Saturday, April 12, 2014

சொம்பு அடிக்கத் தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

1) புராஜெக்ட் மீட்டிங் என்று சொன்னவுடனேயே மேனேஜர் பேசுவதற்கு முன்னால் இருக்கும் செயரில் போய் அமர்ந்து கொள்ளவேண்டும். முக்கியமாக மேனேஜர், ஐ அம் கரெக்ட என்று கேட்பது நம்மைப் பார்த்துக் கேட்பதாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் கேட்கும் போது அவர் சொன்னது புரிஞ்சுதோ இல்லையோ எஸ் சார், யூ ஆர் கரெக்ட் என்று பெரிசா தலையை ஆட்டி வைக்க வேண்டும். அப்போதே அவர் கவனம் உங்க மேல பட்டுவிடும்.

2) புராஜெக்ட் மீட்டிங் நடந்து கொண்டிருக்குப் போது, எல்லாம் தெரிஞ்சவனே மூடிக்கிட்டு அமைதியாக இருக்கும் போது, நாம் மட்டும் பெருசா சவுண்டை கொடுக்கணும். சொல்லுறது தப்பா இருந்தாலும் அதுக்கு ஒரு பீட்டர் இங்கிலீஸ்ல ஒரு வெளக்கெண்ணை விளக்கம் கொடுக்கணும். மேனேஜர் பேசும் போது, ஒவ்வொரு சென்டென்ஸையும் அவரு முடிக்குப் போது நாமளும் எல்லாம் தெரிஞ்ச‌ ஏகாம்பர‌ம் போல முடிக்கிற வார்த்தையை மட்டும் சவுண்டா சொல்லி முடிக்கணும்.

3) பண்ணுற புராஜெக்ட்ல ஏதாவது தப்பு நடந்து பிரச்சனையாகி, மேனேஜ‌ர் அழைத்து திட்டும் போது, தப்பித் தவறி கூட எதிர்வினை ஆற்றிவிடக்கூடாது. முகத்திலேயே குத்தினாலும் வலிக்காத மாதிரியே முகத்தை வச்சுக்கனும். எல்லாம் திட்டி முடிச்சதுக்கு அப்புறம், அவருகிட்ட போயி "சாரி சார், அடுத்த முறை அதை நால மடிச்சு எட்டா அடுக்கி வைப்பேன்" என்று வழிய வேண்டும். ரெம்ப முக்கியமானது, அறையை விட்டு வெளியே வரும் போது மேனேஜருக்கு நன்றி சொல்ல மறந்துவிடக் கூடாது. இதை ஏன் ரெம்ப முக்கியம் என்று சொல்கிறேன் என்றால் நீங்க திட்டியது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுவதற்கு.(சுரணையில்லை என்பதை நாசுக்கா எப்படியெல்லாம் எழுத வேண்டியிருக்கு).

4) எல்லா ஆபிஸுலும் நால்லா வேலை செய்தும், மேனேஜருக்குப் பிடிக்காமல் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். அவனை முதலில் தேடி அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும். அப்புறம் என்ன!! புராஜெக்ட்டில் என்ன தவறு நடந்தாலும் அவன் மீது பழியைப் போட்டு ஒன்றுக்கு நாலாக மேனேஜ‌ரின் அறைக்குச் சென்று வத்தியை வைக்க வேண்டும். முடிந்தால் அவனுடைய பிர்சனல் விசயங்களையும் ஸ்பை மூலம் அறிந்து மேனேஜருக்கு அவ்வப்போது சுவாரசியமாகப் பரிமாற வேண்டும்.

5) ஆபிஸுக்கு மேனேஜர் வருவதற்கு முன்பாகவே நாம் ஆபிஸுக்கு வந்துவிட வேண்டும், தப்பித் தவ‌றி கூட மாலையில் மேனேஜர் ஆபிஸை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு நாம் கிளம்பி விடக்கூடாது. மேனேஜர் அறைக்கு வந்தவுடன், எழுந்து சென்று குட்மார்னிங் சொல்லி வர வேண்டும். எதிரில் அவரைப் பார்க்கும் போதேல்லாம் சலாம் வைக்கத் தவற‌க்கூடாது. அப்படியே அவர் எதிரில் வரவில்லையென்றால் அதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும்.

6) காலையிலே ஆபிஸுக்கு வந்தவுடன் ஒரு நியுஸ் பேப்பரையும் விடக் கூடாது அத்தனையும் மதியத்திற்கு முன்பு படித்துவிட வேண்டும், அப்ப மதியதுக்கு மேல வேலை செய்யணுமான்னு நீங்க கேக்குறது புரியுது. அதுவும் இல்ல, லன்ச் முடித்து வந்தவுடன் பேஸ் புக்கை ஒரு ரவுண்டு கட்டி அடிக்கணும். அப்ப எப்ப தான் வேலை பாக்குறது என்று சின்சியர் சிகாமணியா, நீங்க கேட்பது புரிகிறது. மாலையில் நான்கு மணிக்கு மேல‌ மெதுவாகப் பைல்களை ஓபன் பண்ணி என்ன பண்ணலாம் என்று யோசிக்கணும், முடிஞ்சா அது சரியில்லை, இது சரியில்லை என்று வேலையை ஆரம்பிப்பதுக்கு முன்னே மேனேஜருக்கு சிசி வைச்சு நாலு மெயிலை தட்டணும். அந்த‌ மெயில்களுக்கு "எல்லாம் இருக்குடா!! கண்ணை நல்லா திறந்து பாருனு" ரிப்ளே மெயில் வந்தாலும் கவலையே படாமல் அடுத்த மெயிலை டைப் பண்ண தொடங்க வேண்டும்.

7) நாலு மணிக்கு மேல் வேலையை ஆரம்பித்துப் பக்கத்தில் இருக்குறவன் வீட்டிற்கு நகர்ந்தாலும், நாம சீட்டைவிட்டு நகரக் கூடாது. ரெம்பச் சின்சியரா வேலை பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, யாரெல்லாம் வீட்டிற்குப் போகிறார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். ஆறு மணிக்கு மேலே மேனேஜர் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்து வீட்டிற்குக் கிளம்பலியா என்று கேட்கும் போது, ஒரு பைல் பாதியில நிக்குது சார், அதை படுக்க வச்சுட்டு கிள‌ம்புறேன் என்று பருப்பா! சாரி பொறுப்பா! பதில் சொல்ல வேண்டும்.

8) புராஜெக்ட்டில் ஏதாவது உங்களுக்குத் தெரியவில்லை என்றால் டீமில் இருக்கும் சீனியரிடமோ, டீம் லீடரிடமோ கேட்கக் கூடாது. நேரடியாக‌ நாட்டாமை டூ பாங்காளி, பங்காளி டூ நாட்டாமை என்பது போல் மேனேஜர் டூ நாம், நாம் டூ மேனேஜர் என்பது போல் தான் வைத்துக்கொள்ள வேண்டும். உப்புக்கு பெறாத அடுத்தவன் விசயமாக இருந்தாலும் மேனேஜரின் அறைக்குச் சென்று போட்டுக் கொடுத்துவிட்டு தான் மறுவேலையே பார்க்க வேண்டும். உங்களுடன் புராஜெக்ட்டில் இருக்கிறவன் உங்களை ஒரு பொருட்டாவே கருத‌வில்லையென்றாலும், நான் உங்களிடம் வந்து பேசுவதால் "புராஜெக்ட்டில் இருக்குக்கிறவர்கள் என்னை ஒதுக்குகிறார்கள்" என்று எஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து மேனேஜர் காதில் போட வேண்டும்.

9) வேலையைச் சீக்கிரமே முடித்துவிட்டாலும், தப்பித் தவறி கூட நம்முடைய‌ அவுட்புட்டை ஆபிஸ் நேரத்தில் மெயில் பண்ணிவிடக் கூடாது. ஆபிஸ் முடிந்து எல்லோரும் வீட்டிற்குப் போனதுக்குப் பிறகு தான் டெலிவிரபிள் மெயில் பண்ணனும், முடிந்தால் ஆபிஸில் காத்து இருந்து, லேட் நைட் பண்ணினால் இன்னும் பெரிய ஆளாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மறுநாள் மேனேஜர் வந்து எல்லார் முன்னிலும் உங்களுடைய சின்சியாரிட்டியை பாராட்டாமல் இருக்க மாட்டார்.

10) மேனேஜ்மென்டில் இருந்து நடத்தும் பார்ட்டி மற்றும் கல்ச்சுரல் புரோகிராம், கெட் டுகெதர் போன்ற‌ ஒன்றையும் தவற விடக்கூடாது. முதல் ஆளாகப் போயி மேனேஜர் பக்கமாகச் சீட் இருந்தால் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய அறிவிப்புகள் மற்றும் போட்டோக்கள் மெயிலில் வரும் போது, ரெம்ப நன்றி, நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், உங்களை அங்குப் பார்த்ததில் ம‌கிழ்ச்சி என்று அந்த மெயில்களுக்கு ரிப்ளே பண்ணத் மறக்க‌க்கூடாது.

                                                 *-------**-------**-------**-------**-------*




இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்தவரா? அப்ப கவலையே வேண்டாம் அடுத்த மாதம் உங்களுக்கு டபுள் இங்கிரிமென்ட்.

இவ்வளவும் கடந்த வருடம் நீங்கள் செய்யவில்லையா? கவலையை விடுங்க, அடுத்த வருடம் நாம‌ டபுள் இங்கிரிமென்ட் வாங்க, சொம்படிப்போம் சாரி சேர்ந்துழைப்போம். கவுண்டவுன் ஸ்டார்ட்...

                          தீயா வேலைசெய்யணும் குமாரு!!!

.

8 comments:

சேக்காளி said...

//அப்ப எப்ப தான் வேலை பாக்குறது?//
வேலை பாக்கக் கூடாதுன்னு தான இம்புட்டையும் செய்யுறோம்.பின்ன வேலையுஞ்செய்யணுமுன்னா என்ன அர்த்தம்.

Unknown said...

11) மேனேஜர் பெரிய மீட்டிங்ல பேசி முடிச்சவொடனே டப டபன்னு சத்தம் கேக்கிறாப்பல கைதட்டணும். சட்ட சபைல பண்ற மாதிரி.

கோபாலன்

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாத்தையும் சுருக்கி நாசுக்காத்தான் சொல்லியிருக்கிறீங்க...

Anonymous said...

இது அனுபவமா அல்லது நகைச்சுவையா? அனுபவம் போல்தான் தோன்றுகிறது.

unmaiyanavan said...

உங்களுடைய அனுபவங்களை(!!!) அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

r.v.saravanan said...

ஹா ஹா உங்கள் (நமது)அனுபவங்கள் தானே ஸ்டீபன்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நாடோடி said...

@சேக்காளி said...
//அப்ப எப்ப தான் வேலை பாக்குறது?//
வேலை பாக்கக் கூடாதுன்னு தான இம்புட்டையும் செய்யுறோம்.பின்ன வேலையுஞ்செய்யணுமுன்னா என்ன அர்த்தம்.//

வாங்க சேக்காளி,

"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிக்கும் ஈயப்படும்" என்பது போல் பொழுது போகலைனா வேலை ஏதாவது இருக்கானு பாக்கணும்.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

@K Gopaalan said...
11) மேனேஜர் பெரிய மீட்டிங்ல பேசி முடிச்சவொடனே டப டபன்னு சத்தம் கேக்கிறாப்பல கைதட்டணும். சட்ட சபைல பண்ற மாதிரி.

கோபாலன்//

வாங்க கோபாலன்,

உங்களுடைய பதினெறாவது கமெண்டும் நல்லாயிருக்கு. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@திண்டுக்கல் தனபாலன் said...
//எல்லாத்தையும் சுருக்கி நாசுக்காத்தான் சொல்லியிருக்கிறீங்க...//

வாங்க தனபாலன்,

கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@Anonymous said...
//இது அனுபவமா அல்லது நகைச்சுவையா? அனுபவம் போல்தான் தோன்றுகிறது.//

வாங்க அனானி,

அனுபவம் இல்லாமல் புனைவு எழுத முடியாது...:) கருத்துக்கு ரெம்ப நன்றி.

@Chokkan Subramanian said...
//உங்களுடைய அனுபவங்களை(!!!) அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//

வாங்க சுப்பிரமணியன்,

வந்து ரசித்தமைக்கு ரெம்ப நன்றி.

@r.v.saravanan said...
ஹா ஹா உங்கள் (நமது)அனுபவங்கள் தானே ஸ்டீபன்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

வாங்க சரவணன்,

ஆமாங்க நம்முடைய அனுபவ‌ங்கள் தான். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Related Posts with Thumbnails