Thursday, April 3, 2014

ஏன்னா? நான் வேறுமாதிரி!!!

வீட்டின் பக்கத்தில், சாலையோரத்தில் வாரம் ஒரு முறை காய்கறிகள் கொண்டு வந்து கடை போடும் நடைபாதை வியாபாரிகளிடம் விலை குறைவாக இருந்தாலும் காய்கறிகள் வாங்க மாட்டேன். ஆனால் காரை எடுத்துக் கொண்டு ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து மார்ஜின் பிரி சூப்பர் மார்கெட்டில் பாக்கெட்டில் அடைக்கப் பட்டிருக்கும் காய்கறிகளை அதில் போடப்பட்டிருக்கும் விலைக்கு வாங்கி வருவேன்.

நடக்கும் தூரத்தில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் இருந்தாலும், நடந்து சென்று குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வர‌ மாட்டேன். காரிலோ டூவீலரிலோ தான் அழைத்து வருவேன். ஆனால் அதிகாலையிலேயே எழுந்து காலில் ஸ்போர்ட் சூவையும், தலையில் ஹெட் செட்டையும் மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பி விடுவேன்.

வீட்டின் முன்பு தள்ளு வண்டியில் பிரஷ் ஆன பழங்களைக் கொண்டு வந்தாலும் அவர்களிடம் வாங்க மாட்டேன். ஆனால்பெரிய பிரெஷ் மார்கெட்டுகளுக்கு சென்று மாதக்கணக்கில் குளிர்பதன பெட்டியில் வைத்து பாலிதீன் பைகளில் பேக்கிங் செய்து வைத்திருக்கும் பழங்களை வீட்டிற்கு வாங்கி வருவேன்.

வீட்டில் திடிரெனப் பவர் கட் ஆனால், கதவை திறந்து அருகில் உள்ளவர்களுக்குப் பவர் இருக்கிறதா என்று அறியவோ அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் அவர்கள் வீட்டில் பவர் இருக்கிறதா என்று விசாரிக்கவோ மாட்டேன். நேரடியாக மின் இணைப்பு அலுவலகத்திற்குப் போன் செய்து எனது வீட்டில் பவர் கட் ஆகிடுச்சு என்று கம்பிளைன்ட் செய்வேன். அவர்கள் உங்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள பெரிய‌ மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்துவிட்டது அதனால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் தெருவில் இருக்கும் எல்லோருக்கும் பவர் இருக்காது சார் என்று அவர்கள் சொல்லும் தகவலைக் கேட்டு அப்படியா!!! என்பேன்.

எனது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு, தனியாக‌ ஒரு வீடுக் கட்டிக் கொடுத்து அதை பராமரிக்க வேலைக்காரர்களையும் வைத்திருப்பேன். ஆனால் வீட்டில் உள்ள முதியவர்களை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விட்டுருப்பேன்.

தியேட்டரில் காமெடிப் படம் பார்க்க சென்றிருப்பேன். சுற்றி இருக்கும் எல்லோரும் படத்தில் வரும் கமெடிக் காட்சிகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் நானோ எப்படிச் சிரிக்க வேண்டும் என்பதையே மறந்து இருப்பேன். பக்கத்தில் இருப்பவன் சிரிக்கும் போது தெரியாமல் என் மேல் விழுந்துவிட்டால் இன் டீசன்ட் பிலோ என்று மனதில் திட்டி இருப்பேன்.

வீட்டில் இருக்கும் போது என்னுடைய கைக்குழந்தையைத் தூக்கி சுமக்க மாட்டேன். அதற்காக வேலைக்கு ஒரு சிறுமியை வீட்டில் வைத்திருப்பேன். வாக்கிங் போகும் போது கூடப் பேபி ஸ்டோலரில் தான் குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்வேன். ஆனால் உடம்பைக் குறைக்க‌ தினமும் ஜிம்முக்கு சென்று வெயிட் லிப்டிங் பண்ண மறக்க மாட்டேன்.

வாக்கிங் செல்லும் போதோ அல்லது பயணங்கள் மேற்கொள்ளும் போதோ உடன் வருபவர்களின் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். மறந்தும் கூட அவர்களின் முகத்தைப் பார்த்து சிரிக்க மாட்டேன். ஆனால் எனக்கென்று தனி உலகம் என்று காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு ஐபேடிலோ மொபைலிலோ பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன்.



கோவிலுக்கோ கடைகளுக்கோ செல்லும் போது அந்த இடங்களில் வண்டியை பார்க் செய்ய வசதி இருக்குமா என்று சிந்திதிக்க மாட்டேன். அங்குக் காரில் சென்று ஒரு மணி நேரம் வெயிட் செய்து காரை பார்கிங் செய்வேன். ஆனால் கடைக்குள்ளோ கோவிலுக்குள்ளோ சென்று சிறிது நேரம் வரிசையில் நிற்க வேண்டி வந்தால் அங்கு எல்லோருடனும் நின்று வரிசையில் வெயிட் செய்ய மாட்டேன், வெளியில் வந்து விடுவேன்.

ஆபிஸில் இருந்து காரில் வரும் போது அந்த‌ பீட்சா கடை இருக்கும் வழியாகத் தான் வந்திருப்பேன். ஆனாலும் வீட்டிற்கு வந்து மொபலில் பீட்சா கடைக்குப் போன் செய்து இரண்டு மீடியம் மஸ்ரூம் பீட்சா ஹோம் டெலிவரி என்று ஆர்டர் செய்வேன்.

.

10 comments:

unmaiyanavan said...

நீங்கள் சொல்லுவதில் எல்லா விஷயங்களும் இல்லையென்றாலும் சில விஷயங்கள் எனக்கு பொருந்தும்.

மிக அருமையாக மனிதனின் அடுத்த பக்கத்தை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Jayakumar Chandrasekaran said...

Confessions of a Tcehie?

Jayakumar

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமான மனிதர்தான்!

வருண் said...

நீங்க பெரும்பாலும் இந்த "நான்" இல்லைனு நெனைக்கிறேன். நானும் இந்த "நான்" இல்லை!

ஒவ்வொருவருடைய "மன திருப்தி"யும் அவர்கள் மனப் பக்குவத்தையும், அவர்கள் நம்பிக்கையும் பொருத்தது.

"My way is high way" kind of thought is something which helps human beings to feel good about themselves and live "happily" I suppose! :-)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அட...
நீங்களும் நம்மளை மாதிரிதானா?!!!

திண்டுக்கல் தனபாலன் said...

எவை எவை செய்யக் கூடாது + எவ்வாறு இருக்கக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்...

பட்டியல் இன்னும் நிறைய இருக்கே...(!)

Unknown said...

இப்படிப் பட்ட வெட்டிக் கௌரவர்கள் நாட்டில் பெருகிகொண்டுதான் வருகிறார்கள் !
த ம 3

நாடோடி said...

@Chokkan Subramanian said...
//நீங்கள் சொல்லுவதில் எல்லா விஷயங்களும் இல்லையென்றாலும் சில விஷயங்கள் எனக்கு பொருந்தும்.

மிக அருமையாக மனிதனின் அடுத்த பக்கத்தை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

வாங்க சுப்பிரமணியன்,

அடுத்த பக்கத்தையும் கொஞ்சம் அலசலாம் என்று தான் எழுதினேன். கருத்துக்கு ரெம்ப நன்றி.

@ jk22384 said...
//Confessions of a Tcehie?

Jayakumar//

Hi Jaya kumar,
Yes of course, first we should admire our activities. Then only we can change.

@‘தளிர்’ சுரேஷ் said...
//வித்தியாசமான மனிதர்தான்!//

வாங்க சுரேஷ்,

ஆமாம் ரெம்ப வித்தியாசமானவர்கள் தான்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@வருண் said...
//நீங்க பெரும்பாலும் இந்த "நான்" இல்லைனு நெனைக்கிறேன். நானும் இந்த "நான்" இல்லை!//

வாங்க வருண்,

அந்த நம்பிக்கையில் இருவரும் இருப்போம்.. :)

//ஒவ்வொருவருடைய "மன திருப்தி"யும் அவர்கள் மனப் பக்குவத்தையும், அவர்கள் நம்பிக்கையும் பொருத்தது.//

வாங்க வருண்,

முற்றிலும் உண்மைதான், ஆனாலும் இத்தைகைய முரண்பாட்டோடு வாழ்வதை அருகில் இருந்து பார்க்கும் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.

//"My way is high way" kind of thought is something which helps human beings to feel good about themselves and live "happily" I suppose! :-)//

we can't do anything..:)

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//அட...
நீங்களும் நம்மளை மாதிரிதானா?!!!//

வாங்க நிஜாம்,

இரண்டு பேரும் ஒரே கோட்டில் தான் நிற்கிறோமா.. ஹி ஹி.. :)

@திண்டுக்கல் தனபாலன் said...
//எவை எவை செய்யக் கூடாது + எவ்வாறு இருக்கக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்...

பட்டியல் இன்னும் நிறைய இருக்கே...(!)//

வாங்க தனபாலன்,

பட்டியலை ரெம்ப பெருசா ஆகிட கூடாது என்று தான் எழுதினேன்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@Bagawanjee KA said...
//இப்படிப் பட்ட வெட்டிக் கௌரவர்கள் நாட்டில் பெருகிகொண்டுதான் வருகிறார்கள் !
த ம 3//

வாங்க பகவான்ஜி,

நீங்க வெட்டினு சொல்லுறீங்க, செய்யுறவங்க ஒத்துகுவாங்களா?... கருத்துக்கு ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails