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதுனால் இதையும் அது போல விட்டு விடுவாங்களா. என்னத்தான் இருந்தாலும் கேட்டிருக்க கூடாதோ? பெரிய பிசகு ஆகிவிடுமோ?. எல்லாம் அண்ணாமலையானுக்கு தான் வெளிச்சம்..

அடடே அண்ணாமலையான் அவர்கள் வேற வருவாறு. கையை கட்டி நிற்பதால் விவேகானந்தர் இல்லை என்று வேட்டைக்காரன் விஜய் போல் பஞ்ச் டயலாக் எல்லாம் போட்டுருக்கார். இதை இங்க கேட்டதால கையில் கத்தியோட அடுத்த போஸ் கொடுப்பாரா? இல்லை இது ஒரு பாலான பட்டறை என்று தண்ணி தெளிச்சிட்டு போவாரா?. ஒண்ணும் புரியல.

பலாப்பட்டறை..பாலான பட்டறை..கண்டிப்பா சங்கர் வருவார் .ஏற்கனவே ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது உருப்படியான தகவல் கொடுங்கள் என்று பலமுறை பின்னூட்டம் போட்டிருக்கார். இங்க நான் கேட்டதை படித்தா "நீந்தாத மாட்டை தண்ணிக் கொண்டு போகும்" என்று வானம்பாடி அய்யா கிட்ட சொல்வாறா?..ம்ம்ம் சே...எப்படியும் நான் கேட்டுத் தான் ஆகணும்..

வானம்பாடி அய்யா வேற இப்பதான் பாலோவரா வந்தாரு..ஏதாவது உருபடியா எழுதுவான் என்று..அதுக்குள்ள இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டியதா போச்சு..இது எல்லாம் நல்லா இல்லை தான் என்னப் பண்ணுறது என்னால முடியல..அதனால தான்..நீங்களாவது உண்மையான விளக்கம் தருவீர்கள் என்று...

இதுக்கு தான் சின்ன பசங்க சகவாசம் வச்சிக்க கூடாதுனு சொல்லுறது..இப்ப பாரு சந்தி சிரிக்க வைச்சிட்டான் - தமிழ் உதயம். ஐயா சின்ன பசங்க வேலை எல்லாம் செய்யாம பெரிய மனுசன் ஆக முடியாது என்று எனக்கு ஒண்ணுவிட்ட ஆத்தாவுடைய அப்பத்தா சொன்னதா ஞாபகம். எது எப்படியே நான் இதை கேட்டிருக்க கூடாது. இருந்தாலும் முடியலை..

சவூதியில் இருந்து இந்த கேள்வியை கேட்கலாமா?..என்று சொல்லி இந்த வாரம் சவூதி பதிவர் சங்கத்தை கூட்டுவது உறுதி. கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அவரோட சிஷ்யன் அக்பர் நம்ம கேள்வியை குற்றம் என்று சொல்லி கொண்டுவருவார். சரவண குமாரும் இதை வழிமொழிவார். கல்ப் தமிழன் உட்பட் எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கப் போறது என்னவோ உண்மைதான். ஆனால் இதுக்கெல்லாம் பயந்தால் சரித்திரத்தில் நம்முடைய பெயர் இல்லாமல் போய்விடும் என்று எங்கள் நாஞ்சில் தல சொன்னதை முன்னிட்டு...அப்படியே சவூதி பதிவர் சங்கத்தில் இருந்து நீக்கினாலும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கு அடைக்கலம் கொடுத்த நம்ம நாஞ்சில் சங்கத்தில் வெளிப்படையாக சேருவேன் என்று..என்ன நடந்தாலும் நான் கேட்டுதான் ஆகனும்..

ஏற்கனவே இருக்குறது பதினேழு பாலோவர் தான்..இன்னைக்கு இதைப் பற்றி இங்க கேட்டு எழுதியதால் அடல்ஸ் ஒன்லி என்று சொல்லி நம்ம ஏஞ்சல் புட்டுகிட்டு போறது உறுதி. அப்பாலிக்கா பதினாறுதான். பிளாக்கர் டீம் வேற அடல்ஸ் ஒன்லி வார்னிங் மெசேஜ் கொடுக்க போறங்களாம். போச்சி எல்லாம் போச்சி..பரவாயில்லை..நான் கேட்க வந்ததை கேட்காமல் போகமாட்டேன்.

எது எப்படி ஆனாலும் நான் காண்டிப்பா கேட்பேன்..ஏன்னா இது என்னோட பிரச்சனை இல்லை. நம்ம தமிழ் நாட்டின் பிரச்சனை. இல்ல தவறு இந்தியாவின் பிரச்சனை. இல்லை இல்லை உலகத்தின் பிரச்சனை. இப்படி எல்லாம் பில்டப் கொடுத்து உங்களை கடுப்பேத்த மாட்டேன்...(ஏத்திட்டோம்ல) தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருக்கும்..ஆகா இப்பவே உங்க முகம் எல்லாம் எனக்கு தெரிகின்றது..வேண்டாம் இதுக்கு மேல தாங்காது..கேட்டுட வேண்டியதுதான்.

(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?
(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?
(4) காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?
(5) காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?
(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?

கீழே சொல்லிருப்பது அனைத்தும் நாடோடியின் பதில்கள்.

(1) இதை அறிந்துக் கொள்ள முயற்ச்சி செய்து உயிர்விட்டவர்கள் அதிகம் பேர்..அந்த லிஸ்ட்ல நான் சேர விரும்ப வில்லை
(2) என்னைப் பொறுத்தவரை காதல் பல நேரம் கானல் நீராகவும்..சில நேரம் கிணற்று நீராகவும் தெரிகின்றது.
(3) நான் சொல்வேன் அது ஒரு நிறக்குருடு என்று..நண்பகல் நேரம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போது நம்ம ஹீரோ பீச்சில் நின்று வானவில் அழகை ரசிப்பான்.
(4) காலையில் எழுந்து முகம் கழுவாமல் பவுடர் போட்டு கண்ணாடி பார்ப்பதில் இருந்து..இரவில் படுக்கையில் போர்வையை மூடி செல்போன் பேசுவது வரை இதன் அறிகுறிகள் தான்.
(5) தேன் குவளையில் தலைகீழாக விழுந்த வண்டுப்போல் தான்....
(6) காதலை நம்பியவன் சாமியார்(பித்தன்) ஆனான்..நம்பாதவன் சம்சாரி( குடும்பத்தலைவன்) ஆனான்.

குறிப்பு: நானும் ரவுடிதான்னு வண்டியில வலுக்கட்டாயமா வந்து ஏற மனம் இடம் கொடுக்க வில்லை.. அப்படியே உங்களுடைய பதிலையும் சொன்னீங்கனா?..

16 comments:

Prathap Kumar S. said...

ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை பெரியார் ஆக முடியாது... பால்னு பேரு வச்சுருக்கிறவங்களுக்கெல்லாம் பால் வடியும் முகம் இருக்கும்னு யாரு சொன்னது... உங்க போட்டோவைப்பார்த்தா நாலு புல்லை ஒண்ணா கவுத்துட்டு நிக்கமுடியாம போட்டோவுக்கு போஸ் கொடுத்த மாதிரி இருக்கு... :) :)

Prathap Kumar S. said...

சவுதில ஏதாவது பிரச்சனைன்னு ஒரு போன் போடுங்க தல நாஞ்சில் அங்க அப்பியர் ஆவான்... அப்படியும் பிரச்சனைன்னா துபாய் பதிவர் சங்கம் வாசலை திறந்து வைத்திருக்கிறது...

Prathap Kumar S. said...

இருந்தாலும் என்னையும் மனுசனா மதிச்சு கேட்டதனால உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்...

1.காதல் இருக்கா? இல்லயா?

இது ரொம்ப சிம்பிள் கேள்வி .. பிகரு மொக்கையா இருந்தா அது காதல் இல்லை கருமாந்திரம். சூப்பர் பிகரா இருந்தா அதுவும் காதல் இல்ல காமம்...

2. காதலை யாராவது கண்களால் பார்த்ததுண்டா?

காதலுக்கும் கண் இல்லை. காதலிப்பவர்களுக்கும் கண் இல்லை. அதான் நிறையபேரு அட்டு பிகர்களை கரெக்ட் பண்றானுங்க.. SO காதலை யாருமே பார்த்தது கிடையாது.

3. காதல் கருப்பா? செவப்பா?

காதலி கருப்பா, செவப்பாங்கறதுதான் முக்கியம்.

4. காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?

ஓ தெரியும்... கனவுல பேங்க் பேலன்ஸ் காலியாவுற மாதிரி கனவு வரும்... நாலுபேரு சேர்ந்து அடிபின்னுற மாதிரி கனவு வரும்... டாஸ்மாக்குல உக்காந்துருக்குற மாதிரி கனவு வரும். அப்பவே உஷாராகிடனும்...

5.காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?

சான்ஸே இல்ல... தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பாளுக ...எங்க எந்திருக்கிறதுக்கு... சங்குதான்...

6.காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?

காதல்ங்கறது பனைமரம் மாதிரி. ஏறுனா நொங்கு... விழுந்தா சங்கு. இதுக்கப்புறம் காதலிக்கறவங்கதான் முடிவு பண்ணனும்...

இதுக்கும் மேல விளக்கம் வேணுமா தல...

அண்ணாமலையான் said...

உங்க 6 கேள்விக்கும் ஒரே பதில்தான், அது அன்ப ஒருத்தர் ஒருத்தருக்கிட்ட பரிமாறிக்கறது.. யாரு வேனுன்னாலும் யாருகிட்ட வேனுனாலும்.. மரத்த விரும்புனாலும் அது காதல்தான்... அதனால அன்ப எல்லாரும் எல்லாருகிட்டயும் எந்த பகையும் காட்டாம பகிர்ந்துக்குங்க.. ஆனும் பெண்ணும் விரும்புனாதான் காதல்னா அதுக்கு அடிப்படை செக்ஸ்..(100% யாரும் மறுக்க முடியாது) அன்புனா எல்லாமே அடங்கும்.... அத தெளிவா புரிஞ்சுக்குங்க நண்பர்களே ப்ளீஸ்...

gulf-tamilan said...

எல்லாவற்றுக்கும் நாஞ்சிலை வழிமொழிகிறேன்.:))))

சிநேகிதன் அக்பர் said...

//கண்டிப்பா தலை ஸ்டார்ஜன் தான் தலைமை தாங்குவார். அவரோட சிஷ்யன் அக்பர் //

நான் சொன்னேனா?

வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே. :)

எங்களுக்கு கேள்விகேட்கத்தான் தெரியும்.

Chitra said...

(1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
காதல் என்று ஒன்று இல்லை - ரெண்டு, மூன்று, நான்கு, ஐந்து, .......... இப்படி இருக்கின்றன. going, going, going on.

(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?
பார்க்கிறதுக்கு பேர் காட்சி. காதல் இல்லை.

(3) காதல் கருப்பா?..இல்ல சிவப்பா?
நீங்க வேற. சில காஞ்சி கிடக்குற மாடுங்க இருக்கு. பச்சை, மஞ்சள், வெள்ளைனு எதையும் விட்டு வைக்கிறது இல்லை.

4. காதல் வருவதற்கு முன் அதைத் அறிந்துகொள்ள ஏதேனும் அறிகுறி தெரியுமா?
காதல் வரும் பின்னே, புத்தி பேதலிக்கும் முன்னே.

5.காதலில் விழுந்தவர்கள் மீண்டு எழுந்தது உண்டா?
புதை குழியில் மாட்டியவர்களை கேட்க வேண்டிய கேள்வியா இது?

(6) காதலை நம்பலாமா? நம்பக்கூடாதா?
காதலை நம்புங்க, நம்பாம போங்க.
காதலன், காதலியையும் -
காதலி, காதலனையும் நம்பலாமா என்றா கேள்வி வருது?
அவங்களே கண்டுக்கலை, நமக்கு என்ன?

Chitra said...

ஒவ்வொரு பத்தி முடிவிலும் ஒரு பதிவரின் அறிமுக வார்த்தை கொடுத்து, அவரை பற்றி அடுத்து பத்தியில் எழுதி......... ரொம்பவே யோசிச்சு எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு.

Chitra said...

நாஞ்சிலார் பதில்கள் எல்லாம் கலக்கல்.

cheena (சீனா) said...

காதலர் தினத்தன்று காதலைப் பற்றிய ஆராய்ச்சி - இதில் கலந்து கொள்ள பிரபல பதிவர்களுக்கு அழைப்பு வேறு - வாழ்க வாழ்க - முயற்சி நல்முயற்சி

நாடோடி said...

@அக்பர்

என்ன தல...அந்த கேள்வியாவது கேட்டு விட்டு போறது..ஆட்டம் சூடு பிடிக்கலையே...

தமிழ் உதயம் said...

காதல், உயிர், காற்று இதையெல்லாம் பார்க்க முடியாது. உணர தான் முடியும்.

தாய்மை, பரிசுத்தம் இதெல்லாம் என்ன நிறமோ அதுவே காதலின் நிறம்.

மழை வருவது மயிலுக்கு தெரியும். காதல் வந்தால் அவரவர்களால் அறியப்படும்.

காதலில் விழுவதும், பின்பு எழுவதும் அவரவர் விருப்பம்.

காதல் உங்களை நம்பவும் சொல்லவில்லை. நம்பாமல் இருக்கவும் சொல்லவில்லை.

சிநேகிதன் அக்பர் said...

சாரி ஸ்டீபன். நேற்று எழுத முடியலை.

//அப்படியும் பிரச்சனைன்னா துபாய் பதிவர் சங்கம் வாசலை திறந்து வைத்திருக்கிறது...//

ஆள் புடிக்கிறதை பாருங்கையா. பிரதாப் இது எங்க ஏரியா. அவரு எங்க ஆளு. :)

நாஞ்சில் பிரதாப், அண்ணாமலை சார், சித்ரா சொன்னதைவிடவா புதுசா சொல்லிறப்போறேன். அதுவும் பிரதாப் பதில் வழக்கமான அக்மார்க் குசும்பு.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா.

malar said...

நாஞ்சிலார் ஊருக்கு போறேன் என்று தண்டோரா போட்டவுடன் உங்களுக்கு ஏன் கிலி பிடிக்குது?வில்லுகுறிக்கும் நாகர்கோயிலுக்கும் என்ன அவ்வளவு டச்சிங்?

முகத்தை உலகமே தெரியாதவங்க மாதிரி கேமராவை தூரத்தில் வைத்து ஆக்ட் குடுதா அதுக்கு பெயர் பால் வடியும் முகமாகும்?

சரி விசயதுதக்கு வருவோம்.

உடம்பில் உயிர் எங்கு இருக்கு என்று கண்டுபிடிக்க முடியுமா அது போல் தான் காதல்...

காதல் சிரியவங்க முதல் கிழடு வரை வரும்.

இந்த கல்யாணதுக்கு முன்னாடி ஒன்ரோடு ஒன்று ஒட்டி உரசி மணிகணக்கால போன்பேசுறதுக்கு பேர் காதல் இல்லை.அவங்களுக்கு தான் இந்த் காதலர் தினம் என்றால் அந்த் தினம் அவசியமே இல்லை.

