எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அம்மாவின் கையை பிடித்து கொண்டு கோவிலுக்கு போய் வரும் வழியில் பார்க்கும் பொருட்களின் மேல் எல்லாம் ஆசை வரும். அதை அம்மாவிடம் சொல்லுவேன். அவர்களின் பதில் நான் கேட்க்கும் பொருட்களின் விலையை பொறுத்து மாறுபடும். சிறிய பொருளாக இருந்தால் அடுத்த மாதம் "நீ முதல் ராங்க் வாங்கு, உனக்கு வாங்கி தருகிறேன்" என்பார்.
அதுவே கொஞ்சம் பெரிய பொருளாக இருந்தால் அவர்களின் பதில் பெரும்பாலும் இப்படி தான் இருக்கும் "அப்பா வந்தவுடன் வாங்கி தர சொல்லுவேன்" அல்லது "அப்பாவிடம் வெளி நாட்டில் இருந்து வாங்கி வர சொல்லுகிறேன்" என்பதாக தான் இருக்கும்.
அதிலும் சாப்பிடும் பொருளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். "நான் வீட்டில் செய்து தருகிறேன்" அல்லது "அது நல்ல பொருள் அல்ல, சாப்பிட்டால் வயிறு வலிக்கும்" என்ற பதில்கள் தான் அதிகமாக இருக்கும்.
இப்படிதான் எழுதுவதற்கு பென்சில் வாங்குவதில் இருந்து துணி வாங்குவது வரைக்கும் ஏமாற்றம் தான் இருக்கும். எதுவும் கேட்டவுடன் கிடைத்து விடாது. ஒவ்வொரு ஏமாற்றத்திற்கும் அம்மா ஒவ்வொரு காரணங்களை சொல்லி என்னிடம் சமாளிப்பார்கள். ஆனால் நான் கேட்ட பொருளை உடனடியாக வாங்கி கொடுத்து விடாவிட்டாலும் நான் எதிர்பார்க்காத நேரத்தில் வாங்கி தந்து விடுவார்கள்.
இவ்வாறு ஏமாற்றம் என்பது சமகால அளவில் எல்லோருக்கும் நிகழ்ந்த ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு சின்ன சின்ன விசயங்களில் கிடைக்கும் ஏமாற்றங்கள் நமக்கு வாழ்க்கையின் பின்னாளில் ஏற்பட போகும் எதிர்பாராத ஏமாற்றங்களை தாங்குவதற்கு வழி வகுக்கிறது.
குழந்தை பருவம் முடித்து, இளவயதை தொட்டுவிட்டால் பல தோல்விகளையும், ஏமாற்றங்களையும் நாம் தாங்கி கொள்ள தயாராக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியுலகம் வந்து விட்டால் நம்மை துரத்தும் பிரச்சனைகளில் இந்த தோல்விகளும், ஏமாற்றங்களும் சேர்ந்து விடுகிறது. நான் இதுவரை தோல்வியே சந்தித்தது இல்லை, ஏமாற்றாமா? அப்படி என்றால் என்னா? என்று எவராலும் கூற இயலாது. ஏதாவது ஒரு வழியில் நம்மை இவை ஆட்கொண்டுவிடுகின்றன.
சிறிய வயதில் பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் சின்ன சின்ன ஏமாற்றங்கள், நம்முடைய மனதில் ஒரு பக்குவத்தை கொடுக்கின்றது. இந்த அனுபவம் நமக்கு பிற்காலங்களில் நடக்கும் சில ஏமாற்றங்கள் மற்றும் தோல்வியில் இருந்து மீள்வதற்கு வழி செய்கின்றது. எனவே ஏமாற்றமே வேண்டாம் என்றோ?... தோல்வியே எனக்கு தேவையில்லை என்றோ?.. சொல்லிவிட முடியாது. இவைகளை அடுத்த வெற்றிக்கான அனுபவ பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஆனால் இப்போது வளரும் குழந்தைகள் இந்த தோல்விகளையும், ஏமாற்றங்களையும் கடந்து தான் வருகிறார்களா?... அவர்களுக்கு இவைகளை தாங்கும் மனபக்குவம் இருக்கிறதா?. என்ற கேள்விகளுக்கு பதில் இப்போது நடக்கும் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்தாலே உங்களுக்கு தெரிந்து விடும்... எப்படி வளர்கிறார்கள்?... வளர்க்கப்படுகிறார்கள்? என்று.
இரண்டு பாலரும் சேர்ந்து படிக்கும் மேல்நிலைப்பள்ளி அது. அதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுக்கிறான். அந்த மாணவி அழுது கொண்டே அந்த கடிதத்தை தனது வகுப்பாசிரியரிடம் கொடுக்கிறாள். அதை வாங்கி படித்த வகுப்பாசிரியர் அந்த மாணவனை அழைத்து திட்டிவிட்டு "வீட்டிற்கு சென்று உனது பெற்றோரை கூட்டி வா" என்று சொல்லி வெளியில் அனுப்பி விடுகிறார்.
வெளியில் வந்த மாணவன் வீட்டிற்கு செல்லவில்லை. பள்ளிக்கு பக்கத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துவிட்டான். மறுநாள் செய்தியறிந்து அனைவரும் விக்கித்து போனார்கள். யார் மீது குற்றம்?... ஒரு சிறிய தவறை தாங்குவதற்கு கூட அவனுடைய மனம் பக்குவ படவில்லை. எவ்வளவு கோழைத்தனமான முடிவு. அதுவும் இந்த சிறிய வயதில்...இது வேறு எங்கோ நடந்த கதையல்ல. எனது ஊரில் நடந்த சம்பவம்.
.
.
.
Wednesday, June 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
"நீ முதல் ராங்க் வாங்கு, உனக்கு வாங்கி தருகிறேன்" என்பார்.//
இப்பிடிச் சொல்லிச் சொல்லியே எங்களை நோகடிச்சிட்டாங்க பாஸ்.
பதிவில் எங்கள் அனைவரினதும் உள்ளக் கிடக்கையினைச் சுட்டியுள்ளீர்கள். பதிவு நிறைவேறாத மனித மனங்களின் வெளிப்பாடு.
ிறிய வயதில் பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் சின்ன சின்ன ஏமாற்றங்கள், நம்முடைய மனதில் ஒரு பக்குவத்தை கொடுக்கின்றது. இந்த அனுபவம் நமக்கு பிற்காலங்களில் நடக்கும் சில ஏமாற்றங்கள் மற்றும் தோல்வியில் இருந்து மீள்வதற்கு வழி செய்கின்றது. எனவே ஏமாற்றமே வேண்டாம் என்றோ?... தோல்வியே எனக்கு தேவையில்லை என்றோ?.. சொல்லிவிட முடியாது. இவைகளை அடுத்த வெற்றிக்கான அனுபவ பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்.
...... good message. அருமையான அறிவுரை. :-)
இப்போது பசங்க வாங்கித் தந்தால்தான் விடுறாங்க ...
அப்புறம் அந்தப் பையனின் தற்கொலை மனதை பிசைகிறது ,,
காரைக்கால் மாங்கனி திருவிழாவில் பார்த்தது. ஒரு ஏழைச் சிறுவனும் அவனுடைய அக்காவும் வழி நெடுகிலும் போடப்பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்தவாரே சென்றனர். அதைத் தொட்டுப்பார்க்கும் ஆசை இருந்ததே ஒழிய என்ன விலை என யாருமே கேட்கவில்லை,...
இல்லாதவன் பிள்ளைக்கு எல்லாமும் தெரியும் என்றே தோன்றியது,.
- ஜெகதீஸ்வரன்,.
http://sagotharan.wordpress.com/
//ஒரு சிறிய தவறை தாங்குவதற்கு கூட அவனுடைய மனம் பக்குவ படவில்லை. எவ்வளவு கோழைத்தனமான முடிவு. அதுவும் இந்த சிறிய வயதில்...இது வேறு எங்கோ நடந்த கதையல்ல. எனது ஊரில் நடந்த சம்பவம்.//
நீங்கள் சொன்ன வளர்ப்பு தான் காரணம்
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கேட்டது கிடைக்க வேண்டும் அதுவும் உடனே இல்லையெனில் அடம் தான்
நல்ல கருத்து நாடோடி, நான் கூட என் குழந்தைகள் கேட்கும் போது சம்பளம் வந்ததும் வாங்கித் தரேன்னு தான் சொல்வேன். கையில் பணம் இருந்தால் கூட. அது கேட்டதும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும்.
இது ஒரு நல்ல இடுகை,முன்னாடி நாம் வளர்ந்தவிதம் வேறு ,இப்ப நம்ம பிள்ளைகள் வளரும் விதம் வேறு தான்,அவர்கள் தான் வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளிலும் பழகி பக்குவப்படவேண்டும்.அந்த பையனோட முடிவு மனதை உலுக்கிவிட்டது.
// "நீ முதல் ராங்க் வாங்கு, உனக்கு வாங்கி தருகிறேன்" என்பார்.//
உங்க மேல அவ்ளோ நம்பிக்கை... இவன் என்னிக்கு முதல் ரேங்க வாங்கப்போறான்னு...:))
நல்ல பதிவு ஸ்டீபன்... மனப்பக்குவம் சின்ன வயசுலேயே வரனும்...வளரும்போதே சொல்லிக்கொடுக்கனும்...
உண்மைதான் . இப்ப வரும் டீ வி , திரைபடங்களே இந்த மாதிரி நடக்க காரணம்.
ஏமாற்றம், தோல்வி - இவைகளை தாங்கி கொள்ள என்பதை எதிர் கொள்ள கற்று கொள்ள வேண்டும்.
mm.நல்ல பகிர்வு.
நல்ல விசயம் சொன்னீங்க..
சிறுவயது வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
ஏமாந்து பழகணும் - உண்மைதானே அதுதான் மனப்பக்குவத்துக்கு வழிவகுக்கும். இப்போதெல்லாம் நினைத்தது நடந்தால்தான் வெற்றி என்று நினைக்கிறார்கள். உண்மையான சந்தோசம் வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.
ஏன் தங்கை மகன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித்தரும் படி ஏன் தங்கையைக் கேட்டான். அதற்க்கு அவள் சொன்னாள், "தங்கம், நீ உன் வகுப்புல முதல் பத்து ராங்குக்குள்ள வந்துடு, நான் உனக்கு கட்டாயம் சின்ன சைக்கிள் வாங்கி தரேன்" [வகுப்புல மொத்தம் 40 பேர்].
. அதற்க்கு அவன் சொன்ன பதில்: " ஏம்மா சுத்தி வளச்சு பேசுற, அதுக்குப் பேசாம சைக்கிள் வாங்கித் தரமாட்டேன்னு சொல்லிட்டு போயேன்". [நான் இதைக் கேட்டப்போ அட இவ்வளவு புத்திசாலித் தனமா பேசற பையன் ஏன் வகுப்புல 35 வது எடுக்கிறான் என்று யோசித்தேன்.]
மிக அருமையான, அவசியமான விஷயம். ஒரு விஷயம் கவனிச்சீங்களா, இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கேட்பதை மறுக்காமல் உடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களும் அந்நாளையக் குழந்தைகள்தானே? கேட்டால், என் பிள்ளை என்னைப் போலக் கஷ்டப்படாம இருக்கணும் என்று காரணம் வேறு சொல்கிறார்கள். அந்த வயதில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள்தான் பெரிய வயதில் பக்குவத்தைத் தரும்.
அருமையான பதிவு வாழ்த்துகள்..!
யோசிக்க வேண்டிய கருத்து..குழந்தை எது கேட்டாலும் வாங்கி கொடுத்து பழக்கிவிட்டால் பின்னால் சின்ன ஏமாற்றத்தைகூட தாங்கமுடியாமல் போய்விடுகிறது...பதிவுக்கு பாராட்டுக்கள்..
குழந்தைங்களுக்கு சின்ன சின்ன ஏமாற்றம் தெரிய வச்சு வளர்கறது நல்லது தான்..
நீங்க கடைசியா சொன்ன விஷயம், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..
என்னோட பொண்ணு வாங்கி தந்தாதான் விடுறா? பையனா இருந்தா அடிக்கலாம். ஆனாலும் எங்க அம்மா என்னை இதே போலதான் வளர்த்தாங்க.அருமையான பதிவு!
சிந்தனையை தூண்டும் கட்டுரை.
கடைசியில் அதிர்ச்சி. விழிப்புணர்ச்சியோடு இருப்போம்.
எதையும் தாங்க கூடிய மன பக்குவத்தை ,பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு ஏற்படுத்த் வேண்டும் என்பதை அருமையாக கூறியுள்ளிர்கள்.
மிகவும் அவசியமான பதிவு.
//ஹுஸைனம்மா said...
மிக அருமையான, அவசியமான விஷயம். ஒரு விஷயம் கவனிச்சீங்களா, இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கேட்பதை மறுக்காமல் உடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களும் அந்நாளையக் குழந்தைகள்தானே? கேட்டால், என் பிள்ளை என்னைப் போலக் கஷ்டப்படாம இருக்கணும் என்று காரணம் வேறு சொல்கிறார்கள். அந்த வயதில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள்தான் பெரிய வயதில் பக்குவத்தைத் தரும்.//
இதை நானும் வழிமொழிகிறேன் ..
@rk guru said...
//அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html//
வாங்க ரகு... வருகிறேன்.. வந்து படிக்கிறேன். உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி.
@தமிழ் மதுரம் said...
//"நீ முதல் ராங்க் வாங்கு, உனக்கு வாங்கி தருகிறேன்" என்பார்.//
இப்பிடிச் சொல்லிச் சொல்லியே எங்களை நோகடிச்சிட்டாங்க பாஸ்.
பதிவில் எங்கள் அனைவரினதும் உள்ளக் கிடக்கையினைச் சுட்டியுள்ளீர்கள். பதிவு நிறைவேறாத மனித மனங்களின் வெளிப்பாடு.//
வாங்க தமிழ் மதுரம்.. வருகைக்கும் , கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Chitra said...
//ிறிய வயதில் பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் சின்ன சின்ன ஏமாற்றங்கள், நம்முடைய மனதில் ஒரு பக்குவத்தை கொடுக்கின்றது. இந்த அனுபவம் நமக்கு பிற்காலங்களில் நடக்கும் சில ஏமாற்றங்கள் மற்றும் தோல்வியில் இருந்து மீள்வதற்கு வழி செய்கின்றது. எனவே ஏமாற்றமே வேண்டாம் என்றோ?... தோல்வியே எனக்கு தேவையில்லை என்றோ?.. சொல்லிவிட முடியாது. இவைகளை அடுத்த வெற்றிக்கான அனுபவ பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்.
...... good message. அருமையான அறிவுரை. :-)//
வாங்க சித்ரா மேடம் ... நீங்க எப்ப மேஜர் சுந்தர் ராஜன் போல் பேச ஆரம்பித்தீர்கள்... ஹா..ஹா..
@கே.ஆர்.பி.செந்தில் said...
//இப்போது பசங்க வாங்கித் தந்தால்தான் விடுறாங்க ...
அப்புறம் அந்தப் பையனின் தற்கொலை மனதை பிசைகிறது ,,//
வாங்க செந்தில் அண்ணா... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@ஜெகதீஸ்வரன். said...
//காரைக்கால் மாங்கனி திருவிழாவில் பார்த்தது. ஒரு ஏழைச் சிறுவனும் அவனுடைய அக்காவும் வழி நெடுகிலும் போடப்பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்தவாரே சென்றனர். அதைத் தொட்டுப்பார்க்கும் ஆசை இருந்ததே ஒழிய என்ன விலை என யாருமே கேட்கவில்லை,...
இல்லாதவன் பிள்ளைக்கு எல்லாமும் தெரியும் என்றே தோன்றியது,.
- ஜெகதீஸ்வரன்,.
http://sagotharan.wordpress.com///
வாங்க ஜெகதீஸ்வரன்.... நீங்கள் சொல்வது உண்மையே... நானும் பார்த்திருக்கிறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@கரிசல்காரன் said...
//ஒரு சிறிய தவறை தாங்குவதற்கு கூட அவனுடைய மனம் பக்குவ படவில்லை. எவ்வளவு கோழைத்தனமான முடிவு. அதுவும் இந்த சிறிய வயதில்...இது வேறு எங்கோ நடந்த கதையல்ல. எனது ஊரில் நடந்த சம்பவம்.//
நீங்கள் சொன்ன வளர்ப்பு தான் காரணம்
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு கேட்டது கிடைக்க வேண்டும் அதுவும் உடனே இல்லையெனில் அடம் தான்//
ஆமா கரிசல்... அந்த அடத்தை குறைக்க நாம தான் வழி செய்ய வேண்டும்.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@நாய்க்குட்டி மனசு said...
//நல்ல கருத்து நாடோடி, நான் கூட என் குழந்தைகள் கேட்கும் போது சம்பளம் வந்ததும் வாங்கித் தரேன்னு தான் சொல்வேன். கையில் பணம் இருந்தால் கூட. அது கேட்டதும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றும்.//
வாங்க மேடம் ... நீங்கள் செய்வது சரியே.... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@asiya omar said...
//இது ஒரு நல்ல இடுகை,முன்னாடி நாம் வளர்ந்தவிதம் வேறு ,இப்ப நம்ம பிள்ளைகள் வளரும் விதம் வேறு தான்,அவர்கள் தான் வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளிலும் பழகி பக்குவப்படவேண்டும்.அந்த பையனோட முடிவு மனதை உலுக்கிவிட்டது.//
வாங்க ஆசியா சகோ ... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@நாஞ்சில் பிரதாப் said...
// "நீ முதல் ராங்க் வாங்கு, உனக்கு வாங்கி தருகிறேன்" என்பார்.//
உங்க மேல அவ்ளோ நம்பிக்கை... இவன் என்னிக்கு முதல் ரேங்க வாங்கப்போறான்னு...:))
நல்ல பதிவு ஸ்டீபன்... மனப்பக்குவம் சின்ன வயசுலேயே வரனும்...வளரும்போதே சொல்லிக்கொடுக்கனும்...//
எங்கிட்ட இந்த விளையாட்டை வச்சிக்கிட்டு எங்க அம்மா தான் அவஸ்தை படுவாங்க... வேறு காரணம் தேடுவாங்க... ஏன்னா நாம படிப்புல கொஞ்சம் புலி..
@ஜெய்லானி said...
//உண்மைதான் . இப்ப வரும் டீ வி , திரைபடங்களே இந்த மாதிரி நடக்க காரணம்.//
வாங்க ஜெய்லானி.. கருத்துக்கு ரெம்ப நன்றி..
@Ganesh Ram said...
//Nice Post....//
Thanks Ram
@தமிழ் உதயம் said...
//ஏமாற்றம், தோல்வி - இவைகளை தாங்கி கொள்ள என்பதை எதிர் கொள்ள கற்று கொள்ள வேண்டும்.//
வாங்க தமிழ் சார்.... எங்க ஊர் வழக்கு தமிழில் எழுதிவிட்டேன்... மாத்தனும் என்று தான் நினைச்சேன்.. ஆனா எல்லா இடத்திலேயும் அந்த வார்த்தை தான் உபயோக படுத்தி இருக்கிறேன்..அதனால் விட்டு விட்டேன்.. ரெம்ப நன்றி... அடுத்த முறை கவனமாக இருக்கிறேன்..
வானம்பாடிகள் said...
mm.நல்ல பகிர்வு.//
ரெம்ப நன்றி பாலா அய்யா..
@முத்துலெட்சுமி/muthuletchumi said...
//நல்ல விசயம் சொன்னீங்க..//
வாங்க முத்துலெட்சுமி மேடம்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அக்பர் said...
//சிறுவயது வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
ஏமாந்து பழகணும் - உண்மைதானே அதுதான் மனப்பக்குவத்துக்கு வழிவகுக்கும். இப்போதெல்லாம் நினைத்தது நடந்தால்தான் வெற்றி என்று நினைக்கிறார்கள். உண்மையான சந்தோசம் வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.//
வாங்க அக்பர்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Jayadeva said...
//ஏன் தங்கை மகன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தனக்கு ஒரு மிதிவண்டி வாங்கித்தரும் படி ஏன் தங்கையைக் கேட்டான். அதற்க்கு அவள் சொன்னாள், "தங்கம், நீ உன் வகுப்புல முதல் பத்து ராங்குக்குள்ள வந்துடு, நான் உனக்கு கட்டாயம் சின்ன சைக்கிள் வாங்கி தரேன்" [வகுப்புல மொத்தம் 40 பேர்].
. அதற்க்கு அவன் சொன்ன பதில்: " ஏம்மா சுத்தி வளச்சு பேசுற, அதுக்குப் பேசாம சைக்கிள் வாங்கித் தரமாட்டேன்னு சொல்லிட்டு போயேன்". [நான் இதைக் கேட்டப்போ அட இவ்வளவு புத்திசாலித் தனமா பேசற பையன் ஏன் வகுப்புல 35 வது எடுக்கிறான் என்று யோசித்தேன்.]//
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்... இப்போது குழந்தைகள் எல்லாம் நல்லா பேச கத்து வைச்சிருக்காங்க... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.. ஜெயதேவா
@ஹுஸைனம்மா said...
//மிக அருமையான, அவசியமான விஷயம். ஒரு விஷயம் கவனிச்சீங்களா, இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கேட்பதை மறுக்காமல் உடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களும் அந்நாளையக் குழந்தைகள்தானே? கேட்டால், என் பிள்ளை என்னைப் போலக் கஷ்டப்படாம இருக்கணும் என்று காரணம் வேறு சொல்கிறார்கள். அந்த வயதில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள்தான் பெரிய வயதில் பக்குவத்தைத் தரும்.//
நீங்க சொல்வது உண்மைதான் ஹுஸைனம்மா ... நம் குழந்தை விசயத்தில்.. நம்முடைய பழைய வாழ்க்கையை மறந்து விடுகிறோம்..
@Riyas said...
அருமையான பதிவு வாழ்த்துகள்..!//
வாங்க ரியாஸ்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@தாராபுரத்தான் said...
//யோசிக்க வேண்டிய கருத்து..குழந்தை எது கேட்டாலும் வாங்கி கொடுத்து பழக்கிவிட்டால் பின்னால் சின்ன ஏமாற்றத்தைகூட தாங்கமுடியாமல் போய்விடுகிறது...பதிவுக்கு பாராட்டுக்கள்..//
வாங்க ஐயா... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@Ananthi said...
//குழந்தைங்களுக்கு சின்ன சின்ன ஏமாற்றம் தெரிய வச்சு வளர்கறது நல்லது தான்..
நீங்க கடைசியா சொன்ன விஷயம், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..//
வாங்க ஆனந்தி மேடம்... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@Software Engineer said...
//என்னோட பொண்ணு வாங்கி தந்தாதான் விடுறா? பையனா இருந்தா அடிக்கலாம். ஆனாலும் எங்க அம்மா என்னை இதே போலதான் வளர்த்தாங்க.அருமையான பதிவு!//
வாங்க சாப்ட்வேர் சார்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@சி. கருணாகரசு said...
//சிந்தனையை தூண்டும் கட்டுரை.
கடைசியில் அதிர்ச்சி. விழிப்புணர்ச்சியோடு இருப்போம்.//
வாங்க கருணகரன் சார்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@இளம் தூயவன் said...
//எதையும் தாங்க கூடிய மன பக்குவத்தை ,பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு ஏற்படுத்த் வேண்டும் என்பதை அருமையாக கூறியுள்ளிர்கள்.//
வாங்க இளம்தூயவன்.... ரெம்ப நன்றி.
@அன்புடன் மலிக்கா said...
//மிகவும் அவசியமான பதிவு.
//ஹுஸைனம்மா said...
மிக அருமையான, அவசியமான விஷயம். ஒரு விஷயம் கவனிச்சீங்களா, இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் கேட்பதை மறுக்காமல் உடன் வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களும் அந்நாளையக் குழந்தைகள்தானே? கேட்டால், என் பிள்ளை என்னைப் போலக் கஷ்டப்படாம இருக்கணும் என்று காரணம் வேறு சொல்கிறார்கள். அந்த வயதில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள்தான் பெரிய வயதில் பக்குவத்தைத் தரும்.//
இதை நானும் வழிமொழிகிறேன் ..//
நீங்க வழி மொழிந்தால் கரெக்டா தான் இருக்கும்.... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி மாலிக்கா சகோ..
////இவ்வாறு ஏமாற்றம் என்பது சமகால அளவில் எல்லோருக்கும் நிகழ்ந்த ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு சின்ன சின்ன விசயங்களில் கிடைக்கும் ஏமாற்றங்கள் நமக்கு வாழ்க்கையின் பின்னாளில் ஏற்பட போகும் எதிர்பாராத ஏமாற்றங்களை தாங்குவதற்கு வழி வகுக்கிறது///
தங்கள் இக்கூற்று... 100க்கு 1000 சதவீதம் உண்மை...
அடி வாங்கும் இரும்புதான்.... வளைந்து.. நெளிந்து... நல்ல கூர்மையான ஆயுதமாய்... உபயோகப் பொருட்களை மாறும்...
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரனின் அந்தகால ரசிகன்... அவர் ஓர் கதையில் சொல்வார்... "வலி தாங்கு"...
இது இன்றும் என் மனதில் ஒலித்துகொண்டே இருக்கும்... இது உடல் வலியை மட்டும் குறிப்பதில்லை... மனம்...இதயம்...வாழ்க்கை.. இவற்றில் ஏற்படும் வலியை தாங்கக்கூடிய ஆற்றலைப் பெறுபவன்தான்... வாழ்க்கையின் மாபெரும் வெற்றியை பெறமுடியும்... இன்றைய குழந்தைகளுக்கு அந்த "தாங்கும் ஆற்றல்" இல்லை.. அதற்க்கு காரணம் நாம்தான்.. நம் ஆடம்பர வாழ்வியல் முறைதான்...
எனக்கு நினைவு தெரிந்து... என் பள்ளி நாட்களில்... பள்ளியில் பேனாவை தொலைத்துவிட்டு... என் அன்னையிடம் (அந்தகாலத்திய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும்)... 007 ஜேம்ஸ்பாண்ட் லேதர் பெல்டில்... உடல் முழுவதும் சிகப்பு ரணங்களால் கோடிட்ட அடியினை வாங்கியிருக்கிறேன்... அப்படி அடிவாங்கிய நான் தற்போது என் குழந்தை பேனாவை தொலைத்தால்... "போகட்டும் விடு.. இன்னொன்றை வாங்கிகொள்ளலாம்" என...
அன்று நான் வாங்கிய அடி.. அதன்பின் எப்பொருளையும் தொலைப்பதே இல்லை.. இன்று வரை...
அன்று.... அந்த அடிகளையும்... வலிகளையும் எண்ணி வருத்தப்பட்டேன்.. ஆனால்.. இன்று அந்த அடிகள்தான்.. முதல் வரியில் சொன்னதைப்போல "வளைந்து.. நெளிந்து... நல்ல கூர்மையான ஆயுதமாய்" என் வாழ்க்கைக்கு பயனாய் உள்ளது...
"தோல்விகளே... ஏமாற்றங்களே... வாழ்க்கையின் வெற்றி இலக்கினை அடைய அமைக்கும் ஒத்தையடிப் பாதைகள்...."
தங்கள் இந்த பதிவு...
மிகவும் அற்புதம்...
யதார்த்தமான பதிவு...
நட்புடன்...
காஞ்சி முரளி...
ஸ்டீபன், அருமையா இருக்கு. என்னதான் ஏமாற்றங்களை தாங்க பழகினாலும், பெரியவர்களானதும் ஏமாற்றத்தை யாரும் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. உடனே இடிந்து போய் விடுவார்கள். காலப் போக்கில் தான் மனம் வேறு பக்கம் நோக்கி செல்லும். இது என் சொந்த அனுபவம்.
அருமையாக எழுதுகிறிங்க, தம்பி
இவ்வாறு ஏமாற்றம் என்பது சமகால அளவில் எல்லோருக்கும் நிகழ்ந்த ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு சின்ன சின்ன விசயங்களில் கிடைக்கும் ஏமாற்றங்கள் நமக்கு வாழ்க்கையின் பின்னாளில் ஏற்பட போகும் எதிர்பாராத ஏமாற்றங்களை தாங்குவதற்கு வழி வகுக்கிறது.
சரியா சொன்னீங்க ஸ்டீபன்
நல்லதொரு பதிவு நன்றி
Post a Comment