அம்பத்தூர் ரெயில்வே ஸ்டேசனில் இருந்து அம்பத்தூர் கனரா பேங்க் பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் ஒரு ஒயின் ஷாப் உள்ளது. பஸ் ஸ்டாப் மற்றும் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள கூட்டத்தை விட அந்த ஒயின் ஷாப்பில் தான் அதிக கூட்டத்தை பார்க்க முடியும். அதுவும் சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம் திருவிழா கூட்டம் தான்.
அன்று சனிக்கிழமை, நான் ரெயில்வே ஸ்டேசன் பக்கத்தில் இருந்த முருகன் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் உள்ள அந்த ஒயின் ஷாப் பக்கத்தில் ஒரு பெரிய கும்பல் நின்று கொண்டிருத்தது. அந்த கும்பலின் நடுவில் ஒருவர் நின்று கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தார். சென்னைக்கு வந்த புதிதில் சண்டை போடும் இடங்களில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் எனக்கு புரிவதே இல்லை. அப்போது நான் நினைத்து கொள்வேன் இவர்களை எல்லாம் கூட்டி கொண்டு போய் நம்ம ஊரு பொன்னுதாயிகிட்ட டியூசன் வைக்க வேண்டும் என்று. ஏன்னா எங்க ஊரு பொன்னுதாயி அந்த அளவு பேமஸ். கெட்டவார்த்தைகள் என்றால் அவர்களிடம் தான் கத்து கொள்ள வேண்டும். ஒருவருடன் சண்டை என்றால் அவருடைய பாட்டாவில் ஆரம்பித்து அவருக்கு பிறக்க போகும் குழந்தை வரை இழுத்து விடுவார். கெட்டவார்த்தைகள் ஒவ்வொன்றும் சுருதி சுத்தமாக கணீர் என்று காதில் விழும். சரி நம்ம கதைக்கு வருவோம்.
கூட்டம் முழுவதும் கத்துபவரின் வாயையே பார்த்து கொண்டு இருந்தனர். ரெம்ப அசிங்கமாக பேசிக் கொண்டிருத்தார். அம்பத்தூரில் ரெயில் மூலமாக பயணம் செய்து வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியாகத்தான் வீடு திரும்ப முடியும். அதுமட்டுமல்லாது வேலை முடித்து வீட்டிற்கு செல்பவர்களுக்கு வசதியாக அந்த சாலையின் ஓரங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பார்கள். எனவே அந்த சாலை எப்போதும் பிஸியாக இருக்கும். அது மாலை நேரம் ஆகையால் நிறைய பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டிருந்தார்கள். கத்துபவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. நேரம் ஆக ஆக இவருடைய கத்தும் வேகம் அதிகமாகி கொண்டிருந்தது.
நான் அந்த கூட்டத்தை கடந்து சிறது தூரம் நடந்து பக்கத்தில் இருந்த ஹோட்டலின் வாசலில் நின்றேன். அந்த ஹோட்டலில் தான் நான் தினமும் சாப்பிடுவேன். அதில் வேலை பார்த்த ஒருவர் எனக்கு நல்ல அறிமுகம், அவர் அப்போது தான் அந்த கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தார். அவரிடம் என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம் என்று அவரிடம் புன்னைகித்தேன். அவரும் என்ன தம்பி ஆபிஸ் லீவா? என்று கேட்டு கொண்டு அருகில் வந்தார். ஆமா.. என்று சொல்லி விட்டு என்ன பிரச்சனை என்று கேட்டேன்.
அதுவா..தம்பி... அவன் இந்த ஏரியாவிலே உள்ள ரவுடி கும்பலை சேர்ந்தவன். ஏப்பாவாது தான் இங்கு வருவான். அந்த ஒயின் ஷாப்புக்கு சென்று ஒரு குவாட்டருக்கான ரூபாயை கொடுத்து விட்டு இரண்டு குவாட்டர் கேட்பான். அப்படி கொடுக்காவிட்டால் இப்படித்தான் பிரச்சனை பண்ணுவான். இது இவனுக்கு வாடிக்கை தம்பி என்று கேஷுவலாக கூறினார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தை திரும்பவும் ஒருமுறை பார்த்துவிட்டு அவரிடம் கேட்டேன், " போலீஸுக்கு போண் பண்ண வேண்டியது தானே" என்று கேட்டேன். நீங்க வேற போலீஸுக்கு இவன் எல்லாம் பயப்படமாட்டான், அப்படியே வந்தாலும் பணத்தை வாங்கி கொண்டு விட்டு விடுவார்கள் என்று சொல்லி வாய் மூடுவதற்க்குள் போலீஸ் ஜீப் ஒன்று அந்த சாலையில் வந்தது.
போலீஸ் வண்டியை பார்த்தவுடன் கும்பலாக நின்றவர்கள் அப்படியே நழுவ தொடங்கினார்கள். ஆனால் கத்தி கொண்டிருந்த ஆசாமி எங்கும் நகராமல் அப்படியே நின்றான். என் பக்கத்தில் நின்ற ஹோட்டல் ஊழியர் என்னிடம்.. பாருங்க தம்பி போலீஸ் வருகிறது, அவன் எப்படி நிக்கிறான் என்று. போலீஸும் கண்டுக்காம போயிடுவானுங்க, வேணுண்ணா பாருங்க அந்த போலீஸ் வண்டி நிக்காமல் செல்லும் என்று என்னிடம் பெட் கட்டாத குறையாக சொன்னார். ஆனால் அவர் சொன்னதுக்கு எதிர்மாறாக நடந்தது. போலீஸ் வண்டி நேராக கத்தி கொண்டிருந்தவனின் முன்னால் வந்து நின்றது. நான் இப்போது அருகில் இருந்த ஹோட்டல் ஊழியரை பார்த்தேன். அவர் நான் என்ன கேட்க போகிறேன் என்பதை அறிந்தவராக, இல்ல தம்பி காசு ஏதாவது வாங்கிட்டு போவானுங்க, வேணுண்ணா பாருங்க அந்த சந்துல கூட்டி போய் காசு வாங்குவானுங்க என்றார்.
வந்த போலீஸ் வண்டியில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள், அவர்களில் இரண்டு பேர் தொப்பையுடன் கொஞ்சம் வயதான தோற்றத்துடன் இருந்தார்கள், இன்னும் ஒருவர் இளம் வயதினரா இருந்தார். அந்த இளம் வயது போலீஸ் காரரை பார்த்தவுடன் என் பக்கத்தில் இருந்தவர் என்னிடம் "இந்த போலீஸ் கார பையனை நான் இதுவரை பார்த்தது இல்லை புதுசா இருக்கிறான்" என்று அவர் சொல்லுவதற்குள் வண்டியில் இருந்து இறங்கிய அந்த இளம் வயது போலீஸ்காரர், கத்தி கொண்டிருந்த ஆசாமியின் கன்னத்தில் "பளார்" என்று ஒன்று வைத்துவிட்டு, வண்டியில் ஏத்துய்யா!!!!! என்று பக்கத்தில் நின்ன போலீஸ் காரர்களுக்கு கட்டளையிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆசாமி பிடிக்க வந்த இரண்டு போலீஸ் காரர்களின் கைகளையும் தட்டிவிட்டு ஓட்டம் எடுத்தான். சாலையில் வருவோர்களும் போவோர்களும் ஒரு நிமிடம் அப்படியே அசந்து ஓடுபவனையே பார்த்தார்கள்.
ஆசாமியை பிடிக்க வந்த அந்த இரண்டு போலீஸ்காரர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர். கண்டிப்பாக இவர்கள் விரட்டி சென்றால் பிடிக்க முடியாது, காரணம் அவர்களின் முதுமையும், தொப்பையும். முழித்த இருவரையும் அந்த இளவயது போலீஸ்காரர் ஒரு முறை முறைத்துவிட்டு காலில் இருந்த ஷுவை கழற்றிவிட்டு துரத்தினார் பாருங்கள்.. உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அளவு மின்னல் வேகத்தில் ஓடினார். போலீஸ்காரர் துரத்துவதை பார்த்த ஆசாமி பக்கத்தில் இருந்த சந்துக்குள் நுழைந்து ஓடினான். நான் உட்பட் சுற்றி நின்ற அனைவரும் அந்த சந்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தோம். உண்மையில் படத்தில் நடப்பது போல் எனக்கு தோன்றியது.
இது நடந்து பத்து நிமிடம் கழித்து, அந்த ஆசாமியின் காலர் சட்டையை பிடித்து கொண்டு போலீஸ்காரர் வந்து கொண்டிருந்தார். இதை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். ஜீப் பக்கத்தில் கொண்டு வந்து அவனை நிறுத்திவிட்டு இப்ப ஓடுடா!!! பார்ப்போம் என்று சொல்லி கொண்டு காலில் இருந்து கழட்டிய ஷுவை மாட்டினார் அந்த இளம்வயது போலீஸ்காரர். இவ்வளவு நேரமும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வயதான போலீஸ் காரர் "பளார்" என்று ஒன்று கொடுத்து வண்டியில் தள்ளினார் அந்த ஆசாமியை.. வண்டியில் ஏறிய அந்த ஆசாமியின் நிலைமையை நினைத்துக்கொண்டு நான் வீட்டை பார்த்து நடந்தேன்.
குறிப்பு: நகரங்களில் உள்ள சந்துகளில் அறிமுகம் இல்லாமல் ஒருவனை துரத்தி பிடிப்பது என்பது மிக கடினமான காரியம். அன்று அந்த போலீஸ்காரர் அந்த ஆசாமியை துரத்தி பிடிக்காவிட்டால், பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு கேலி பொருளாக மாறியிருப்பார் என்பது மட்டும் உண்மை. கண்டிப்பாக எனக்கு மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த போலீஸ்காரர் அன்று ஹீரோவாகத் தான் தெரிந்தார். இரண்டு நாட்கள் கழித்து தான் அறிந்தேன் அவர் அந்த ஏரியாவிற்கு வந்த புது உதவி ஆய்வாளர் என்று..
Tuesday, April 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
இந்த இடுகை உங்களை ஒரு சமூக பத்திரிக்கையாளராக அடையாளப்படுத்துகின்றது.அந்த உதவி ஆய்வாளர் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாமே.
நல்ல கவர்அப்.
அட நம்ம ஊர்ல நடந்த கதையா..
இளம் ரத்தம், புது ரத்தம் பயமறியாது. சுயநலம் பார்க்காது. அவரை இப்போது பாருங்கள். எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள்.
. அன்று அந்த போலீஸ்காரர் அந்த ஆசாமியை துரத்தி பிடிக்காவிட்டால், பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு கேலி பொருளாக மாறியிருப்பார் என்பது மட்டும் உண்மை.
....பிடிக்காமல் வந்தாலும், பாராட்டி உற்சாகப் படுத்தும் எண்ணம் என்று நம் மக்களுக்கு வருமோ? பிடிக்க உதவி செய்யவில்லை என்றாலும் கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது. புது உதவி ஆய்வாளர், சோதனைகளில் தளர்ந்து விடாமல் சிறக்க வாழ்த்துக்கள்!
பேக்ரவுண்ட் கலர் மாற்றுவீர்களா?
கடமை செய்யும் போலீஸ்கார (வீர)ரை
அடையாளம் காட்டிவிட்டீர்கள்.
ம்ம்ம்... இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததா?. பாராட்டுக்கள் ( அந்த காவல் துறை அதிகாரிக்கு ).
good report
அருமை. இப்படியே சிறப்பாக அவர் பணியாற்றுவாராக!
ஒரு சிறு சம்பவத்தை வைத்து தேர்ந்த எழுத்தாளர் போல அழகாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!
நல்ல கவரேஜ் ஸ்டீபன். அண்ணன் சொன்னது மாதிரி சம்பவத்தை விவரித்த விதம் அருமை.
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. நல்ல மனிதரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். அவரது பெயரைத் தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவருக்கு எனது வணக்கங்களும்.
அந்த அதிகாரிக்கும், இதை பதிவிட்ட
உங்களுக்கும் ராயல் சல்யூட்!!!
தமிழ் உதயம் சொல்வதில் உண்மை இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. ஆனாலும் எத்தனை கனவுகளோடு அந்த உத்தியோகத்துக்கு வருகிறார்கள் அவர்களை மாற்றுவது யார்? நேருக்கு நேர் நின்று மோதுபவ்ர்களை சமாளிக்கலாம் முதுகுக்கு பின்னால் நிற்பவர்களை?
