Tuesday, August 3, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்..??!!

த‌ல‌(த‌லையாய‌) ந‌ண்ப‌ர் நாஞ்சில் பிர‌தாப் அழைப்பை ஏற்று இந்த‌ தொட‌ர்ப‌திவு:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நாடோடி

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இது என்னுடைய‌ உண்மையான‌ பெய‌ர் இல்லை. என‌க்கு பெற்றோர் வைத்த‌ பெய‌ர் ஸ்டீப‌ன். ப‌டித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல‌ ஆர‌ம்பித்த‌து முத‌ல் என்னுடைய‌ நாடோடி வாழ்க்கை ஆர‌ம்ப‌மாகிற‌து. தொட‌ர்ச்சியான‌ ஓட்ட‌ங்க‌ள் தான்(மார‌த்தானா என்று கேட்க‌ப்ப‌டாது), இதுவ‌ரையிலும் தொட‌ர்ந்து கொண்டுதான் இருக்கின்ற‌து. என‌வேதான் "நாடோடி" என்று இந்த‌ பெய‌ரை வைத்தேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!‌ ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தின‌மும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ வாச‌க‌ர் க‌டித‌ங்க‌ளை நானே எழுதி என‌து மெயிலுக்கு போஸ்ட் ப‌ண்ணுவ‌தில் இருந்தே உங்க‌ளுக்கு தெரியும் நான் எவ்வ‌ள‌வு பிர‌ப‌ல‌ம் என்று!!!!!. இருந்தாலும் இன்னும் ஒரு வேலை பாக்கியிருக்கு என்னிடைய‌ வ‌லைப்ப‌திவின் பெய‌ரை எவ‌ர‌ஸ்ட் சிக‌ர‌த்தில் ப‌திக்க‌ வேண்டும் என்ப‌து தான். அதையும் ப‌ண்ணிட்டேன் என்றால் "ப‌திவுல‌க‌ வ‌ர‌லாற்றில் முத‌ன் முறையாக‌" என்று போட்டுவிட‌லாம். அத‌ற்க்கான‌ முத‌ற்க்க‌ட்ட‌ வேலைக‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌து, விரைவில் முடிந்துவிடும்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சில‌ சொந்த‌ விச‌ய‌ங்க‌ளை எழுதியிருக்கிறேன். ப‌ல‌ க‌ருப்பு, வெள்ளை ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு அழாகாக‌ வ‌ண்ண‌ம் பூசியும் எழுதியுள்ளேன். விளைவு பெரிதாக‌ ஒன்றும் இல்லை. இதுவ‌ரையில் யாரிட‌ம் இருந்தும் வெளியிட‌ப்ப‌ட‌ முடியாத‌ அள‌வு பின்னூட்ட‌ம் பெற்ற‌தும் இல்லை. யாருக்கும் நானும் அப்ப‌டி இட்ட‌துமில்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

க‌ண்டிப்பாக‌ பொழுதுபோக்கிற்காக‌ தான் ஆர‌ம்பித்த‌து.. ச‌ம்பாத்திய‌ம் எல்லை க‌ட‌ந்து ப‌ல‌ ந‌ல்ல‌ ந‌ட்புக‌ளை..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணே ஒண்ணு க‌ண்ணே க‌ண்ணுனு தான் இருந்த‌து. வீடியோக்க‌ள் அதிக‌மாக‌ ப‌திவேற்ற‌ம் செய்வ‌தால் வ‌லைப்ப‌திவு திற‌ப்ப‌த‌ற்க்கு அதிக‌ நேர‌ம் எடுத்து கொள்கிற‌து என்று ந‌ண்ப‌ர்க‌ள் தெரிவித்த‌தால், வீடியோக்க‌ளை ம‌ட்டும் ப‌திவேற்ற‌ம் செய்ய‌ ஒரு வ‌லைப்ப‌திவு ஆர‌ம்பித்தேன். மொத்த‌ம் இர‌ண்டு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

"தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா" இந்த‌ பாட‌லின் முத‌ல் வ‌ரியை ஞாப‌க‌ம் வைத்த‌ அள‌விற்க்கு இந்த‌ வ‌ரியை ஞாப‌க‌ம் வைக்க‌ த‌வ‌றி விடுகிறோம்..

=========================================

என்‌ கையில‌ கிடைத்த‌ தீப்ப‌ந்த‌த்தை அப்ப‌டியே அணைக்க‌ விருப்ப‌ம் இல்லை. அத‌னால‌ ந‌ம்ம‌ "த‌மிழ் உத‌ய‌ம்" ர‌மேஷ் அவ‌ர்க‌ளை இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைக்கிறேன்..

.

.

.

28 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//

நச்ச் பதில்

Prathap Kumar S. said...

//வெளியிட‌ப்ப‌ட‌ முடியாத‌ அள‌வு பின்னூட்ட‌ம் பெற்ற‌தும் இல்லை. யாருக்கும் நானும் அப்ப‌டி இட்ட‌துமில்லை//

என்னாத்தல...பல விழுப்புண்களை பெற வேண்டோமோ??? அப்ப பதிவு ஆரம்பிச்சதுக்கே அர்த்தம் இல்லாம போய்டுமே ஸ்டீபன்...

Prathap Kumar S. said...

//யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.//

அது யாரு ஸ்டீபன்... நம்ம கைராசியே அப்படித்தான தல... :))

Prathap Kumar S. said...

//சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//

ஆகா...சொறிய வச்சுட்டீங்களே... ஸ்டீபன்...

எழுதுனதுக்கும் தீப்பந்ததை அணையாமல் விட்டததுக்கும் நன்றி ...விதி யாரைவிட்டது...:))

எல் கே said...

//நம்ம கைராசியே அப்படித்தான தல//

onnum solrathukku illa

kavisiva said...

//ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.//

அடடா! மலையேறுபவரைப் பார்த்து சுவறேரி குதிச்சீங்களா...இல்லை......பக்கத்து வீட்டுல மாங்கா பறிக்கறதுக்காக குதிச்சீங்களா :D
//என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//
நோட் பண்ணிக்கறேன்

//நம்ம கைராசியே அப்படித்தான தல//

அடடா நாஞ்சிலோட தற்பெருமை தாங்க முடியலியே...

தூயவனின் அடிமை said...

யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.

தூயவனின் அடிமை said...

யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.

தமிழ் உதயம் said...

உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன். அடுத்த வாரம் எனது வலைப்பூவுக்கு இரண்டாவது பிறந்த நாள். அன்றைய தினம் அந்த பதிவு வரும். அழைத்தமைக்கு நன்றி.

Riyas said...

நன்றாக இருந்தது பதில்கள்.. ஸ்டீபன்

Chitra said...

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....

...SUPERB!!!!!!! அருமையான பதில்!

எம் அப்துல் காதர் said...

//நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!//

நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க பாஸ்!!

அருமை.. வாழ்த்துகள்!!

r.v.saravanan said...

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....

good good steban

நல்ல பதில்கள் ஸ்டீபன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எட்டாவது கேள்விக்கு பதில் யதார்த்தமான பிடித்தமான பதில்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள்!

ஜெய்லானி said...

////நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

சாந்தி மாரியப்பன் said...

//சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//

இந்த பதில் நல்லாருக்கு.

Unknown said...

பிடிக்காத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போகும் நம் நாடோடி...
பெருந்தன்மைன்னா இதுதான் நண்பா... எல்லாப் பதிவுகளையும் படிப்பேன் என சொல்லாமல் சொல்லும் உங்களை பாராட்டுகிறேன்

கண்ணா.. said...

//சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்?//

சரியா சொல்லிருக்கீங்க.... உங்க நேர்மை புடிச்சிருக்கு...

//யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்//

அடங்கொன்னியா.... அவனா முதல் கமெண்ட் போட்டான்..... பளாக்குக்கு வைரஸ் ஏதும் வந்துற கூடாதுன்னு ஏதாச்சும் செய்யுங்க பாஸு.... :)))))

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் பதில் அனைத்தும் நேர்மையாக உள்ளது ஸ்டீபன்.

அனைத்துமே நச் ரக பதில்கள்.

தல அங்கே இருப்பதால் படத்தில் தலை இல்லையா :)

கமலேஷ் said...

ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் பதில் நண்பரே.

vanathy said...

ஸ்டீபன், முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் கொடுக்க மறந்துட்டேன்.

நல்ல பதில்கள்.
//ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.//
அசத்தலா இருக்கு வரிகள்.

காஞ்சி முரளி said...

////சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....///

அடடே...!
நோட் பண்ணுங்கப்பா...!
நோட் பண்ணுங்கப்பா...!
நல்ல வரிங்கப்பா...!

அருமை...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

நாடோடி said...

@ப்ரியமுடன் வசந்த் said...
//8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//

நச்ச் பதில்///

வாங்க‌ வ‌ச‌ந்த்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@நாஞ்சில் பிரதாப் said...
//வெளியிட‌ப்ப‌ட‌ முடியாத‌ அள‌வு பின்னூட்ட‌ம் பெற்ற‌தும் இல்லை. யாருக்கும் நானும் அப்ப‌டி இட்ட‌துமில்லை//

என்னாத்தல...பல விழுப்புண்களை பெற வேண்டோமோ??? அப்ப பதிவு ஆரம்பிச்சதுக்கே அர்த்தம் இல்லாம போய்டுமே ஸ்டீபன்...//

நான் இன்னும் பிர‌ப‌ல‌ம் ஆக‌லியாம் த‌ல‌... ஹி.ஹி..

@நாஞ்சில் பிரதாப் said...
//யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.//

அது யாரு ஸ்டீபன்... நம்ம கைராசியே அப்படித்தான தல... :))//

உண்மைதான் த‌ல‌... ந‌ல்ல‌ ராசிதான்.. அந்த‌ ஒரு ஏக்க‌ர் நில‌ம் உங்க‌ளுக்கு தான்.. அந்த‌ கிண‌றும் உங்க‌ளுக்கு தான்!!!!!!!

@LK said...
//நம்ம கைராசியே அப்படித்தான தல//

onnum solrathukku illa//

என்ன‌ எல் கே இப்ப‌டி சொல்லிட்டீங்க‌!!! வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@kavisiva said...
//ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.//

அடடா! மலையேறுபவரைப் பார்த்து சுவறேரி குதிச்சீங்களா...இல்லை......பக்கத்து வீட்டுல மாங்கா பறிக்கறதுக்காக குதிச்சீங்களா :D
//என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//
நோட் பண்ணிக்கறேன்

//நம்ம கைராசியே அப்படித்தான தல//

அடடா நாஞ்சிலோட தற்பெருமை தாங்க முடியலியே...//

வாங்க‌ க‌விசிவா.......நான்‌ மாங்க‌ ப‌றிச்ச‌ விச‌ய‌த்தை எல்லாம் பொதுவுல‌ சொல்லி அசிங்க‌ ப‌டுத்த‌ப‌டாது .... ஹி..ஹி..

@இளம் தூயவன் said...
யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்.

நட்பை சரியான நேரத்தில் வெளிபடுத்தியுள்ளிர்கள்.//

வாங்க‌ ந‌ண்ப‌ரே... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

@தமிழ் உதயம் said...
உங்கள் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன். அடுத்த வாரம் எனது வலைப்பூவுக்கு இரண்டாவது பிறந்த நாள். அன்றைய தினம் அந்த பதிவு வரும். அழைத்தமைக்கு நன்றி.//

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் த‌மிழ் சார்.. எழுது க‌ல‌க்குங்க‌...

@Riyas said...
//நன்றாக இருந்தது பதில்கள்.. ஸ்டீபன்//

ந‌ன்றி ரியாஸ்

@Chitra said...

...SUPERB!!!!!!! அருமையான பதில்!//

வாங்க‌ சித்ரா அக்கா... ரெம்ப‌ ந‌ன்றி

@எம் அப்துல் காதர் said...
//நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!//

நீங்க என்ன பொய்யா சொல்லப் போறீங்க பாஸ்!!

அருமை.. வாழ்த்துகள்!!//

வாங்க‌ அப்துல்.. வாழ்த்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@r.v.saravanan said...
good good steban

நல்ல பதில்கள் ஸ்டீபன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்//

ரெம்ப‌ ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன்..

@நாய்க்குட்டி மனசு said...
எட்டாவது கேள்விக்கு பதில் யதார்த்தமான பிடித்தமான பதில்//

வாங்க‌ ச‌கோ.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@NIZAMUDEEN said...
//ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான பதில்கள்!//

வாங்க‌ நிஜாம் சார்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@ஜெய்லானி said...
////நின்ற‌ பொருள் அசைய‌வும், அசைந்த‌ பொருள் நின்ற‌தும்... நான் கால‌டி எடுத்து வைத்த அன்னைக்கு ந‌ட‌ந்த‌து என்று சொன்ன‌ நீங்க‌ ந‌ம்ப‌வா போறீங்க‌!!!!//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

ஹி..ஹி... ரெம்ப‌ ந‌ன்றி ஜெய்லானி..

@அமைதிச்சாரல் said...
//சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....//

இந்த பதில் நல்லாருக்கு.//

வாங்க‌ அமைதிச்சார‌ல் ச‌கோ... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@கே.ஆர்.பி.செந்தில் said...
பிடிக்காத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போகும் நம் நாடோடி...
பெருந்தன்மைன்னா இதுதான் நண்பா... எல்லாப் பதிவுகளையும் படிப்பேன் என சொல்லாமல் சொல்லும் உங்களை பாராட்டுகிறேன்//

வாங்க‌ செந்தில் அண்ணா... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@கண்ணா.. said...
//சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்?//

சரியா சொல்லிருக்கீங்க.... உங்க நேர்மை புடிச்சிருக்கு...

//யாரால் இந்த‌ ப‌திவு எழுதுகிறேனோ அவ‌ரால் தான் முத‌ல் பின்னூட்ட‌ம் பெற்றேன்....... பேசிய‌தும் அவ‌ரிட‌ம் தான்//

அடங்கொன்னியா.... அவனா முதல் கமெண்ட் போட்டான்..... பளாக்குக்கு வைரஸ் ஏதும் வந்துற கூடாதுன்னு ஏதாச்சும் செய்யுங்க பாஸு.... :)))))//

வாங்க‌ த‌ல‌.. உங்க‌ளுக்கு நாஞ்சில‌‌ க‌லாக்கிற‌தே வேலையா போயிடுச்சி.. இருங்க‌ உங்க‌ளை பொய் கேசு போட்டு தூக்க‌ சொல்லுறேன்.. :)))))))))

@அக்பர் said...
உங்கள் பதில் அனைத்தும் நேர்மையாக உள்ளது ஸ்டீபன்.

அனைத்துமே நச் ரக பதில்கள்.

தல அங்கே இருப்பதால் படத்தில் தலை இல்லையா :)//

வாங்க‌ அக்ப‌ர்... ஆஹா என்னா க‌ண்டுபிடிப்பு?.. இதுக்கு தான் அக்ப‌ரு வேணுனு சொல்லுற‌து..

@கமலேஷ் said...
//ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் பதில் நண்பரே.//

வாங்க‌ க‌ம‌லேஷ் ... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@vanathy said...
ஸ்டீபன், முன்பே படித்து விட்டேன். பின்னூட்டம் கொடுக்க மறந்துட்டேன்.

நல்ல பதில்கள்.
//ம‌லையேறி சிக‌ர‌ம் தொட்டு கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்க்கும் ஒருவ‌ர், காலிலே சூவை மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து வீட்டு சுவ‌ர் ஏறி குதிப்ப‌தில்லையா?... அதுபோல் தான்.//
அசத்தலா இருக்கு வரிகள்.///

வாங்க‌ வான‌தி ச‌கோ... க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@காஞ்சி முரளி said...
////சாப்பிடுவ‌தில் என‌க்கு பிடித்த‌வைக‌ளை சாப்பிட்டுவிட்டு, பிடிக்காத‌வைக‌ளை ஓர‌ம் த‌ள்ளுவ‌து போல் க‌ட‌ந்து செல்கிறேன். இத‌ற்காக‌ ச‌மைத்த‌வ‌ர்க‌ளை குறை சொல்வ‌தும், என‌க்கு பிடிக்காத‌ சாப்பாட்டை சாப்பாடே இல்லையென்று சொல்வ‌த‌ற்கும் நான் யார்? ....///

அடடே...!
நோட் பண்ணுங்கப்பா...!
நோட் பண்ணுங்கப்பா...!
நல்ல வரிங்கப்பா...!

அருமை...!

நட்புடன்...
காஞ்சி முரளி....//

வாங்க‌ முர‌ளி அண்ணா!!!!! எப்ப‌டி இருக்கீங்க‌ ? ந‌ல்லா இருக்கீங்க‌ளா?.. அப்ப‌ப்ப‌ வ‌ந்திட்டு போங்க‌.... வ‌ருகைக்கும் க‌ருத்திற்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@asiya omar said...
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.//

விருதுக்கு ரெம்ப‌ ந‌ன்றி ச‌கோ ... சீக்கிர‌ம் மாட்டிவிடுகிறேன்..

cheena (சீனா) said...

அன்பின் ஸ்டீபன்

நல்லதொரு நேர்முகம் - பதில்கள் அனைத்துமே அருமை. உங்களைப் பற்றிய ஒரு சுய அறிமுகம். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

சித்திரவீதிக்காரன் said...

தங்களது பதில்கள் அருமை.

Related Posts with Thumbnails