நான்கு பதிவுகள் கூட ஒழுங்கா எழுதலை அதுக்குள்ள தொடர்பதிவா? என்று நீங்கள் கேட்கனும் என்று நினத்தால் என்னுடைய பின்னுட்டத்தில் அப்படியே கேட்டு விட்டு சிநேகிதன் அக்பரின் பதிவிலும் கேட்டு விடுங்கள் அவர் தான் என்னை அழைத்தது.
கண்டிப்பா நீங்களும் எழுத வேண்டும் என்று நம்ம அக்பர் விரும்பி அழைத்ததால் பதின்ம கால நினைவுகளை நானும் தொடர வேண்டியதாயிற்று.. நான் இந்த பதிவுலகத்தில் கத்துகுட்டிதான் ஏதேனும் தவறுகள் இருந்தால் பின்னுட்டத்தில் கூறுங்கள்..கண்டிப்பாக வருத்தபட மாட்டேன் மகிழ்ச்சியடைவேன்.
எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் எனக்கு மேனிலை வகுப்பில் கணித பாடம் எடுத்த ஆசிரியர். அவர்கள் புத்தகத்தை கொண்டு பாடம் நடத்துவது இல்லை. அப்படியே கரும்பலகையில் இருப்பதை பார்த்து எழுதுவது போல் முழு கணக்கையும் எழுதி விட்டு தான் திரும்புவார். அந்த அளவு திறமை கொண்டவர். அவர்களுடைய வகுப்பிற்கு எவரும் புத்தகம் கொண்டு போககூடாது. அப்படி தவறி யாரவது கொண்டு வந்து அதைப் பார்த்தால் அவ்வளவு தான். அன்று அவனுக்கு அந்தவகுப்பு நேரம் முழுவதும் அர்சனை தான். அனைத்து ஆசிரியர்களை விடவும் அந்த வருடத்தின் பாடத்தை முதலில் முடிப்பவர் இவராகதான் இருப்பார். இவருடைய வாயில் இருந்து வரும் பொன்மொழிகள் நான் படிக்கும் போது ரெம்ப பிரபலம். அவைகளில் சில உங்கள் பார்வைக்கு..
* நீந்தாத மாட்டை தண்ணி கொண்டு போகும்.
* இது இல்ல பிள்ளே வாழ்க்கை..புறக்க கிடக்குது புரட்டாசி.
* பல்லை ரெம்ப காட்டாதே..அப்புறம் ஊரே உன்னை பார்த்து ஒரு நாள் பல்லை காட்டிடும்.
அதன் முழுமையான அர்த்தம் அப்போது எங்களுக்கு புரியவில்லை..இப்போது தான் அதன் முழுமையான் அர்த்தம் புரிகின்றது..
நான் உள்ளுரிலேயே பள்ளி படித்ததால், பெரும்பாலான் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் சரி, கூட படிக்கும் மாணவர்களும் சரி, ஏதொ ஒரு வகையில் தெரிந்தவர்களாக தான் இருப்பார்கள். அதற்காக ஏதோ ஐம்பது பேர் படிக்கும் பள்ளி என்று நினைத்து விட வேண்டாம். ஒவ்வொரு வகுப்பிலும் ஐம்பதில் இருந்து அறுபது மாணவ, மாணவிகள். வகுப்பின் பிரிவுகள் "A" முதல் "F" வரை உண்டு. ஏதொ கொஞ்சம் படிப்பேன். மற்றும் பள்ளியில் நடக்கும் சில போட்டிகளிலும் கலந்து கொள்வேன், பரிசும் வாங்குவேன். எனவே எல்லாருக்கும் என்னுடைய முகம் தெரிந்ததாகவே இருக்கும். பள்ளியில் படிக்கும் போது ஒரு ரவுடியாக வலம் வருவேன். எப்போதும் என்னை சுற்றி நான்கு பேர் இருப்பார்கள். அதுவும் அந்த நான்கு பேரும் வகுப்பில் கடைசி இருக்கையில் இருப்பவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் வகுப்பில் நான் மட்டும் இரண்டாவது இருக்கையில் இருப்பேன். படிப்பதிலும் மாணவர்களில் நான் தான் முதலாவதாக இருப்பேன். ஆனால் வகுப்பில் முதல் மாணவனாக இருக்க மாட்டேன். காரணம் எனக்கு மேல் படிக்கும் இரண்டு மாணவிகள் உண்டு. நமக்கு தான் பொண்ணுங்க கூட போட்டி(நம்மால நினைச்சாலும் முடியாது அதை எப்பிடி சமளிக்கிறது..இப்படிதான்) போட பிடிக்காதா அதுனால விட்டு கொடுத்துடுவேன்.