மிகுந்த மகிழ்ச்சி
உங்களுக்குள்ளயும் ஓரு ரிப்போர்ட்டர் ஓளிஞ்சுருக்கான் பாருங்க..!!
ஆனா அவரு பேரை போடாம கிசுகிசு பாணில எழுதிட்டீங்களே.... :))
நல்ல பகிர்வு
Nice one...
அவருக்கு என்னுடைய சல்யூட்...
நல்ல பகிர்வு
இந்தப் பதிவ அவருக்கு fax இல் அனுப்ப முடியுமா என்று பாருங்கள்.இந்த பாராட்டை பார்த்து அவர் சந்தோசம் கொள்ளட்டும். நெகட்டிவா பேச ஆயிரம் பேரு இருப்பான் பாஸ்.ஆனா நேர்மயானவங்கள தட்டிக்கொடுக்க மக்கள் மட்டும் தான் இருக்கோம்.அது நம்ம கடமையும் கூட....
//அதுவா..தம்பி... அவன் இந்த ஏரியாவிலே உள்ள ரவுடி கும்பலை சேர்ந்தவன். ஏப்பாவாது தான் இங்கு வருவான். அந்த ஒயின் ஷாப்புக்கு சென்று ஒரு குவாட்டருக்கான ரூபாயை கொடுத்து விட்டு இரண்டு குவாட்டர் கேட்பான். அப்படி கொடுக்காவிட்டால் இப்படித்தான் பிரச்சனை பண்ணுவான். இது இவனுக்கு வாடிக்கை தம்பி என்று கேஷுவலாக கூறினார்.//
உருவத்தில் ஏமாந்து இதுபோல் ஒரு பொறுக்கியின் மகளை திருமணம் செய்த நான் அந்த பொறுக்கி இதுபோல் தான் வாய் வழியா அமில வார்த்தைகைள கக்குவான்... கேட்கும் மற்றோருக்கும் காதுவழியாக இரத்தமே வந்துவிடும்
// நீங்க வேற போலீஸுக்கு இவன் எல்லாம் பயப்படமாட்டான், //
அதெல்லாம் பொய்! இதுபோல் பொறுக்கிகளை அரம்பத்திலேயே இரண்டு சாத்து சாத்தினால் வளரமாட்டார்கள் மற்றும் வளர்ந்துவிட்டால் இதுபோல் பொறுக்கிகள் மீது கைவைப்பது சிரமம்! ஆமாம் அவர்கள் வளர்ந்து அந்த ஏரியா கவுன்சிலராக வந்து விடுவான்
//இன்னும் ஒருவர் இளம் வயதினரா இருந்தார். அந்த இளம் வயது போலீஸ் காரரை பார்த்தவுடன் என் பக்கத்தில் இருந்தவர் என்//
இதுபோல் அரிதான மனிதர்கள் அபூர்வம் நம் காவல் துறையில்.. இதுபோல் மனிதர்கள் சுயம் இழக்காமல் ஒய்வுபெறும் வரைஇதுபோல் இருக்க பிராத்திக்கின்றேன்
//அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த போலீஸ்காரர் அன்று ஹீரோவாகத் தான் தெரிந்தார். //
ஆம் நம் மக்கள் எப்பொழுது மாற்றம் வரும், யாராவது ஒருவர் அநியாயத்தை தட்டிகேட்க மாட்டார்களா என்று மனம் புழுங்கி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.இதுபோல் மனிதர்களை நம் மக்கள் நிஜ ஹிரோவாக்கி பார்பார்கள். எனது ஊரில் ஒரு காவல் ஆய்வாளர் பொறுக்கி அரசியல் வாதியால் பணி மாற்றம் செய்ய நேரிட்டபொழுது பொதுமக்கள் பெரிய போராட்டம் நடத்தி அதனை தடுத்தனர்...
நல்ல பதிவு....
போலீஸ் என்றால் மாமூலுதான் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா துறையிலும் விதி வில்லக்காக நல்ல மனிதற்களும் இருகிறார்கள்..
ம்ம்... கொஞ்சம் பேராவது இப்படி இருக்கப் போயித்தான், காவல்துறை மேல ஒரு நம்பிக்கை இன்னும் இருக்கு; இவரும் காலப்போக்குல மாறியிருக்கக் கூடாது!!
@எம்.எம்.அப்துல்லா said...
///இந்த இடுகை உங்களை ஒரு சமூக பத்திரிக்கையாளராக அடையாளப்படுத்துகின்றது.அந்த உதவி ஆய்வாளர் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாமே.
நல்ல கவர்அப்.///
வந்து ஊக்கபடுத்தியதற்கு ரெம்ப நன்றி அப்துல்லா சார்... நான் இதை எழுதியது அவரை மட்டும் அடையாளம் காட்ட வேண்டும் என்று இல்லை... இது போல் முகம் தெரியாமல் நடக்கும் நல்ல விசயங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று தான்.
@Ramesh said...
//அட நம்ம ஊர்ல நடந்த கதையா..//
அம்பத்தூரா.... வாங்க வாங்க அங்கதான் நடந்தது... முதல் வருகை நல்வரகு ஆகுக..
@தமிழ் உதயம் said...
//இளம் ரத்தம், புது ரத்தம் பயமறியாது. சுயநலம் பார்க்காது. அவரை இப்போது பாருங்கள். எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள்.//
சமீபத்தில் நான் பார்க்கவில்லை சார்.... நல்லா இருப்பார் என்று நம்புவோம்...
@Chitra said...
///. அன்று அந்த போலீஸ்காரர் அந்த ஆசாமியை துரத்தி பிடிக்காவிட்டால், பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு கேலி பொருளாக மாறியிருப்பார் என்பது மட்டும் உண்மை.
....பிடிக்காமல் வந்தாலும், பாராட்டி உற்சாகப் படுத்தும் எண்ணம் என்று நம் மக்களுக்கு வருமோ? பிடிக்க உதவி செய்யவில்லை என்றாலும் கிண்டலுக்கு பஞ்சம் இருக்காது. புது உதவி ஆய்வாளர், சோதனைகளில் தளர்ந்து விடாமல் சிறக்க வாழ்த்துக்கள்!////
கண்டிப்பாக நல்ல படியாக அமைய வேண்டும்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா மேடம்..
@NIZAMUDEEN said...
//கடமை செய்யும் போலீஸ்கார (வீர)ரை
அடையாளம் காட்டிவிட்டீர்கள்.///
வாங்க நிஜாம் சார்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி....
@NIZAMUDEEN said...
//பேக்ரவுண்ட் கலர் மாற்றுவீர்களா?//
பேக்ரவுண்டு சந்தன கலரில் வைத்துள்ளேன்...உங்களுக்கு எவ்வாறு தெரிகிறது.... நல்ல கலர் தேடிக்கொண்டு இருக்கிறேன்.. சீக்கிரம் மாற்றி விடுகிறேன்.
@vanathy said...
//ம்ம்ம்... இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததா?. பாராட்டுக்கள் ( அந்த காவல் துறை அதிகாரிக்கு ).//
ஆமாஙக் ஆமா..... தொடர் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி வானதி மேடம்
@வானம்பாடிகள் said...
good report
thanks Sir
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//அருமை. இப்படியே சிறப்பாக அவர் பணியாற்றுவாராக!//
வாங்க சங்கர்ஜி.... கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி...
@மனோ சாமிநாதன் said...
//ஒரு சிறு சம்பவத்தை வைத்து தேர்ந்த எழுத்தாளர் போல அழகாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!///
உங்களை போல் பெரியவர்கள் வந்து வாழ்த்துவது ரெம்ப சந்தோசமாக இருக்கிறது, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி மேடம்
@அக்பர் said...
//நல்ல கவரேஜ் ஸ்டீபன். அண்ணன் சொன்னது மாதிரி சம்பவத்தை விவரித்த விதம் அருமை.//
வாங்க அக்பர்.....கேட்க ரெம்ப சந்தோசமாக இருக்கிறது,,
@செ.சரவணக்குமார் said...
//மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. நல்ல மனிதரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். அவரது பெயரைத் தெரிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவருக்கு எனது வணக்கங்களும்.//
பெயர் போட்டு இருக்கலாம் சரவணன் சார்.... இதைப் போல் நமது கண்ணில் படமாலும் சிலர் இருப்பார்கள் இல்லையா... அதனால் தான் பொதுவாக எழுதினேன்...
@சைவகொத்துப்பரோட்டா said...
//அந்த அதிகாரிக்கும், இதை பதிவிட்ட
உங்களுக்கும் ராயல் சல்யூட்!!!//
வாங்க வாங்க சை.கொ.ப... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி...
@நாய்க்குட்டி மனசு said...
//தமிழ் உதயம் சொல்வதில் உண்மை இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. ஆனாலும் எத்தனை கனவுகளோடு அந்த உத்தியோகத்துக்கு வருகிறார்கள் அவர்களை மாற்றுவது யார்? நேருக்கு நேர் நின்று மோதுபவ்ர்களை சமாளிக்கலாம் முதுகுக்கு பின்னால் நிற்பவர்களை?///
உண்மைதான் மேடம் இளையவர்களின் கனவுகளை சிதைப்பவர்கள் இவர்கள் தான்...
@ஈரோடு கதிர் said...
//மிகுந்த மகிழ்ச்சி//
உங்களுடைய் வருகையால் நானும் ரெம்ப மகிழ்ச்சி சார்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@கண்ணா.. said...
//உங்களுக்குள்ளயும் ஓரு ரிப்போர்ட்டர் ஓளிஞ்சுருக்கான் பாருங்க..!!
ஆனா அவரு பேரை போடாம கிசுகிசு பாணில எழுதிட்டீங்களே.... :))
நல்ல பகிர்வு.///
நான் இதை ஒருவருக்கான பதிவா போடல தல.... படிப்பவர்களுக்கு இது போலவும் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று தான்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி தல..
@அஹமது இர்ஷாத் said...
Nice one...
thanks Ahamad
@கண்ணகி said...
//அவருக்கு என்னுடைய சல்யூட்...//
வாங்க கண்ணகி மேடம்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@கரிசல்காரன் said...
//நல்ல பகிர்வு//
வாங்க கரிசல்காரன் சார்...வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@ILLUMINATI said...
//இந்தப் பதிவ அவருக்கு fax இல் அனுப்ப முடியுமா என்று பாருங்கள்.இந்த பாராட்டை பார்த்து அவர் சந்தோசம் கொள்ளட்டும். நெகட்டிவா பேச ஆயிரம் பேரு இருப்பான் பாஸ்.ஆனா நேர்மயானவங்கள தட்டிக்கொடுக்க மக்கள் மட்டும் தான் இருக்கோம்.அது நம்ம கடமையும் கூட....//
கண்டிப்பா டிரை பண்ணுறேன் சார்.... முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி... தொடர்ந்து வர அழைக்கிறேன்..
@498ஏ அப்பாவி said...
வாங்க முருகன் சார்.... உங்களுடைய வாழ்க்கை சம்பவங்களை படித்தேன்... விரைவில் எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டி கொள்கிறேன்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@malar said...
//நல்ல பதிவு....
போலீஸ் என்றால் மாமூலுதான் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா துறையிலும் விதி வில்லக்காக நல்ல மனிதற்களும் இருகிறார்கள்..//
வாங்க வாங்க போன பதிவுக்கு நீங்க வரவில்லை.... நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் அடையாளம் காண்பதுதான் கடினம்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@ஹுஸைனம்மா said...
///ம்ம்... கொஞ்சம் பேராவது இப்படி இருக்கப் போயித்தான், காவல்துறை மேல ஒரு நம்பிக்கை இன்னும் இருக்கு; இவரும் காலப்போக்குல மாறியிருக்கக் கூடாது!!///
உண்மைதான் ... மாறாமல் இருப்பார் என்று நம்புவோம்....வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி ஹுஸைனம்மா
நண்பரே,
நீங்க குறிப்பிட்ட அதே அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் to கனரா பாங்க் சாலையில், நான் இரண்டாண்டுகாலம், பி.பி.ஓ-வில் வேலை சென்றுவந்துக் கொண்டிருந்தேன். ஆஹா, அந்த தெருவில் இப்படி ஒரு ஹீரோவா..! ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில், இந்த நிகழ்வை நேரில் நின்று பார்த்த அனுபவம் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி!
-
DREAMER
அசத்துகிறது உங்கள் எழுத்தும் அவரின் செயலும்... அருமை ஸ்டீபன்... நல்ல எழுத்து நடை
உண்மையிலேயே அந்த உதவி ஆய்வாளர் பாராட்டுதலுக்குஉரியவர்
great salute
Post a Comment