Tuesday, March 16, 2010

குழ‌ந்தைக‌ளுக்காக‌_என்னால் முடிந்த‌து

இப்போது க‌டைக‌ளில் அதிக‌மாக‌ விற்ப‌னையாகும் குழ‌ந்தைக‌ளுக்கான‌ பொருட்க‌ளில், தோள்க‌ளில் குழ‌ந்தைக‌ளை லாவ‌க‌மாக‌ மாட்டும் பெல்ட்க‌ள் அட‌ங்கிய‌ தோள் பைக‌ள்(Baby Carry Sling) ம‌ற்றும் குழ‌ந்தைக‌ளை உட்கார‌ வைத்து கைக‌ளால் த‌ள்ளிக் கொண்டு போகும் சிறிய‌த‌ள்ளு வ‌ண்டி(Baby Stroller) போன்ற‌வை மிக‌ முக்கிய‌மான‌வை.



ந‌க‌ர‌ங்க‌ளில் மாலையில் சாலையின் இரு ப‌க்க‌ங்க‌ளிலும் இந்த‌ வ‌ண்டிக‌ளில் குழ‌ந்தைக‌ளை வைத்து த‌ள்ளிக்கொண்டு போகும் தாய்மார்க‌ள் அதிக‌ம். அந்த‌ வ‌ண்டியில் குழ‌ந்தையான‌து கொலுவில் வைக்க‌ப்ப‌ட்ட‌ பொம்மை போல் அழ‌காக‌ அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டு இருக்கும். அதைச் சுற்றி க‌ய‌றுக‌ளால் க‌ட்டிய‌து போல் பெல்ட்டுக‌ள் மாட்ட‌ப்ப‌ட்டு இருக்கும். அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியும் பூ, ப‌லூன், ம‌ணி போன்ற‌ விளையாட்டு பொருட்க‌ள் ஏதாவ‌து ஒன்று கட்ட‌ப‌ட்டு அழ‌காக‌ அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டு இருக்கும். என‌க்கு அந்த‌ குழ‌ந்தையை பார்க்கும் போது ப‌ரிதாப‌மாக‌ தான் தோன்றும். கார‌ண‌ம் அந்த‌ குழ‌ந்தையின் முக‌த்தில் சிரிப்பை பார்க்க‌முடியாது. மாறாக‌ திருவிழாக் கூட்ட‌தில் வ‌ழி தெரியாம‌ல் த‌த்த‌ளிக்கும் குழ‌ந்தைப் போல் அத‌ன் க‌ண்க‌ள் மிர‌ளும். வ‌ழியில் வ‌ருவோரையும், போவோரையும் ஒரு ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ பார்வையுட‌ன் தான் பார்க்கும். அதை எல்லாம் க‌ண்டுக்கொள்ளாம‌ல் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ அந்த‌ குழ‌ந்தையின் தாய் அந்த‌ வ‌ண்டியை த‌ள்ளிக்கொண்டு போவார். ந‌ம‌து சாலைக‌ளை சொல்ல‌ வேண்டிய‌து இல்லை, அந்த‌அள‌வு ப‌ள‌ப‌ள‌ப்பாக‌ இருக்கும். ஒரு சிறிய‌க‌ல்லின் மீது அந்த‌வ‌ண்டி ஏறினால் போதும் மொத்த‌வ‌ண்டியும் அதிரும், அத‌னுட‌ன் சேர்ந்து குழ‌ந்தையும் ஒரு ஆட்ட‌ம் போடும்.

இவ்வாறு குழ‌ந்தைக‌ளை அழைத்து செல்லும் அம்மாக்க‌ளை எங்க‌ கிள‌ம்பிட்டீங்க‌? என்று கேட்டால் அவ‌ர்க‌ள் சொல்லும் ப‌திலைக் கேட்டால் சிரிப்ப‌தா? அல்ல‌து அந்த‌ குழ‌ந்தையின் நிலையை பார்த்து வ‌ருத்த‌ப‌டுவ‌தா? என்று ந‌ம‌க்கே தெரியாது. தின‌மும் ந‌டைப்ப‌யிற்ச்சி செய்தால் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்று ம‌ருத்துவ‌ர் கூறினார், அத‌னால் தான் மாலையில் தின‌மும் இவ்வாறு குழ‌ந்தையுட‌ன் ந‌ட‌க்கிறேன் என்று ப‌தில் த‌ருவார். அதோடு குழ‌ந்தையும் எப்போதும் வீட்டில் இருப்ப‌தால் அத‌ற்கும் ஒரு மாறுத‌லுக்காக‌ வெளியில் அழைத்து வ‌ந்தேன் என்று சொல்வார். ரெம்ப‌ ந‌ல்ல‌விச‌ய‌ம் தான். ஆனால் உட‌ம்பு குறைவ‌த‌ற்காக‌ ந‌ட‌க்கிறோம் என்றால் குழ‌ந்தையை தூக்கி கொண்டு ந‌ட‌ந்தால் இன்னும் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே உட‌ம்பு குறையும். அது ம‌ட்டும் அல்லாது அந்த‌ குழ‌ந்தையும் எந்த‌வித‌ ப‌த‌ட்ட‌மும் இல்லாம‌ல் இய‌ற்கையை ர‌சிக்கும். ந‌டைப்ப‌யிற்ச்சி மேற்கொள்ளும் போது ந‌ம‌து உட‌லின் எடையை கால்க‌ள் தாங்க‌ வேண்டும். ஆனால் இவ‌ர்க‌ள் குழ‌ந்தையை தாங்கும் வ‌ண்டியின் மீது முழு எடையையும் கொடுத்து விட்டு, அந்த‌ வ‌ண்டியின் சொல்ப‌டி ந‌ட‌ப்பார்க‌ள். அத‌ற்கு ந‌டைப்ப‌யிற்ச்சி என்று ஒரு பெய‌ரும் வைத்து விடுவார்க‌ள்.



