Sunday, April 18, 2010

சிரிக்க‌ ம‌ட்டும்_போஸ்டர்

அர‌பு நாடுக‌ளில் மொத்த‌மாக‌ கோலா விற்ப‌னை த‌டைசெய்ய‌ப்ப‌ட்டு திருப்பி அனுப்ப‌ப்ப‌ட்ட‌து. அதனால் கோலா க‌ம்பெனியின் மார்கெட்டிங் மேனேஜ‌ர் ரெம்ப‌ வ‌ருத்த‌மாக‌ இருந்தார். அவ‌ரிட‌ம் ரிப்போட்ட‌ர் ஒருவ‌ர் எதனால் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌து என்று விசாரிக்கிறார்.

ரிப்போட்ட‌ர்: உங்க‌ளால் ஏன் அர‌பு நாடுக‌ளில் வியாப‌ர‌த்தில் வெற்றி பெற‌முடிய‌வில்லை.

மேனேஜ‌ர்: எல்லாம் ஒரு போஸ்ட‌ரால் வ‌ந்த‌து.

ரிப்போட்ட‌ர்: போஸ்ட‌ரா? கொஞ்ச‌ம் புரியும்ப‌டி சொல்லுங்க‌ள்..

மேனேஜ‌ர்: அர‌பு நாடுக‌ளில் ந‌ல்ல‌ முறையில் மார்கெட்டிங் செய்ய‌ வேண்டும் என்று நினைத்தேன். ந‌ல்ல‌ முறையில் விள‌ம்ப‌ர‌ம் செய்தால் இங்கு ந‌ன்றாக‌ வியபார‌ம் ந‌ட‌க்கும் என‌ அங்குள்ள‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறினார். விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ என‌க்கு அர‌பிக் தெரியாது. என‌வே நான் சொல்ல‌ வேண்டிய‌ விச‌ய‌த்தை கீழே உள்ள‌ மூன்று போஸ்ட‌ர் மூல‌ம் தெரிவித்தேன்.



முத‌ல் போஸ்ட‌ர்: ஒருவ‌ன் சூடான‌ ம‌ண‌லில் ரெம்ப‌ தூர‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌தால் க‌ளைப்ப‌டைந்து சோர்வாக‌ ப‌டுத்து இருக்கிறான்

இர‌ண்டாவ‌து போஸ்ட‌ர்: அவ‌ன் எங்க‌ள‌து கோலாவை குடிக்கிறான்

மூன்றாவ‌து போஸ்டர்: இப்போது அந்த‌ ம‌னித‌ன் புத்துண‌ர்ச்சியுட‌ன் வேக‌மாக‌ ஓட‌ தொட‌ங்குகிறான்.

மேனேஜ‌ர்: இதுதான் என்னுடைய‌ விள‌ம்ப‌ர‌ போஸ்ட‌ர். இதை ந‌க‌ர‌த்தின் எல்லா இட‌ங்க‌ளிலும் வைக்க‌ சொன்னேன்.

ரிப்போட்ட‌ர்: ஆஹா! அருமையான‌ போஸ்டர்.. வியாபார‌ம் ந‌ல்ல‌ போய் இருக்க‌ணுமே!!

மேனேஜ‌ர்: நானும் அப்ப‌டிதான் நினைச்சேன்....ஆனா அர‌பிக‌ள்‌ அந்த‌ போஸ்ட‌ரை இட‌மிருந்து வ‌ல‌மாக‌ ப‌டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌.. வ‌ல‌மிருந்து இட‌மாக‌ ப‌டிச்சிட்டாங்க‌.........

28 comments:

Robin said...

:)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹையா.. நா தான் முதல் கமெண்ட்...

ஹா ஹா ஹா.. சூப்பர் ..
படமும் சூப்பருங்க..

Ahamed irshad said...

சூப்பர்...

செ.சரவணக்குமார் said...

ஹா ஹா.. சூப்பர் ஸ்டீபன். நல்ல நகைச்சுவை.

செ.சரவணக்குமார் said...

ஹா ஹா.. சூப்பர் ஸ்டீபன். நல்ல நகைச்சுவை.

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா. அருமை ஸ்டீபன்.

சைவகொத்துப்பரோட்டா said...

சோக்கு நல்லா இருக்கு
ஸ்டீபன்.

vasu balaji said...

good good:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

good joke.

Anonymous said...

:)))

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர் ஸ்டீபன். நல்ல நகைச்சுவை. கலக்குறீங்க.

நானும் சவுதில கொக்கோ கோலாவைத்தான் தடை பண்ணிட்டாங்கன்னு நெனச்சேன். அது இல்லாம அவங்களால ஒன்னும் செய்ய முடியாதே.

தாராபுரத்தான் said...

அரபியர்களின் பார்வையில் கோலா....

vanathy said...

ஸ்டீபன், நல்ல நகைச்சுவை. இந்த கோக், பெப்ஸி இல்லாமல் உலகமே ஸ்தம்பித்து விடும் அல்லவா?

அன்புடன் மலிக்கா said...

அச்சோ அச்சோ. அச்சச்சோஓஓஒ

கண்ணா.. said...

அருமை தல... நல்ல வேளை இத மட்டும் போட்டீங்க..ஏன்னா மெயில்ல இதே கான்செப்ட்ல பயங்கரமா நிறைய மெயில் வந்திருக்கு..... அதையெல்லாம் போட்டீங்கன்னா..உங்க் ப்ளாக்கை 18+ன்னு சொல்லுருவாங்க.

:)

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான நகைச்சுவை நண்பா!!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான நகைச்சுவை நண்பா!!

Paleo God said...

haa haa சோப்ப வெச்சி ஒன்னு இதே மாதிரி கேட்டிருக்கேன். நகைச்சுவையா இருந்தாலும், மார்கெட்டிங்கில் இதெல்லாமே சவாலான விஷயங்கள்தான்.:)

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...அருமை..

தமிழ் உதயம் said...

அர‌பு நாடுக‌ளில் மொத்த‌மாக‌ கோலா விற்ப‌னை த‌டைசெய்ய‌ப்ப‌ட்டு திருப்பி அனுப்ப‌ப்ப‌ட்ட‌து.

உண்மையா. தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

நாடோடி said...

@தமிழ் உதயம் said...
///அர‌பு நாடுக‌ளில் மொத்த‌மாக‌ கோலா விற்ப‌னை த‌டைசெய்ய‌ப்ப‌ட்டு திருப்பி அனுப்ப‌ப்ப‌ட்ட‌து.

உண்மையா. தெரிந்து கொள்ள விரும்புகிறேன்///

நீங்க‌ வேற‌... ந‌ம்ம‌ விட‌ அர‌பிக‌ள் ரெம்ப‌ மோச‌ம்., த‌ண்ணீர் இல்லாம‌ல் கூட‌ இவ‌ர்க‌ள் சாப்பிடுவார்க‌ள், ஆனால் கோலா, பெப்சி போன்ற‌வை இல்லாம‌ல் சாப்பிட‌ மாட்டார்க‌ள். ஒரு ந‌கைச்சுவைக்காக‌ தான் எழுதினேன்.

அரேபிய‌ர்க‌ள் வ‌ல‌மிருந்து இட‌‌மாக‌ ப‌டிக்கும் வ‌ழ‌க்க‌முடைய‌வ‌ர்க‌ள்... அவ‌ர்க‌ளின் எழுதும் ப‌ழ‌க்க‌மும் அப்ப‌டித்தான். வ‌ல‌து மூலையில் இருந்து ஆர‌ம்பித்து இட‌துபுற‌மாக‌ எழுதுவார்க‌ள்..

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமையாக இருந்தது .

karthickeyan said...

அருமையான நகைச்சுவை!

"என்னத்த சொல்றது" - எஹையா said...

நல்ல நகைச்சுவை..!

நாடோடி said...

