நமது தமிழ் நாட்டின் தென் மாவாட்டங்களில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தான் வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைகளில் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எங்கள் ஊரில் உள்ளவர்களை அதிகமாக பார்க்க முடியும். இவ்வாறு கட்டிட வேலைக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள், குடும்ப தலைவர்களாக தான் இருப்பார்கள். குடும்பத்தின் குழந்தைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு உழைக்க வந்தவர்கள்.
வளைகுடா நாடுகளில் இவர்கள் வாழும் சூழல் ரெம்ப கொடுமையான ஒன்று. தங்கியிருக்கும் ரூம்களில் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லும் இடம் ஒரு கட்டில் போடுவதற்கான இடம் தான். அந்த கட்டிலில் தான் இவர்களின் வாழ்க்கையே முடிகிறது. அந்த கட்டிலின் தலை பகுதியில் ஒரு சிறிய ஷெல்ப் இருக்கிறது. அதில் அவருக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்கள் இருக்கின்றன. அத்துடன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிறது.
தங்களுடைய ஆடைகள் அனைத்தும் கட்டிலின் அடியில் அட்டை பெட்டியில் வைத்து கொள்கிறார்கள். தனியாக தட்டு, டம்ளர், போன்ற பொருட்களும் இருக்கின்றன். இதே போல் ஐந்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒவ்வொரு அறையிலும் காணப்படுகின்றன. பக்கத்தில் ஒரு சமையல் அறையும் இருக்கின்றது.
அவரவர் கம்பெனிகளை பொறுத்து வேலை நேரம் இருக்கிறது. குறைந்தது பத்தில் இருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள். மாலையில் தான் தங்களுடைய அறைகளுக்கு வருகிறார்கள். வந்தவுடன் குளித்துவிட்டு தங்களுடைய சமையல் வேலைகளை பார்கிறார்கள். சில அறைகளில் தங்கியிருக்கும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சமையல் செய்கிறார்கள். சில அறைகளில் இருப்பவர்கள் தனி தனியாக சமையல் செய்து தங்களில் ஷெல்பில் வைத்து கொள்கிறார்கள்.
சமையல் வேலைகள் முடிந்தவுடன் தங்களின் கட்டிலில் உள்ள தொலைகாட்சியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை பார்கின்றனர். பார்த்து முடித்துவிட்டு அப்படியே அந்த கட்டிலில் படுத்து தூங்கி விடுகின்றனர்.
வாரத்தின் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் இப்படி தான் போகின்றது. வெள்ளி கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் சிலர் அன்றும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் தனது நண்பர்கள அல்லது உறவினர்களின் அறைகளுக்கு சென்று அவர்களுடன் உறவாடி அன்றைய பொழுதை கழிக்கிறார்கள். இவ்வாறு தான் பெரும்பாலான குடும்ப தலைவர்களின் வாழ்க்கை கழிகின்றது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
அப்பாவின் கண்டிப்புகள் இல்லாததால் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் திசை மாறி விடுகிறார்கள். எங்கள் ஊரில் இது போல் நிறைய பேரை பார்க்க முடியும். தனது இளமைகளை வெளி நாட்டில் தொலைத்து விட்டு, இனிமேல் குழந்தைகள் தான் உலகம் என்று வரும் தந்தைகளுக்கு பெருத்த ஏமாற்றங்களே!!
உங்கள் உழைப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். பணத்தின் மதிப்பை அவர்களுக்கும் தெரிய படுத்துங்கள். காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான். விழித்து கொள்ளுங்கள்!!!!
சமீபத்தில் நான் பணம் அனுப்புவதற்கு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் தனது பணத்தை இரண்டு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவரிடம் "ஏன் இரண்டு வங்கி கணக்குக்கு அனுப்புகிறீர்கள் ? ஒன்றில் அனுப்பினால் உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குறையுமே என்று கேட்டேன் " அதற்கு அவர் " ஒன்று என்னுடைய மனைவியின் வங்கி கணக்கு, மற்றொன்று என்னுடைய மகனுடையது, மகன் கல்லூரியில் படிக்கிறான். அம்மாவிடம் பணம் கேட்டால் அவன் அம்மா ஏன்? ஏதற்கு என்று கேட்பதால், இரண்டு பேருக்கும் அடிக்கடி தகறாறு வருகின்றது என்று என்னிடம் புலம்பினான். அதனால் தான் இரண்டு பேருக்கும் தனிதனியாக போடுகிறேன்" என்றார்.
அவருக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
.
.
Sunday, June 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
நண்பரே அந்த தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உங்களின் வார்த்தைகளில் உணர்ந்தேன் .
நானும் இங்கு வாழ்பவன்தான் சரியாக படம் பிடித்து காட்டி இருக்கிறது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி .
அண்ணே இதுபோல் பல பிரச்சினைகள் உண்டு ...
நிறைய பேர் தான் படும் கஷ்டங்களை வெளியில் சொல்வதில்லை, அதுவே பெரிய தவறு.
நிறைய பேர் தான் படும் கஷ்டங்களை வெளியில் சொல்வதில்லை, அதுவே பெரிய தவறு.
//காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான்//
உண்மைதான் சிந்திக்க வேண்டிய வரிகள்..!!
தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
...... உண்மையிலேயே படும் கஷ்டங்களை மறைக்காமல் சொல்லி, பணத்தின் அருமையையும் புரிய வைக்கத்தான் வேண்டும்..... அவர்களின் வேர்வையும் கண்ணீரும் தான் இவர்களின் பன்னீர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பது தெரிய வேண்டும்.
ஒரு சிலர் லீவு நாட்களில் கூட வீட்டு வேலை செய்து சம்பாதிப்பதை பார்த்து மனது சங்கடப்பட்டிருக்கிறேன்,என் சகோதரர்,கணவர் இருவரும் முதலில் துபாயை சுற்றி காட்டும் பொழுது சோனாப்பூர் என்ற லேபர் கேம்ப்பை காட்டினங்க,நம்ம ஆட்கள் எப்படி எல்லாம் இருக்காங்கன்னு பாருன்னு,கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.
Chitra said...
தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
...... உண்மையிலேயே படும் கஷ்டங்களை மறைக்காமல் சொல்லி, பணத்தின் அருமையையும் புரிய வைக்கத்தான் வேண்டும்..... அவர்களின் வேர்வையும் கண்ணீரும் தான் இவர்களின் பன்னீர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பது தெரிய வேண்டும்.
//
உண்மையிலும் உண்மை அவர்களுக்கு உணர்தியால்தான் உண்மை நிலமைபுரியும். மறத்தால் பின் சிரமங்கள் அனைவருக்கும்..
நல்லதொரு பதிவு ஸ்டீபன்
வெளிநாட்டில் வேலை செய்வதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை, இங்குள்ளவர்கள் புரிந்து கொள்வதில்லை. கடன் பட்டு வெளிநாடு போகிறவர்களில், பெரும்பாலோர் கடன்காரர்களாக தான் வாழ்கிறார்்கள் . வெளிநாட்டு வேலை, அவர்களின் வளர்ச்சிக்கு உதவியதா என்றால் பூஜ்யமே.
இரண்டு அக்கவுண்ட்!! --- கொடுமை.
வருந்ததக்க விஷயம்....
ரொம்ப நல்ல கட்டுரை நண்பரே!
நன்றாக சொல்லிருக்கீங்க ஸ்டீபன். இதுதான் இங்கவாழ்பவர்களின் நிலை. இதை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் துளிக்கிறது. என்ன்செய்ய?.. இதல்லாம் கடந்துதான் ஆகணும்.. எல்லோருக்கும் ஒரு நல்ல சூழ்நிலை கிடைக்க இறைவன் அருள்புரிவான்.
//வளைகுடா நாடுகளில் இவர்கள் வாழும் சூழல் ரெம்ப கொடுமையான ஒன்று. தங்கியிருக்கும் ரூம்களில் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லும் இடம் ஒரு கட்டில் போடுவதற்கான இடம் தான். அந்த கட்டிலில் தான் இவர்களின் வாழ்க்கையே முடிகிறது. அந்த கட்டிலின் தலை பகுதியில் ஒரு சிறிய ஷெல்ப் இருக்கிறது. அதில் அவருக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்கள் இருக்கின்றன. அத்துடன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிறது.//
நானும் அபுதாபியிலதான்... இங்குள்ள நிலையை மிகச்சரியாக சொன்னீர்கள்... நன்றி
அன்பு நாடோடி!
நான் கடந்த 19 வருஷமாக அதே வலைகுடாவில் அதே கட்டுமான துறையில் தான் இருக்கின்றேன். நாணயத்துக்கு இரு பக்கமும் உண்டு. நீங்கள் ஒரு பக்கம் எழுதியிருக்கீங்க. அதுவும் சரிதான். தப்பு என்று சொல்லவில்லை.
ஆனால் நான் எழுதிய இரண்டு இடுகைகள் பாருங்க. மனிதன் இப்படியும் அங்கே வாழலாம் எனவும் தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.
http://abiappa.blogspot.com/2007/10/blog-post_16.html
அடுத்து
http://abiappa.blogspot.com/2007/11/blog-post_01.html
இப்படியும் அங்க இருக்கின்றார்கள் நாடோடி!
மத்தபடி பதிவு 100 சதம் உண்மை தான்!
//ஒருவர் தனது பணத்தை இரண்டு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவரிடம் "ஏன் இரண்டு வங்கி கணக்குக்கு..//
இது அன்றாடம் இங்கே நடக்கும் சர்வசாதாரண நிகழ்ச்சி ஸ்டீபன் . எல்லோருக்கும் ஆறுதல் சொல்லியே ஓய்ந்து போய்டணும். இதை விட, ரகசியமாய் மனைவிக்கு அனுப்ப வேண்டிய பதினந்தாயிரத்தை அம்மாவுக்கும், அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய மூவாயிரத்தை மனைவிக்கும் மாற்றி அனுப்பி விட்டு,, ஏற்படும் ரகளைகளை சொல்லி மாயும் கஸ்டமர்களை என்ன வென்று சொல்வது. சிறிது தான் மாயனும்...!
தான் பணம் சம்பாதிக்க என்ன கஷ்டபடுகிறோம் என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும் அவர்களது கஷ்டத்தை குடும்பத்திற்கு புரிய வைக்க வேண்டும்
நல்ல பதிவு ஸ்டீபன் நன்றி
நல்ல பதிவு ..!
’’என் அப்பா வெளி நாட்டில இருக்காரு’’
என்று நான் எழுதிய பதிவு இந்த லின்கில்
http://pirathipalippu.blogspot.com/2008/12/blog-post_21.html
நல்ல பதிவு. என் நண்பர்கள் கூறி கேட்டு இருக்கிறேன், ஒரே அறையில் ஆறு முதல் எட்டு நபர்கள் இருப்பார்களாம். நம் ஊர் ரயில் வண்டி மாதிரி படுக்கைக்கு மேல் படுக்கை. லோயர் பர்த், அப்பர் பர்த் மாதிரி கட்டிக்கலாம்.
.எட்டு பேர்களும் ஒரே குளியல் அரை, கழிப்பிடம் உபயோகப் படுத்த வேண்டுமாம்.
காலையில் அவசரமாக சிறுநீர் கழிக்க ஆசைப் பட்டால் கழிவறை மற்றும் ஒரு நபரின் பயன் பாட்டில் இருக்குமாம்.
இதை விட இன்னொரு கொடுமை என்று ஒன்று சொன்னார். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று தம்பதியினர் குடி இருப்பார்களாம், ஒரே சமையல் அரை, குளியல் அரியம்.
பல இடங்களில் அடுத்த தம்பதியினர் சமையல், குளியல், சோப்பு பற்றி வர்ணனை வேறாம்.
இன்னும் பல வெற்றி கொடி கட்டு படங்கள் வர வேண்டும் நமக்கு.
Thanks for sharing the real truths here. This will save lot of next generation Tamil /Indians.
இயந்திர வாழ்க்கை , அதை புரிந்து கொள்ளாத சொந்தங்கள் , பாவம் அந்த இயந்திரங்கள்
மிகவும் அருமையான பதிவு...
இவன் ஓடாய் தேய்தலை தன் உறவுக்கும்.. நட்புக்கும் உணர்த்துதல் வேண்டும்...
தான் வாங்கிவந்த 'சென்ட்'... தன் வியர்வைகளால் வாங்கியது என்பதை உணர்த்துதல் வேண்டும்...
நீங்கள் நம்பினால் நம்புங்கள்... அயல் நாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்டால்.. என்றுமே நான் சந்தோஷமடைந்ததில்லை... காரணம்... அங்கு அவன் பெற்ற ரணங்கள்... காயங்கள்... 'அகத்தின் அழகு முகத்தில்' என்பதைப்போல அவன் முகமே காட்டி கொடுத்துவிடும்... அவனுடைய வலிகளை அவன் மட்டுமே அறிவான்... அவர்களுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேன்...
தங்கள் பதிவை பார்க்கும் முன்... அண்ணா சாலையின் நடந்து வரும்போது... என் மனதில் உதித்த வரிகள்...
"அயலாருக்கு
என் நாடு..... பிச்சைக்கார நாடாய் தெரிந்தாலும்
என் கால்கள்.... என் தாய் மண்ணில்தான்
என் நேசம்... என் சக பிச்சைக்காரனைத்தான்
என் சுவாசம்... என் தேசக் காற்றைத்தான்
இதுவே என்றும் நான் கண்ட... காணும்..... சொர்க்கம்...
மிக நல்ல பதிவு...
வேதனையால் இதயத்தின் ரத்தநாளங்கள் புடைக்கவைத்த பதிவு...
நட்புடன்...
காஞ்சி முரளி...
(சென்ற பதிவில் நான் நன்றி சொன்னதுக்கு காரணம்... என் கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நண்பா....!)
//உங்கள் உழைப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். பணத்தின் மதிப்பை அவர்களுக்கும் தெரிய படுத்துங்கள். காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான். விழித்து கொள்ளுங்கள்!!!!//
உண்மை.
எனக்கு தெரிந்து இங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் பலரின் பிள்ளைகள் பொறுப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். மிக நல்ல பதிவு ஸ்டீபன்.
அருமையா சொல்லியிருக்கீங்க ஸ்டீபன்.
நல்ல பகிர்வு,, அக்பர் சொல்வ்து முழுக்க உண்மை
பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், காஸ்லி மொபைலும், பைக்கும் , வாங்கி கேட்டு படிப்பில் கவ்னம் செலுத்தாமல் ஊர் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று வந்து பிறர் சொல்லும் போது ரொம்ப வே கழ்டமாக இருக்கும் அவர்களுக்கு .
என்னஎல்லாம் பணம்..
இங்கு தந்தை ஒரு பக்கம் கழ்டபட அங்கு பையன் எல்லாத்ட்தையும் கரைக்கிரார்கள்.
எல்லாமே பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி தான் வளர்ககனும்
http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_19.html
என் இடுகையும் பாருங்கள்
உங்கள் பதிவு யுத் ஃபுல் விகடனில் வந்துள்லது வாழ்த்துக்கள்.
சாரி தல கொஞ்சம் லோட்டாயிடுச்சு.
எல்லாம் சரிதான். கண்முன்னே இதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இங்கே படும கஷ்டங்கள் ஊர்ல சிலபேருக்கு தெரியாம நாக்குல நரம்பே இல்லாம பேசுவாங்க.... உலகம் ரொம்ப வினோநதமானது ஸ்டீபன்.
ஸ்டீபன், அருமை. இங்கு டிவியில் அபுதாபியில் உலகிலேயே மிக உயரமான, மக்கள் குடியிருக்க அபார்ட்மென்ட்கள், கடைகள் மற்றும் பல வசதிகளோடு கூடிய கட்டிடம் கட்டுவதை காட்டினார்கள். பெரும்பாலனவர்கள் இந்தியர்களே. பார்க்க பாவமாக இருந்தது. என்னத்தை சொல்ல?
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும். வளர்ந்த பிறகு எதுவுமே ஏறாது.
யதார்த்தமாக உண்மை நிலையை சொல்லியிருக்கிறீகள். வெளி நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை சேமிக்காமல் தாம் தூம் என் செலவு செய்யும் பல குடும்பத்தினரை இங்கு பார்க்கிறேன். தம் குடுப்பத்தினருக்கு, தான் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறேன் என்பதை வெளிப்படையாக வெளி நாட்டில் வாழும் நண்பர்கள் சொல்ல வேண்டும்.
அவர்களது கஷ்டமான வாழ்வைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆயினும் உங்கள் எழுத்தில் விபரமாகப் படிக்கும்போது வேதனையாக இருக்கிறது
இதைவிடவும் மனதளவிலும்... உடலளவிலும் கஷ்டங்கள் நிறையவே உண்டு. என் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு.
என்போன்றோரை உன்னிப்பாக கவனித்து அவர்களின் துயரத்தையும்.பதிவேற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க.
உங்க அலசல் தொடரட்டும்.
அனைவரும் உணர வேண்டிய பதிவு.
உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன்.
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//நண்பரே அந்த தந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உங்களின் வார்த்தைகளில் உணர்ந்தேன் .
நானும் இங்கு வாழ்பவன்தான் சரியாக படம் பிடித்து காட்டி இருக்கிறது உங்களின் பதிவு . பகிர்வுக்கு நன்றி .///
வாங்க நண்பரே... தந்தைகளின் உழைப்பு குழந்தைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. நமது வாயால் சொன்னால் தான் தெரியும்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@கே.ஆர்.பி.செந்தில் said...
//அண்ணே இதுபோல் பல பிரச்சினைகள் உண்டு ...//
ஆமா அண்ணே.. உங்களுக்கு தெரியாததா? வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@இளம் தூயவன் said...
//நிறைய பேர் தான் படும் கஷ்டங்களை வெளியில் சொல்வதில்லை, அதுவே பெரிய தவறு.//
வாங்க இளம்தூயவன்.. உங்களின் முதல் வருகை இனிதாகட்டும்..
@ஜெய்லானி said...
//காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான்//
உண்மைதான் சிந்திக்க வேண்டிய வரிகள்..!!//
ஆமா ஜெய்லானி.. காலம் கடந்து வருத்தப்படுவர்கள் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Chitra said...
//தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
...... உண்மையிலேயே படும் கஷ்டங்களை மறைக்காமல் சொல்லி, பணத்தின் அருமையையும் புரிய வைக்கத்தான் வேண்டும்..... அவர்களின் வேர்வையும் கண்ணீரும் தான் இவர்களின் பன்னீர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பது தெரிய வேண்டும்.//
உண்மைதான் இப்போது உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் சுலபமாக கிடைத்து விடுகிறது,,, அது எவ்வாறு கிடைக்கிறது என்பதை சிந்திக்க மறந்து விடுகிறார்கள்..
@asiya omar said...
//ஒரு சிலர் லீவு நாட்களில் கூட வீட்டு வேலை செய்து சம்பாதிப்பதை பார்த்து மனது சங்கடப்பட்டிருக்கிறேன்,என் சகோதரர்,கணவர் இருவரும் முதலில் துபாயை சுற்றி காட்டும் பொழுது சோனாப்பூர் என்ற லேபர் கேம்ப்பை காட்டினங்க,நம்ம ஆட்கள் எப்படி எல்லாம் இருக்காங்கன்னு பாருன்னு,கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.//
உண்மைதான் சகோதரி... அவர்கள் வாழும் சூழல் கொடுமையான ஒன்று தான்..
@அன்புடன் மலிக்கா said...
//Chitra said...
தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
...... உண்மையிலேயே படும் கஷ்டங்களை மறைக்காமல் சொல்லி, பணத்தின் அருமையையும் புரிய வைக்கத்தான் வேண்டும்..... அவர்களின் வேர்வையும் கண்ணீரும் தான் இவர்களின் பன்னீர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பது தெரிய வேண்டும்.
//
உண்மையிலும் உண்மை அவர்களுக்கு உணர்தியால்தான் உண்மை நிலமைபுரியும். மறத்தால் பின் சிரமங்கள் அனைவருக்கும்..
நல்லதொரு பதிவு ஸ்டீபன்//
தன் கஷ்டம் தன்னோடு போகட்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.. இந்த மனநிலை பின்னாளில் பெரிய மனகஷ்டத்தை உண்டு பண்ணும்...
//நல்லதொரு பதிவு ஸ்டீபன்//
உங்கள் வாயல் கேட்பது ரெம்ப சந்தோசம்...
@தமிழ் உதயம் said...
//வெளிநாட்டில் வேலை செய்வதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை, இங்குள்ளவர்கள் புரிந்து கொள்வதில்லை. கடன் பட்டு வெளிநாடு போகிறவர்களில், பெரும்பாலோர் கடன்காரர்களாக தான் வாழ்கிறார்்கள் . வெளிநாட்டு வேலை, அவர்களின் வளர்ச்சிக்கு உதவியதா என்றால் பூஜ்யமே.//
நீங்கள் சொல்வது சரிதான் தமிழ் சார்... கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி..
@வடுவூர் குமார் said...
//இரண்டு அக்கவுண்ட்!! --- கொடுமை.//
உண்மைதான் குமார் சார்... அவருடைய மனநிலை கஷ்டமான ஒன்று..
@அஹமது இர்ஷாத் said...
//வருந்ததக்க விஷயம்....//
வாங்க இர்ஷாத்... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@அண்ணாமலை..!! said...
//ரொம்ப நல்ல கட்டுரை நண்பரே!//
வாங்க அண்ணாமலை சார்... ரெம்ப நாளைக்கு அப்புறம் கமெண்ட் போட்டு இருக்கீங்க... ஆனா உங்க ஓட்டு எனக்கு எப்பவும் கிடைச்சிருக்கு.. உங்க கட்டுரைகளை விடாவா சார்.. புது பதிவு போடுங்க... எதிர்பார்க்கிறேன்...
@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//நன்றாக சொல்லிருக்கீங்க ஸ்டீபன். இதுதான் இங்கவாழ்பவர்களின் நிலை. இதை நினைக்கும்போது கண்களில் கண்ணீர் துளிக்கிறது. என்ன்செய்ய?.. இதல்லாம் கடந்துதான் ஆகணும்.. எல்லோருக்கும் ஒரு நல்ல சூழ்நிலை கிடைக்க இறைவன் அருள்புரிவான்.//
வாங்க ஸ்டார்ஜன்... கண்டிப்பா இவர்களுக்கு நல்ல வழிகள் கிடைக்க வேண்டும்..
@Riyas said...
//நானும் அபுதாபியிலதான்... இங்குள்ள நிலையை மிகச்சரியாக சொன்னீர்கள்... நன்றி//
வாங்க ரியாஸ்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
உயிரோட்டம் உள்ள இடுகை ஸ்டீபன்
உண்மையை அப்படியே படம் போட்டுக் காட்டி இருக்கின்றிர்கள்.
ரொம்ப நல்ல பகிர்வு...
வேலை பார்க்கன்னு வந்துட்டு... இளமை, இன்பம்....எல்லாம் தொலைச்சிட்டு...
திரும்பி போகும் போதும்... இப்படி வருந்துற மாதிரி நடந்தால் ரொம்ப கஷ்டம் தான்.. :-((
இது முடிவில்லா தொடர் கதைங்க..!!
ம்ம்ம் உண்மையை சொல்ல வேண்டிய நேரம்......
ம்ம்.. இங்குள்ளவர்கள் தம் குடும்பத்திடம் தன் பணி குறித்த விவரங்களைத் தவறாமல் தெரிவிக்க வேண்டும்!
மேலும், புதிதாகத் தெரியாமல் வருபவர்கள் என்றால் சரி; வந்து கஷ்டம் அனுபவித்துவிட்டு, ஊருக்குச் சென்றாலும் இதே கஷ்டத்தை அனுபவிக்க மீண்டும் வருவது ஏன்? ஊரிலேயே ஏதாவது வேலை செய்யலாமே?
@அபி அப்பா said...
//அன்பு நாடோடி!
நான் கடந்த 19 வருஷமாக அதே வலைகுடாவில் அதே கட்டுமான துறையில் தான் இருக்கின்றேன். நாணயத்துக்கு இரு பக்கமும் உண்டு. நீங்கள் ஒரு பக்கம் எழுதியிருக்கீங்க. அதுவும் சரிதான். தப்பு என்று சொல்லவில்லை.
ஆனால் நான் எழுதிய இரண்டு இடுகைகள் பாருங்க. மனிதன் இப்படியும் அங்கே வாழலாம் எனவும் தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.
http://abiappa.blogspot.com/2007/10/blog-post_16.html
அடுத்து
http://abiappa.blogspot.com/2007/11/blog-post_01.html
இப்படியும் அங்க இருக்கின்றார்கள் நாடோடி!
மத்தபடி பதிவு 100 சதம் உண்மை தான்!///
வாங்க சார்... உங்களுடைய இரண்டு இடுகைகளையும் படித்தேன்... நானும் அவர்களை போல் இங்கு சம்பாதிப்பவர்களை பார்த்திருக்கிறேன்... உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி...
@எம் அப்துல் காதர் said...
//ஒருவர் தனது பணத்தை இரண்டு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவரிடம் "ஏன் இரண்டு வங்கி கணக்குக்கு..//
இது அன்றாடம் இங்கே நடக்கும் சர்வசாதாரண நிகழ்ச்சி ஸ்டீபன் . எல்லோருக்கும் ஆறுதல் சொல்லியே ஓய்ந்து போய்டணும். இதை விட, ரகசியமாய் மனைவிக்கு அனுப்ப வேண்டிய பதினந்தாயிரத்தை அம்மாவுக்கும், அம்மாவுக்கு அனுப்ப வேண்டிய மூவாயிரத்தை மனைவிக்கும் மாற்றி அனுப்பி விட்டு,, ஏற்படும் ரகளைகளை சொல்லி மாயும் கஸ்டமர்களை என்ன வென்று சொல்வது. சிறிது தான் மாயனும்...!//
வாங்க அப்துல் என்னைவிட உங்களுக்கு அனுபவம் நிறையா இருக்கும்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@r.v.saravanan said...
//தான் பணம் சம்பாதிக்க என்ன கஷ்டபடுகிறோம் என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும் அவர்களது கஷ்டத்தை குடும்பத்திற்கு புரிய வைக்க வேண்டும்
நல்ல பதிவு ஸ்டீபன் நன்றி//
வாங்க சரவணன்.... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@தமிழ் அமுதன் said...
நல்ல பதிவு ..!
’’என் அப்பா வெளி நாட்டில இருக்காரு’’
என்று நான் எழுதிய பதிவு இந்த லின்கில்
http://pirathipalippu.blogspot.com/2008/12/blog-post_21.html///
படித்தேன் சார்.... அருமையாக எழுது இருக்கீங்க...முதல் வருகைக்கும், பலோயர் ஆகியதற்கும் ரெம்ப நன்றி..
@ராம்ஜி_யாஹூ said...
///நல்ல பதிவு. என் நண்பர்கள் கூறி கேட்டு இருக்கிறேன், ஒரே அறையில் ஆறு முதல் எட்டு நபர்கள் இருப்பார்களாம். நம் ஊர் ரயில் வண்டி மாதிரி படுக்கைக்கு மேல் படுக்கை. லோயர் பர்த், அப்பர் பர்த் மாதிரி கட்டிக்கலாம்.
.எட்டு பேர்களும் ஒரே குளியல் அரை, கழிப்பிடம் உபயோகப் படுத்த வேண்டுமாம்.
காலையில் அவசரமாக சிறுநீர் கழிக்க ஆசைப் பட்டால் கழிவறை மற்றும் ஒரு நபரின் பயன் பாட்டில் இருக்குமாம்.
இதை விட இன்னொரு கொடுமை என்று ஒன்று சொன்னார். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று தம்பதியினர் குடி இருப்பார்களாம், ஒரே சமையல் அரை, குளியல் அரியம்.
பல இடங்களில் அடுத்த தம்பதியினர் சமையல், குளியல், சோப்பு பற்றி வர்ணனை வேறாம்.
இன்னும் பல வெற்றி கொடி கட்டு படங்கள் வர வேண்டும் நமக்கு.
Thanks for sharing the real truths here. This will save lot of next generation Tamil /Indians.///
வாங்க ராம்ஜி சார்... உங்களுடைய கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி... தொடந்து வாருங்கள்..
@மங்குனி அமைச்சர் said...
//இயந்திர வாழ்க்கை , அதை புரிந்து கொள்ளாத சொந்தங்கள் , பாவம் அந்த இயந்திரங்கள்//
ஆமாம் அமைச்சரே.... உங்கள் க்ருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி..
@காஞ்சி முரளி said...
///மிகவும் அருமையான பதிவு...
இவன் ஓடாய் தேய்தலை தன் உறவுக்கும்.. நட்புக்கும் உணர்த்துதல் வேண்டும்...
தான் வாங்கிவந்த 'சென்ட்'... தன் வியர்வைகளால் வாங்கியது என்பதை உணர்த்துதல் வேண்டும்...
நீங்கள் நம்பினால் நம்புங்கள்... அயல் நாடுகளிலிருந்து வருபவர்களைக் கண்டால்.. என்றுமே நான் சந்தோஷமடைந்ததில்லை... காரணம்... அங்கு அவன் பெற்ற ரணங்கள்... காயங்கள்... 'அகத்தின் அழகு முகத்தில்' என்பதைப்போல அவன் முகமே காட்டி கொடுத்துவிடும்... அவனுடைய வலிகளை அவன் மட்டுமே அறிவான்... அவர்களுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேன்...
தங்கள் பதிவை பார்க்கும் முன்... அண்ணா சாலையின் நடந்து வரும்போது... என் மனதில் உதித்த வரிகள்...
"அயலாருக்கு
என் நாடு..... பிச்சைக்கார நாடாய் தெரிந்தாலும்
என் கால்கள்.... என் தாய் மண்ணில்தான்
என் நேசம்... என் சக பிச்சைக்காரனைத்தான்
என் சுவாசம்... என் தேசக் காற்றைத்தான்
இதுவே என்றும் நான் கண்ட... காணும்..... சொர்க்கம்...
மிக நல்ல பதிவு...
வேதனையால் இதயத்தின் ரத்தநாளங்கள் புடைக்கவைத்த பதிவு...
நட்புடன்...
காஞ்சி முரளி...
(சென்ற பதிவில் நான் நன்றி சொன்னதுக்கு காரணம்... என் கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நண்பா....!)///
வாங்க முரளி அண்ணே... விரிவான பின்னுட்டத்திற்கு ரெம்ப நன்றியண்ணே... அதிலும் கவிதையும் சேர்ந்து தூள் கிளப்புது... தொடர்ந்து வாங்க உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... நானும் மெருகேறுவேன்...
@அக்பர் said...
//உங்கள் உழைப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். பணத்தின் மதிப்பை அவர்களுக்கும் தெரிய படுத்துங்கள். காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான். விழித்து கொள்ளுங்கள்!!!!//
உண்மை.
எனக்கு தெரிந்து இங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் பலரின் பிள்ளைகள் பொறுப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். மிக நல்ல பதிவு ஸ்டீபன்.//
வாங்க அக்பர்.... நானும் ஊரில் பார்த்திருக்கிறேன், அந்த கொடுமையின் வலிதான் இந்த பதிவு..
@செ.சரவணக்குமார் said...
//அருமையா சொல்லியிருக்கீங்க ஸ்டீபன்.//
வாங்க சரவணன் சார்... கருத்துக்கு ரெம்ப நன்றி
@Jaleela Kamal said...
//நல்ல பகிர்வு,, அக்பர் சொல்வ்து முழுக்க உண்மை
பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், காஸ்லி மொபைலும், பைக்கும் , வாங்கி கேட்டு படிப்பில் கவ்னம் செலுத்தாமல் ஊர் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று வந்து பிறர் சொல்லும் போது ரொம்ப வே கழ்டமாக இருக்கும் அவர்களுக்கு .
என்னஎல்லாம் பணம்..
இங்கு தந்தை ஒரு பக்கம் கழ்டபட அங்கு பையன் எல்லாத்ட்தையும் கரைக்கிரார்கள்.
எல்லாமே பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி தான் வளர்ககனும்
http://allinalljaleela.blogspot.com/2010/06/blog-post_19.html
என் இடுகையும் பாருங்கள்
உங்கள் பதிவு யுத் ஃபுல் விகடனில் வந்துள்லது வாழ்த்துக்கள்.//
வாங்க ஜலீலா மேடம்... உங்களுடைய இடுகையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.. நீங்கள் சொல்லி தான் யூத்புல் விகடனில் வந்திருப்பது தெரியும்.. தகவலுக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@நாஞ்சில் பிரதாப் said...
//சாரி தல கொஞ்சம் லோட்டாயிடுச்சு.
எல்லாம் சரிதான். கண்முன்னே இதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இங்கே படும கஷ்டங்கள் ஊர்ல சிலபேருக்கு தெரியாம நாக்குல நரம்பே இல்லாம பேசுவாங்க.... உலகம் ரொம்ப வினோநதமானது ஸ்டீபன்.///
வாங்க தல.. நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவீங்கனு தெரியும் தல..
@vanathy said...
//ஸ்டீபன், அருமை. இங்கு டிவியில் அபுதாபியில் உலகிலேயே மிக உயரமான, மக்கள் குடியிருக்க அபார்ட்மென்ட்கள், கடைகள் மற்றும் பல வசதிகளோடு கூடிய கட்டிடம் கட்டுவதை காட்டினார்கள். பெரும்பாலனவர்கள் இந்தியர்களே. பார்க்க பாவமாக இருந்தது. என்னத்தை சொல்ல?
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும். வளர்ந்த பிறகு எதுவுமே ஏறாது.//
வாங்க வானதி சகோ.... நீங்கள் தொலைகாட்சியில் பார்த்தது உண்மைதான்.. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@திரவிய நடராஜன் said...
//யதார்த்தமாக உண்மை நிலையை சொல்லியிருக்கிறீகள். வெளி நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை சேமிக்காமல் தாம் தூம் என் செலவு செய்யும் பல குடும்பத்தினரை இங்கு பார்க்கிறேன். தம் குடுப்பத்தினருக்கு, தான் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறேன் என்பதை வெளிப்படையாக வெளி நாட்டில் வாழும் நண்பர்கள் சொல்ல வேண்டும்.//
ஆமா நடராஜன் சார்... உழைப்பவர்களின் வருத்தம் அவர்களுக்கு தெரியாததால் தான்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Dr.எம்.கே.முருகானந்தன் said...
//அவர்களது கஷ்டமான வாழ்வைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆயினும் உங்கள் எழுத்தில் விபரமாகப் படிக்கும்போது வேதனையாக இருக்கிறது//
வாங்க டாக்டர் சார்... உங்கள் கருத்தை இங்கு பதிந்தமைக்கு ரெம்ப நன்றி..
@சி. கருணாகரசு said...
//இதைவிடவும் மனதளவிலும்... உடலளவிலும் கஷ்டங்கள் நிறையவே உண்டு. என் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு.
என்போன்றோரை உன்னிப்பாக கவனித்து அவர்களின் துயரத்தையும்.பதிவேற்றிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க.
உங்க அலசல் தொடரட்டும்.///
வாங்க கருணாகரசு சார்... உங்கள் கருத்து .. இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி சார்.. ரெம்ப நன்றி..
@சி. கருணாகரசு said...
//அனைவரும் உணர வேண்டிய பதிவு.
உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன்.//
வாங்க கருணாகரசு சார்... இந்த வார்த்தைகள் என்னை நல்ல படைப்புகள் உருவாக்க உற்சாகபடுத்துகிறது.... ரெம்ப நன்றி சார்.
@~~Romeo~~ said...
//உயிரோட்டம் உள்ள இடுகை ஸ்டீபன்//
வாங்க ரோமியோ சகோ... என்ன புது இடுகைகள் என்றையும் காணவில்லை... எழுதுங்க...
@சந்ரு said...
//உண்மையை அப்படியே படம் போட்டுக் காட்டி இருக்கின்றிர்கள்.//
வாங்க சந்ரு ... உங்கள் முதல் வருகை இனிதாகட்டும்..
@Ananthi said...
//ரொம்ப நல்ல பகிர்வு...
வேலை பார்க்கன்னு வந்துட்டு... இளமை, இன்பம்....எல்லாம் தொலைச்சிட்டு...
திரும்பி போகும் போதும்... இப்படி வருந்துற மாதிரி நடந்தால் ரொம்ப கஷ்டம் தான்.. :-((
இது முடிவில்லா தொடர் கதைங்க..!!//
வாங்க ஆனந்தி மேடம்... நாம் படும் கஷ்டகளை குழந்தைகளின் காதில் போட்டு வைத்தால் புரிந்து கொள்வார்கள்..உங்கள் வருகைக்கும். கருத்துக்கும் ரெம்ப நன்றி
@angel said...
//ம்ம்ம் உண்மையை சொல்ல வேண்டிய நேரம்......//
ஆஹா கிளம்பிட்டாங்கய்யா? கிளம்பிட்டாங்க..... அவ்வ்வ்வ்வ்
@ஹுஸைனம்மா said...
//ம்ம்.. இங்குள்ளவர்கள் தம் குடும்பத்திடம் தன் பணி குறித்த விவரங்களைத் தவறாமல் தெரிவிக்க வேண்டும்!
மேலும், புதிதாகத் தெரியாமல் வருபவர்கள் என்றால் சரி; வந்து கஷ்டம் அனுபவித்துவிட்டு, ஊருக்குச் சென்றாலும் இதே கஷ்டத்தை அனுபவிக்க மீண்டும் வருவது ஏன்? ஊரிலேயே ஏதாவது வேலை செய்யலாமே?//
வாங்க ஹுஸைனம்மா .. உங்களின் கேள்விக்கு பதில் அக்பரின் இடுகையை பார்த்தால் கொஞ்சம் புரியும்.. அவர் மேலோட்டமாக எழுதியிள்ளார்... கண்டிப்பாக இதை பற்றி நானும் ஒரு இடுகை விரைவில் போடுவேன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
மிகவும் பயனுள்ள பதிவு ,கண்ணால் பார்த்ததையும், காதால் கேட்டதையும் அனுபவித்ததை போன்று எழுதியுள்ளீர்கள் .
அன்பின் ஸ்டீபன் - குடும்பத்தினைக் காப்பாற்றுவதற்காக அயலகம் செல்லும் ஆண்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதனை பல நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்கள் தாயகம் வரும் போது - குடும்பத்தாரிடம் தான் படும் சிரமத்தினைப் பற்றிக் கூறுவதில்லை. இதுதான் தவறு. இப்பொழுது அயலகங்களீல் சூழ்நிலை மாறி வருகிறது என நினைக்கிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment