Tuesday, April 13, 2010

வெளிநாடு வாழ்க்கை_கால‌த்தின் க‌ட்டாய‌ம்

ஹ‌லோ சுசிலா!... நான் தான் மாத‌வ‌ன் பேசுறேன்..

சொல்லுங்க‌...எப்ப‌டி இருக்கீங்க‌?...ஊருக்கு எப்போது வ‌ருகிறீர்க‌ள்.. இன்றைக்கு சொல்லுகிறேன் என்று சொன்னீர்க‌ளே!!..

நான் ந‌ல்லா இருக்கிறேன்.. நீ எப்ப‌டி இருக்கிறாய்? ராஜு எப்ப‌டி இருக்கிறான்?

நான் ந‌ல்ல‌ இருக்கேன். ராஜு ந‌ல்லா இருக்கான்.. இப்ப‌ தான் தூங்க‌ போனான்..

அப்ப‌டியா!... ச‌ரி ச‌ரி அவ‌னை எழுப்ப‌ வேண்டாம். நான் அவ‌னிட‌ம் அப்புற‌ம் பேசுறேன்.. போன‌வாட்டி போன் ப‌ண்ணும் போது உட‌ம்பு ச‌ரியில்லை என்று சொன்னாயே.. இப்போது எப்ப‌டி இருக்கிற‌து... ம‌ருந்தெல்லாம் க‌ரெக்டா சாப்பிடுகிறாயா?

இப்போது கொஞ்ச‌ம் பர‌வாயில்லை. ம‌ருந்து சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறேன்.. ராஜு தான் எப்போதும் உங்க‌ள் நினைவாக‌ இருக்கிறான்.

ம‌ருந்தெல்லாம் க‌ரெக்டா சாப்பிட்டு விடு... என‌க்கும் உங்க‌ளுடைய‌ நினைவுக‌ள் தான்..

ஆமா நீங்க‌ எப்ப‌ வ‌ருகிறீர்க‌ள் என்று சொல்ல‌வே இல்லையே!!!..

க‌ண்டிப்பாக‌ அடுத்த‌ மாத‌ம் வ‌ந்துவிடுகிறேன்... ஒரு ந‌ல்ல‌ விச‌ய‌ம் உன‌க்கு சொல்கிறேன்...

ந‌ல்ல‌ விச‌ய‌மா? அப்ப‌டினா வேலையை ரிசைன் ப‌ண்ணிட்டீங்க‌ளா?

ஆமா சுசிலா உன்னுடைய‌ ஆசைப்ப‌டி நான் இந்த‌ மாத‌ம் இறுதியில் வேலையை ரிசைன் ப‌ண்ண‌ போகிறேன். இத்துட‌ன் துபாயிக்கு டாட்டா சொல்லிவிட்டு ஊருக்கு வ‌ந்து விட‌ போகிறேன்.

கேட்க‌வே ரெம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குங்க‌...க‌ண்டிப்பா ந‌ட‌க்கும் இல்லையா?..ஏன்னா?

க‌ண்டிப்பா ந‌ட‌க்கும் சுசிலா!... ஏனென்றால் இந்த‌ முறை நான் ந‌ல்ல‌ முறையில் பிளான் ப‌ண்ணியிருக்கிறேன்.

அப்ப‌டியா!!!.... இதை கேட்டா ராஜு ரெம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுவான். அவ‌ன் தான் உங்க‌ளை எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கிறான்..

நான் வேலையை விட்டு விட்டு வ‌ருவ‌து அவ‌னுக்காக‌ தான். அவ‌னுக்கும் விப‌ர‌ம் தெரிகின்ற‌ வ‌ய‌து ஆகி விட்ட‌து. அவ‌னுக்கு ந‌ல்ல‌து எது? கெட்ட‌து எது? என்பதை தெளிவுப்ப‌டுத்த‌ வேண்டிய‌ க‌ட‌மை ந‌ம்முடைய‌து.

ஆமாங்க‌... ரெண்டு நாள் முன்னாடி கூட‌ ப‌டிக்காம‌ டீவி பார்த்து கொண்டு இருந்தான். நான் உட‌னே அவ‌னிட‌ம், "டேய் போய் ஒழுங்கா ப‌டிடா!!! இல்லை என்றால் அப்பாவிட‌ம் சொல்வேன்" என்றேன். அத‌ற்கு அவ‌ன், "அப்பா தான் இங்கே இல்லையே, நீ எப்ப‌டி சொல்வாய்" என்று என்னிட‌ம் கேள்வி கேட்கிறான்.