@Robin

@Ananthi

@அஹமது இர்ஷாத்

@செ.சரவணக்குமார்

@Chitra

@துபாய் ராஜா

@சைவகொத்துப்பரோட்டா

@வானம்பாடிகள்

@ஜெய்லானி

@நாய்க்குட்டி மனசு

@Ammu Madhu

@முனைவர்.இரா.குணசீலன்

@ஸ்ரீராம்.

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

@karthickeyan

@"என்னத்த சொல்றது" - எஹையா

வ‌ந்து சிரித்து ர‌சித்த‌ அனைவ‌ருக்கும் என‌து ந‌ன்றிக‌ள்..

நாடோடி said...

@அக்பர் said...
//சூப்பர் ஸ்டீபன். நல்ல நகைச்சுவை. கலக்குறீங்க.

நானும் சவுதில கொக்கோ கோலாவைத்தான் தடை பண்ணிட்டாங்கன்னு நெனச்சேன். அது இல்லாம அவங்களால ஒன்னும் செய்ய முடியாதே.///

நீங்க‌ வேற‌ அக்ப‌ர்... இவ‌ங்க‌ த‌ண்ணி இல்லாம‌ கூட‌ இருந்து விடுவார்க‌ள்.... பெப்சி, கோலா இல்லாம‌ல் இருக்க‌ மாட்டார்க‌ள்.. க‌ருத்துக்கு ந‌ன்றி அக்ப‌ர்.

@தாராபுரத்தான் said...
//அரபியர்களின் பார்வையில் கோலா....//

ஆமா சார்.. ந‌ல்லா இருக்கா...வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

@vanathy said...
//ஸ்டீபன், நல்ல நகைச்சுவை. இந்த கோக், பெப்ஸி இல்லாமல் உலகமே ஸ்தம்பித்து விடும் அல்லவா?//

அப்ப‌டியொரு மாய‌யை கொண்டு வ‌ந்தாச்சி... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கு ந‌ன்றி.

@அன்புடன் மலிக்கா said...
//அச்சோ அச்சோ. அச்சச்சோஓஓஒ///

இப்ப‌டி சொன்னா எப்ப‌டி.. அய்யோ..அய்யோ..அய்ய‌யோஓஓஓஓஓ

@கண்ணா.. said...
//அருமை தல... நல்ல வேளை இத மட்டும் போட்டீங்க..ஏன்னா மெயில்ல இதே கான்செப்ட்ல பயங்கரமா நிறைய மெயில் வந்திருக்கு..... அதையெல்லாம் போட்டீங்கன்னா..உங்க் ப்ளாக்கை 18+ன்னு சொல்லுருவாங்க.//

அப்ப‌டியா த‌ல‌.... ந‌ம‌க்கு இது ஒண்ணும் தான் வ‌ந்த‌து. இது வேற‌ மாதிரி வ‌ந்த‌து.. அதை கொஞ்ச‌ம் மாற்றி எழுதியுள்ளேன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி த‌ல‌..

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//haa haa சோப்ப வெச்சி ஒன்னு இதே மாதிரி கேட்டிருக்கேன். நகைச்சுவையா இருந்தாலும், மார்கெட்டிங்கில் இதெல்லாமே சவாலான விஷயங்கள்தான்.:)//

உண்மைதான் ச‌ங்க‌ர்ஜி.. மார்கெட்டிங்கில் இதை எல்லாம் ச‌மாளிப்ப‌து க‌டின‌ம் தான்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

ஹுஸைனம்மா said...

நான் ஸ்கூல்ல படிக்கும்போதே சலவை சோப் கான்ஸெப்ட் வச்சு இதே ஜோக் வந்துது. இது புதுசு!!

தொடருங்க!!

Unknown said...

எப்ப‌டி இந்த‌ ம‌திரி எல்ல‌ம் ந‌ல்ல‌ இருக்கு அப்ப‌டியே க‌டை பிடிகங்க‌

Related Posts with Thumbnails