Saturday, April 19, 2014

சனிக்கிழமையானால் சண்டியர்!!!

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. ஆனால் நீ ஒரு கார்பரேட் முதலாளியிடம் பணிசெய்வதால் தொழிலாளர்கள் பற்றிப் பேச உனக்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படியான வாதம் என்று எனக்குப் புரியவில்லை.

நீ அந்தக் கார்பரேட் அலுவலகத்தில் உழைத்த உழைப்பை வெளிநாட்டுக் கம்பெனிக‌ளிடம் கொடுத்து லட்சம் டாலர்கள் சம்பாதித்துவிட்டு, அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.

நண்பரே! ஓடாத குதிரையை எவரும் வாங்கி ரேசில் ஓட விடுவது இல்லை. வலுவான குதிரையின் மீது தான் பணம் கட்டுவார்கள். அதேபோல் தான் உழைக்காத‌ எவருக்கும் லட்சங்களில் சம்பளங்களை இந்தக் கார்பரேட் கம்பெனிகள் கொடுத்துவிடுவதில்லை என்பதை நண்பர் புரிந்தால் நலம்.

ஒரு பண்ணையாரிடம் பல‌ தொழிலாளிகள் வேலைச் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பண்ணையார் தொழிலாளிகளிக்கு உரிய ஊதியத்தை கொடுக்காமலும், தொழிலாளிகளின் நலனில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களை அவரின் கீழ் வேலைச் செய்யும் தொழிலாளிகளை விட எவர் அதிகாமாகத் தெரிந்து வைத்துக் இருக்க‌ முடியும்?. அந்தத் தொழிலாளி வர்கம் பண்ணையாரிடம் வாங்கிய சம்பளத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறது என்ற காரணத்திற்காக, அந்தப் பண்ணையாரின் சுரண்டல்களுக்கு எதிராகக் கருத்துக்களோ அல்லது போராட்டங்களே செய்யக் கூடாது என்று சொல்வது என்னவகையான நியாயம்?.

குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது வா. மணிகண்டன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவு. குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த பல வகையான போராட்டங்களில் பெரியளவில் கவனத்தில் ஈர்த்தது காந்தியடிகளின் "ஒத்துழையாமை இயக்கம்". வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருக்கும். அப்படியானால் ஆங்கிலேயர்களில் கீழ் வேலைப்பார்த்துவிட்டு, அவர்களிடம் ஊதியமும் வாங்கிவிட்டு எப்படி அய்யா? இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்கள் என்று கேட்பதற்கு ஒப்பாகும் உங்களின் இந்த‌ப் பதிவு.

நானும் முழுமையாகக் கம்யூனிசத்தைப் படித்தவன் இல்லை. எல்லா இசங்களையும் கரைத்து குடித்தவனும் இல்லை. ஏதோ பொதுவுடமை தத்துவ நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொள்கை இல்லாத வழ்க்கை என்பது உயிர் இல்லாத உடம்பு போன்றது என்பதை முழுமையாக நம்புப‌வன். கொள்கைகள் மட்டும் தான் எந்தவொரு சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் என்று இன்றும் ந‌ம்புப‌வன். தனிமனித துதிபாடல்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை, மக்களால் தூக்கியெறியப்படும்

சில ம‌னிதர்களைக் குறிவைத்து எழுதிய பதிவாக எனக்குத் தெரியவில்லை. அப்படியாகயிருந்தால் அவர்களின் பெயர்களையோ, தளங்களையோ சுட்டி எழுதியிருப்பார். ஆனால் போகிற போக்கில் கார்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவனெல்லாம் கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுவதா? என்று தலையில் குட்டு வைத்துவிட்டு செல்வதால் தான் இந்த ப‌திவு எழுத தேவையாயிற்று..

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நியாயமில்லை தான்...

Indian said...

//குடிப்பது தவறு என்று சொல்கிறோம். ஆனால் உனக்குத் தான் குடிப்பழக்கமே கிடையாதே, அப்புறம் நீ எல்லாம் எப்படி அய்யா குடிப்பழக்கம் தீங்கு என்று சொல்லவருகிறாய் என்று கேட்பது போல் தான் இருக்கிறது//

அவர் சொல்வது என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால் "முழு போதையில் குடி போதைக்கு எதிராக போராடுவது தவறு". நான் சரியாத்தான் பேசுறேனா?

முதலாளிக்கு ஜால்ரா அடித்து விட்டு வெளியில் மக்களுக்கு போராடுபவன் இரட்டை நாக்குள்ளவன். கம்யூனிஸ்ட் அல்ல.

நாடோடி said...

@Indian said...

//முதலாளிக்கு ஜால்ரா அடித்து விட்டு வெளியில் மக்களுக்கு போராடுபவன் இரட்டை நாக்குள்ளவன். கம்யூனிஸ்ட் அல்ல.//

அப்படியானவன் முதலில் மனிதனேயில்லை. அப்புறம் எப்படி அவனிடம் கம்யூனிசம் இருக்கும் நண்பரே?

வவ்வால் said...

நாடோடி,

//அதில் வரும் சில லட்சங்களை ரூபாயில் உனக்குக் கூலியாகத் தருகிறார்கள். முதலாளிகளிடம் கையேந்தி நிற்பவர்கள் எப்படிப் புரட்சி, போராட்டம் என்று பேசலாம் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய கூலியை தான் வாங்குகிறோம் என்பதைக் கூட அறியாமல் பேசுவதை என்னவென்று சொல்வது?.//

சரியா சொன்னீங்க!

நாத்திகன் இன்னொரு நாத்திகனிடம் தான் வேலை செய்யணும் என சொன்னால் அவனுக்கு வேலையே கிடைக்காது நம்ம நாட்டில் அவ்வ்!

நாட்டின் கொள்கையாக பொதுவுடமை இல்லாத சூழலில் யாரேனும் ஒருவன் முதலாளியாக இருந்தே தீருவான் ,அவனிடம் தான் வேலை செய்தாக வேண்டும் , அப்படி இருக்கையில் கம்யூனிச கொள்கை உள்ளவன் பொதுவுடைமை வரும் வரையில் வேலைக்கு போகாமல் இருக்கணுமா?

முதலில் அவருக்கு அரசியல் கட்சியின் உறுப்பினர் என்பதற்கும், அரசியல் அபிமானி என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை,அபிமானி என்பவன் சித்தாந்த ரீதியாக ஏற்றுக்கொண்டு , அரசியல் செயல்ப்பாட்டில் பங்கேற்காமல் இருக்க முடியும்.

# வா.மணிகண்டருக்கு தினம் எதாவது எழுதி வைக்கணும் என்ற அவஸ்தையில் மேம்போக்காக எதையாவது எழுதி தள்ளுகிறார் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

‘தளிர்’ சுரேஷ் said...

ஒருவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியான ஆள் எவராக இருக்க முடியும். உழைப்பை சுரண்டுபவர்களைப் பற்றி அறிந்தவர்களால் தான் என்பதில் எவருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. // உண்மைதான்! உங்கள் வாதம் சரியே!

வருண் said...

***குடிப்பழக்கத்தின் கொடுமையை ஒருவர் அனுபவித்துத் தான் அறியவேண்டும் என்றில்லை. அதன் வீச்சுச் சமூகத்தில் எத்தைகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற‌து என்பதைச் சிந்திக்கச் சிறிய அளவு மூளை இருந்தால் போதுமானது.**

அவர் நல்லா எழுதுவாரு.... ஆனால் அவர் சிந்தனைகளெல்லாம் கொஞ்சம் மனவளர்ச்சி கம்மியான, அரைகுறை முதிர்ச்சியடைந்த "பெரியமனுஷன்" போலதான் அரைவேக்காட்டுத்தனத்தான் இருக்கும்.

எழுத நல்லா வர்ர சாரு ஆன்மீகவாதி, மஹாக் குடிக்காரன்,

இலக்கியவாதி ஜெயமோவன் ஒரு மதவெறியன் பிறமதத்தவரை தன் மதத்தவர்போல் பாக்கத் தெரியாத "ஹிந்திய-சிந்தனாவாதி.

லேட் சுஜாதா, பெண்ணியவாதியாகவும் தன்னை ஒரு மேதையாகவும் ஒரு பிம்பத்தைக் காட்டிக்கொண்ட பெண் உணர்வுகளை மதிக்கத் தெரியாத மடம், ரெகுலராக குடிக்கிற ஆச்சாரமான பிராமணன்.

இப்போ இந்த எழுத்தாளர்.. வா மணியாட்டி..

இது ஒரு தொடர் கதை..

இதுதான் தமிழர்களின் சாபம்!

Related Posts with Thumbnails