நாம் வெளியில் ந‌ட‌ந்து போகும்போது ஏதாவ‌து ஒன்றின் மேல் தடுக்கினாலோ! அல்ல‌து ஒரு ப‌ய‌ங்க‌ர‌ ச‌த்த‌த்தினால் த‌டுமாறினாலோ, நாம் எப்ப‌டி ப‌க்க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளின் துணையை நாடுகிறோம் அல்ல‌து அவ‌ர்க‌ளை க‌ட்டிபிடித்து கொள்கிறோம், அதேப்போல் தான் குழ‌ந்தைக‌ளும். எந்த‌ வித‌ ஆப‌த்து வ‌ந்தாலும் நாம் ஒருவ‌ரின் அர‌வ‌ணைப்பில் இருக்கிறோம் என்ற‌ கார‌ண‌த்தினால் அது சிரித்துக் கொண்டே இருக்கும். ஒரு அதிர்வோ, அல்ல‌து ச‌த்த‌மோ கேட்டால் அம்மாவை இறுக‌ க‌ட்டி, முக‌த்தை மார்பில் புதைத்து கொள்ளும். பின்பு சிறிது நேர‌த்தில் ப‌ழைய‌ நிலைக்கு வ‌ந்து விடும். இது குழ‌ந்தைக‌ளின் இய‌ல்பு.

என‌க்கு இப்போதும் ஞாப‌க‌ம் இருக்கிற‌து, என‌து அம்மா என்னை தோளில் தூக்கி சும‌ந்த‌‌ நாட்க‌ள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவ‌ராலும் கிண்ட‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து கூட‌ என‌க்கு ம‌ற‌க்க‌வில்லை. அவ்வாறு எழு, எட்டு வ‌ய‌து இருக்கும் போது கூட‌ என்னை என‌து அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்க‌ள். இத்த‌னைக்கும் நான் எங்க‌ள் வீட்டில் த‌னியாக‌ பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன் கிடையாது. என‌க்கு ஒரு அக்காவும், ஒரு அண்ண‌னும் உண்டு. இது என‌து வீட்டில் ந‌ட‌க்கும் அதிச‌ய‌ம் என்று நான் சொல்ல‌ வ‌ர‌வில்லை. பெரும்பாலான‌ கிராம‌த்து ந‌ன்ப‌ர்க‌ள் அனுப‌வித்த‌ ஒன்றாக‌ தான் இருக்கும். ஆனால் ஒரு குழ‌ந்தை வைத்திருக்கும் இப்போதைய‌ தாய்மார்க‌ளோ, அந்த‌ குழ‌ந்தையை சும‌க்க‌ த‌ள்ளுவ‌ண்டி வைத்திருப்ப‌து தான் ப‌ரிதாப‌ம்.



எங்க‌ள் உற‌வுக்கார‌ர் ஒருவ‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌து அருந்தினால் அமைதியாக‌ வ‌ந்து தூங்குவ‌து கிடையாது. வ‌ழியில் வ‌ருவோர் ம‌ற்றும் போவோரை கெட்ட‌வார்த்தைக‌ள் சொல்லி வ‌ம்புச‌ண்டைக்கு இழுப்ப‌து தான் அவ‌ருடைய‌ வ‌ழ‌க்க‌ம். ஆனால் அவ‌ரும் ஒருவ‌ரின் குர‌லைக் கேட்டால் பெட்டி பாம்பாக‌ அட்ங்கி போய், அமைதியாக‌ வீட்டிற்குள் தூங்க‌ சென்று விடுவார். அது யாருடைய‌ குர‌ல் என்றால் அவ‌ரை சிறு வ‌ய‌தில் தூக்கி வ‌ள‌ர்த்த‌ அவ‌ருடைய‌ அக்காவின் குர‌ல் தான். அந்த‌ அள‌வுக்கு அவ‌ரின் மேல் ம‌திப்பு வைத்திருந்தார் என‌து உற‌வுக்கார‌ர். இதை எத‌ற்கு சொல்லுகிறேன் என்றால் ந‌ம் மீது சிறுவ‌ய‌தில் ஒருவ‌ர் காட்டும் அக்க‌றை வாழும் நாள் முழுவ‌தும் ந‌ம‌க்கு ம‌ற‌ப்ப‌தில்லை. அந்த‌ ஒருவ‌ரின் மீது ம‌திப்பும், ம‌ரியாதையும் கூடுகிற‌து என்ப‌தே உண்மை.

ஒரு நாள் நான் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் அம்ப‌த்தூர் பாடியில் இருந்து ம‌ண‌லி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என‌து வ‌ண்டிக்கு முன்னால் ஒரு த‌ம்ப‌திக‌ள் குழ‌ந்தையுட‌ன் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் போய் கொண்டிருந்தார்க‌ள். அப்போது என‌து பார்வை அந்த‌ குழ‌ந்தையின் மீது திரும்பிய‌து. அந்த‌ குழ‌ந்தை முக‌ம் மிகுந்த‌ இறுக்க‌த்துட‌ன் அத‌ன் பிடி தள‌ர்ந்த‌து போல் என‌க்கு காட்சிய‌ளித்த‌து. உட‌னே அந்த அம்மாவை பார்த்தேன். அவ‌ர்க‌ள் ஏதோ தூக்க‌க‌ல‌க்க‌த்தில் இருப்ப‌து போல் க‌ண்க‌ள் சுழ‌ன்ற‌து. ஒரு கையால் த‌ன‌து க‌ண‌வ‌னின் தோளை இறுக்கிய‌ப‌டி இருந்தார். அந்த‌ அம்மாவின் க‌வ‌ன‌ம் சிறிதும் குழ‌ந்தையின் மீது இல்லை என்ப‌து என‌க்கு தெளிவாக‌ தெரிந்த‌து. பின்னால் இருப்ப‌வ‌ர்க‌ளில் நிலைமையை ச‌ற்றும் பொருட்ப‌டுத்தாம‌ல் அந்த‌ அம்மாவின் க‌ண‌வ‌ர் வ‌ண்டியை அறுப‌து மைல்க‌ளுக்கு மேல் வேக‌மாக‌ செலுத்தினார். ஒரு க‌ட்ட‌த்தில் என்னால் குழ‌ந்தையின் நிலைமையை பார்க்க‌ முடிய‌வில்லை. அது விழுந்து விடுவ‌து போல‌வே என‌க்கு தோன்றிய‌து. அத‌னால் என‌து வ‌ண்டியை வேக‌மாக‌ செலுத்தி அவ‌ரிட‌ம் வ‌ண்டியை நிறுத்த‌ சைகை செய்தேன். அவரும் உட‌னே வ‌ண்டியை ஓர‌மாக‌ நிறுத்தினார். அவ‌ரிட‌ம் குழ‌ந்தையை ப‌ற்றி சொன்னேன். அத‌ற்கு அவ‌ர் சிரித்து கொண்டே என‌து மனைவி குழ‌ந்தையை மார்புட‌ன் சேப்டி பெல்டால்(Baby Carry Sling) க‌ட்டியுள்ளார் என்று அவ‌ர் ம‌னைவியை சுட்டி காட்டினார். அப்போது தான் நானும் க‌வ‌னித்தேன், க‌ங்காரு த‌ன‌து வ‌ய‌ற்றில் உள்ள‌ பையில் குழ‌ந்தையை சும‌ப்ப‌து போல‌ அந்த‌ பெண்ம‌ணியும் த‌ன‌து மார்புட‌ன் அந்த‌ குழ‌ந்தையை சேப்டி பெல்டால் க‌ட்டியிருந்தார்.

எந்த‌ ஒரு தாய்க்கும் த‌ன‌து குழ‌ந்தையை தூக்கி சுமக்க‌ வ‌லு இல்லாம‌ல் க‌ட‌வுள் ப‌டைப்ப‌து இல்லை. அப்ப‌டி சொல்லுவ‌த‌ற்கு கார‌ண‌ங்க‌ள் இருந்தால், அது தாய்பால் கொடுப்ப‌த‌ற்கு நாம் சொல்லும் கார‌ண‌ங்க‌ள் போல் தான் அமையுமே த‌விர‌ ம‌ற்ற‌வை ஒன்றும் கிடையாது. தாவ‌ர‌ங்க‌ளை பாருங்க‌ள், அவைக‌ளின் க‌னிக‌ளையும், ம‌ல‌ர்க‌ளையும் தாங்க‌ முடியாம‌ல் கீழே முறிந்து விழுந்து விடுவ‌து கிடையாது.

"ம‌ன‌மிருந்தால் மார்க்க‌முண்டு"

நான் இந்த‌ ப‌திவை எழுதுவ‌த‌ற்கு கார‌ண‌ம், என‌து ந‌ன்ப‌ர் ஒருவ‌ர் ஊருக்கு பார்ச‌ல் அனுப்ப‌ வேண்டும் அத‌ற்கு சில‌ பொருட்க‌ள் வாங்க‌ வேண்டும் நீயும் வா? என்று என்னை அழைத்தார். ச‌ரி ந‌ன்ப‌னின் அழைப்பை ஏற்று, என்ன‌ பொருள் வாங்க‌ வேண்டும்? என்று கேட்டேன். அத‌ற்கு அவ‌ன் த‌ன‌து ம‌னைவி அலைபேசியில் பேசும் போது குழ‌ந்தையை வைத்து த‌ள்ளுவ‌த‌ற்காக‌ ஒரு வ‌ண்டி வாங்கி அனுப்பி வைக்க‌ சொன்னாள், உன‌க்கு தான் தெரியுமே அதை ப‌ற்றியுள்ள‌ செய்திக‌ளை இனைய‌த‌ள‌த்தில் இருந்தால் சேக‌ரித்து சொல்லு என்றான். என‌து ந‌ன்ப‌ர் ஒன்றும் ஐந்து இல‌க்க‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கும் கோமான் கிடையாது, ஒரு சராச‌ரி க‌ட்டிட‌ தொழிலாளி. அவ‌னுடைய‌ ம‌னைவி குடியிருக்கும் ஊர் ஒன்றும் அடையாறு பீச்ரோடு இல்லை, ந‌ம‌து மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ப‌தினேழு பட்டியில் அதுவும் ஒரு ப‌ட்டி. இத‌ற்கு மேலும் நான் அவ‌னுக்கு அந்த‌ வ‌ண்டியை வாங்கி கொடுத்திருப்பேன் என்று நீங்க‌ள் நினைக்கிறீர்க‌ளா?

குறிப்பு: இவை அனைத்தும் நாக‌ரீக‌ம் என்ற‌ பெய‌ரில் ந‌ட‌மாடும் மாயைக‌ள். அவைக‌ளில் ந‌ம்மில் சில‌ பேர்க‌ளும் அறிந்தோ, அறியாம‌லோ விழுந்து விடுகிறோம். எது நாக‌ரீக‌ம் என்ப‌தை முழுமையாக‌ அடையாள‌ம் காண‌வேண்டும் என்ப‌தே இந்த‌ இடுகையின் நோக்க‌ம்.

26 comments:

Prathap Kumar S. said...

நல்லபதிவு ஸ்டீபன். நானம் கவனிச்சுருக்கேன்...தள்ளவண்டில குழந்தையை கொண்டு செல்வது ஒரு பேஷன் மாதிரி ஆயிடுச்சு...

குழந்தைகளை கையில் தூக்கி வைத்திருக்கும் அனுபவமே ஒரு சுகம். அதைவிட்டுட்டு வண்டில கொண்டுப்போறானுங்க லக்கேஜ் மாதிரி... அதுவும் நம்மூர்ல இது நடக்குறது சரியான காமெடிதான்.

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

காலத்தின் கோலம். யாரால் மாற்றி போட முடியும். இது தான் இன்றைய நாகரீகம்.

Anonymous said...

edhu yar thappu.... appa or amma ? appa margal gownathil kollavum. forgein mogam kulandhai valarpathil irupadhu thavirkka mudiyatha ondru.

கண்ணா.. said...

//என‌க்கு அந்த‌ குழ‌ந்தையை பார்க்கும் போது ப‌ரிதாப‌மாக‌ தான் தோன்றும். கார‌ண‌ம் அந்த‌ குழ‌ந்தையின் முக‌த்தில் சிரிப்பை பார்க்க‌முடியாது. மாறாக‌ திருவிழாக் கூட்ட‌தில் வ‌ழி தெரியாம‌ல் த‌த்த‌ளிக்கும் குழ‌ந்தைப் போல் அத‌ன் க‌ண்க‌ள் மிர‌ளும். வ‌ழியில் வ‌ருவோரையும், போவோரையும் ஒரு ப‌ய‌ம் க‌ல‌ந்த‌ பார்வையுட‌ன் தான் பார்க்கும்.//


எனக்கும் இதேதான் தல தோணும்.. நச்சுன்னு சொல்லிட்டீங்க....


நானு இங்க துபாய்லதான் ஊர்ல இப்பிடி கிடையாதுன்னு நண்பன்கிட்ட சொல்லுவேன்.. இப்ப அங்கயும் ஆரம்பிச்சாச்சா....விளங்குனாப்லதான்

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் ஸ்டீபன். மிக நல்ல இடுகை.

இங்கும் நிறையபேர் இதைத்தான் செய்கிறார்கள். பின் பாசமும் நேசமும் எப்படி வரும்.

எங்கம்மாவின் இடுப்பில் இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

எல்லாம் மற்றவர்களை பார்த்து செய்றதுதான். தோசையை ஸ்பூனில் சாப்பிடுவது போல.

Unknown said...

எல்லா இடங்களுக்கும் குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போவது பாவம்தான். ஆனால் வெளிநாடுகளில் தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு போவது தான் பாதுகாப்பு.

அதற்காக நம்மூர் மாதிரி ரோட்டில் தள்ளிக் கொண்டு போக முடியாது. அதற்காக இருக்கும் நடைபாதையில் தான் தள்ளிக் கொண்டு போகலாம். மற்றபடி மால்களுக்கு செல்லும்போது மிகவும் வசதியாக இருக்கும். என் மகன் என் கையில் வருவதை விட வசதியாக உட்கார்ந்து வருவதையே அதிகம் விரும்புகிறான்.

அதோடு தூங்கும் குழந்தைகளுக்கும் ஸ்ட்ரோல்லரே வசதி.

இப்போதெல்லாம் ஷாக் அப்சார்பருடன் தள்ளு வண்டிகள் வந்து விட்டன.

உடலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ளும் ஸ்லிங் - பேபி கேரியர்களும், விமானப் பயணங்களின் போது மிகவும் உதவியாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், நீங்கள் சொல்வது போல கையில் கொண்டு தான் போவோம் என்று போய், செக்யூரிட்டி செக் இன்னில், குழந்தையைக் கீழே இறக்கி வைத்து விட்டு பெட்டிகளை எக்ஸ்-ரே மெசினில் வைத்துக்கொண்டிருக்கும் போது குழந்தை எங்கோ ஓடிவிட்டான். சிறிது நேரத்தில் அவனைக் கண்டுபிடித்துவிட்டாலும், அந்த சில நிமிடங்கள் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

ஆக ஒரு விசயத்தில் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது. அதை அலசி ஆராய்ந்து எது நல்லது எது கெட்டது என்று பார்க்காமல் உடனே அதை விமர்சிப்பது தவறு.

Chitra said...

த‌ன‌து ம‌னைவி அலைபேசியில் பேசும் போது குழ‌ந்தையை வைத்து த‌ள்ளுவ‌த‌ற்காக‌ ஒரு வ‌ண்டி வாங்கி அனுப்பி வைக்க‌ சொன்னாள்,

......... அதான் காரணம் சொல்லிட்டாரே? இது தேவைக்காக வாங்குவது அல்ல. வசதிக்காக.
இதன் தாக்கம், பாதிப்பு எல்லாம் இன்னும் சிறிது நாட்கள் போன பிறகுதான் தெரியும்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, நானும் இங்க சிங்கையில் நிறைய பேரைப் பார்க்கின்றேன். இதை பேசன் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.எனது பார்வையில் தூக்கக் கூட முடியவில்லை என்றால் ஏன் பெத்துக் கொள்கின்றார்கள் என்று கடுப்பாக இருக்கும். மிக்க நன்றி. மிக பருமனாக இருக்கும்,அல்லது நடக்க முடியாத பெண்கள் வைத்துக் கொண்டால் தவறு இல்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

சபாஷ் நண்பரே, அருமையாக சொன்னீர்கள்.

ஜிஎஸ்ஆர் said...

உண்மைதான் நண்பரே நாகரீகம் என்கிற பெயரில் எதையெல்லாம் செய்கிறோம் இது போல குழந்தைகளுக்கு பெல்ட் இட்டு வைப்பதால் தாய்மையின் அரவனைப்பு மட்டுமல்லாமல் அன்பையும் கூட இழந்துவிடுகிறது


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

அன்புடன் மலிக்கா said...

பேஷனாம்”பேசன்” என்னத்தசொல்ல
அருமையான பதிவு நாடோடி...

நாடோடி said...

//எல்லா இடங்களுக்கும் குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு போவது பாவம்தான். ஆனால் வெளிநாடுகளில் தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு போவது தான் பாதுகாப்பு. //

நீங்களே பதிலை சொல்லிவிட்டீர்கள்..வெளிநாடுகளின் இது தேவையான ஒன்று தான், அதை நான் மறுக்கவில்லை.. நமது ஊர்களுக்கு இது தேவைதானா என்பதுதான் எனது கேள்வி... நீங்கள் முற்றிலும் தவறாக இடுகையை புரிந்துள்ளீர்கள்.. நான் கூறிய இரண்டு இடங்களும் உங்கள் பார்வைக்கு..
//ந‌க‌ர‌ங்க‌ளில் மாலையில் சாலையின் இரு ப‌க்க‌ங்க‌ளிலும் இந்த‌ வ‌ண்டிக‌ளில் குழ‌ந்தைக‌ளை வைத்து த‌ள்ளிக்கொண்டு போகும் தாய்மார்க‌ள் அதிக‌ம். //

//அப்போது என‌து வ‌ண்டிக்கு முன்னால் ஒரு த‌ம்ப‌திக‌ள் குழ‌ந்தையுட‌ன் இருச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில் போய் கொண்டிருந்தார்க‌ள். அப்போது என‌து பார்வை அந்த‌ குழ‌ந்தையின் மீது திரும்பிய‌து. அந்த‌ குழ‌ந்தை முக‌ம் மிகுந்த‌ இறுக்க‌த்துட‌ன் அத‌ன் பிடி தள‌ர்ந்த‌து போல் என‌க்கு காட்சிய‌ளித்த‌து.//

Unknown said...

இதெல்லாம் பேசன் இத பற்றி கதைத்தால் நீங்கள் நாட்டு புறம


என்ன கொடுமை நாடோடி சார்

malar said...

'''ரெம்ப‌ ந‌ல்ல‌விச‌ய‌ம் தான். ஆனால் உட‌ம்பு குறைவ‌த‌ற்காக‌ ந‌ட‌க்கிறோம் என்றால் குழ‌ந்தையை தூக்கி கொண்டு ந‌ட‌ந்தால் இன்னும் கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே உட‌ம்பு குறையும்.''''

நீங்க பிள்ளையை தூக்கி ஒரு அரை மணி நேரம் நடந்து இருக்றீர்களா?

நடந்து பாருங்கள் புரியும்...

சொந்த கார் வசதி இல்லாத காலத்தில் துபாய் மார்கட்டில் சாதங்களை வாங்கி பிள்ளையையும் கையில் வைத்து மணி கணக்காக டேக்சிக்கு காத்து நின்று இருக்கிறோம் கையும் தோள்வலியும் அனுப்பவச்சவங்கலுக்கு தான் தெரியும்...



’’’’என‌க்கு இப்போதும் ஞாப‌க‌ம் இருக்கிற‌து, என‌து அம்மா என்னை தோளில் தூக்கி சும‌ந்த‌‌ நாட்க‌ள். என்னை அவ்வாறு தூக்கி செல்லும் போது அனைவ‌ராலும் கிண்ட‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து கூட‌ என‌க்கு ம‌ற‌க்க‌வில்லை. அவ்வாறு எழு, எட்டு வ‌ய‌து இருக்கும் போது கூட‌ என்னை என‌து அம்மா வெளியில் செல்லும் போது தூக்கி கொண்டு தான் போவார்க‌ ’’’’


இந்த சம்பவம் எங்க வீட்டிலும் நடந்து இருக்கு.எங்க பாட்டி நான் 2வ்து 3வ்து படிக்கும்போது கூட தூக்கிட்டு ரொம்ப தூரம் நடப்பாங்க

அந்த அதிசயம் என்க்கு இன்னும் புரியவில்லை

,சேப்டி பெல்டால்(Baby Carry Sling) இதெல்லாம் ரொம்ப வசதி.தனியாக இருக்கும் தாய்மார்கள் சிறிய‌த‌ள்ளு வ‌ண்டியில் குழந்தையை பக்கதில் வைத்து விட்டு வீட்டு வேலைகள் அத்தனையும் முடித்து விடுவார்கள்.

இது காலத்தின் கட்டாயம் இதற்க்கும்

நாக‌ரீகத்துக்கும் சம்பந்தம் இல்லை.

prabhadamu said...

நல்ல பதிவு . வாழ்த்துக்கள்.


ஆனால் இதை ஒவ்வெரு பெற்றோரும் வரவேற்ப்பது ( நாகரிகம் என்ற பெயரில் ) என்னை பொருத்த வரை தவறு தான். குழ்ந்தைக்கு நிறைய விஷயம் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது.


அன்பு, அம்மாவின் கண்ஜாடை, எதுவும் தோனாது. நிறைய சொல்லனும் தோனுது. ஆனா எழுத தெரியலை. நல்ல பகிர்வு. நன்றி நண்பா.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்
//குழந்தைகளை கையில் தூக்கி வைத்திருக்கும் அனுபவமே ஒரு சுகம். //

உண்மைதான் தல..அந்த சந்தோசமான சுகம் நமது குழந்தைகளுக்கும், நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் எழுதினேன் தல....

@Madurai Saravanan
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..சரவணன் சார்..

@தமிழ் உதயம்
அவ்வாறு வேதனை பட்டதின் விளைவுதான்..என்னை எழுத வைத்தது சார்..

@Evans
எந்த விசயத்தில் நாம் வெளி நாடுகளின் செயல்களை பின்பற்ற கூடாதோ..அதை தான் நாம் நாகரீகம் என்ற பெயரில் பின்பற்றுகிறோம் சார்..

@கண்ணா..
//நானு இங்க துபாய்லதான் ஊர்ல இப்பிடி கிடையாதுன்னு நண்பன்கிட்ட சொல்லுவேன்.. இப்ப அங்கயும் ஆரம்பிச்சாச்சா....விளங்குனாப்லதான்//
வாங்க கண்ணன் சார்,.. நம்ம ஊர்ல இன்னும் அடுத்தவனை பார்த்து "ஈ" அடிக்கும் காப்பியை மறந்து விடவில்லை.. எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால் துபாய் ரோட்டுக்கும் நமது ரோட்டுக்கும் வித்தியாசம் இல்லையா? இதை தான் இந்த பதிவில் நான் சொல்ல வந்தது.

@அக்பர்
//எல்லாம் மற்றவர்களை பார்த்து செய்றதுதான். தோசையை ஸ்பூனில் சாப்பிடுவது போல.//
சரியா சொன்னீங்க தல... இதை தான் நானும் சொல்ல வந்தது

நாடோடி said...

@முகிலன்
சார்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி... நான் முற்றிலும் சொல்ல வந்தது நமது ஊர் நிகழ்வுகளை.. ஒரு வேளை நான் சொல்லிய விதம் உங்களுக்கு புரியவில்லையா?..அல்லது நான் புரிந்து எழுத வில்லையா? நீங்கள் தான் சொல்ல வேண்டும்..

@Chitra
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி மேடம்..

//இதன் தாக்கம், பாதிப்பு எல்லாம் இன்னும் சிறிது நாட்கள் போன பிறகுதான் தெரியும்.//

இந்த வரியே போதும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்...மலர் நண்பி.. இதன் உள் அர்த்ததை புரிந்தால் சரி..

@பித்தனின் வாக்கு
முதல் முறையாக வருகிறீகள்..ரெம்ப நன்றி..
//நல்ல பதிவு, நானும் இங்க சிங்கையில் நிறைய பேரைப் பார்க்கின்றேன். இதை பேசன் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.எனது பார்வையில் தூக்கக் கூட முடியவில்லை என்றால் ஏன் பெத்துக் கொள்கின்றார்கள் என்று கடுப்பாக இருக்கும். மிக்க நன்றி. ///

சிங்கையாவது காலத்தின் கட்டாயம் என்று ஒத்து கொள்ளலாம்... ஆனால் இதையே நமது ஊர்களில் பண்ணுவது தான் ஆச்சரியம்...

//மிக பருமனாக இருக்கும்,அல்லது நடக்க முடியாத பெண்கள் வைத்துக் கொண்டால் தவறு இல்லை.//
இதை நானும் ஒத்து கொள்கிறேன்..

@சைவகொத்துப்பரோட்டா
வாங்க ...வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@ஜிஎஸ்ஆர்
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்..வருகைக்கு நன்றி

@அன்புடன் மலிக்கா
வருகைக்கும் , கருத்துக்கும் ரெம்ப நன்றி...

@A.சிவசங்கர்
//இதெல்லாம் பேசன் இத பற்றி கதைத்தால் நீங்கள் நாட்டு புறம //
நல்லது நடக்கும் என்றால் நாட்டுபுறத்தானாக இருப்பதில் தவறு இல்லையே?.......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

@malar
//நீங்க பிள்ளையை தூக்கி ஒரு அரை மணி நேரம் நடந்து இருக்றீர்களா?//

சென்னை பக்கம் வந்தது உண்டா? முடிந்தால் தியாகராயன் நகர்(T-Nager) சென்று பாருங்கள் எத்தனை ஆண்பிள்ளைகள் குழந்தைகளை துக்கி கொண்டு பொண்மணிகளின் பின்னால் எத்தனை மணி நேரம் செல்கிறார்கள் என்று...

என்னை பற்றி தனியாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகள் என்றால் எனக்கு ரெம்ப பிரியம்.. நான் வெளியில் போகும் போது என்னுடன் யார் வந்தாலும் அவர்களின் குழந்தை என்னுடைய கையில் தான் இருக்கு.. அதுதான் இந்த பதிவையும் எழுத வைத்தது.

//இந்த சம்பவம் எங்க வீட்டிலும் நடந்து இருக்கு.எங்க பாட்டி நான் 2வ்து 3வ்து படிக்கும்போது கூட தூக்கிட்டு ரொம்ப தூரம் நடப்பாங்க //

பார்த்தீர்களா? உங்கள் வாயில் இருந்தே "தூக்கி சுமப்பது" என்றவுடன் உங்கள் பாட்டியின் ஞாபகம் தான் வருகிறது.. ஏன் அம்மாவும் துக்கி இருப்பார்களே... நமது மனதில் எது பதிகிறதோ அதுதான்... புரிந்திருப்பீகள் என்று நினைக்கிறேன்.....

///சொந்த கார் வசதி இல்லாத காலத்தில் துபாய் மார்கட்டில் சாதங்களை வாங்கி பிள்ளையையும் கையில் வைத்து மணி கணக்காக டேக்சிக்கு காத்து நின்று இருக்கிறோம் கையும் தோள்வலியும் அனுப்பவச்சவங்கலுக்கு தான் தெரியும்...//

,சேப்டி பெல்டால்(Baby Carry Sling) இதெல்லாம் ரொம்ப வசதி.தனியாக இருக்கும் தாய்மார்கள் சிறிய‌த‌ள்ளு வ‌ண்டியில் குழந்தையை பக்கதில் வைத்து விட்டு வீட்டு வேலைகள் அத்தனையும் முடித்து விடுவார்கள்.

இது காலத்தின் கட்டாயம் இதற்க்கும்

முனியான்டி விலாஸ் ஹோட்டலின் இலையில் சாப்பாடு சாப்பிடும் போது போர்க்கும், ஸ்பூனும் தான் நான் உபயோகபடுத்துவேன் என்று அடம் பிடித்தால் என்ன ஆகும்...இலை கிழிந்து சாப்பாடு வீணாகும்..

ஆனால் பைவ்ஸ்டார் ஹோட்டலில் போர்க்கும், ஸ்பூனாலும் தான் சப்பிட்டு ஆகவேண்டும்..அது தான் காலத்தின் கட்டாயம்...

இப்போது எது காலத்தின் கட்டாயம் , எது நாமாக எடுத்து கொண்டது என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நாடோடி said...

//அன்பு, அம்மாவின் கண்ஜாடை, எதுவும் தோனாது. நிறைய சொல்லனும் தோனுது. ஆனா எழுத தெரியலை. நல்ல பகிர்வு. நன்றி நண்பா.///

உங்கள் கருத்துக்கு ரெம்ப நன்றி..தொடர்ந்து வாருங்கள்.

//நிறைய சொல்லனும் தோனுது. ஆனா எழுத தெரியலை. நல்ல பகிர்வு. நன்றி நண்பா//
ஒண்ணும் பிரச்சனை இல்லை பொறுமையாக யோசித்து உங்கள் தளத்தில் ஒரு பதிவு போடுங்கள்...

நர்சிம் said...

நல்ல பதிவுங்க.. எழுதிய விதமும் அருமை.

பட்டினத்துப்பிள்ளை said...

இந்த Baby Carry Sling'ந்குகள் சற்றே அபாயகரமானவை என்று சமீபத்தில் வெளியான ஒரு வட அமெரிக்க ஆய்வு பரிந்துரைக்கிறது.
தவறான உபயோகத்தால் சில ~4 மாத குழந்தைகள் மரணமடைந்தும் உள்ளன. பச்சிளம் மகற்கு தமது சிரத்தை தாங்கும் வலு இல்லை.
எடுத்துச்சொல்ல உடன் பெற்றோரும் பெரியோரும் இல்லை!.
இந்த Shaking Baby Syndrome பற்றி முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. மகப்பேறு மருத்துவமனையில் எனது குழந்தை பிறந்து பொழுது மேம்போக்காக
சொன்னார்கள். இத்தகைய மூடத்தனமான பெற்றோர் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணி மறந்தேன். சில நாட்களுக்கு முன்னால் இந்த கொடுமை எம் நண்பர்க்கு நிகழ
இரண்டு நாட்கள் தூக்கம் இழந்தேன்.

DREAMER said...

நல்ல பதிவுங்க...

குழந்தையால், உணரும் விஷயத்தை மொழிவழியாக பேசி கூற இயலாத நிலையில் நீங்கள் உரைத்தமையை தலைப்பில் 'குழந்தைகளுக்காக என்னால் முடிந்தது' என்று தலைப்பில் போட்டிருக்கும் விதமும் அருமை.

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை கண்டிப்பாக பரீசிலிக்க வேண்டும்.

-
DREAMER

நாடோடி said...

@நர்சிம்
பெரியவங்க எல்லாம் நம்ம் தளத்துக்கு வந்ததில் ரெம்ப சந்தோசம்..

@பட்டினத்துப்பிள்ளை
உங்க தகவலுக்கு ரெம்ப நன்றி.

@DREAMER
//பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை கண்டிப்பாக பரீசிலிக்க வேண்டும்.//
உண்மைதான் நன்பரே.....வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்டீஃபன், ஸ்ட்ரோலரில் பல நன்மைகளும் இருக்கின்றன. நாம் கையில் குழந்தையை வைத்திருக்கும்போது, நம் அணைப்பு கிடைக்கிறது என்பதைத் தாண்டி, குழந்தை சுதந்திரமாகக் கையைக் காலை ஆட்டி இருக்கமுடியாது என்பதே உண்மை. ஒரு குழந்தை எப்போதும் நம் அணைப்பில் கட்டுண்டு அசையாமல் இருக்க விரும்பாது. அதிக நேரம் கையிலேயே வைத்திருக்கும் குழந்தை, சீக்கிரம் அலுப்படைந்து அழ ஆரம்பிக்கும். கீழே இறக்கிவிடச் சொல்லும். தூங்குவதும் கைகளில் வசதியாக இராது.

முக்கியமாக, நீங்கள் கடைக்குப் போகும்போது, நம் கவனம் வாங்கும் பொருட்களின்மீது அதிகம் இருக்கும். ஆனால், குழந்தை ஸ்ட்ரோலரில் இருந்தால், நிம்மதியாகப் பயமின்றி வந்த வேலையைப் பார்க்கலாம். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும், மருத்துவமனைக்குக் கூட.

முன் காலங்களில், வீட்டில் பெற்றோர் வெளியே செல்வதே அரிது. போனாலும், பலபேர் ஒன்று சேர்ந்து செல்வதால், கைமாற்றி வைத்துக் கொள்வதால் சோர்வு இருக்காது. அல்லது, கூட்டுக்குடும்பங்களில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் இருக்கும், விட்டுவிட்டுப் போய் வரலாம். இப்ப அப்படியா, வாக்கிங் போனாகூட குழந்தையை அழைச்சிகிட்டுத்தான் போயாக வேண்டியிருக்கு. அதிலே (சீட்)பெல்ட் உண்டு, கீழே விழுவதைத் தடுக்க.

ஆறு, ஏழு வயசிலகூட உங்களைத் தூக்கிட்டுப் போனாங்கன்னா, நடக்கக்கூட அளவுக்கு நோஞ்சானா இருந்தீங்களா என்ன? இப்ப உள்ள குழந்தைங்க, ஒரு வயசிலயே, என்னைக் கீழே விடு, நடந்து/ஓடித்தான் வருவேன்னு சொல்லுதுங்க.

