Thursday, April 17, 2014

கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம்_சிரிங்க! முடியலைனா சிந்தியுங்க!

மு.க.ஸ்டாலின்(திமுக): 

அதிமுகாவிற்கும், பிஜேபிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது உண்மை. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு உற்ற நண்பர். அவர் சொல்லுவதைத் தான் கேட்பார். ஆட்சி அமைத்தவுடன் அவரைப் போய்ப் பார்த்தாரா இல்லையா?. நீங்கள் எல்லோரும் பத்திரிக்கையில் போட்டோ பார்த்திருப்பீர்கள். எனக்கும் அவர் நண்பர் தான், ஏன் நம்முடைய‌ தலைவர் கலைஞருக்கும் நண்பர் தான். அவருடைய வீட்டுக் கல்யாணத்திற்குக் கூடத் தலைவர் போயிருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து சோ அழைப்பிதழ் தந்ததால் கலைஞர் நேரில் சென்று வாழ்த்தினார். கலைஞர் வந்திருக்கிறார் என்பதாலேயே ஜெயலலிதா அந்தக் கல்யாணத்திற்கு வரவில்லை.

டிஸ்கி: தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவ‌னுக்கு வந்தால் தக்காளி சட்னி, இந்த அப்ரோச் ரெம்ப நல்லயிருக்கு.

ஜெ.ஜெயலலிதா(அதிமுக): 

மாநிலத்தில் போதுமான அளவு மின் உற்பத்தியிருந்தும், செயற்கையாக மின் தட்டுப்பாடு ஏற்படுத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அவர்களை இனம் கண்டு கடுமையாகத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி: என்னது கிணத்தைக் காணுமா?.. தெளிவா சொல்லுங்க கிணத்தைக் காணுமா?.. இல்ல, கிணறுப் பக்கத்தில் இருந்த பம்புச் செட்டைக் காணுமா?..

விஜயகாந்த(தேமுதிக): 

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது மக்களே, ஆனால் விவசாயத்திற்கு வளர்ச்சிக்கு ஏன் நிர்ணயிக்கப் படவில்லை. மக்களே! தமிழ் நாட்டில் டாஸ்மாக் வேணுமா? வேணாமா?

கூட்டத்தில் உள்ள மக்கள் வேண்டாம்! வேண்டாம்!..

நீங்க எல்லாம் டாஸ்மாக் "வேண்டாம்!" என்று சொல்வதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்திருச்சு மக்களே, அதனால் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்திடுச்சு, கொஞ்சம் இருங்க மக்களே, துடைச்சுக்கிறேன்.

தான் போட்டிருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றிச் சிரித்துக்கொண்டே கையில் இருந்த கைக்குட்டையால் கண்ணீரை துடைப்பது போல் நடித்துக் கண்பிக்கிறார்.

டிஸ்கி: இவரு இன்னும் கேமாரா முன்பு நடிப்பதை மறக்கவில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

வை.கோ.(மதிமுக): 

மேடையில் பேசும் போது தொடர்ச்சியாக இருமிக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. அருகில் இருக்கும் தொண்டர்கள் தண்ணீர் வேண்டுமா? என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்ல கனைக்சன் சரியில்லை, ஏதோ பண்ணுகிறார்கள்(ஒரு வேளை சூனியம் வைச்சிருப்பாங்களோ).

இந்த மைக் கனைக்சன் வழியாகக் கரண்ட் பாசாகி ஏதோ வந்து எனது தொண்டையை அடைக்கிறது. அதனால் தான் என்னால் பேச முடியாமல் இருமல் வருகிறது. சிறிது நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "மைக் செட் சூப்பர்" என்று சொல்லி முடித்தார்.

டிஸ்கி: கூடவே நல்ல மலையாள மந்திரவாதியை வச்சுகிறது நல்லது. சூனியத்தை எடுக்குறதுக்காவது உதவும்.

பொன்.ராதாகிருஷ்னன்(பிஜேபி): 

வைகேவிற்காக‌ விருதுநகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த‌ பொன்னார் அவர்கள், மக்களைப் பார்த்து உங்களுடைய வாக்குகளை எல்லாம் நம்முடைய தாமரை சின்னத்திற்குத் தாருங்கள்! தாருங்கள்! என்று பேசியபோது பக்கத்தில் இருந்த வைகே, பொன்னாரில் காதில் தாமரை இல்லை, பம்பரம் பம்பரம் என்று கத்தினார்.

சுதாரித்த பொன்னார், குஜராத்தில் ஒரு மோடியைப் போல், தமிழ்நாட்டில் நான் வைகோவை பார்க்கிறேன், அதனால் தான் தாமரை சின்னம் என்று கூறினேன் என்று சமாளித்தார். வைகோவும் கூச்சமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்தார்.

டிஸ்கி: பொன்னார் அமைத்திருக்கும் (விஜயகாந்த்)கூட்டணியின் காத்துப் பலமாக அடிக்கிறது போல.. அதான் இப்படி உளற வேண்டியதாயிற்று.

கார்த்திக் சிதம்பர‌ம்(காங்கிரஸ்): 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மத்திய அரசு 148 ரூபாய்க் கொடுக்கிறது, ஆனால் உங்களுக்கு 100 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். மீதியை இங்கு ஆளும் அரசு கொள்ளைய‌டிக்கிறது.

உங்க பையன் வெளிநாட்டில் இருந்து 2000 ரூபாய் அனுப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் போஸ்ட மேன் உங்களிடம் 1000 ரூபாய் தான் தருகிறான் என்றால் யாரைடைய குற்றம்?..

மக்கள் எல்லோரும் "போஸ்ட் மேனின் குற்றம்" என்று குரல் கொடுக்கிறார்கள்.

அதனால் தான் சொல்கிறேன் மக்களே, தவறு யார் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். இவைகளைச் சரிசெய்ய‌ அதிகார‌த்தை எங்களுக்குத் தாருங்கள் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்.


டிஸ்கி: அப்படினா இப்பவரைக்கும் உங்க அப்பா தானே ஆட்சியில், அதிகார‌த்தில் இருக்கிறார். அப்படியிருந்தும் முழுமையான பணம் கிடைக்கவில்லையே! இதை யாரிடம் சொல்வது கார்த்திச் சார்?...

வானதி சீனிவாசன்(பிஜேபி): 

தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் அனைவரும் இருளில் வாழ்கிறோம். விவாசாயிகள் கஷ்டப் படுகிறார்கள். சிறு தொழில் செய்வேர் தொழில் நடத்தமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் குஜராத்தை பாருங்கள், பதினேழு மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறார்கள். அதைப்போல் திரு.நரேந்திர‌ மோடி அவர்கள் பிரதமராக வந்தால் பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ்க்கு என்ன, சீனாவிற்கே மின்சாரம் விற்க முடியும்.

டிஸ்கி: நீங்க இப்படி இங்க கொடுக்கும் வாக்குறுதிகளைச் சீனாக்காரன் கேட்டால் எப்படிச் சிரிப்பான் என்று தான் தெரியவில்லை.

நடிகர் சிங்கமுத்து(அதிமுக):

நான் விஜயகாந்தைப் பார்த்து ஒண்ணோ ஒண்ணு மட்டும் கேட்கிறேன். வீதியில நின்னுட்டு எந்தப் பக்கம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று திசைகளை மட்டும் சரியா சொல்லிட்டாருனா, நான் இந்தியாவை விட்டே போயிடுறேன். ஆமாய்யா! இது சத்தியம்!!..

டிஸ்கி: இந்தக் கொடுமையெல்லாம் யாரோட தலையில‌ போய் அடிச்சுக்கிறது!

நடிகர் ராஜேந்திரன்(தேதிமுக):

நாற்பதுக்கும் நாற்பதாம், யாருகிட்ட சொல்லுறீங்க?.. அப்படி அதிமுக‌ மட்டும் நற்பதுக்கு நாற்பது ஜெயித்துவிட்டால் ஒரு பக்கத்து மீசைய எடுக்குறேன். இது சவாலு தான்.

டிஸ்கி: மீசைக்குப் பாதிப்பு இல்லையென்று தெரிந்து தானே அடிச்சுவிடுறீங்க..

நடிகர் கார்த்திக்(காங்கிரஸ்):

நம்ம காங்கிரஸை தவிர, எந்தக் கட்சிக்கு நாட்டை ஆளா தகுதி இருக்கிறது என்று நான் கேட்கிறேன். யாரையும் தவறாக‌ பேசக்கூடாது, மோடி வேண்டுமானால் என்னுடன் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் நடத்த வரட்டும். எல்லாவற்றிற்கு என்னால் பதில் சொல்ல முடியும். என்னைத் தேர்தலில் நிற்பத‌ற்கு சொன்னார்கள், ஆனால் நான் தான் வேண்டாம் என்று மறுத்தேன். காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவது தான் என்னுடைய குறிக்கோள். அதற்காகத் தொடந்துப் பிரசாரம் செய்வேன்.


டிஸ்கி: நீங்க வேற அப்ப அப்பப்ப வந்து கிச்சுக் கிச்சு மூட்டுறீங்க.. என்ன! மக்களால் சிரிக்கத் தான் முடியவில்லை.

.

8 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

மேடைக் காமெடிகளும் உங்கள் கமெண்ட்டும் ஜோர்! நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நடிகர் கார்த்திக்கை வாசித்து சிரிப்பை அடக்கமுடியவில்லை.

Bagawanjee KA said...

யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை போலிருக்கே !
த ம +1

திண்டுக்கல் தனபாலன் said...

(கா) கார்த்திக் தான் செம கிச்சுக் கிச்சு...

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//மேடைக் காமெடிகளும் உங்கள் கமெண்ட்டும் ஜோர்! நன்றி!//

வாங்க சுரேஷ்,

வந்து ரசித்து, பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

@யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//நடிகர் கார்த்திக்கை வாசித்து சிரிப்பை அடக்கமுடியவில்லை.//

வாங்க யோகன்,

கார்த்திக் வந்து பேசுவது எல்லாம் அப்படி தான் இருக்கிறது. நன்றி.

நாடோடி said...

@Bagawanjee KA said...
//யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை போலிருக்கே !
த ம +1//

வாங்க பகவான்ஜி,

உண்மைதான் எல்லாரும் அவங்களுக்கு ஏற்றபடி காமெடி பண்ணுகிறார்கள். கருத்துக்கு நன்றி.

@திண்டுக்கல் தனபாலன் said...
//(கா) கார்த்திக் தான் செம கிச்சுக் கிச்சு...//

வாங்க தனபாலன்,

வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

K Gopaalan said...

ம்ம்ம்ம் இன்னும் எத்தனை நாள் இவர் சிரிக்க வைப்பார் இந்த நாட்டிலே. படிச்சவங்க செய்ற காமெடி ரொம்ப வித்தியாசமா இருக்கு.
பேசாம சட்டசபை/பாராளுமன்றத் தெர்தல்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் என்று சட்டம் போட்டு விடலாமே. அவுங்க சேர்த்த பிறகு நமது சிரிப்பு தொடங்கும்.

கோபாலன்

Related Posts with Thumbnails