ஆமா அவ‌னும் என்ன‌ செய்வான்!.. என்னிட‌ம் பேசும் போதெல்லாம் அப்பா எப்ப‌ வ‌ருவீர்க‌ள்? என்று தான் கேட்கிறான்...

ஆமா!! ஊருக்கு வ‌ந்துட்டு திரும்ப‌ ம‌ன‌சு மாறிவிட‌ மாட்டீங்க‌ளே!... போனா வாட்டி நீங்க‌ள் ஊருக்கு வ‌ரும் போது கூட‌ இப்ப‌டிதான் சொன்னீங்க‌... திரும்ப‌ மூன்று மாதம் லீவு முடிந்த‌வுட‌ன், இங்கு சும்மா இருப்ப‌து என‌க்கு பிடிக்க‌வில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டீர்க‌ள்.

இல்ல‌ சுசிலா.. இந்த‌‌ முறை அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்காது. க‌ர‌ண‌ம் நான் ஊருக்கு வ‌ந்து பிஸின‌ஸ் ப‌ண்ண‌லாம் என்று பிளான் ப‌ண்ணிவிட்டேன். உன‌க்கு தான் தெரியுமே.. இவ்வ‌ள‌வு நாட்க‌ள் ச‌ம்பாதித்த‌ ப‌ண‌த்தில் ஐந்து ல‌ட்ச‌ம் ரூபாய் சேவிங் ப‌ண்ணி என‌து வ‌ங்கி க‌ண‌க்கில் இருக்கின்ற‌து.

ஆம‌ங்க‌.... தெரியும் அதை வைத்து என்ன‌ ப‌ண்ண‌ போறீங்க‌?

ஊருக்கு வ‌ந்து திரும்ப‌வும் வேலைக்காக‌ யாரிட‌மும் போய் நிற்க‌ என‌க்கு பிடிக்க‌வில்லை. என‌வே த‌னியாக‌ ஒரு லேத் ப‌ட்ட‌றை நானே ஆர‌ம்பிக்க‌ போகிறேன். என்னால் முடிந்த‌தை நானே செய்கிறேன். முடிந்தால் யாருக்காவ‌து வேலை நானே கொடுக்கிறேன்.

இப்ப‌ தாங்க‌ நான் ரெம்ப‌‌ ச‌ந்தோச‌மாக‌ இருக்கிறேன்.. கேட்க‌வே ந‌ல்லா இருக்கு... இன்றில் இருந்து நான் நீங்க‌ள் வ‌ரும் நாட்க‌ளை எண்ண‌ தொட‌ங்குகிறேன்.

ஹா..ஹா..எண்ண‌ தொட‌ங்கிவிடு.. அப்ப‌டியே அப்பாவிட‌மும், அம்மாவிட‌மும் சொல்லி விடு.. நான் அடுத்த‌ வாரம் போன் ப‌ண்ணும் போது அவ‌ர்க‌ளிட‌ம் பேசுகிறேன்.

ச‌ரிங்க‌..அப்ப‌டியே சொல்லிவிடுகிறேன்.

ச‌ரிப்பா ரெம்ப‌ நேர‌ம் பேசிவிட்டோம், அப்புற‌ம் நான் கால் ப‌ண்ணுறேன்..

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x

ஹ‌லோ.. மாத‌வா!! நான் பேசுற‌து கேட்குதா..

கேட்குது அப்பா!.. சொல்லுங்க‌ எப்ப‌டி இருக்கீங்க‌?.. அம்மா எப்ப‌டி இருக்காங்க‌?..

நான் ந‌ல்லா இருக்கேன்ப்பா, அம்மாவும் ந‌ல்லா இருக்கிறாள்.. ஆனா...

என்ன‌ப்பா? என்ன ஆச்சி ... உங்க‌ளுடைய‌ குர‌ல் ச‌ரியில்லையே... என்ன‌ப்பா பிர‌ச்ச‌னை?

அதுவ‌ந்து....... உன்னுடைய‌ த‌ங்க‌ச்சி செல்வி பொண்ணு மீனா இல்லா....

ஆமாப்பா ... மீனாவுக்கு என்ன‌ ஆச்சு..

அவ‌ளுக்கு க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாய் உட‌ம்பு ச‌ரியில்லை.. எப்போதும் த‌லைவ‌லி என்று சொல்வாள். ந‌ம்ம‌ ப‌க்க‌த்துல‌ உள்ள‌ டாக்ட‌ரிட‌ம் காட்டி ம‌ருந்து வாங்கினோம்.. அப்ப‌டியும் ச‌ரியாக‌வில்லை..பின்பு ட‌வுனில் உள்ள‌ ஆஸ்ப‌த்திரியில் காட்டினோம். அவ‌ர்க‌ள் த‌லையை ஸ்கேன் ப‌ண்ண‌ வேண்டும் என்று சொன்னார்க‌ள். இர‌ண்டு நாட்க‌ள் முன்புதான் ஸ்கேன் ப‌ண்ணினார்க‌ள். அதில் அவ‌ளுக்கு மூளையில் ஒரு க‌ட்டி இருக்கின்ற‌து. அதை உட‌ன‌டியாக‌ ஆப‌ரேச‌ன் செய்து அக‌ற்ற‌ வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆப‌த்து வ‌ரும் என்று சொல்கிறார்க‌ள்.. மாத‌வா...

அப்ப‌டியா......என்னிட‌ம் ஏன் இதுவ‌ரை சொல்ல‌வில்லை. த‌ங்க‌ச்சியிட‌ம் ஒரு வார‌ம் முன்பு கூட‌ நான் பேசினேன். அவ‌ளும் இதை ப‌ற்றி சொல்ல‌வே இல்லை..

நீ இதை அறிந்தால் வ‌ருத்த‌ ப‌டுவாய் என்று தான் அவ‌ள் உன்னிட‌ம் சொல்ல‌வில்லை.

ச‌ரி அப்பா ... ஆப‌ரேச‌னுக்கு ஆக‌ வேண்டிய‌ வேலையை பார்க்க‌ வேண்டிய‌து தானே.. எவ்வ‌ள‌வு செலவு ஆகும் என்று டாக்ட‌ர் சொல்லுகிறார்.

ஐந்து ல‌ட்ச‌த்துக்கு மேல் ஆகுமாம்.. என்ன‌ நோய் என்று க‌ண்டு பிடிப்ப‌த‌ற்கே.. உன் த‌ங்க‌ச்சியிட‌ம் இருந்த‌ ப‌ண‌ம் எல்லாம் காலியாகி விட்ட‌து மாத‌வா.. அவ‌ள் நேற்றில் இருந்து அழுது கொண்டே இருக்கிறாள்..

செல்வியிட‌ம் நான் பேசுகிறேன்.. எத‌ற்க்கும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம் என்று சொல்லுங்க‌ள்.. ஆப‌ரேச‌னுக்கு வேண்டிய‌ வேலைக‌ளை பார்க்க‌ சொல்லுங்க‌ள். சுசிலாவிட‌ம் இருந்து நான் சொன்ன‌தாக‌ ப‌ண‌ம் வாங்கி கொள்ளுங்க‌ள்.. அப்ப‌டியே நான் ஊருக்கு எப்போது வ‌ருவேன் என்ப‌தை பின்பு சொல்லுவ‌தாக‌ சொல்லுங்க‌ள்..

ச‌ரி மாத‌வா.. அப்ப‌டியே செய்துவிடுகிறேன்....

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x-x-x-x-x-x-x-x-xx-x-x

மாத‌வ‌ன் த‌ன்னுடைய‌ டேபிளில் பிரிண்டு போட்டு கையெழுத்திட்ட‌‌ ரிசைன் லெட்ட‌ரை எடுத்து கிழித்து ப‌க்க‌த்தில் இருந்த‌ குப்பை தொட்டியில் போட்டு விட்டு மொபைல் போனை ஆன் செய்து த‌ன‌து த‌ங்கையின் எண்ணுக்கு ட‌ய‌ல் செய்தான்.

29 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'ஒரு சில காரணங்கள் நமது திட்டங்களை
மாற்றும் காரணிகளாயாகின்றன' என்பதை
தெளிவாய் கதையில் விளக்கினீர்கள். அருமை!

துபாய் ராஜா said...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

சுற்றமும், சூழ்நிலையும் தான் நமது வாழிக்கையை தீர்மானிக்கின்றன.

அழகான கதை. அருமையான கருத்து.

தமிழ் உதயம் said...

மனிதனின் கஷ்டங்கள், தேவைகள் அலைகளை போல். அது ஓயாது.

அருமையான கதை

Prathap Kumar S. said...

நாம் ஒன்று நினைக்கு தெய்வம் ஒன்று நினைக்கும்... நல்ல கதை ஸ்டீபன்.

Unknown said...

கதைக் கரு ரொம்ப நல்லா இருக்கு.

அப்புறம் நடையை பாத்தீங்கன்னா.. ஒரு சீராவே இல்ல.. தமிழ்நாட்டு ரோட்டுல நடக்குற மாதிரி இருக்கு.

பேச்சு வழக்குல எழுதனும்னு நினைச்சிருந்தீங்கன்னா அப்பிடியே எழுதியிருக்கலாம். இல்லை நாடகத்தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தால் அதன் படி எழுதியிருக்கலாம். இரண்டு நடைகளையும் கலந்து கட்டியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தை தரவில்லை.

மன்னிக்கவும் அதிகப்பிரசங்கியாய் பேசி இருந்தால்..

sriram said...

கதை நல்லாயிருந்தது ஸ்டீபன்.
வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கஷ்டங்கள் அவர்களைப் பற்றி தவறாகவே நினைத்துக்கொண்டு இருக்கும் சிலருக்குப் புரிந்தால் நல்லது

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நாடோடி said...

@முகிலன் said...
//கதைக் கரு ரொம்ப நல்லா இருக்கு.

அப்புறம் நடையை பாத்தீங்கன்னா.. ஒரு சீராவே இல்ல.. தமிழ்நாட்டு ரோட்டுல நடக்குற மாதிரி இருக்கு.

பேச்சு வழக்குல எழுதனும்னு நினைச்சிருந்தீங்கன்னா அப்பிடியே எழுதியிருக்கலாம். இல்லை நாடகத்தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தால் அதன் படி எழுதியிருக்கலாம். இரண்டு நடைகளையும் கலந்து கட்டியிருப்பது நல்ல வாசிப்பனுபவத்தை தரவில்லை.

மன்னிக்கவும் அதிகப்பிரசங்கியாய் பேசி இருந்தால்..//

த‌க‌வ‌லுக்கு ரெம்ப‌ ந‌ன்றி முகில‌ன் சார்... நான் அந்த‌ கோண‌த்தில் பார்க்க‌வே இல்லை... க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சொன்ன‌தை திருத்த‌ முய‌லுகிறேன்... நீங்க‌ள் சொன்ன‌ பிற‌கு ப‌டிக்கும் போது தான் அத‌ன் அர்த்த‌ம் புரிகிற‌து...

அடிக்க‌டி இது போல் வ‌ந்து க‌ருத்து சொன்னால் திருத்தி கொள்வேன்..

சிநேகிதன் அக்பர் said...

எந்த நோக்கத்திற்க்காக எழுதினீர்களோ அதன் தாக்கத்தை உணர்ந்தேன். வெளி நாட்டில் வாழ்வது மிக கஷ்டமான காரியம்.

Chitra said...

நிஜங்கள், நம் பாதைகளை எப்படி மாற்றுகின்றன! நல்ல கதைங்க.

ஜெய்லானி said...

எத்தனையோ பேர் கதை இப்படிதான் ஓடிக்கிட்டிருக்கு .

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு ஸ்டீபன்,
வாழ்த்துக்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

கதை கரு நல்லா இருக்கு...

வெளி நாட்டில் இருப்பவர்களின் நிலைமையில் ஒரு பக்கம் அருமையா சொல்லிருக்கீங்க..

நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது இது தான் போலும்.. வாழ்த்துக்கள்..

ரோஸ்விக் said...

இது போன்ற தேவைகளுக்காக நாம் சில தியாகங்களை செய்யத் தான் வேண்டியுள்ளது.

நல்ல கருத்து...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அந்நிய மண்ணில் சொந்தங்களுக்காக சுகங்களைத் தொலைத்த மைந்தர்களின் நிலையை அப்பட்டமாய் சொல்லும் அழகான கதை.

கண்ணா.. said...

எஸ்யூச்மீ...நீங்க இதுக்கு முன்னாடி துபாய் வந்துருக்கீங்களா..????

malar said...

ரொம்ப அருமயா சொல்லி இருகீங்க ...

இனி முகிலன் சார் பாயிண்டுக்கு வருவோம்...

நாகர்கோயில்காரங்கலுக்குன்னு ஒரு தமிழ் உணடு....அந்த நடையில் தான் எழுதி இருகீங்க... இந்த தவறை நாகர்கோயில் அல்லதவர்கள் எழிதில் கண்டுபிடுதுவிவார்கள்...இந்த பிரச்சனை தான் என்க்கும்..நிறைய எழுத வேண்டும் என்று தோன்றினலும்
இந்த் எழுத்து நடை பிரச்சனையினால் தான் எழுத முடியவில்லை...

நாகர்கோயில் தமிழ் கத்துக்க கமலஹாசன் தனியாக வாதியார் வைது படித்தார் ஒரு படத்துக்கு....

தவறுதலாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்....

நாடோடி said...

@கண்ணா.. said...
//எஸ்யூச்மீ...நீங்க இதுக்கு முன்னாடி துபாய் வந்துருக்கீங்களா..????///

என்ன‌ த‌ல‌....த‌ப்பா ஏதும் சொல்லிட்டேனா?.........உண்மையிலேயே ச‌வூதி என்று தான் போட‌ வேண்டும் என்று நினைத்தேன்... ஆனா அந்த‌ வார்த்தை ப‌டிப்ப‌த‌ற்கு புளோ வ‌ராது என்று தான் துபாய் என்று எழுதினேன்... நான் இருப்ப‌தும் ச‌வுதியில் தான்...

கண்ணா.. said...

அட .. நீங்க ஓண்ணும் தப்பா சொல்லல தல...

இங்க இருக்கறவங்களோட நிலமையை கரெக்டா ரிப்ளக்ட் பண்ணிருக்கீங்களே அதுக்காதத்தான் அப்பிடி கேட்டேன்...

:)) ( பாருங்க ரெண்டு ஸ்மைலி போட்ருக்கேன்.. தப்பா நினைக்கலை )

செ.சரவணக்குமார் said...

கதை நல்லாயிருக்கு ஸ்டீபன். தலைப்பே கதை சொல்லுது.

Ahamed irshad said...

கதை அருமை&உண்மை ஸ்டீபன்.

மங்குனி அமைச்சர் said...

உண்மை தான் சார்

ராஜ நடராஜன் said...

என்ன பின்னூட்டம் சொல்றதுன்னு தெரியல!

angel said...

//நாம் ஒன்று நினைக்கு தெய்வம் ஒன்று நினைக்கும்//

இதை நானும் மறுபடி கூற விளைகிரேன். நல்ல கதை . எனக்கு பிடித்துள்ளது

சொல்லச் சொல்ல said...

வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் கட்டயத்தையும் கொத்தாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டீர்கள். நல்ல பதிவு.

'பரிவை' சே.குமார் said...

அழகான கதை. அருமையான கருத்து.

DREAMER said...

உருக்கமான கதை நண்பரே... அழுத்தமாக இருக்கிறது. அருமை. மாதவன் போன்ற சூழ்நிலைக்க கைதிகளை எண்ணிப் பார்க்க கவலையாக இருக்கிறது. டெலிஃபோன் உரையாடலிலேயே கதை சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. தொடருங்கள்..!

-
DREAMER

www.koothanallur.tk said...

நாடோடி அவர்களே! நான் இன்று தான் உங்கள் வெப்சைட்டை பார்க்க நேர்ந்தது.
இந்த கதை மிகவும் அருமை. இதைப்போல 95 சதம் , ஏதாவது கமிட்மெண்ட்டில் தான் நமது வாழ்க்கை இங்கே வீனாகிறது. மனைவி மக்களுடன் வாழ முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா நண்பரே! வெளினாட்டில் இருப்பவரெல்லாம் தியாகிகள் என்று தான் நான் சொல்வேன். உங்களின் படைப்புகள் சுவரஸ்யமாகவும், காயத்துக்கு மருந்து போடுவதாகவும் இருக்கிறது, நன்றி.

நூர்முஹைதீன். துபை

www.koothanallur.tk said...

நாடோடி அவர்களே! நான் இன்று தான் உங்கள் வெப்சைட்டை பார்க்க நேர்ந்தது.
இந்த கதை மிகவும் அருமை. இதைப்போல 95 சதம் , ஏதாவது கமிட்மெண்ட்டில் தான் நமது வாழ்க்கை இங்கே வீனாகிறது. மனைவி மக்களுடன் வாழ முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா நண்பரே! வெளினாட்டில் இருப்பவரெல்லாம் தியாகிகள் என்று தான் நான் சொல்வேன். உங்களின் படைப்புகள் சுவரஸ்யமாகவும், காயத்துக்கு மருந்து போடுவதாகவும் இருக்கிறது, நன்றி.

நூர்முஹைதீன். துபை

Ramesh said...

பொறுப்புள்ள ஆண்கள் என்றும் சந்தோஷமாக இருந்ததில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை.

Related Posts with Thumbnails