நம்ம ஊர்ல எல்லா இடங்களுக்கும் ஸ்ட்ரோலர் பொருந்தி வராதுன்னாலும், மருத்துவமனை, ரெயில்வே ஸ்டேஷன், இந்த மாதிரி குழந்தையைக் கீழே இறக்கிவிட முடியாத சுகாதாரமற்ற இடங்களில் வசதியாக இருக்கும்.

ஏன், வீட்டில் தனியாக இருக்கும் தாய்க்கு இது மிகவும் வசதி தெரியுமா? சமையலறை, படுக்கையறை, குளியலறை, தோட்டம் என்று எங்கே நின்று வேலை பார்த்தாலும், குழதையை நம் கண்பார்வையில் வைத்துக் கொள்ள சுலபமான வழி. இப்படித்தான் என் இரு குழந்தைகளையும் நான் இங்கே தனியே வளர்த்தேன். அதற்காக, 24 மணிநேரமும் அவர்கள் அதில்தான் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

//தூக்கக் கூட முடியவில்லை என்றால் ஏன் பெத்துக் கொள்கின்றார்கள் என்று//
அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். அவரவர் சூழ்நிலை தெரியாமல் பொத்தாம்பொதுவாக இப்படி நினைப்பது தவறு. திருமணமான பின், (தனிக்குடித்தனம் இருந்தால்) உங்கள் கருத்தும் மாறலாம்.

இரண்டாம் பிரக்னன்ஸியில் பிரச்னை காரணமாக வெயிட் தூக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் முதல் குழந்தையை என்ன செய்ய்வேண்டும்? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை.

மற்றபடி, “ஸ்லிங்” என்று நீங்களெல்லாம் ஸ்டைலாகச் சொல்வது, சில ஊர்களில், தோட்ட/வயல் வேலை செய்யும் பெண்கள் மற்றும் நரிக்குறவப் பெண்கள் காலங்காலமாகப் பயன்படுத்தும் முறைதான்!! ஆனால், இது மிகக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

“Shaking Syndrome" என்பது, நம் ஊரில் துணித் தொட்டிலில் குழந்தையைப் போட்டு உலுக்கி உலுக்கி ஆட்டுவார்கள் சிலர், அதிலும் நேர வாய்ப்புண்டு. (நடந்துமிருக்கிறது)

எந்த முறையுமே 100% பாதுகாப்பானதல்ல; முறையாகச் செய்தால் நன்மை.

நாடோடி said...

//நம்ம ஊர்ல எல்லா இடங்களுக்கும் ஸ்ட்ரோலர் பொருந்தி வராதுன்னாலும், ///

என்னுடைய‌ ப‌திவின் நோக்க‌ம் இது ம‌ட்டுமே..
நான் எந்த‌ ஒரு இட‌த்திலும் இங்கே உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம், இங்கு உப‌யோக‌ ப‌டுத்த‌கூடாது என்று சொல்ல‌ வில்லை. நான் என்னுடைய‌ அனுப‌வ‌ங்க‌ளையும், பார்த்த‌வைக‌ளையும் தான் எழுதியுள்ளேன்.
//ஆறு, ஏழு வயசிலகூட உங்களைத் தூக்கிட்டுப் போனாங்கன்னா, நடக்கக்கூட அளவுக்கு நோஞ்சானா இருந்தீங்களா என்ன? இப்ப உள்ள குழந்தைங்க, ஒரு வயசிலயே, என்னைக் கீழே விடு, நடந்து/ஓடித்தான் வருவேன்னு சொல்லுதுங்க. //
எங்க‌ள் வீட்டில் எல்லோர‌யும் விட‌ நான் தான் குண்டாக‌ இருப்பேன் என்று என‌து அம்மா சொல்ல‌ கேட்டு இருக்கேன். தூக்குவ‌த‌ற்கு நான் அட‌ம் பிடித்தேன் என்று சொல்வ‌தை விட‌ என் அம்மா என்னை தூக்கி சும‌ந்தார்க‌ள் என்ப‌து தான் உண்மை. அது தான் என‌க்கு இந்த‌ ப‌திவையும் எழுத‌ தூண்டிய‌து.

உங்க‌ளுக்கு ஒன்று ம‌ட்டும் சொல்லி கொள்கிறேன். நான் முழுக்க‌ முழுக்க‌ கிராம‌த்தில் வ‌ள‌ர்ந்த‌வ‌ன். என‌து எண்ண‌ங்க‌ள் அனைத்தும் அப்ப‌டியே இருக்கும்.

வேண்டுமானால் சித்ரா அவ‌ர்க‌ளின் ஒரு வ‌ரி பின்னூட்ட‌த்தை ப‌டியுங்க‌ள். அவ‌ர் தான் இந்த‌ ப‌திவின் அவ‌சிய‌த்தை சொல்லி இருக்கிறார். நானும் ப‌ய‌ப்ப‌டுவ‌து அத‌ற்கே. நான் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌ம். இத‌ற்கு மேல் எப்ப‌டி சொல்வ‌து என்று தெரிய‌ வில்லை. ம‌ற்ற‌ப‌டி உங்க‌ளுடைய‌ க‌ருத்துக்க‌ளுக்கு உட‌ன் ப‌டுகிறேன். க‌ருத்துக்கும் வ‌ருகைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

Anonymous said...

துபையில் தாய்மார்கள் அதுவும் தமிழ் பெண்கள் குழந்தையை இப்படி கொண்டு செல்லும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்..ஏனென்றால் அந்த குழந்தையை தாயின் அரவணைப்பை இழக்கிறது என்று.நிங்கள் கூறிய அனைத்து விசயங்களும் ஏற்புடையது

Related Posts with Thumbnails