சொந்த ஊரில் படிப்பதில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.. நம்மை பற்றிய தகவல்கள் உடனடியாக நமது வீட்டிற்கு தெரியவரும். அதன் கொடுமை தான் பெரிய கொடுமை. நான் முட்டு சந்தில் ஒரத்தில் அதுக்கு போறதில் இருந்து மேடையில் பரிசு வாங்கியது வரை நான் வீட்டில் சொல்லுவதற்கு முன் யாரவது ஒருவர் சொல்லி இருப்பார். அப்படியே தப்பி தவறி வகுப்பறைக்குள் நடக்கும் விசயமாவது வீட்டிற்கு போகாமல் இருக்கும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது. ஏன்னென்றால் என்னுடன் படிக்கும் ஒரு மாணவியின் அம்மாவும், எனது அம்மாவும் பள்ளி தோழிகளாம். நான் பள்ளியில் செய்யும் வேலையை எல்லாம் ஒன்னு விடாம அம்மாகிட்ட சொல்லுறது தான் அந்த பெண்ணின் பொழுதுபோக்கு என்று நினைக்கிறேன். அதோட அம்மா அதை கேட்டு விட்டு அப்படியே விட மாட்டார்கள். ஞாயிறு வரை காத்திருப்பார்கள். காரணம் அன்றி என்னுடைய அம்மா சர்ச்க்கு(Church) வழிபாட்டிற்கு(Mass) தவறாமல் வருவார்கள். அந்த வ்ழிபாட்டிற்கு அந்த மாணவியின் அம்மாவும் வருவார்கள். வழிபாடு முடிந்து என்னுடைய அம்மா வரும் வரை காத்திருந்து என்னை பற்றிய தகவல் அனைத்தையும் சொல்லி விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். என்ன பொழப்புடா? சாமி....சரி பள்ளியில் தான் இந்த பிரச்சனை என்றால் கல்லூரியிலும் இது தொடர்ந்தது. நான் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் தெரிந்தவன் எவனாவது ஒருவன் இருப்பான். ஒரு வேளை நான் கல்லூரி நிறுத்ததில் இறங்க வில்லை என்றால் கூட மாலையில் நான் வீடு வருவதற்குள் அந்த விசயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்து இருக்கும். என்ன கொடுமையடா? சாமி...
இன்னும் ஒரு விசயம், அனைவருக்கும் இதுவும் நடந்து இருக்கும். முதல் முறை மீசையை சவரன் செய்தது. நான் அப்போது பனிரென்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். நம்ம தான் எப்போதும் நான்கு பேருடன் ரவுடிபோல் வலம் வருவதால் ஒரு பெண்ணும் திரும்பி கூட பார்க்காது. ஒரு நாள் காலையில் குளிப்பதற்கு கிளம்புவதற்கு முன் அப்பாவில் குரல் கேட்டு என்ன? என்று அப்பா முன் போய் நின்றேன். அப்பா சவரம் செய்து முடித்திருந்தார். அவர் கையில் புது பிளேடு மாட்ட பட்டு ரேசர் இருந்தது. அவர் என்னிடம் உனக்கு இப்ப தான் மீசை வளர ஆரம்பித்திருக்கிறது. எனவே அதை சவரம் செய்தால் தான் விரைவாக வளரும் என்று சொல்லி விட்டு கையில் ரேசரை கொடுத்தார். பெரிய மீசையின் மீது இருந்த மோகத்தால் கையில் வாங்கி சவரன் செய்து விட்டேன். குளித்து முடித்து பள்ளிக்கு கிளம்பும் போதே அம்மா மற்றும் அக்கா முகத்தில் தெரிந்த சிரிப்பே காட்டி கொடுத்து விட்டது, இன்று பள்ளியின் காமெடி பீஸ் நாம தான் என்று. பள்ளிக்கு போகும் வழியில் ஆரம்பித்தது என்னை பார்த்து சிரிக்க. எந்த பெண் எல்லாம் என்னை பார்த்தால் ஒதுங்கி போகுமோ அவர்கள் கூட என்னை பார்த்து சிரிக்கும் படியாகி விட்டது. சரி பெண்கள் தான் அப்படி என்றால் நம்ம ஆளுங்க சொல்லவே வேண்டாம். மொத்ததில் அன்று முழுவதும் மெகா காமெடி பீஸ் ஆகி போனேன். அதை இப்போது நினைத்தாலும் .....அய்யோ..அய்யோ.. போங்கள்..
