Wednesday, April 28, 2010

பொரித்த‌ மீன்_ச‌வூதி அரேபிய‌ன் ஸ்டைல்

அசைவ‌ம் சாப்பிடுப‌வ‌ர்க‌ளில் மீன் உண‌வு என்றால் பிடிக்காத‌வ‌ர்க‌ள் எவ‌ரும் இருக்க‌ மாட்டார்க‌ள். நானும் அப்ப‌டித்தான். ஆனால் ஒரு சின்ன‌ க‌ண்டிச‌ன் அது வீட்டில் த‌யாரித்த‌தாக‌ இருக்க‌ வேண்டும். ஓட்டலில் மீன் சாப்பாடு என்றால் நான் சாப்பிடுவ‌து இல்லை. அது என்ன‌வோ என‌க்கு பிடிப்ப‌து இல்லை. நாம‌ தான் வீட்டை விட்டு வேலைக்கு என்று வெளியில் வ‌ந்து கிட்ட‌திட்ட‌ ஏழு ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன. ப‌ல‌ ஊர்க‌ளுக்கும் நாடோடியாய் சுற்றியாச்சி. மீன் உண‌வு என்ப‌து என‌க்கு ம‌ற‌ந்த‌ ஒன்றாக‌வே ஆகி விட்ட‌து. இத்த‌னைக்கும் நான் க‌ன்னியாகும‌ரியில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். அங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு மீன் தான் பிர‌தான‌ உண‌வு. எங்க‌ள் வீட்டில் இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.

ச‌ரி ந‌ம்ம‌ இப்ப‌ க‌தைக்கு வ‌ருவோம். க‌ட‌ந்த‌ ஆறு மாத‌ங்க‌ளாய் நான் ச‌வூதி அரேபியாவில் இருக்கிறேன். நாங்க‌ ரூம்லேயே ச‌மைய‌ல் செய்து சாப்பிடுவோம். என்றாவ‌து ச‌மைய‌ல் போர் அடிச்சுதுனா வெளியில் சென்று சாப்பிடுவோம். இப்ப‌டியே ந‌ம்ம‌ பொள‌ப்பு போய்கிட்டு இருக்கும் போது ஆபிசுல‌ ந‌ம்ம‌ கூட‌ வேலை பாக்குற‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் எங்க‌ள் ரூம்முக்கு வ‌ந்தார். அவ‌ரிட‌ம் பேசிகிட்டு இருக்கும் போது மீன் சாப்பாட்டை ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து. அவ‌ரு உட‌னே எங்க‌ளிட‌ம், "நாம‌ இருக்கிற‌ இந்த‌ ஏரியா மீன் சாப்பாட்டிற்கு ரெம்ப‌ பேம‌ஸ்" உங்க‌ளுக்கு தெரியுமா? என்றார்.

நான் அவ‌ரிட‌ம் அப்ப‌டி என்ன‌ ஸ்பெச‌ல் நாங்க‌ள் கேள்வி ப‌ட‌வில்லை என்று சொன்னேன், அப்ப‌ இன்னைக்கு நைட்டு நாம‌ எல்லோரும் மீன் சாப்பிட‌ போகிறோம் என்று அந்த‌ ந‌ண்ப‌ர் கூறினார். ச‌ரி போக‌லாம் என்று சொல்லி விட்டு, அவ‌ரிட‌ம் எப்ப‌டி பிரிப்பேர் ப‌ண்ணுவார்க‌ள் என்று கேட்டேன். வெறும் உப்புதான் போடுவார்க‌ள் வேற‌ எதுவுமே இருக்காது அப்ப‌டியே ப்ரை ப‌ண்ணி த‌ருவார்க‌ள் என்று சொன்னார்.

என‌க்கு அடி வ‌யிறு க‌ல‌ங்க‌ தொட‌ங்கிடுச்சு, ஆஹா வ‌ச‌மா மாட்டிடோம்டா இன்னைக்கு நைட்டு நாம‌ கொலை ப‌ட்டினிதான் என்று. நான் வெளியில் மீன் அதிக‌மாக‌ சாப்பிடாத‌ற்கு கார‌ண‌ம் அத‌ன் பிரிப்ப‌ரேச‌ன் தான், மசாலா எல்லாம் ச‌ரியாக‌ சேர்க்க‌வில்லை என்றாலோ, அல்ல‌து ச‌ரியாக‌ மீனை கிளீன் செய்ய‌வில்லை என்றாலோ, அல்லது மீன் அழுகிவிட்டாலோ அதை எவ‌ரும் சாப்பிட‌ முடியாது. இப்ப‌டி ப‌ல‌ லோக்க‌ள் இருப்ப‌தினால் தான் மீனை அந்த‌ அள‌வு விரும்பி வெளியில் சாப்பிடுவ‌து இல்லை.

வாங்கி த‌ருகிறேன் என்று சொல்லுகிற‌ ந‌ண்ப‌ரிட‌ம் நாங்க‌ள் சாப்பிட‌ வ‌ர‌வில்லை என்று சொல்ல‌ முடியுமா?.. ச‌ரி ச‌மாளிப்போம் என்று ம‌ன‌தில் நினைத்துக் கொண்டு என்னை போல‌வே முழித்து கொண்டிருந்த‌ ந‌ம்ம‌ ரூம் மேட்கிட்ட‌ போய் சைல‌ண்டா "மீன் சாப்பிடுவ‌து போல் சாப்பிட்டு விட்டு அவ‌ரை கொண்டு போய் ரூம்ல‌ விட்டுவிட்டு நாம‌ த‌னியா போய் ந‌ம்ம‌ ம‌லையாளி சேட்டா க‌டையில் புரோட்டா சாப்பிட்டு விட‌லாம்" என்று கூறினேன். ஆஹா அருமையான‌ யோச‌னை என்று அவ‌ரும் த‌லையை ஆட்டினார்.

க‌டைக்கும் போயாச்சி. க‌டைக்கார‌ர் ந‌ம்ம‌ ந‌ண்ப‌ருக்கு பிரெண்டு போல‌.. இவ‌ரை பார்த்த‌வுட‌ன் அவ‌ன் சிரிச்சிட்டே இர‌ண்டு பெரிய‌ முழு மீனை எடுத்துக் கொண்டு வ‌ந்தான். நான் அவ‌ரிட‌ம் என்ன‌ இது இவ்வ‌ள‌வு பெரிய‌ மீனை நாம‌ சாப்பிட‌ முடியுமா? என்று கேட்டேன். கொஞ்ச‌ம் பொறுமையா இருங்க‌ நாம‌ சாப்பிட‌ தானே போகிறோம் என்று ப‌தில் சொன்னார்.

அவ‌ன் எங்க‌ள் க‌ண் முன்னாடியே அழ‌காக‌ கிளீன் செய்து உப்பை ம‌ட்டுமே த‌ட‌வி கொதிக்கும் எண்ணையில் தூக்கி போட்டான். ம‌சாலா என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.

நானும் ரூம் மேட்டும் எதையோ வெறிப்ப‌து போல் நின்று கொண்டிருந்தோம். சிறிது நேர‌த்தில் மீனை எண்ணையில் இருந்து எடுத்து ஒரு பெரிய‌ த‌ட்டில் க‌ப்சா ரைசை வைத்து அத‌ன் மேல் இந்த‌ இர‌ண்டு மீனையும் வைத்து எங்க‌ளிட‌ம் கொண்டு த‌ந்தான்.

அப்ப‌டியே சாப்பிட‌ அம‌ர்ந்தோம். எங்க‌ளை அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் சாப்பிடுங்க‌ என்று மீனை காட்டினார். ச‌ரி என்ற‌ முடிவுட‌ன் மீனை சாப்பிட‌ ஆர‌ம்பித்தோம். ஆர‌ம்பித்த‌து தான் தெரியும்.. அத‌ன் பிற‌கு ஒருவ‌ரும் வாயே தொற‌க்க‌வில்லை. அந்த‌ புல் பிளேட்டும் காலி ப‌ண்ணிட்டுதான் எழுந்தோம். உண்மையில் அவ்வ‌ள‌வு ருசி... அழைத்து சென்ற‌ ந‌ண்ப‌ர் எங்க‌ளை பார்த்து சிரித்து கொண்டே எப்ப‌டி இருந்த‌து என்று கேட்டார். அடுத்த‌து எப்ப நாம‌ வ‌றோம் என்று கேட்டோம்.

அப்புற‌ம் அடிக்க‌டி அங்கு வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌மாயிட்டு.... உண்மையில் சுத்த‌மாக‌ ம‌சாலா எதுவும் இல்லாம‌ல் மீன் சாப்பிடுவ‌து த‌னி ருசிதான். நேற்று போய் சாப்பிட்ட‌ போது எடுத்த‌ போட்டோ‌க்க‌ள்‌ தான் கீழே உள்ள‌வை...

இப்ப தாங்க‌ க‌ட‌லில் இருந்து பிடிச்சிட்டு வ‌ந்த‌து..... அப்ப‌டினு சொல்ல‌ மாட்டேன்... இன்னைக்கு இது மூணுதான் மாட்டுச்சு



நீங்க‌ இருக்கிற‌ அவ‌ச‌ர‌த்தா பார்த்தா அப்ப‌டியே போட்டு ப்ரை ப‌ண்ண‌ வேண்டிய‌து தான்..




அண்ணே அந்த வால் ப‌குதியில் நீங்க‌ கிளீன் ப‌ண்ண‌லை..... விடுங்க‌ தம்பி அடுத்த‌ முறை கிளீன் ப‌ண்ணிறேன்..



த‌ண்ணியை இப்ப‌டி செல‌வு ப‌ண்ணி கிளீன் ப‌ண்ணுறீங்க‌..... உண்மையில் த‌ண்ணி வைச்சுதான் கிளீன் ப‌ண்ணுறீங்க‌ளா... இல்லா பெட்ரோலா? ஏன்னா உங்க‌ ஊர்ல‌ த‌ண்ணியை விட‌ பெட்ரோல் தான் விலை க‌ம்மியா இருக்கு....




ஏண்ணே உப்பு போடுற‌துனால‌ இதை க‌ருவாடுனு சொல்லா மாட்டாங்க‌ இல்லா. ஏன்னா நான் மீனுன்னு சொல்லுவேன்.... எல்லாரும் ந‌ம்ப‌னும்...



அண்ணே எங்க‌ ஊர்ல‌ உள்ள‌ அந்நிய‌ன் ப‌ட‌த்துல‌ கூட‌ இது போல தான் ஒரு சட்டில‌ போட்டு வில்ல‌னை ஹீரோ பொரிப்பாரு.... நீங்க‌ மீனை பொரிக்கிறீங்க‌...



எப்ப‌டி அண்ணே உப்பு பாப்பீங்க‌.... அப்ப‌டியே கிள்ளி வாயில‌ போட்டு பாருங்க‌.... நாக்கு வெந்தா நான் பொறுப்பில்லை...



ஆஹா அடுகிட்டாங்க‌ ...... இனி பேச்சு கிடையாது வீச்சு தான்..... இதை எத்த‌னை பேர் சாப்பிட்டோம் என்று க‌ரெக்டா சொன்னால் பிஷ்ப்பிரை ப‌ற்றிய‌ முழு நீள‌ வீடியோ ப‌ட‌ம் மெயிலில் அனுப்பி வைக்க‌ப்ப‌டும்....








ஒரு விள‌ம்ப‌ர‌ம்..... இது நான் தானுங்கோ.....




குறிப்பு: மீனின் உண்மையான் டேஸ்டை இதில் தான் பார்க்க‌ முடிந்த‌து. கார‌ண‌ம் ந‌ம‌து ஊர்க‌ளில் மசாலா சேர்ப்ப‌தால் அத‌ன் டேஸ்ட் மாறி விடுகிற‌து. பொரித்து முடித்த‌ பின்பு சிறிது பெப்ப‌ர் சேர்கிறார்க‌ள். அவ்வ‌ள‌வுதான். நான் இருக்கும் இட‌த்தில் தான் செங்க‌ட‌ல்(RedSea) இருக்கின்ற‌து. மேலே பார்த்த‌ மீன்க‌ள் கூட‌ அதில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌து தான். ச‌வுதியை த‌விர‌ வேறு இங்கும் இந்த‌ மாதிரி மீன் பிரிப்ப‌ரேச‌ன் இல்லை என்று சொல்லுகிறார்க‌ள்.
.
.
.

37 comments:

vanathy said...

நாடோடி, நல்ல சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றீர்கள். உங்கள் பதிவைப் பார்த்ததும் மீன் சாப்பிட்ட திருப்தி. ( அது சரி அந்த 5 தலை பாம்பு எங்கே? நடுங்கிக் கொண்டே வந்தேன்.)

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. வெஜிடேரியன் எனக்கே மீன் சாப்பிடற ஆசை வந்திரும் போல இருக்கே?

பிக்சர் எல்லாமே சூப்பர்.. உங்க விளக்கம் அதை விட சூப்பர்..

அப்புறம் உங்க கேள்விக்கு பதில்:

அந்த மீனை.. மூணு பேர் சாப்பிடிருப்பீங்க.. சரியா??

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ட‌த்துங்க‌.....

Chitra said...

மீன் மீனுதான்....... படங்களும் குறிப்புகளும் கமெண்ட்ஸ்ம் அருமை. இங்கும் வெறும் உப்பு மிளகு போட்டு பொரித்து (or grilled) தரும் restaurants உண்டு.
பி.கு. நல்லவேளை அந்த போட்டோவில் இருப்பது நீங்கள் என்று சொல்லிட்டீங்க. இல்லை, சுறா விளம்பர படமோ என்று நினைத்து இருப்பேன்.. ஹா,ஹா,ஹா,ஹா....

கண்ணா.. said...

தல முதல்ல புரோபைல் போட்டோவ மாத்து..

மீனோட இருக்கற போட்டோவை விட அதிக வயசா காட்டுது.. அதுக்கு. இந்த மீனவன் போட்டோவை கிராப் பண்ணி போடலாம் தல.

இன்னைக்கு நீங்களும் சமையல் குறிப்புல இறங்கியாச்சா...ரைட்டு நடத்துங்க

:))

ஹுஸைனம்மா said...

//இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.//

அது என்னங்க அப்படி ஒரு மீன்? மீன் விலை ஏறிப்போச்சுன்னு புலம்புறாங்க, வஞ்சிரம் (நெய்மீன்) ஒரு கிலோ 300 ரூபால்லாம் ஆகிடுச்சுன்னு!! நீங்க இருவது ரூவாய்க்கு மீனுங்கிறீங்க??

ஹுஸைனம்மா said...

/ந‌ம‌து ஊர்க‌ளில் மசாலா சேர்ப்ப‌தால் அத‌ன் டேஸ்ட் மாறி விடுகிற‌து//

உண்மைதான்!!

ஹுஸைனம்மா said...

// உப்பு போடுற‌துனால‌ இதை க‌ருவாடுனு//

அதுவும் தனி டேஸ்டுதான், கிடைக்க மாட்டேங்குது!!

malar said...

'''இத்த‌னைக்கும் நான் க‌ன்னியாகும‌ரியில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன். அங்குள்ள‌வ‌ர்க‌ளுக்கு மீன் தான் பிர‌தான‌ உண‌வு. எங்க‌ள் வீட்டில் இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.''''

க‌ன்னியாகும‌ரி எங்க இருக்கு வில்லுக்குறி எங்க இருக்கு?
என்ன மொட்ட தலைக்கும் மொழங்காலுகும் முடுசா?
20 மீன் எல்லாம் அந்த காலாம் இப்போ 100 ரூ முழுசா கொடுத்தாலும்6துண்டு மீன் தான் த்ருவாங்க....ஒரு நேரம் சாப்பிட கூட பத்தாது....

ஜெய்லானி said...

அஞ்சி பாட்டல் இருக்கு சாப்பிட்டது ரெண்டு பேரு மத்த ரெண்டு பேரு கெஸ்டு பக்கத்து ரூமா இருக்கும்.ஓகே!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்ப எங்களுக்கெல்லாம் கிடையாதா.. வாவ் இதுபுதுவித அருமையான செய்முறையா இருக்கே.. நாங்களும் ஒரு தடவை ட்ரை பண்ணிறவேண்டியதுதான். நீங்க வேற நாக்குல எச்சிலை வரவச்சிட்டீங்க..

ஸ்டீபன் ரொம்ப அருமையான போட்டோக்கள். நீங்களும் ஆள் சூப்பரா கலக்கலா இருக்கீங்க..

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...

//இன்றைக்கும் இருப‌து ரூபாய்க்கு மீன் வாங்கினால் நான்கு பேர் இர‌ண்டு நேர‌ம் தாராள‌மாக‌ சாப்பிடும் அள‌வு கிடைக்கும்.//

அது என்னங்க அப்படி ஒரு மீன்? மீன் விலை ஏறிப்போச்சுன்னு புலம்புறாங்க, வஞ்சிரம் (நெய்மீன்) ஒரு கிலோ 300 ரூபால்லாம் ஆகிடுச்சுன்னு!! நீங்க இருவது ரூவாய்க்கு மீனுங்கிறீங்க??////

நெத்த‌லி, சாளை, வாளை, ம‌த்தி இந்த‌ மாதிரி சின்ன‌ மீன்... வ‌ஞ்ச‌ர‌ம் மீனு எல்லாம் கிர‌ம‌த்துல‌ யாருக்கும் கிடைக்கிற‌து இல்லை.... அப்ப‌டி கிடைத்தாலும் அவ்வ‌ள‌வு விலை கொடுத்து வாங்குவ‌து இல்லை..

நாடோடி said...

@malar said...

//க‌ன்னியாகும‌ரி எங்க இருக்கு வில்லுக்குறி எங்க இருக்கு?
என்ன மொட்ட தலைக்கும் மொழங்காலுகும் முடுசா?
20 மீன் எல்லாம் அந்த காலாம் இப்போ 100 ரூ முழுசா கொடுத்தாலும்6துண்டு மீன் தான் த்ருவாங்க....ஒரு நேரம் சாப்பிட கூட பத்தாது....///

நான் மொட்டையா வில்லுக்குறினு சொன்னா யாருக்கும் தெரியாதுனு தான் நினைச்சேன்...ஆமா நான் க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் தானே.... எங்க‌ள் ஊரில் வ‌ரும் மீன்க‌ள் எல்லாம் க‌ன்னியாகும‌ரி கம‌ற்றும் குள‌ச்ச‌ல், முட்ட‌ம் போன்ற க‌ட‌ல்க‌ளில் இருந்து தான்..

ஏங்க‌ நான் சின்ன‌ மீன்க‌ளை சொன்னேங்க‌.... வ‌ஞ்ச‌ர‌ம் , இறால் போன்ற‌ காஸ்டிலியான‌ மீன்க‌ளை பிடிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ சாப்பிடுவ‌து இல்லை... ஏன்னா ந‌ல்ல‌ விலை கிடைக்கின்ற‌து என்று விற்று விடுகிறார்க‌ள்..

செ.சரவணக்குமார் said...

ஹலோ பாஸ்ஸு, நேத்து ஃபோன்ல அரைமணி நேரம் பேசுனீங்களே, மீன் சாப்புட்ட மேட்டர மட்டும் சொல்லவேயில்ல. ஃபோன்ல நீங்க சொன்ன மாதிரியே ஆள் பாக்குறதுக்கு ஹீரோ மாதிரிதான் இருக்குறீங்க.

சவுதியில் தமாம், கோபர் போன்ற இடங்களில் இதுபோன்ற மீன் உணவுகள் கிடைப்பதில்லை. இந்த மீன் சாப்பிடுவதற்காவது ராபிக் வரலாமா என்று யோசிக்கிறேன்.

Asiya Omar said...

சமையல் பற்றி ப்ளாக் என்றால் என் விசிட் நிச்சயம் இருக்கும்.,அதுவும் மீன் என்றால் கருத்து கேட்கவா வேண்டும்,அதுவும் பெரிய மீனாக இருக்கே,பெரிய கமெண்ட் சொல்லனும்,இங்கு நாங்கள் அடிக்கடி போகும் zahrat al arab restaurent - டில் பொரித்து தராங்க,மீடியம் சைஸ் DHS 15,நல்ல இருக்கும்.அடுக்கிட்டீங்க,அள்ளிட்டு போலாமா?

Anonymous said...

துபாயில ஜுமைரா பீச் ஏரியாவிலும் இப்படி மீன் கிடைக்குதே! நாங்களும் சாப்பிட்டோமே! (கூடவே இறால் வறுவலும்)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஏங்க‌ நான் சின்ன‌ மீன்க‌ளை சொன்னேங்க‌.... வ‌ஞ்ச‌ர‌ம் , இறால் போன்ற‌ காஸ்டிலியான‌ மீன்க‌ளை பிடிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ சாப்பிடுவ‌து இல்லை... ஏன்னா ந‌ல்ல‌ விலை கிடைக்கின்ற‌து என்று விற்று விடுகிறார்க‌ள்..//

இந்த பின்னூட்டம் பதிவை விட சூப்பர். நானும் அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு இருவது சாளை மீன் வாங்கி இருக்கேன்.
மீனும் அதை தூக்கி பிடிச்சிட்டு இருக்கிற ஆளும் சூப்பர்.

ராஜ நடராஜன் said...

பில் எவ்வளவு ஆச்சு:)

அப்படியே அந்த மீன் பேரென்னன்னு மீன்கிட்ட கேட்டு சொல்லிடுங்க.

Thamiz Priyan said...

மீன் செம டேஸ்ட்டா இருக்கும்... ஒரு காலத்தில் அனுபவிச்சோம்...:-)
ராபிக்கில் காதல் கறுப்பி தமிழனுடன் மீன் சாப்பிட்டதை மறக்கவே முடியாது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இது மீன் கதை; ஆனால்,
வீண் கதை அல்ல.
அந்த ஃபோட்டோவுல யாரு?
நீ(ங்கள்) அழகாயிருக்கிறாய்;
பயமாய் இல்லை.

jasmin said...

நிங்கள் மட்டும் சாபிட்டால் போதுமா அந்தக்கடை சவூதியில் என்தைடத்துல இருக்கிண்டு சொல்லக்கூடாதா? நானும் சவூதியில் தான் இருக்கிறன் சாப்பிட ஆசையா உள்ளது சொல்லுகப்பா/

சிநேகிதன் அக்பர் said...

சாரி பார்த லேட்.

மீனு போச்சே.

தல படங்கள் சூப்பர். நாளுக்கு நாள் உங்க எழுத்து ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.

எனக்கு இப்பவே மீனு சாப்பிடனும் போல இருக்கு.

Ahamed irshad said...

மீனை இப்பவே சாப்பிடனும்போல இருக்கு...

ஆஹா இது நம்ம ஸ்டீபனா, கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு கடற்கரையோரமா போஸ் கொடுப்பீங்கன்னுப் பார்த்தா இப்படி வித்தியாசமான ஸ்டில்... ஒகே ஒகே...

தமிழ் உதயம் said...

சாப்பிட்ட திருப்தி.

சத்ரியன் said...

மீன் உணவு நான் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். இப்பிடி படத்தை வேற போட்டு வாயில எச்சில் ஊற வெச்சிட்டியே ஸ்டீபன்.

நாடோடி said...

@vanathy said...
//நாடோடி, நல்ல சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றீர்கள். உங்கள் பதிவைப் பார்த்ததும் மீன் சாப்பிட்ட திருப்தி. ( அது சரி அந்த 5 தலை பாம்பு எங்கே? நடுங்கிக் கொண்டே வந்தேன்.)//

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்... போன‌ ப‌திவு ப‌ட‌த்தைதான் நீங்க பார்க்க‌ மாட்டேனு சொல்லிட்டீங்க‌.. அதுக்குதான் இந்த‌ மீன் ப‌ட‌ம்..

@சைவகொத்துப்பரோட்டா said...
//ரைட்டு :))//

ஓ... நீங்க‌ சைவ‌மா?.. நான் ம‌ற‌ந்துட்டேன்‌.. அப்ப‌ ரைட்டு.

@Ananthi said...
//ஆஹா.. வெஜிடேரியன் எனக்கே மீன் சாப்பிடற ஆசை வந்திரும் போல இருக்கே?

பிக்சர் எல்லாமே சூப்பர்.. உங்க விளக்கம் அதை விட சூப்பர்..

அப்புறம் உங்க கேள்விக்கு பதில்:

அந்த மீனை.. மூணு பேர் சாப்பிடிருப்பீங்க.. சரியா??///

அதுனால‌ தான் பார்ச‌ல் அனுப்புற‌ லிஸ்ட்ல‌ இருந்து உங்க‌ பெய‌ரை எடுத்தேன்... ச‌ரி இன்னைக்கு அனுப்பி விடுகிறேன்..

ஐந்து பாட்டில் இருக்கும் போதே நீங்க‌ நினைக்க வேண்டாம்..

@க‌ரிச‌ல்கார‌ன் said...
///ந‌ட‌த்துங்க‌.....//

சும்மா த‌மாசு.....வாங்க‌ க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@Chitra said...
//மீன் மீனுதான்....... படங்களும் குறிப்புகளும் கமெண்ட்ஸ்ம் அருமை. இங்கும் வெறும் உப்பு மிளகு போட்டு பொரித்து (or grilled) தரும் restaurants உண்டு.
பி.கு. நல்லவேளை அந்த போட்டோவில் இருப்பது நீங்கள் என்று சொல்லிட்டீங்க. இல்லை, சுறா விளம்பர படமோ என்று நினைத்து இருப்பேன்.. ஹா,ஹா,ஹா,ஹா....///

Grilled Fish -யை விட‌ ந‌ல்லா இருக்கும் சித்ரா மேட‌ம்... அப்புற‌ம் பார்ச‌ல் க‌ரெக்டா வ‌ந்து சேர்ந்த‌து இல்லையா?... சாப்பிட்டு அடுத்த‌ ப‌திவுல‌ சொல்லுங்க‌... //சுறா ப‌ட‌ம்// அப்ப‌டினா.. சுறா மீன் தெரியும்.. இது என்ன‌ புதுசா இருக்கு.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

@கண்ணா.. said...
//தல முதல்ல புரோபைல் போட்டோவ மாத்து..

மீனோட இருக்கற போட்டோவை விட அதிக வயசா காட்டுது.. அதுக்கு. இந்த மீனவன் போட்டோவை கிராப் பண்ணி போடலாம் தல.

இன்னைக்கு நீங்களும் சமையல் குறிப்புல இறங்கியாச்சா...ரைட்டு நடத்துங்க

:))///

இதே தான் த‌ல‌ எங்க‌ அக்காவும் சொல்லிட்டு இருக்காங்க‌... மாத்திடுவோம் த‌ல‌..

@ஹுஸைனம்மா said...
// உப்பு போடுற‌துனால‌ இதை க‌ருவாடுனு//

அதுவும் தனி டேஸ்டுதான், கிடைக்க மாட்டேங்குது!!///

இங்க‌ பாக்கெட்டுல‌ கிடைக்குது இல்லையா?... ஆனா ந‌ம்ம‌ ஊர் போல‌ ந‌ல்லா இருக்குமானு தெரியாது..வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@malar said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@ஜெய்லானி said...
//அஞ்சி பாட்டல் இருக்கு சாப்பிட்டது ரெண்டு பேரு மத்த ரெண்டு பேரு கெஸ்டு பக்கத்து ரூமா இருக்கும்.ஓகே!!!///
அஞ்சு பேர்தான் சாப்பிட்டோம்.... இர‌ன்டு பேர் எல்லாம் அவ்வ‌ள‌வு மீனையும் சாப்பிட‌முடியுமா?..வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ஜெய்லானி

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அப்ப எங்களுக்கெல்லாம் கிடையாதா.. வாவ் இதுபுதுவித அருமையான செய்முறையா இருக்கே.. நாங்களும் ஒரு தடவை ட்ரை பண்ணிறவேண்டியதுதான். நீங்க வேற நாக்குல எச்சிலை வரவச்சிட்டீங்க..

ஸ்டீபன் ரொம்ப அருமையான போட்டோக்கள். நீங்களும் ஆள் சூப்பரா கலக்கலா இருக்கீங்க..//

ஒருமுறை இந்த‌ ப‌க்க‌ம் வாங்க‌ ஸ்டார்ஜ‌ன்...சாப்பிட்டு விடுவோம்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@செ.சரவணக்குமார் said...
//ஹலோ பாஸ்ஸு, நேத்து ஃபோன்ல அரைமணி நேரம் பேசுனீங்களே, மீன் சாப்புட்ட மேட்டர மட்டும் சொல்லவேயில்ல. ஃபோன்ல நீங்க சொன்ன மாதிரியே ஆள் பாக்குறதுக்கு ஹீரோ மாதிரிதான் இருக்குறீங்க.

சவுதியில் தமாம், கோபர் போன்ற இடங்களில் இதுபோன்ற மீன் உணவுகள் கிடைப்பதில்லை. இந்த மீன் சாப்பிடுவதற்காவது ராபிக் வரலாமா என்று யோசிக்கிறேன்.//

இது ராத்திரி ந‌ட‌ந்த்து ச‌ர‌வ‌ண‌ன் சார்... தீடிர் பிளான்.. அப்ப என‌க்கு சான்ஸ் இருக்கு... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@asiya omar said...
//சமையல் பற்றி ப்ளாக் என்றால் என் விசிட் நிச்சயம் இருக்கும்.,அதுவும் மீன் என்றால் கருத்து கேட்கவா வேண்டும்,அதுவும் பெரிய மீனாக இருக்கே,பெரிய கமெண்ட் சொல்லனும்,இங்கு நாங்கள் அடிக்கடி போகும் zahrat al arab restaurent - டில் பொரித்து தராங்க,மீடியம் சைஸ் DHS 15,நல்ல இருக்கும்.அடுக்கிட்டீங்க,அள்ளிட்டு போலாமா?//

உங்க‌ளுடைய‌ அனுப‌வ‌ ப‌கிர்விற்கும் ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்... காசா? ப‌ண‌மா? அள்ளிட்டு போங்க‌.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@நாஸியா said...
//துபாயில ஜுமைரா பீச் ஏரியாவிலும் இப்படி மீன் கிடைக்குதே! நாங்களும் சாப்பிட்டோமே! (கூடவே இறால் வறுவலும்)///

அப்ப‌டியா.... ஆஹா நான் என்ன‌வோ இங்க‌தான் கிடைக்குதுனு நெனைச்சேன்... இங்க‌ உள்ள‌வ‌ங்க‌ளும் அப்ப‌டித்தான் சொல்லுறாங்க‌... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றிங்க‌..

@நாய்க்குட்டி மனசு said...
ஏங்க‌ நான் சின்ன‌ மீன்க‌ளை சொன்னேங்க‌.... வ‌ஞ்ச‌ர‌ம் , இறால் போன்ற‌ காஸ்டிலியான‌ மீன்க‌ளை பிடிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ சாப்பிடுவ‌து இல்லை... ஏன்னா ந‌ல்ல‌ விலை கிடைக்கின்ற‌து என்று விற்று விடுகிறார்க‌ள்..//

இந்த பின்னூட்டம் பதிவை விட சூப்பர். நானும் அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு இருவது சாளை மீன் வாங்கி இருக்கேன்.
மீனும் அதை தூக்கி பிடிச்சிட்டு இருக்கிற ஆளும் சூப்பர்.//

நீங்க‌ சொன்ன‌தால‌ அதைப் ப‌ற்றியும் சீக்க‌ர‌ம் ஒரு ப‌திவு போடுறேன்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

நாடோடி said...

@ராஜ நடராஜன் said...
//பில் எவ்வளவு ஆச்சு:)

அப்படியே அந்த மீன் பேரென்னன்னு மீன்கிட்ட கேட்டு சொல்லிடுங்க.//

அந்த‌ க‌தையை ஏன் கேக்குறீங்க‌... கொஞ்ச‌ம் காஸ்ட்லிதான்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ந‌ட‌ராஜ‌ன் சார்..

@தமிழ் பிரியன் said...
மீன் செம டேஸ்ட்டா இருக்கும்... ஒரு காலத்தில் அனுபவிச்சோம்...:-)
ராபிக்கில் காதல் கறுப்பி தமிழனுடன் மீன் சாப்பிட்டதை மறக்கவே முடியாது.//

அப்ப‌டியா? ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்.. நானும் ராபிக்கில் தான் இருக்கிறேன்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@NIZAMUDEEN said...
///இது மீன் கதை; ஆனால்,
வீண் கதை அல்ல.
அந்த ஃபோட்டோவுல யாரு?
நீ(ங்கள்) அழகாயிருக்கிறாய்;
பயமாய் இல்லை.//

ஆஹா கவிதையே எழுதிட்டீங்க‌ போங்க‌.. சூப்ப‌ர்... வ‌ருகைக்கும் க‌விதைக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@jasmin said...
நிங்கள் மட்டும் சாபிட்டால் போதுமா அந்தக்கடை சவூதியில் என்தைடத்துல இருக்கிண்டு சொல்லக்கூடாதா? நானும் சவூதியில் தான் இருக்கிறன் சாப்பிட ஆசையா உள்ளது சொல்லுகப்பா///

ஜித்தாவில் உள்ள‌ ராபிக் என்ற‌ இட‌த்தில் இது அதிக‌ம் கிடைக்கிற‌து... தூவல் என்று ஒரு இட‌த்திலும் கிடைக்கும்... நீங்க‌ள் ச‌வூதியில் எங்கு இருக்கிறீர்க‌ள்?.. வ‌ருகைக்கு ந‌ன்றி..

@அக்பர் said...
சாரி பார்த லேட்.

மீனு போச்சே.

தல படங்கள் சூப்பர். நாளுக்கு நாள் உங்க எழுத்து ரொம்ப விறுவிறுப்பா இருக்கு.

எனக்கு இப்பவே மீனு சாப்பிடனும் போல இருக்கு.//
சாப்பிடுங்க‌ த‌ல‌ சூப்ப‌ரா இருக்கும்.....

@அஹமது இர்ஷாத் said...
மீனை இப்பவே சாப்பிடனும்போல இருக்கு...

ஆஹா இது நம்ம ஸ்டீபனா, கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு கடற்கரையோரமா போஸ் கொடுப்பீங்கன்னுப் பார்த்தா இப்படி வித்தியாசமான ஸ்டில்... ஒகே ஒகே...//

சாப்பிடுங்க‌ அஹமது‌ சூப்ப‌ரா இருக்கும்.....

ஒரு சின்ன‌ விள‌ம்ப‌ர‌ம் தான் ஹி..ஹி..

@தமிழ் உதயம் said...
//சாப்பிட்ட திருப்தி.//

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் த‌மிழ் சார்...

@’மனவிழி’சத்ரியன் said...
///மீன் உணவு நான் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன். இப்பிடி படத்தை வேற போட்டு வாயில எச்சில் ஊற வெச்சிட்டியே ஸ்டீபன்.//

ஹி...ஹி....ஏதோ என்னால‌ முடிஞ்ச‌து... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

ரோஸ்விக் said...

எல்லா மீனுமே இதே ஸ்டெயிலுல பொரிச்சு சாப்பிட்டா நல்லா இருக்குமா ஸ்டீபன்?? எனக்கும் உங்களை மாதிரி மீன் சாப்பிட நிறைய கண்டிசன் இருக்கும்... கொஞ்சம் கூட கவுச்சி வாடை அடிக்கக் கூடாது...

ரௌத்ரன் said...

அடடா..இவ்ளோ நாள் தெரியாம போச்சே.ராபிக் தானே தல...ஒரு நாளைக்கு வந்துடுவோம் :)

0535073184

நாடோடி said...

@ரோஸ்விக் said...
///எல்லா மீனுமே இதே ஸ்டெயிலுல பொரிச்சு சாப்பிட்டா நல்லா இருக்குமா ஸ்டீபன்?? எனக்கும் உங்களை மாதிரி மீன் சாப்பிட நிறைய கண்டிசன் இருக்கும்... கொஞ்சம் கூட கவுச்சி வாடை அடிக்கக் கூடாது...//

எல்லா வ‌கையான‌ மீன்க‌ளையும் இப்ப‌டித்தான் பொரிக்கிறார்க‌ள் ரோஸ்விக்... சாப்பிடுவ‌த‌ற்கு த‌னி டேஸ்டா இருக்கு... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

DREAMER said...

மீன் எனக்கும் ரொம்ப ஃபேவரைட் டிஷ்... ப்ரிப்பாரேஷன் பார்த்தும், சாப்பிடணும்போல இருக்கு..!

-
DREAMER

malar said...
This comment has been removed by the author.
எம் அப்துல் காதர் said...

தல மீனெல்லாம் போட்டு அசத்துறீங்களே சூப்பரா இருக்குமே.! சவுதியில் எங்கே இருக்கீங்க? தம்மாம் பக்கமா, அப்படி இருந்தால் நானும் கூட்டு சேர்ந்துக்கிறேன்.

Ramesh said...

இங்க வந்து ஓட்டல் ஆரம்பிக்கலாமில்ல. நாங்கெல்லாம் இப்படி எப்ப சாப்பிடறது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதே மீன் இங்கே தாய்லாந்திலும்.

க்ரில் செய்வார்கள் . அல்லது ஸ்டீம் ..

இரண்டும் பல வித சாஸ் தொட்டு சாப்பிடணும்..

Related Posts with Thumbnails