ஏன் நீங்களும் பிலிபைன் ,கேரளா என்று ரூட் போட்டு இருக்கேங்களா?

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்
//ஹஹஹ தல தாடி வச்சவன்லாம் தந்தை பெரியார் ஆக முடியாது... //

என்ன தல உலகம் தெரியாத ஆளா இருக்கீங்க..அவரு பெயரை சொல்லியே காலம் ஒட்டுறவங்க நிறையா பேர் இருக்காங்க..

விளக்கம் ஒவ்வொன்றும் அவ்வளவு விளக்கம் தல...இது போதும்.

@அண்ணாமலையான்

//அது அன்ப ஒருத்தர் ஒருத்தருக்கிட்ட பரிமாறிக்கறது.. யாரு வேனுன்னாலும் யாருகிட்ட வேனுனாலும்.. //

அப்ப எதுக்கு இந்த காதலர் தினம் கருமம் எல்லாம்..
உங்களுடைய கருத்தை நானும் ஒத்துக் கொள்கிறேன்..

@gulf-tamilan

இது நல்லா இருக்கு...

@Chitra

வந்து பதில் சொன்னதற்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி...


@cheena (சீனா)

வருகைக்கு கருத்துக்கும் நன்றி...அடிக்கடி வந்து போங்க..

@தமிழ் உதயம்

//மழை வருவது மயிலுக்கு தெரியும். காதல் வந்தால் அவரவர்களால் அறியப்படும். //

உண்மை தான்... வருகைக்கு கருத்துக்கும் நன்றி...

@அக்பர்

நீங்க திரும்ப வருவீங்கனு தெரியும்..


@malar
//நாஞ்சிலார் ஊருக்கு போறேன் என்று தண்டோரா போட்டவுடன் உங்களுக்கு ஏன் கிலி பிடிக்குது?வில்லுகுறிக்கும் நாகர்கோயிலுக்கும் என்ன அவ்வளவு டச்சிங்?//

நாடு விட்டு நாடு வந்து இருக்கோம்..இது கூட இல்லைனா..எப்படி

//முகத்தை உலகமே தெரியாதவங்க மாதிரி கேமராவை தூரத்தில் வைத்து ஆக்ட் குடுதா அதுக்கு பெயர் பால் வடியும் முகமாகும்?//

உலகம் உருண்டை என்று ஒருத்தர் முதலில் சொன்னாராம்..எல்லோரும் கை கொட்டி சிரித்தார்களாம்..இதுக்கு மேல என்னத்த சொல்ல..

//ஏன் நீங்களும் பிலிபைன் ,கேரளா என்று ரூட் போட்டு இருக்கேங்களா?//

ஏன் தமிழ் நாட்டுல பொண்ணுக்கு பஞ்சம் வந்துட்டா?..அப்படி ஏதும் நடந்ததா நான் கேள்வி படலியே..

இதுக்கு தான் ஊருப் பக்கம் அடிக்கடி போகனும் என்று சொல்றது..

கமலேஷ் said...

உங்களோட தளத்துக்கு இப்பதான் வரேன்...நிறைய ரசிக்கும் படியான விஷயங்கள் உங்கள் தலத்தில் உள்ளது..வாழ்க உங்கள் பனி...

//// (1) காதல் என்று ஒன்று உலகத்தில் இருக்கின்றதா?
(2) காதலை யாராவது கண்களால் பார்த்தது உண்டா?///

இதேன்னே தல...சந்திரமுகி படத்துல வடிவேலு ரஜினி கிட்ட கேக்ற ஸ்டைல " பேய் இருக்கா!!!! இல்லையா????, பேய் வர்றதா எதாவது அருகுறி உண்டா கிடையாதா??? " அப்படிங்கிற மாதிரி இருக்கு...

என்னோட கருத்து...நாஞ்சில் பிரதாப் வாழ்க...

Related Posts with Thumbnails