ஒரு ஆளு டாக்டரிடன் போனான்;
ஆளு: டாக்டர் நான் ரெம்ப நாள் வாழனும் அதுக்கு நான் என்ன பண்ணனும்?
டாக்டர்: அப்ப நீங்க உடனே கல்யாணம் பண்ணுங்க.
ஆளு: அது எப்படி எனக்கு உதவியா இருக்கும் டாக்டர்?
டாக்டர்: ரெம்ப நாள் வாழனும் என்கிற ஆசை உங்களுக்கு வரவே வராது.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
கேள்வி: வாழும் நாட்கள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறதே எப்படி?
பதில்: கடையில் பொருட்கள் வாங்குபவர்களை விட, அதற்கு பணம் செலுத்துபவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் வரும்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
முழுமைக்கும், முடிவதற்கும் என்ன வித்தியாசம்?
உனக்கு நல்ல மனைவி அமைந்தால் அது முழுமை, இல்லையென்றால் உன் கதை முடிந்துவிடும்.
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்;
ஒருவன்: நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் மச்சி. ஏன்னா வெளியில சாப்பிடுறது, துணியை சலவை செய்யுறது, துணியை அயன் பண்ணுறது, வீட்டை கிளீன் பண்ணுறது என்று ஒரே பிரச்சனையா இருக்குடா!!!!!
இன்னொருவன்: நான் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் மச்சி. ஏன்னா நீ மேல சொன்ன எல்லாம் எனக்கு டபுளா செய்ய வேண்டியிருக்குடா!!!!!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
ஒரு ஆணின் படிநிலைகள்
நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு: சூப்பர்மேன்
திருமணம் முடிந்த பின்பு: ஜென்டில்மேன்
பத்துவருடம் கழித்து: வாட்ச்மேன்
இருவதுவருடம் கழித்து: டாபர்மேன்
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
அப்படியே இதையும் பார்த்திட்டு போங்க...
குறிப்பு: இவை அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது. மண்டபத்தில் யாரோ எழுதி எனக்கு மெயில் அனுப்பியவை.
.
.
.
Friday, July 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
படி நிலைகள் பிரமாதம்.:)) எல்லாம் நல்லாயிருக்கு.
ஏதோ ஆண்கள் எல்லாம் அப்பாவிகள் போல ஜோக்குகள். பெண்கள் எல்லோரும் 4 நாள் ஸ்டிரைக் பண்ணுங்கப்பா...( சும்மா தமாஷ் ).
நல்லா இருக்கு, அண்ணாச்சி.
மண்டபத்தில் யாரோ எழுதி எனக்கு மெயில் அனுப்பியவை.///
யார் அனுப்பி இருந்தா என்ன சிரிக்கலாமே.
இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...
@வானம்பாடிகள் said...
//படி நிலைகள் பிரமாதம்.:)) எல்லாம் நல்லாயிருக்கு.//
வாங்க பாலா சார்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@vanathy said...
//ஏதோ ஆண்கள் எல்லாம் அப்பாவிகள் போல ஜோக்குகள். பெண்கள் எல்லோரும் 4 நாள் ஸ்டிரைக் பண்ணுங்கப்பா...( சும்மா தமாஷ் ).
நல்லா இருக்கு, அண்ணாச்சி.//
வாங்க வானதி சகோ... நீங்க ஏன் இதுக்கு ஒரு எதிர்பதிவு போடகூடாது..ஹி..ஹி.. அப்படி போட்டீங்கனா சீக்கிரம் நீங்களும் நானும் பிரபலம் ஆகிடலாம்...
@தமிழ் உதயம் said...
மண்டபத்தில் யாரோ எழுதி எனக்கு மெயில் அனுப்பியவை.///
யார் அனுப்பி இருந்தா என்ன சிரிக்கலாமே.//
வாங்க தமிழ் சார்... கண்டிப்பா நல்லா சிரிக்கலாம்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@நாஞ்சில் பிரதாப் said...
//இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
இதுக்கெல்லாம் அசந்திடுவோமா தல.... களத்தில இறங்கிட வேண்டியது தான்...(எதுக்கும் நீங்க முதல்ல களத்துல குதிச்சிடுங்க),,, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி பிரதாப்.
ஹா ஹா..... கலக்கல் ஸ்டீபன்.
அப்பச்சரி கல்யாணத்துக்கு ரெடியாகிட்டீங்க..
//இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
ரைட்டு..
படித்தேன் ரசித்தேன் அருமை.
நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...
....... அப்படித்தான்...... ஜமாயுங்க....
இதை பாத்தா சிரிப்பா வருது...?
எப்பவும் அடுத்தவங்க கஷ்டம் நமக்கு சிரிப்புதான் ....
அவ்வ்வ்வ்வ்
//ஒரு ஆணின் படிநிலைகள்
நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு: சூப்பர்மேன்
திருமணம் முடிந்த பின்பு: ஜென்டில்மேன்
பத்துவருடம் கழித்து: வாட்ச்மேன்
இருவதுவருடம் கழித்து: டாபர்மேன்//
ஹா..ஹா..ஹா.. நல்லாருக்கு.
நேற்று, இன்று, நாளை நானும் பார்த்திருக்கிறேன்.
//நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
இப்பிடித்தான்யா நானும் எறங்கிப் பாத்தேன்..
good jokes
/// கடையில் பொருட்கள் வாங்குபவர்களை விட, அதற்கு பணம் செலுத்துபவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் வரும்.//
ஹா ஹா.. சூப்பர்.. வரி :-))
///சூப்பர்மேன், ஜென்டில்மேன், வாட்ச்மேன், டாபர்மேன்.........//
சிரிச்சு முடியல... :D :D :D
படங்கள் எல்லாமே சூப்பர்.. மண்டபத்துல எழுதி வாங்கினாலும், சூப்பர் தான்.. :-)))
ஹா....ஹா.........நல்லாருக்கு ஸ்டீபன்
ரசித்தேன்
@ நாஞ்சிலு
//இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
யோவ் கல்யாணம் ஆனா அங்கிளா? ஸ்டீபன் தல் கிட்ட சொல்லிவைங்க.
ஸ்டீபன் நீங்க சங்கம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன். :)
காமெடி அனைத்தும் சூப்பர்.
இது மாதிரி பெண்கள் பிரச்சனைகளையும் யாராவது பதிவு போட்டால் நல்லா இருக்கும்.
@செ.சரவணக்குமார் said...
ஹா ஹா..... கலக்கல் ஸ்டீபன்.
அப்பச்சரி கல்யாணத்துக்கு ரெடியாகிட்டீங்க..
//இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
ரைட்டு..//
வாங்க சரவணன் அண்ணா.... களத்துல இறங்குறதுல ஒரு முடிவோட தான் இருக்கிறோம்..
@இளம் தூயவன் said...
//படித்தேன் ரசித்தேன் அருமை.//
வாங்க நண்பரே... ரசிச்சீங்களா ரெம்ப நன்றி.
@Chitra said...
நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...
....... அப்படித்தான்...... ஜமாயுங்க....///
வாங்க சித்ரா அக்கா... உங்க பின்னூட்டத்தில் உள்குத்து இருக்கும் போல(வந்து சீக்கிரம் மாட்டுங்கனு சொல்லுறது போல இருக்கு) ... ஆன அதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்..
@ஜெய்லானி said...
இதை பாத்தா சிரிப்பா வருது...?
எப்பவும் அடுத்தவங்க கஷ்டம் நமக்கு சிரிப்புதான் ....
அவ்வ்வ்வ்வ்///
வாங்க ஜெய்லானி...இங்க சிரிச்சதோட போகட்டும் ... வீட்ல போய் சொல்லி சிரிச்சிடாதீங்க... அப்புறம் பூரிகட்டை பேசினா நான் பொறுப்பில்லை..
@அமைதிச்சாரல் said...
//ஒரு ஆணின் படிநிலைகள்
நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு: சூப்பர்மேன்
திருமணம் முடிந்த பின்பு: ஜென்டில்மேன்
பத்துவருடம் கழித்து: வாட்ச்மேன்
இருவதுவருடம் கழித்து: டாபர்மேன்//
ஹா..ஹா..ஹா.. நல்லாருக்கு.
நேற்று, இன்று, நாளை நானும் பார்த்திருக்கிறேன்.///
வாங்க சகோ.... வந்து ரசித்ததற்கு ரெம்ப நன்றி.
@முகிலன் said...
//நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம் நம்பி பயந்துடாதுங்க...
இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
இப்பிடித்தான்யா நானும் எறங்கிப் பாத்தேன்..//
வாங்க முகிலன் அண்ணா..... இறங்கி பாத்தீங்க ஓகே!!!. என்ன ஆச்சினு சொல்லாம போனா எப்படி?... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@கலாநேசன் said...
good jokes//
வாங்க கலாநேசன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@Ananthi said...
/// கடையில் பொருட்கள் வாங்குபவர்களை விட, அதற்கு பணம் செலுத்துபவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் வரும்.//
ஹா ஹா.. சூப்பர்.. வரி :-))
///சூப்பர்மேன், ஜென்டில்மேன், வாட்ச்மேன், டாபர்மேன்.........//
சிரிச்சு முடியல... :D :D :D//
வாங்க ஆனந்தி சகோ... நல்லா சிரிச்சீங்களா!!!!.. வருக்கைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@Ananthi said...
படங்கள் எல்லாமே சூப்பர்.. மண்டபத்துல எழுதி வாங்கினாலும், சூப்பர் தான்.. :-)))//
ரெம்ப நன்றி சகோ..
@r.v.saravanan said...
//ஹா....ஹா.........நல்லாருக்கு ஸ்டீபன்//
வாங்க சரவணன்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@ஆடுமாடு said...
//ரசித்தேன்//
வாங்க ஆடுமாடு சார்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@அக்பர் said...
@ நாஞ்சிலு
//இந்த கல்யாணம் ஆன அங்கிள்ங்க நம்ளமாதிரி ஆளுங்களை பயமுறுத்த எழுதுனது... பயந்துறாதீங்க...என்னதான் நடக்கும் பார்த்துடுவோம்...//
யோவ் கல்யாணம் ஆனா அங்கிளா? ஸ்டீபன் தல் கிட்ட சொல்லிவைங்க.
ஸ்டீபன் நீங்க சங்கம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன். :)
காமெடி அனைத்தும் சூப்பர்.
இது மாதிரி பெண்கள் பிரச்சனைகளையும் யாராவது பதிவு போட்டால் நல்லா இருக்கும்.//
//யோவ் கல்யாணம் ஆனா அங்கிளா? ஸ்டீபன் தல் கிட்ட சொல்லிவைங்க.//
உண்மை சில நேரம் அடுத்தவங்க வாயில இருந்து கேட்கும் போது கஷ்டமாதான் இருக்கும்... விடுங்க தல.. பி ஹாப்பி.
//ஸ்டீபன் நீங்க சங்கம் ஆரம்பிக்கும் போதே நினைச்சேன். :)//
இப்படியே போனா சங்கம் களை கட்டிரும்னு நெனைக்கிறேன்.. ஹி..ஹி..
//இது மாதிரி பெண்கள் பிரச்சனைகளையும் யாராவது பதிவு போட்டால் நல்லா இருக்கும்.//
கோத்து விட்டுட்டு போறீங்களா... இதுக்கெல்லாம் அசரமாட்டோம், எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்.
வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி அக்பர்.
//இதை பாத்தா சிரிப்பா வருது...? எப்பவும் அடுத்தவங்க கஷ்டம் நமக்கு சிரிப்புதான் ....அவ்வ்வ்வ்வ்//
அந்த அடுத்தவங்க யாரு பாஸ் ?? ஹி.. ஹி..
அந்த கடைசி கார்ட்டூன் என்னை ஏதோ செய்யுதுங்க...?? க்கி..க்கி..
மனைவியை பற்றி சரியான பதிவு!
- அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
மண்டபத்தில யாரொ எழுதினதா இல்ல சொந்த அனுபவமா? சூப்பர்
தம்பி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
அன்பின் ஸ்டீபன்
மண்டபத்துல எழுதி வாங்கிட்டு வந்த மெயில் எல்லாம் நல்லாருக்கு - ஆமா நெசமாவே கல்யாணம்னா பயமா ??? பிரதாப் களத்துல குதிக்கச் சொல்றாருல்ல - அவரோட சேந்துக்கங்க - சரியா
நல்வாழ்த்துகள் ஸ்டீபன்
நட்புடன் சீனா
முதல்ல 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்'தில
இருந்துக்குங்க... அப்புறமா 'வருத்தப்படுவோர்
சங்கத்'திற்குத் தாவிக்கலாம்.
சும்மா பயப்படாம வாங்க!
துணுக்குகளனைத்துமருமை!
@எம் அப்துல் காதர் said...
//இதை பாத்தா சிரிப்பா வருது...? எப்பவும் அடுத்தவங்க கஷ்டம் நமக்கு சிரிப்புதான் ....அவ்வ்வ்வ்வ்//
அந்த அடுத்தவங்க யாரு பாஸ் ?? ஹி.. ஹி..
அந்த கடைசி கார்ட்டூன் என்னை ஏதோ செய்யுதுங்க...?? க்கி..க்கி..//
வாங்க அப்துல்... நல்லா இருக்கீங்களா?.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Software Engineer said...
//மனைவியை பற்றி சரியான பதிவு!
- அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)//
வாங்க ராஜா... உங்க பின்னூட்டத்திலேயே தெரியுது உங்களின் கஷ்டம்..ஹா.ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@சி.பி.செந்தில்குமார் said...
//உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//
வாங்க செந்தில்.. நமக்கு தெரிஞ்சது எல்லாம் அந்த மூன்று தான் நேர்மை, கருமை, எருமை.. ஹி..ஹி.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Ramesh said...
//மண்டபத்தில யாரொ எழுதினதா இல்ல சொந்த அனுபவமா? சூப்பர்//
வாங்க ரமேஷ்... அம்பத்தூர் நல்லா இருக்கா?...சொந்த அனுபவம் எழுதுறதுக்கு இன்னும் ரெம்ப நாள் இல்ல... ஹி..ஹி.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@கே.ஆர்.பி.செந்தில் said...
//தம்பி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?//
இல்லீங்கண்ணா... என்ன விசயம்?.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி செந்தில் அண்ணா.
@cheena (சீனா) said...
//அன்பின் ஸ்டீபன்
மண்டபத்துல எழுதி வாங்கிட்டு வந்த மெயில் எல்லாம் நல்லாருக்கு - ஆமா நெசமாவே கல்யாணம்னா பயமா ??? பிரதாப் களத்துல குதிக்கச் சொல்றாருல்ல - அவரோட சேந்துக்கங்க - சரியா
நல்வாழ்த்துகள் ஸ்டீபன்
நட்புடன் சீனா///
வாங்க சீனா அய்யா... அதுக்கு ரெம்ப நாள் இல்லை.. சீக்கிரம் கட்டு போட்டுவிடுவார்கள்.. வருகைக்கும், அறிவுரைக்கும் ரெம்ப நன்றி சார்.
@NIZAMUDEEN said...
//முதல்ல 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்'தில
இருந்துக்குங்க... அப்புறமா 'வருத்தப்படுவோர்
சங்கத்'திற்குத் தாவிக்கலாம்.
சும்மா பயப்படாம வாங்க!
துணுக்குகளனைத்துமருமை!//
வாங்க நிஜாம் சார்..நீங்க எல்லாம் தைரியம் சொல்லும் போது வராமல் இருப்பேனா.... ஹி..ஹி.. சீக்கிரம் வந்திர்றேன்..வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
Post a Comment