நான் பள்ளி படிக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு உத்தரவு உண்டு. அதாவது பள்ளி விடுமுறை நாட்களில் வெளியில் விளையாடசெல்லவேண்டும் என்றால் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடிக்கவேண்டும். எங்கள் வீட்டில் இருந்து நான்கு மைல் தூரத்தில் எங்களுக்கு ஒரு தென்னந்தோட்டம் இருந்தது. அதில் நூறுக்கும் அதிகமான தென்னை மரங்கள் புதிதாக வைக்கப் பட்டிருந்தன. பெரும்பாலும் அவைகளை பராமரிப்பது தான் எங்களுக்கு கொடுக்கப்படும் வேலையாக இருக்கும். அதில் பங்கு பெறுவது நானும் எனது அண்ணனும். அப்பா தான் எங்களுக்கு சொல்லி தருவார். அந்த தோட்டத்தின் அருகில் ஒரு குளமும் உண்டு. அதில் தான் நாங்கள் குளிப்பது. அந்த தோட்டத்தில் களைகள் வளர்ந்திருந்தால் அவைகளை வெட்டுவது, அவைகளுக்கு உரம் இடுவது மற்றும் ஒவ்வொரு சிறிய தென்னை மரங்களுக்கு இடையில் மிகுந்த இடைவெளி இருக்கும், அந்த இடைவெளிகளில் வாழை மரங்களும் நட்டு பராமரிப்பது போன்ற வேலைகள். தென்னை மரங்கள் வளர வளர அவைகளின் அடிப்பகுதியில் மண் இடுவது வழக்கம். பக்கத்தில் உள்ள குளத்தில் நீர் வற்றினால் அதில் இருந்து மண் எடுத்து மரங்களுக்கு போடுவது போன்ற வேலைகளும் இருக்கும். இந்த வேலைகளை முடித்தால் தான் விளையாட செல்லமுடியும். பொதுவாக தென்னை மரங்கள் நடப்பட்ட நாட்களில் இருந்து ஐந்து வருடம் கழித்து தான் அதில் இருந்து தேங்காய்களை பார்க்கமுடியும். எங்களுடைய தோட்டம் நாங்கள் செய்த உழைப்பின் காரணமாக நான்கு வருடம் ஆறு மாதத்திலேயே தேங்காய் கொடுக்க ஆரம்பித்தது. எங்கள் அனைவருக்கும் ரெம்ப மகிழ்ச்சி. ஆனால் அது ரெம்ப காலம் நீடிக்கவில்லை. அடுத்த வருடமே எனது அக்காவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது. மற்றும் அப்பா செய்த வியாபாரமும் சிறிது நஷ்டத்தை சந்தித்தது. அதனால் கொஞ்சம் கடனும் ஏற்பட்டது. இதற்கு எல்லாம் தீர்வாய் அந்த தென்னந்தோப்பை விற்க வேண்டியதாயிற்று. எவ்வளவோ முயற்ச்சி செய்தும் எங்கள் அப்பாவால் அந்த சூழ்நிலையை மாற்ற முடியவில்லை. எங்களுடையது எங்களுடையது என்று போட்டி போட்டு நானும் எனது அண்ணனும் உழைத்தோம். அந்த உழைப்பு இன்னொருவருக்கு பயன்படுகிறது. எங்கள் கையை விட்டு அந்த தோட்டம் போன தினம் எனக்கு மறக்கமுடியாத ஒன்று. எனக்கு மட்டும அல்ல, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தான். அது நாள் முதல் இன்றுவரை எங்கள் வீட்டில் உள்ள எவரும் அந்த தோட்டத்திற்கு அருகில் குளத்திற்கு கூட குளிக்கபோவது இல்லை. அதற்கு தேவையும் இல்லாமல் போனது.
யாரையும் தொடர்பதிவுக்கு அழைக்கும் தகுதி எனக்கு இன்னும் வர வில்லை என்று பெருமையுடன் கூறிவிட்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்..அப்படியே தொடரனும் என்று யாரவது நினைத்தால் .....அப்படி எல்லாம் நினைக்க கூடாது(நான் என்னை சொன்னேன்)
Wednesday, March 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நல்லாருக்கு கொசுவத்தி. கடைசியில் ப்ச்
கலக்கல் தல.. பள்ளி நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள். பசுமைமிக்க அந்த நினைவுகளை என்றும் மறக்க இயலாது.
அருமை ஸ்டீபன். வாழ்த்துகள்
நல்லாருக்கு!!
/மாணவர்களில் நான் தான் முதலாவதாக இருப்பேன்/
எப்படிப நம்புறது?? ஆதாரம் காட்டு :)))
எங்கள் கையை விட்டு அந்த தோட்டம் போன தினம் எனக்கு மறக்கமுடியாத ஒன்று. எனக்கு மட்டும அல்ல, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தான். அது நாள் முதல் இன்றுவரை எங்கள் வீட்டில் உள்ள எவரும் அந்த தோட்டத்திற்கு அருகில் குளத்திற்கு கூட குளிக்கபோவது இல்லை. அதற்கு தேவையும் இல்லாமல் போனது.
........... படிக்கிற எங்களுக்கே கஷ்டமா இருக்கு. உங்களுக்கு???? :-(
அப்படியா நம்பவே முடில... போட்டோவைப்பார்த்தா அந்நியன் பட அம்பி மாதிரி இருந்துட்டு
ரெமோ, அந்நியன் வேலைல்லாம் பண்ணிருக்கீங்க...
கடைசில ஒருமாதிரியாடுச்சு தல...உண்மைதான் நமக்கென்று இருந்தது திடீரென்று கைவிட்டுபோகும்போது கஷ்டமாகத்தான் இருக்கும்..
பதின்மத்தை அருமையாக கூறி கடைசியில் நெகிழ செய்து விட்டீர்கள்.
நல்ல எழுத்து நடை தொடருங்கள்
:)
God has given you a wonderful opportunity now.
My best wishes to you is to get back that same "தென்னந்தோப்"
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதின்ம நினைவுகள். தோட்டத்தை நீங்கள் இழந்தீர்கள். வீட்டை நாங்கள் இழக்க இருந்தோம்.
வாங்க ரவுடி :))
நல்லாவே இருக்கு, உங்க மலரும் நினைவுகள்.
பதிவை படிக்கும் போது கும்மி அடிக்கலாம் என்று நினைத்து படிக்கும் போது கடைசியில் தோட்டத்து கதை மனதை நெகிழச்செய்தது....
@வானம்பாடிகள்
வாங்க சார்..வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@Starjan ( ஸ்டார்ஜன் )
உண்மைதான் தல ..பசுமையான நினைவுகள் தான்.
@gulf-tamilan
ஆகா ..ஆதாரமா..அப்படினா?
@Chitra
வருத்தங்களை மறப்பதற்கு தான் காலங்கள் இருக்கின்றனவே..வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@நாஞ்சில் பிரதாப்
//அப்படியா நம்பவே முடில... போட்டோவைப்பார்த்தா அந்நியன் பட அம்பி மாதிரி இருந்துட்டு
ரெமோ, அந்நியன் வேலைல்லாம் பண்ணிருக்கீங்க...//
தல அது முடிந்த வருடம்...இது இந்த வருடம்..
@கண்ணா..
வாங்க...வாழ்க்கையின் சில நினைவுகள் அப்படிதான்.. கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி..
Evans
Thanks lot sir...
@தமிழ் உதயம்
சோகங்கள் நிறைந்தது தானே சார் வாழ்க்கை..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
@சைவகொத்துப்பரோட்டா
வாங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
@malar
தப்பித்தேன்..யப்பா...
அன்பின் ஸ்டீபன் - சின்ன வயசுல பள்ளியில் சர்ச்சில் தென்னந்தோப்பில் நடந்த அன்னைத்து நிகழ்வுகளையும் நினைவு படுத்தி சுவை பட எழுதியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment