இரண்டு மாதத்திற்கு முன்புதான் எனக்கு கோடம்பாக்கத்தில் வேலை கிடைத்தது. நான் தங்கி இருப்பது அம்பத்தூரில். இந்த வேலை கிடைப்பதற்கு முன்பு நான் அம்பத்தூரில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன். அந்த வேலைக்காக தான் அம்பத்தூரில் வீடு பார்த்து தங்க வேண்டியதாயிற்று. இரண்டு வருடங்கள் நானும் எனது நண்பனும் ஒரே வீட்டில் தான் தங்கியிருந்தோம்.
நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் ஓனர் கொஞ்சம் கண்டிப்பானவர். முதலில் நாங்கள் வீடு வாடகைக்கு கேட்ட போது பேச்சிலர் பசங்களுக்கு வீடு தர மாட்டேன் என்று கண்டிப்பாக சொன்னார். என்னுடைய நண்பர் சொந்தமாக ஒரு சிறிய லேத் பட்டறை அம்பத்தூரில் வைத்திருந்தார். அவருக்கு அம்பத்தூரில் உள்ள சில லோக்கல் நண்பர்களை தெரியுமாதலால் அவர்கள் மூலமாக வீட்டு ஓனரிடம் பேசி எப்படியோ வீட்டை பிடித்து விட்டோம்.
முதலில் எங்களுக்கு வீடு தர மாட்டேன் என்று சொன்ன வீட்டு ஓனர் இப்போது எங்களிடம் "என்னுடைய இன்னொரு வீடு காலியாகிறது, உங்களுடைய நண்பர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கள்" என்று சொல்லும் அளவுக்கு பழகிவிட்டோம். இந்த நிலையில் தான் எனக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் இருந்து விட்டு தீடிரென வேறு இடத்திற்கு வீட்டை மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவே இங்கிருந்து கொண்டே வேலைக்கு சென்று வர முடிவெடுத்தேன். அம்பத்தூரில் இருந்து கோடம்பாக்கம் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் மொத்தம் மூன்று மணி நேரம் ட்ரெயின் பயணம்.
ட்ரெயின் பயணமும் ஒரு சுகமான அனுபவம் தான். நான் அம்பத்தூரில் இருந்து ட்ரெயின் பிடித்து முதலில் சென்ரல் ஸ்டேசன். ஸ்டேசனில் இருந்து வெளியில் வந்து சப் வே வழியாக பார்க் ஸ்டேசன் போய் அதில் உள்ள பிளாட்பார்ம் கடந்து அடுத்த ட்ரெயின் பார்க் டூ கோடம்பாக்கம். இப்படிதான் ஒவ்வொரு நாளும் என்னுடைய ட்ரெயின் பயணம் அமையும். அந்த பயணத்தில் எனக்கு அறிமுகம் ஆனாவன் தான் குமார். என்னுடைய வயதை ஒத்தவன் தான். அவனும் அம்பத்தூர் ஸ்டேசனில் இருந்து தான் என்னுடன் ட்ரெயினில் வருவான். ஆனால் அவனுடைய அலுவலகம் கிண்டியில் இருந்தது.
நான் மாதம்தோறும் தவறாமல் ட்ரெயின் பாஸ் எடுத்து விடுவேன். மாதத்தின் தொடக்கத்தில் ஸ்டேசனில் பாஸ் வாங்குவதற்கு கூட்டமாக இருக்கும் எனவே நான் ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதி தான் ட்ரெயின் பாஸ் எடுப்பேன். என்னுடன் வரும் குமார் ஒரு நாள் கூட டிக்கட் அல்லது ட்ரெயின் பாஸ் எடுத்ததை நான் பார்த்ததே இல்லை. ஒரு நாள் அவனிடம் "நீ டிக்கட் எடுப்பது இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவன் "நான் டிக்கட்டும் எடுப்பது இல்லை, பாஸும் வைத்து கொள்வது இல்லை" என்றான். "செக்கிங் வந்தா என்ன பண்ணுவே" என்று கேட்டேன். நான் இரண்டு வருசமா இந்த ஸ்டேசனில் இருந்து கிண்டி போய் வருகிறேன், ஒரு தடவை கூட நான் மாட்டியது இல்லை, எனக்கு தெரியும் யார் வருவார்கள்?.. எப்படி வருவார்கள்?.. எப்போது வருவார்கள்?.. என்று முற்றும் தெரிந்த ஞானி போல் பேசினான்.
நான் அவனிடம் மவனே!! "ஒரு நாள் என்னுடைய கண்முன் நீ மாட்டதாண்ட போறா" நான் சிரிக்க தான் போறேன் என்று சொன்னேன். அதற்கு அவன் "உன்னை போல் முட்டாள் தான் ட்ரெயினில் எல்லாம் டிக்கட் எடுப்பான்" என்று வெற்றி கொடிகட்டு பார்த்திபன் டயலாக்கை பேசிவிட்டு சிரித்தான்.
அவன் மாட்டாமல் இருப்பதற்கு காரணம் ட்ரெயின் கிளம்பும் போது தான் ஸ்டேசனுக்குள் வருவான். அதேப்போல் ஸ்டேசனில் இறங்கினாலும் உடனே கூட்டத்தோடு வரமாட்டான் எல்லோரும் சென்ற பின் தனியாக வருவான். அதுமட்டுமில்லாமல் இரண்டு வருடங்கள் சென்று வருவதால் அவன் பல செக்கின்களையிம் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் முகங்களை ஸ்டேசனில் பார்த்தாலே ஏதாவது சந்தில் புகுந்து விடுவான். ட்ரெயினில் இறங்கும் போதும் முதல் ஆளாக இறங்க மாட்டான் கடைசியாக தான் இறங்குவான். செக்கின் யாரவது இருந்தால் அந்த ஸ்டேசனில் இறங்க மாட்டான். இந்த விசயங்கள் அனைத்தும் அவனுடன் சென்று வருவதில் நான் கவனித்தவை.
இன்னைக்கு பத்தாம் தேதி. என்னுடைய ட்ரெயின் பாஸ் நேற்றோடு முடிந்துவிட்டது. இன்னைக்கு நான் பாஸ் எடுக்க வேண்டும். அம்பத்தூர் ஸ்டேசனுக்கு, நான் எப்போதும் மெயின் வாசல் வழியாக வருவது இல்லை. எனது வீட்டில் இருந்து வரும் போது மெயின் வாசல் கொஞ்சம் தொலைவாக இருக்கும். எனவே பக்கத்தில் உள்ள மதில் சுவர் இடிந்து விழுந்த பாதை வழியாக ஸ்டேசனுக்குள் வருவேன். அந்த வழியாக தான் பெரும்பாலான மக்களும் வருவார்கள். வழக்கம் போல் நானும் அந்த பாதையில் வந்து கொண்டு இருந்தேன். பிளாட்பார்மில் கால் வைத்தவுடன் ஒரு "கை" என்னை தடுத்தது, "சார் உங்க டிக்கட் கொடுங்க" என்று.
நான் அவரிடம் "சார் நான் இப்போது தான் உள்ளே வருகிறேன். என்னுடைய ட்ரெயின் பாஸ் நேற்றோடு முடிந்து விட்டது, இனிதான் போய் பாஸ் எடுக்கணும்" என்றேன். அவர் என்னிடம் "நீங்கள் இப்போது நிற்பது ஸ்டேசன் பிளாட்பார்ம்" சட்டம் தன் கடமையை செய்யும், இப்ப நீங்க என்னுடன் வாங்க, என்று என்னை அழைத்து கொண்டு அவருடைய அறையை நோக்கி நடந்தார். நான் போகும் பிளாட்பார்ம்க்கு எதிர் பக்கத்தில் உள்ள பிளாட்பார்மில் குமார் நின்று கொண்டு என்னை பார்த்து சிரித்தான்.
.
.
.
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
தவறு செய்யாதவர்கள் தண்டனை பெறுவதும், தவறு செய்பவர்கள் தப்பிப்பதும் நடைமுறையான விஷயம் தானே. நல்ல கதை.
இப்படி தான் டிக்கட் எடுக்காத ஆளை விட்டு விட்டு டிக்கெட் எடுக்கும் ஆளை புடிப்பார்கள் என்ன கொடுமை சார்.......
நல்லவங்களுக்குத்தான் சோதனை :)
நல்லா இருக்கு கதை:)
அசத்தல் ஸ்டீ!! :))
கதை ரொம்ப அருமையா இருக்கு.. நல்லவனுக்குதான் சோதனையெல்லாம்..
ஆகா....நடந்த கதை மாதிரியே இருக்கே...:))
நானம் ஒருதடவை டிடிஆர் கிட்ட மாட்டிருக்கேன்....300 கொடுத்தா ரிசிப்ட் தர்றேன்...50 கொடுத்தா அப்படியே ஓடிருன்னான்...50 அழுதுட்டு கிளம்புளேன்...:))
ஸ்டீபன் அண்ணாச்சி, இது இன்னும் தொடருமா? அல்லது அவ்வளவு தானா? ஏன் கேட்கிறேன் என்றால் சுவாரஸ்யமாக படித்துக் கொண்டு போனேன், கடைசியில் முடிவு தெரியவில்லை. அந்த நண்பரை மாட்டிவிட்டீர்களா!
அதோ அங்கே நிற்பவர் இரண்டு வருடமா உங்களுக்கெல்லாம் தண்ணி காட்டுறார். அவரைப் போய் பிடியுங்கள் என்று எஸ்கேப் ஆகிவிட்டீர்களா??!!! சீக்கிரம் சொல்லுங்கோ!
கைக் கொடுங்க ஸ்டீபன்!! நண்பரைக் காட்டிக் கொடுக்காதவரை நீங்கள் நல்லா நண்பர் தான்!
அவ்வ்வ்வவ்...... கதையில் என்ன சொல்ல வரீங்க? நல்லவனுக்கு காலம் இல்லைனா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
சரியாய் சொன்னிர்கள் ஸ்டீபன்,சோதனையும் வேதனையும் நல்லவங்களுக்கு தான்.
நல்லவங்களுக்குத்தான் சோதனை :)
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
அருமையான பதிவு ஸ்டீபன்
நான் ஒரு முறை (கூண்டுவண்டி ) ட்ரெயினில் ஏறி தெரியாமல் முதல் வகுப்பில்
அமர்ந்து தூங்கி விட்டேன் டிடிஆர் எழுப்பி சொன்னதும் தான் எனக்கு என் தவறு தெரிந்தது. 300 ருபாய் அபராதம் கட்டினேன்
I too have similar experience... :(
nice,
என்ன கொடுமை சார் இது? உங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது. விடுங்கள், நன்றாக இருந்தது உங்கள் நடை இந்த பதிவிலே! வாழ்த்துக்கள்! தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்!
பலநாள் திருடர்கள் அகப்படுவதேயில்லை.......!!!!!!!
பாவங்க நீங்க!!!!!
:)
நல்ல எழுத்து நடையில் ரசிக்கும்படியான ஒரு சிறுகதை.
தொடர்ந்து சிறப்பாக எழுதுவதற்கு வாழ்த்துகள் ஸ்டீபன்.
நல்ல அனுபவம்தான் :-))))
பயணியாக மட்டும் இருந்த உங்களுக்கு தொடர்வண்டியை செலுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. இங்கே வாங்க.
http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_06.html
வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு சிறுகதை...ரொம்ப நல்லா இருக்கு...
@தமிழ் உதயம் said...
//தவறு செய்யாதவர்கள் தண்டனை பெறுவதும், தவறு செய்பவர்கள் தப்பிப்பதும் நடைமுறையான விஷயம் தானே. நல்ல கதை.//
நீங்கள் சொல்வது சரிதான் தமிழ் சார்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.
@சௌந்தர் said...
//இப்படி தான் டிக்கட் எடுக்காத ஆளை விட்டு விட்டு டிக்கெட் எடுக்கும் ஆளை புடிப்பார்கள் என்ன கொடுமை சார்.......//
கொடுமை தான் .... வருகைக்கு கருத்துக்கும் ரெம்ப நன்றி சௌந்தர்
@அக்பர் said...
நல்லவங்களுக்குத்தான் சோதனை
ஆமா அக்பர்... வருகைக்கு நன்றி
@வானம்பாடிகள் said...
//நல்லா இருக்கு கதை:)//
ரெம்ப நன்றி பாலா சார்..
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அசத்தல் ஸ்டீ!! :))
வாங்க ஷங்கர்ஜி,,, கருத்துக்கு ரெம்ப நன்றி..
@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//கதை ரொம்ப அருமையா இருக்கு.. நல்லவனுக்குதான் சோதனையெல்லாம்//
வாங்க ஸ்டார்ஜன்..
@நாஞ்சில் பிரதாப் said...
//ஆகா....நடந்த கதை மாதிரியே இருக்கே...:))
நானம் ஒருதடவை டிடிஆர் கிட்ட மாட்டிருக்கேன்....300 கொடுத்தா ரிசிப்ட் தர்றேன்...50 கொடுத்தா அப்படியே ஓடிருன்னான்...50 அழுதுட்டு கிளம்புளேன்...:))//
கொஞ்சம் உண்மையை சேர்த்து கற்பனை கதை தல...
@vanathy said...
//ஸ்டீபன் அண்ணாச்சி, இது இன்னும் தொடருமா? அல்லது அவ்வளவு தானா? ஏன் கேட்கிறேன் என்றால் சுவாரஸ்யமாக படித்துக் கொண்டு போனேன், கடைசியில் முடிவு தெரியவில்லை. அந்த நண்பரை மாட்டிவிட்டீர்களா!
அதோ அங்கே நிற்பவர் இரண்டு வருடமா உங்களுக்கெல்லாம் தண்ணி காட்டுறார். அவரைப் போய் பிடியுங்கள் என்று எஸ்கேப் ஆகிவிட்டீர்களா??!!! சீக்கிரம் சொல்லுங்கோ!//
தொடர எல்லாம் செய்யாது.. அதுக்கு மேலே நீங்க கற்பனை பண்ணி கொள்ளுங்கள்.. இது கற்பனை கதை தான்....வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி வானதி சகோ.
@எம் அப்துல் காதர் said...
//கைக் கொடுங்க ஸ்டீபன்!! நண்பரைக் காட்டிக் கொடுக்காதவரை நீங்கள் நல்லா நண்பர் தான்!//
அப்படியா ரெம்ப சந்தோசம் அப்துல்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி
@இளம் தூயவன் said...
//சரியாய் சொன்னிர்கள் ஸ்டீபன்,சோதனையும் வேதனையும் நல்லவங்களுக்கு தான்.//
வாங்க நண்பரே..வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அன்புடன் மலிக்கா said...
//நல்லவங்களுக்குத்தான் சோதனை :)
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு//
ரெம்ப நன்றி மலிக்கா சகோ..
@r.v.saravanan said...
//அருமையான பதிவு ஸ்டீபன்
நான் ஒரு முறை (கூண்டுவண்டி ) ட்ரெயினில் ஏறி தெரியாமல் முதல் வகுப்பில்
அமர்ந்து தூங்கி விட்டேன் டிடிஆர் எழுப்பி சொன்னதும் தான் எனக்கு என் தவறு தெரிந்தது. 300 ருபாய் அபராதம் கட்டினேன்//
வாங்க சரவணன் ... வருகைக்கும் கருத்துகும் ரெம்ப நன்றி..
@Guna said...
I too have similar experience... :(
வாங்க நண்பரே... கருத்துக்கு ரெம்ப நன்றி..
@ராம்ஜி_யாஹூ said...
//nice,//
ரெம்ப நன்றி ராம்ஜி சார்..
@Software Engineer said...
//என்ன கொடுமை சார் இது? உங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியது. விடுங்கள், நன்றாக இருந்தது உங்கள் நடை இந்த பதிவிலே! வாழ்த்துக்கள்! தொடர்ந்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்//
வாங்க இஞ்சினீயர் சார்... வேலையிருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது பதிவு போடுங்கள்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அண்ணாமலை..!! said...
//பலநாள் திருடர்கள் அகப்படுவதேயில்லை.......!!!!!!!
பாவங்க நீங்க!!!!!
:)//
வாங்க அண்ணாமலை சார்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@செ.சரவணக்குமார் said...
//நல்ல எழுத்து நடையில் ரசிக்கும்படியான ஒரு சிறுகதை.
தொடர்ந்து சிறப்பாக எழுதுவதற்கு வாழ்த்துகள் ஸ்டீபன்.//
வாங்க சாரவணன் அண்ணா... கருத்துக்கும் வருகைக்கும் ரெம்ப நன்றி..
@அமைதிச்சாரல் said...
//நல்ல அனுபவம்தான் :-))))//
வாங்க அமைதிச்சாரல்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
@அமைதிச்சாரல் said...
//பயணியாக மட்டும் இருந்த உங்களுக்கு தொடர்வண்டியை செலுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. இங்கே வாங்க.
http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_06.html//
கண்டிப்பா எழுதுகிறேன்... ரெம்ப நன்றி.
@கமலேஷ் said...
//வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு சிறுகதை...ரொம்ப நல்லா இருக்கு...//
வாங்க கமலேஷ்... வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..
நானும் தான் (சிரித்தேன் என்று சொல்ல வந்தேன்)
Post a Comment