Tuesday, March 11, 2014

இலங்கை தமிழர் பிரச்சனை_எத்தனை முரண்பாடுகள்!!!

ஐந மனித உரிமை அமைப்பின் ஆணையாளர்: நவனீதன் பிள்ளை

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் நடந்த போது, மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது உண்மை, அதற்காகச் சர்வதேச விசாரனை வேண்டும். போர் முடிந்த போதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளது, சிங்கள இராணுவதினரால் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தும் பாலியல் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது கண்டிக்கத் தக்கது. 

எதிர்க்கட்சி தலைவர்(பிஜேபி): சுஷ்மா சுவராஜ் 

இலங்கைக்குச் சென்று வந்த எங்களது பயணம் திருப்தி அளித்துள்ளது. இலங்கையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினோம். தமிழர்களின் மறுகுடியமர்த்தல் பகுதிகளையும் பார்வையிட்டோம். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு பிரமிக்கிறேன்.

மதிமுகக் கட்சி தலைவர்: வைகோ 

இலங்கை பிரச்சனையில் தமிழ் ஈழம் மட்டும் தான் ஒரே தீர்வு. போர் குற்றவாளி, சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை சர்வதேச விசாரணை கூண்டில் ஏற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழினமே, தமிழர்களே விழித்தெழுங்கள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன் 

இலங்கையில் பொது வாக்கெடுப்பெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் எல்லோரும் ஒங்கி குரல் கொடுக்கும் போது தான் சர்வதேச சமூகத்தின் அழுத்ததைப் பெற்றுத் தமிழீழத்தை வென்றெடுக்க முடியும். இந்திய அரசு இதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்: கோபண்ணா 

இலங்கை ஒரு சுதந்திரம் பெற்ற நாடு, அந்த நாட்டில் உள்விவாகாரங்களில் இந்தியா ஓரளவிற்குத் தான் தலையிட முடியும். இலங்கை தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.: விஜயதரணி 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் நிர்பந்ததினால் தான் இலங்கையில் வடக்கு மாகணத் தேர்தலை நடத்தமுடிந்தது. ராஜிவ் மற்றும் ஜெயவர்த்தனே ஒப்பந்ததின் 13 வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவதற்கான அனைத்து முயச்சியையும் இந்தியா செய்து வருகிறது.

பிஜேபி மாநில செயலாளர்: ராகவன் 

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத் தான் பிஜேபி செய்யும். இங்கு இருந்து கொண்டு தமிழீழம் என்று குரல் எழுப்புவதை ஏற்க முடியாது. 13 வது சட்ட மசோதாவை நிறைவேற்றி தமிழர்களுக்கு முழுமையான அதிகார பகிர்வை கொடுக்கத் தான் பிஜேபி விரும்புகிறது. 

காந்திய மக்கள் கட்சி: தமிழருவி மணியன் 

நரேந்திர மோடியால் மட்டுமே இலங்கையை மிரட்டி வைக்க முடியும். சிங்கள அதிபர் ராஜபக்சேவிற்கு, இப்போது இந்தியா சுண்டைக்காயாக இருக்கிறது. கண்டிப்பாக மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆவார், ஈழ தமிழர்களின் பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.

தலைமைக் கழகப் பேச்சாளர்(அதிமுக) : ஆவடி குமார் 

தமிழர் ஒருவர் பிரதமராக ஆகாமல் ஈழ தமிழர் பிரச்சனை முடிய போவதில்லை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் இந்த முறை பிரதமர் ஆவது உறுதி. அவர் தலைமையில் ஈழ தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் எல்லை பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்படும். 

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்: குமரன் பத்மநாபன் 

இப்போது உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது, ஆயுத போரட்டம் மூலம் ஈழ விடுதலையை அடைய முடியாது. இங்குள்ள தழிழர்களும் தனி நாடு விரும்பவில்லை. ஒருங்கிணைந்த இலங்கைலேயே வாழ விரும்புகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், புலம் பெயர்ந்த புலிகள் அமைப்பில் ஈடுபாடு கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் பிரிவினையை ஆதரிக்கிறார்கள்.

வட மாகாண முதலமைச்சர்: விக்னேஷ்வரன் 

எங்கள் நாட்டின் பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்வோம். இப்போது தமிழர்களின் மறுவாழ்வு, நில உரிமைகள், இரணுவத்தை வெளியேற்றுதல் போன்ற பணிகளைச் செய்வதே என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். வெளியில் இருக்கும் தமிழர்கள் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பதே நல்லது. 

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற எம்.பி: ஸ்ரீதரன் 

இன்றைக்கும் இலங்கையில் வாழும் என்னைப் போன்றவர்களும் கூட அரசை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் தான் இருக்கிறோம். இந்த நேரத்தில் தமிழ் நாட்டு மக்களில் குரலும், இளைஞர்களின் போரட்டமும் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களில் சர்வதேச முன்னெடுப்புகளும் தான் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கின்றது. 13 வது சட்டத்திருத்தம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் தமிழர்களுக்குத் தந்துவிடாது.

                                                                *-----*

இலங்கை தமிழர் பிரச்சனை எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்தவும், நடுநிலையாளர்களுக்கு மேடையில் முழங்கவும், விமர்சகர்களுக்கு சுய விளம்பரம் தேடவும் நன்றாக பயன்படுகிறது.

பிரச்சனை ஒன்று, ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் இயக்கங்களில் உள்ள கொள்கைகளை வைத்து எத்தனை முரண்பாடுகள்!!!
தமிழக இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.


.

3 comments:

வேகநரி said...

//இலங்கை தமிழர் பிரச்சனை எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு அரசியல் நடத்தவும் நடுநிலையாளர்களுக்கு மேடையில் முழங்கவும்விமர்சகர்களுக்கு சுய விளம்பரம் தேடவும் நன்றாக பயன்படுகிறது.//

மிக மிக சரியாக சொன்னீர்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழக அத்தியாவசிய பிரச்சனைகளை மறைத்து பேசுவதற்கு கிடைத்த அருமையான கொடை இலங்கை தமிழர் பிரச்சனை. இதில் சிறு அரசியல்வாதிங்க சீமான், வைகோ,நெடுமாறன் போன்றவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தாரளாம பணம் வருகிறது. இவர்களுடன் போட்டி போடுவதற்காக மற்ற கட்சிகளும் அவர்கள் மாதிரியே நடக்கிறார்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அரசியல் செய்கிறார்கள்

நாடோடி said...

@வேகநரி said...
//மிக மிக சரியாக சொன்னீர்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு தமிழக அத்தியாவசிய பிரச்சனைகளை மறைத்து பேசுவதற்கு கிடைத்த அருமையான கொடை இலங்கை தமிழர் பிரச்சனை. இதில் சிறு அரசியல்வாதிங்க சீமான், வைகோ,நெடுமாறன் போன்றவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து தாரளாம பணம் வருகிறது. இவர்களுடன் போட்டி போடுவதற்காக மற்ற கட்சிகளும் அவர்கள் மாதிரியே நடக்கிறார்கள்//

வாங்க வேகநரி,

இந்த விசயத்தில் இந்த கட்சி என்ற‌ பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒவ்வொரு கொள்கைகள் வைத்திருக்கார்கள்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

@கரந்தை ஜெயக்குமார் said...
//அரசியல் செய்கிறார்கள்//

உண்மைதான் ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails