Friday, March 12, 2010

இர‌ண்டு ச‌த‌ம் அடிப்ப‌து உங்க‌ள் கையில்..புதிர்

இன்று முத‌ல் ஐபில் கிரிக்கெட் திருவிழா ஆர‌ம்பித்துவிடும். என்னை போல் கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளுக்கு கொண்டாட்ட‌ம் தான். அப்ப‌டியே அந்த‌ கொண்டாட்ட‌த்தை ப‌ற்றி ஏதாவ‌து எழுத‌லாம் என்று பார்க்கும் போது என் ந‌ண்ப‌ன் கேட்ட‌ ஒரு புதிர் தான் ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. அதை உங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

ஆட்ட‌ம் இறுதி க‌ட்ட‌த்தை அடைந்து விட்ட‌து. ஆட்ட‌த்தில் க‌டைசி ஓவ‌ரில் இறுதி மூன்று ப‌ந்துக‌ள் தான் மீத‌ம் உள்ள‌து. இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளில் நிற்கும் பேட்ஸ்மேன்க‌ளும் 94 ர‌ன்க‌ள் அடித்து ஆட்ட‌ம் இழ‌க்காம‌ல் உள்ள‌ன‌ர். பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற‌ இன்னும் ஏழு ர‌ன்க‌ள் தான் தேவை. ஆறு ர‌ன்க‌ள் அடித்தால் டிரா.

ஆட்ட‌ முடிவில் எதிரெதிர் ப‌க்க‌ம் உள்ள‌ இர‌ண்டு பேட்ஸ்மேன்க‌ளும் ச‌த‌ம் அடிக்கிறார்க‌ள். அணி வெற்றி பெற‌வும் செய்கிற‌து. ந‌ன்றாக‌ ஞாப‌க‌ம் வைத்து கொள்ளுங்க‌ள் க‌டைசி மூன்று ப‌ந்துக‌ள் தான் உள்ள‌து. இது எப்ப‌டி சாத்திய‌ம் ஆகும் என்ப‌தை நீங்க‌ள் தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும். நீங்க‌ள் கூறும் ப‌தில்க‌ள் அனைத்தும் கிரிக்கெட் விதிமுறைக்கு உட்ப‌ட்டு இருக்க‌ வேண்டும்.

குறிப்பு: என்னால் இந்த‌ புதிருக்கு இர‌ண்டு வ‌ழிக‌ளில் விடைய‌ளிக்க‌ முடியும். வேறு ஏதாவ‌து புது வ‌ழிக‌ளை யாராவ‌து சொல்கிறார்க‌ளா என்று பின்னூட்ட‌த்தில் பார்ப்போம்.

32 comments:

Prathap Kumar S. said...

ரொம்ப யோசிக்க வைக்காதீங்க ஸ்டீபன்... அப்புறம் கிரிக்கெட் பார்க்கறதையே வுட்டுருவேன்...

Unknown said...

முதல் பந்து: நான்கு
அடுத்த பந்து: மூன்று ஓடவேண்டும். ஓடும்போது ஒருவர் ஒரு முனையில் கிரீசுக்குள் போகக்கூடாது. அப்படியானால் அது இரண்டு ரன் என்று நடுவரால் அறிவிக்கப்படும் (short-run or one short). முதலாமவர் சதமடித்து, மறுமுனைக்கு சென்றுவிடுவார். வெற்றிக்கு ஒரு ரன் தேவை.
இறுதிப்பந்து: மற்ற நபர் சிக்சர் அடித்து சதத்தையும் வெற்றியையும் பெறவேண்டியதுதான் மிச்சம்.

இரவு கவி said...

Option1:

4th ball - 1 six - First batsman scored hunderd and match drawn
5th ball - run out - First batsman who scored hunderd in the 4th ball got run out and both batsman crossed. So whoever comes next will be in the non-striker's end.
6th ball - 1 six - Second batsman got hunderd and won the match

Option2:

4th ball - 5 runs - Ball hits the keeper's helpmet which kept back side of keeper
5th ball - 1 run - batsman1 scored hunderd and match drawn
6th ball - 1 six - Second batsman2 got hunderd and won the match

Correct me if i'm wrong.

Chitra said...

ஹாய் பிரதாப், கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் போது, வர விளம்பரங்கள் நல்லா இருக்குல. என்னது, நாடோடி கேள்வி கேக்குறாரா? அதான் century அடிச்சி ஜெயிச்சிட்டாங்களே மக்கா. அதை கொண்டடுறதை விட்டுபுட்டு,............. போட்டியாம்ல..........

சைவகொத்துப்பரோட்டா said...

நிறைய வைடு போட்டு இருப்பாங்களோ,
விடை சொல்லி விடுங்களேன்

தமிழ் உதயம் said...

ஓவர் த்ரோவால், இரண்டு செஞ்சுரி வாய்ப்பு இருக்கலாம்.

Muralitharan said...

முதல் batsman 6 அடித்துவிட்டு அவுட் (கேட்ச் அல்லது ரன் அவுட்) ஆகி அடுத்த பத்ச்மன் கிரீஸ் வந்து அவரும் ௬ எடுத்தல் வெற்றி... ஆனால்ஒரு விக்கெட் போய்விடும்--- ஏதோ என்னால் யோசிக்க முடிந்தது

Kalirajan S said...

49.4: Pollock Bowls to Ganguly. Ganguly hits for Six, Maximum Runs1. Good length ball, but Ganguly did by his favorite down the track attack. Ganguly celebrates his 17th ODI Century! What a Batsman! Can he allow sachin to score century, i don't think so!

1 run required from two balls.

49.5: Pollock Bowls to Ganguly, Out! Edge and Taken in Mid Off. Can you believe both batsman crossed!, Sachin in on Strike

Yuvaraj is the new Batsman, he will be on Non-Striker End.

1 run required to win and 6 run required to score century for Sachin,

49.6: Pollock Bowls to Sachin, Sixer!. can you believe that shot! What a terrific!. Pollock bowls little wide outside off stump with little bouncer and sachin launches it to third man six. sachin did his favorite upper cut to complete his century. Century number 41 for Sachin. India won by 8 Wickets. Great win.

Let's join in moment for a presentation.

Kalirajan S
Pune.

saravana kumar said...

the striking batsman hit the ball,the ball hit in keeper helmet then umpire give 5 runs and that batsman take one run, now the second batsman on striking he hit a six. so team in win, then the two batsman got hundred
by,
saravanan

Velu said...

Answer is very simple:
First Ball sixer (first batsman century). Second ball out by giving catch, at the same time the runner (2nd one in 94) go to the other side. So he hit 6 in third ball, to complete his century!!!!!!!!!!!

Kalirajan S said...

7 Runs from 3 balls.

49:4: Lee to Sehwag: 6 Runs, Sehwag Out ! Down the leg side. What a Drama here! But century for Sehwag, Funny moment!. Sehwag flicks it to third man, Collects three runs and Hussy fires from third man to Non Striker end. Hit the stump, but the Sehwag was in safe area, turned away to the boundary. Believe me there is no back up. Sachin calls for runs and they scored three runs safely. But Sehwag wanted for 4th run, so that Sachin will be on striker end. Watson came from Mid off to collect the Ball and fires to Non-Striker End. Clerk collects and did the job. Sehwag was miles away!. Excellent Running between the wickets and what a presence of mind

1 run from two balls to win and six needed for sachin to score his 50th Century.

Dhoni is the new batsman; He will be on Non –Striker End as Sehwag and sachin were crossed.

All fielders are near boundary. “For what”? Nadodi aksed!.

Fans are all Tensed, but not Sachin. Will he do it again?

49.5: Lee to Sachin. Six and Win! Maximum and Century number 50 for Sachin. What a Batsman!. Another century and another diamond! Lee bowls little short and Sachin launches it to square leg for maximum.

9 Wickets win for India. What a fabulous win!

India won the series 6-1. Amazing win.

Join us in 15 minutes for a presentation ceremony.

Kalirajan S
Pune.

Arockiaraj.L said...

Hai.
I got the answer.
last over 4th ball. 1st batsman got 6 and he completed his century.

then 5th ball. he try to take 1 run. But urfortunately, he had Runout in the bowling stump.

In between time. the 2rd batsmen had line cross. now he is in bating stump.

Another batsman, comes to bating in bowling stump

And last ball of the match, 2rd batsman hit 6 runs. So, finally he also complete his century and his team also winning.

How is it?
Is it Correct?
Please mail me, if i am correct.
arockiaraj.dynamic@gmail.com

suresh said...

first ball six second ball catch now batting end change then another ball another batsman hit six match win and both of them get century...

Suresh Dhanapal said...

First ball one batsman hit six then he reach century another ball that batsman catch now end changed then another batsman hit six lastball now he reached century and match will win

vinoth said...

1st ball six by first batsman

second ball catch but they completed one run

third ball six by second batsman

நாரதர் கலகம் said...

இறுதி மூன்று பந்துகளில் முதல் பந்தில் ஒரு வீரர் ஆறு ரன் அடித்து சதம் காண்கிறார் சோ மேட்ச் சமன் ஆகிறது , அடுத்த பந்தில் சதம் அடித்த வீரர் ரன் அவுட் அல்லது கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார் அச்சமயம் இருவரும் பிட்சில் ரன் எடுக்க முற்பட்டு கிராஸ் ஆகிறார்கள் , இப்போது அவுட் ஆன வீரர் வெளியேற புது ஆள் வருகிறார் அவர் எதிர் முனையில் ரன்னர் ஆக இருக்க ரன்னில் இருக்கும் வீரர் இறுதி பந்தை சந்திப்பார் வெற்றி பெற இன்னும் ஒரு ரன் மட்டும் தேவை பட்டாலும் அவர் சிக்ஸர் அடித்து சதமும் கண்டு அணியையும் வெற்றி பெற வைக்கிறார் , என்ன சரியா சொல்லுங்க நாடோடி ?

OPTION:1

49.4: Pollock Bowls to Ganguly. Ganguly hits for Six, Maximum Runs1. Good length ball, but Ganguly did by his favorite down the track attack. Ganguly celebrates his 17th ODI Century! What a Batsman! Can he allow sachin to score century, i don't think so!

1 run required from two balls.

49.5: Pollock Bowls to Ganguly, Out! Edge and Taken in Mid Off. Can you believe both batsman crossed!, Sachin in on Strike

Yuvaraj is the new Batsman, he will be on Non-Striker End.

1 run required to win and 6 run required to score century for Sachin,

49.6: Pollock Bowls to Sachin, Sixer!. can you believe that shot! What a terrific!. Pollock bowls little wide outside off stump with little bouncer and sachin launches it to third man six. sachin did his favorite upper cut to complete his century. Century number 41 for Sachin. India won by 8 Wickets. Great win.

join in a moment for a presentation.

OPTION:2

7 Runs from 3 balls.

49:4: Lee to Sehwag: 6 Runs, Sehwag Out ! Down the leg side. What a Drama here! But century for Sehwag, Funny moment!. Sehwag flicks it to third man, Collects three runs and Hussy fires from third man to Non Striker end. Hit the stump, but the Sehwag was in safe area, turned away to the boundary. Believe me there is no back up. Sachin calls for runs and they scored three runs safely. But Sehwag wanted for 4th run, so that Sachin will be on striker end. Watson came from Mid off to collect the Ball and fires to Non-Striker End. Clerk collects and did the job. Sehwag was miles away!. Excellent Running between the wickets and what a presence of mind

1 run from two balls to win and six needed for sachin to score his 50th Century.

Dhoni is the new batsman; He will be on Non –Striker End as Sehwag and sachin were crossed.

All fielders are near boundary. “For what”? Nadodi aksed!.

Fans are all Tensed, but not Sachin. Will he do it again?

49.5: Lee to Sachin. Six and Win! Maximum and Century number 50 for Sachin. What a Batsman!. Another century and another diamond! Lee bowls little short and Sachin launches it to square leg for maximum.

9 Wickets win for India. What a fabulous win!

India won the series by 6-1. Amazing win and India Retain Number One Spot in ODI.

Join us in 15 minutes for a presentation ceremony.

Kalirajan S
Pune.

நாரதர் கலகம் said...

இறுதி மூன்று பந்துகளில் முதல் பந்தில் ஒரு வீரர் சிக்ஸர் அடித்து சதம் காண்கிறார் சோ மேட்ச் சமன் ஆகிறது , அடுத்த பந்தில் சதம் அடித்த வீரர் ரன் அவுட் அல்லது கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார் அச்சமயம் இருவரும் பிட்சில் கிராஸ் ஆகிறார்கள் , அவுட் ஆன வீரர் வெளியேற புது ஆள் வந்து எதிர் முனையில் ரன்னர் ஆக நிற்கிறார் இறுதி பந்தை 94 ரன் அடித்த வீரர் சந்திக்கிறார் வெற்றிபெற ஒரூ ரன் போதும் ஆனால் அவர் சிக்ஸர் அடித்து அவரும் சதம் கண்டு அணியையும் வெற்றி பெற வைக்கிறார் , என்ன சரியாய் சொல்லிட்டனா நாடோடி ?

karthikeyan said...

4th ball first batsman hit a six, he got a century, 5th ball trying for single run but run out one batman who made a century, last ball next batsman who is standing in 94 hit a six, he got a century & won the match

நாடோடி said...

வ‌ந்து ப‌தில் த‌ந்த‌ அனைவ‌ருக்கும் என‌து ந‌ன்றிகளும், வாழ்த்துக்க‌ளும். ஆனால் நிறையா பேர் ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி தான் ர‌ன் எடுப்ப‌தாக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள். ஆனால் ஆட்ட‌த்தின் முடிவில் அந்த‌ இர‌ண்டு பேட்ஸ்மேன்க‌ளும் நாட்அவுட் ஆக‌ க‌ள‌த்தில் இருக்கின்ற‌ன‌ர்.

நாரதர் கலகம் said...

எத்தனையோ செய்து விட்டோம் இத பண்ண மாட்டமா? அதாவது 49.4 பந்தில் முதல் வீரர் ஒரு ரன் எடுத்து விட்டு இரண்டாவது ரன்னுக்காக ஓடும போது ரன் அவுட் சான்ஸ் கிடைக்கிறது அப்போ நம்ம கங்குலி மாதிரி ஒரு பீல்டர் பந்தை எடுத்து கண்ணு முழிச்சு முழிச்சு பார்த்து வீச அது ஸ்டெம்ப் இருக்கறத விட்டு பத்து அடி தள்ளி போகுது அப்ப நம்ம நெக்ரா மாதிரி ஒரு பீல்டர் பந்தை தடுக்க ஓடி முடியாம கடைசில குப்புற விழுந்து பந்தை பவுண்டரி லைனுக்கு விட முதலாமவருக்கு ஐந்து ரன்கள் கிடைக்கிறது , அவர்கள் இரண்டாவது ரன்னை முழுசா ஓடி முடிக்கலனாலும் இருவரும் கிராஸ் பண்ணிடறாங்க , அதனால முதல் வீரருக்கு ஐந்தாவது பந்தும் சந்திக்க முடியும் , இப்ப அவர் 99 ரன்ணுல இருக்கறாரு , ஐந்தாவது பந்துல ஒரு ரன் எடுத்து சதம் அடிகறாரு , இப்ப இறுதி பந்து அதை இரண்டாமவர் சந்திப்பார் அதில் டீம் ஜெயிக்க ஒரு ரன் தேவை பட்டாலும் அவர் சிக்ஸர் அடித்து டீமும் வெற்றி பெற வைத்து அவரும் சதம் அடிப்பார் , என்ன சரியா? நாங்கல்லாம் இடியும் மழையும் வந்தா கூட கவலை படாம பேட்ட தூக்கிட்டு போய் தண்ணிக்கு உள்ளேய ஸ்டெம்ப் நட்டு வைச்சு கிரிக்கட்டு விளையாடற ஆளுங்க எங்க கிட்ட முடியுமா?

தாராபுரத்தான் said...

எனக்கு சம்பந்தம் இல்லைதான் சும்மா வந்துபார்க்கிலாம்ன்னு வந்தேன்..ங்கோ

Paleo God said...

ஒரு பாட்ஸ்மேன் சிக்ஸர் அடிச்சி சதம் கடந்த உடனே மாட்ச் டை ஆயிடிச்சி.. ஒடனே சூப்பர் ஓவர்ல அடுத்தவர் சிக்ஸர் அடிச்சி சதம் அடிச்சிடறார்..

என்னது எப்படின்னு கேக்கறீங்களா..

அடப்போங்கப்பா...:)

Unknown said...

1. 49.4 பேட்ஸ்மென்#1 அடிச்சிட்டு செகண்ட் ரன் ஓடும் போது ஓவர்த்ரோ 4 போயிடுது. சோ, அஞ்சு ரன் பட் க்ராஸ் பண்ணிட்டதால பேட்ஸ்மென்#1ஏ பேட் செய்யலாம்.
49.5 பேட்ஸ்மென்#1 சிங்கிள் அடிச்சி 100 போடுறாரு
49.6 பேட்ஸ்மென் #2 சிக்ஸ் அடிச்சி 100 போட்டு டீமை ஜெயிக்க வைக்கிறார்.

ஆப்ஷன் 2.
49.4 பேட்ஸ்மென்#1 டாப் எட்ஜ் வாங்கி பால் கீப்பருக்கு பின்னால இருக்கிற ஹெல்மெட்ல அடிக்கிது. சோ 5 ரன்ஸ்.
49.5 பேட்ஸ்மென்#1 சிங்கிள் அடிச்சி 100 போடுறார்
49.6 பேட்ஸ்மென்#2 சிக்ஸ் அடிச்சி ஜெயிக்க வைக்கிறாரு + 100 போடுறாரு

சிநேகிதன் அக்பர் said...

அடடே நான் கூட அப்படித்தான் நினைச்சேன். ரெண்டு பேருமே களத்தில் நின்றால் எப்படி . நீங்களே சொல்லிடுங்க பாஸ்.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்
என் புண்ணியத்தில் அந்த நல்ல விசயம் நடந்தால் சரிதான் தல...

@Kiruthikan Kumarasamy
உங்களுடைய இந்த பதில் என்னுடைய பதில்களில் ஒன்று தான் நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..தொடர்ந்து வாருங்கள்.

@இரவு கவி
உங்களுடைய Option2: பதில் என்னுடைய மற்றும் ஒரு பதில் நண்பரே..வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

@Chitra
சும்மா ஒரு விளம்பரம் தான் மேடம்...

@சைவகொத்துப்பரோட்டா
வைடு ஆல் கிடைக்கும் ரன் பேட்ஸ்மேனுக்கு வழங்கப் படாது நன்பரே..வருகைக்கு நன்றி.
கீழே பாரும் நன்பரே..மக்களின் பதில்களை..

@தமிழ் உதயம்
உங்களுடைய ஊகம் சரிதான்..அப்படியும் நடக்க வாய்ப்பு உண்டு..

@Muralitharan
உங்களுடைய யேசனையும் சரிதான் ஆனால் விக்கட் விழுந்து விட்டதே..கீழே மக்களின் பதில்களை பாருங்கள்..

@Haitosee
உங்களுடைய வர்ணனை அழகு நன்பரே...ஊக்கத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாருங்கள்.

@saravana
உங்களுடைய பதிலும் சரிதான் நண்பரே..

@Velu
நீங்கள் சொன்ன பதில் சரிதான் இரண்டு பேட்ஸ்மேன்களும் நாட் அவுட் இல்லை என்றால்..

@Arockia
உங்களுடைய பதில் சரிதான். ஆனால் ஒரு விக்கெட் விழுந்து விட்டதே..நான் கேட்டதில் இரண்டு பேட்ஸ்மேன்களும் நாட் அவுட் நன்பரே. கீழே மக்களின் பதில்களை பாருங்கள்.

@Suresh Dhanapal
நீங்கள் சொன்ன பதில் சரிதான் இரண்டு பேட்ஸ்மேன்களும் நாட் அவுட் இல்லை என்றால்..

@vinoth
நீங்கள் சொன்ன பதில் சரிதான் இரண்டு பேட்ஸ்மேன்களும் நாட் அவுட் இல்லை என்றால்..கீழே மக்களின் பதில்களை பாருங்கள்.

@Karthik
நீங்கள் சொன்ன பதில் சரிதான் இரண்டு பேட்ஸ்மேன்களும் நாட் அவுட் இல்லை என்றால்..கீழே மக்களின் பதில்களை பாருங்கள்.

@juniorsamurai
உங்களின் விடாமுயற்ச்சி புல்லரிக்குது நன்பரே..உங்களுடைய கடைசி பதில் நான் யோசிக்காத்து தான்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

@தாராபுரத்தான்
வந்து பார்த்ததுக்கு ரெம்ப நன்றி சார்...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் நன்பரே..

@முகிலன்
உங்களுடைய இரண்டு பதில்களுமே அருமை.. முதல் ஒன்று நான் யோசிக்க வில்லை..

@அக்பர்
வாங்க அக்பர்..மேலே பாருங்கள் பதில்களை..குறிப்பாக முகிலன் சார் பதிலை பாருங்கள்..

Paleo God said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் நன்பரே..//

அட :)

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க..:)

நாடோடி said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் நன்பரே..//

அட :)

நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேங்க..:)///

அப்படினா, அடிக்கடி இது போல் விளையாடலாம்...

சாமக்கோடங்கி said...

இவங்க எல்லாரும் போன் பண்ணி ஒரே கேள்விய எங்கிட்ட கேட்டப்பவே சந்தேகப் பட்டேன்..

எல்லாரும் இங்க வந்து குமுரீட்டாங்களா...?

ஹும்.. இனி நாந்தான் இதையெல்லாம் சொன்னேன்'ன்னு சொன்னா நம்பவா போறீங்க...?

வரதராஜலு .பூ said...

நானு ரொம்பதான் லேட்டு போல. எல்லாமே முடிஞ்சிப்போச்சி.

முகிலனின் பதில்கள் அருமை.

Related Posts with Thumbnails